sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

தள்ளுவண்டி மாமூல் வசூலுக்கு ஏஜென்டு போலீசு; வியாபாரிகளை மிரட்டி கவுன்சிலர் கணவர் 'ரவுசு'

/

தள்ளுவண்டி மாமூல் வசூலுக்கு ஏஜென்டு போலீசு; வியாபாரிகளை மிரட்டி கவுன்சிலர் கணவர் 'ரவுசு'

தள்ளுவண்டி மாமூல் வசூலுக்கு ஏஜென்டு போலீசு; வியாபாரிகளை மிரட்டி கவுன்சிலர் கணவர் 'ரவுசு'

தள்ளுவண்டி மாமூல் வசூலுக்கு ஏஜென்டு போலீசு; வியாபாரிகளை மிரட்டி கவுன்சிலர் கணவர் 'ரவுசு'


ADDED : மார் 25, 2025 06:14 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'டிவி'யில் கிரிக்கெட் லீக் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

காபி கோப்பையை நீட்டிய சித்ரா, ''என்னப்பா... இலைக்கட்சி 'மாஜி', கல்யாண நிகழ்ச்சியை முடிச்சதும், அசெம்ப்ளி எலக்சன் வேலையை பரபரப்பா ஆரம்பிச்சிட்டாராமே...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமாக்கா... அந்த நிகழ்ச்சிக்கு நானும் போயிருந்தேன். பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பாடமே நடத்திட்டாரு; அந்தளவுக்கு டீட்டெயிலா பேசுனாரு. மாவட்டம் முழுக்க எத்தனை பூத் கமிட்டி போடப் போறோம்; எத்தனை நிர்வாகிங்க வருவாங்க; ஒவ்வொருத்தரும் எத்தனை வாக்காளர்களை சரிபார்க்கணும்னு பேசுனாரு...''

''நல்லா ஒர்க் பண்றவங்களுக்கு, போஸ்டிங் கெடைக்கும்னு உத்தரவாதமும் கொடுத்தாரு. 2026 ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி எலக்சன் நடத்துவோம்; கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்துவோம். அதுல, வாய்ப்பு கெடைக்கும். நல்லா வேலை செய்றவங்களுக்கு எதிர்பார்க்காத பரிசு கெடைக்கும்னு சொல்லியிருக்காரு. அதைக்கேட்டு ரத்தத்தின் ரத்தங்கள் துள்ளிக் குதிக்கிறாங்க. 2021ல ஜெயிச்ச மாதிரி, 2026ல ஜெயிக்கிறதுக்கு இப்பவே பிளான் போட்டுட்டாங்களாம்...'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் மித்ரா.

உடன்பிறப்புகள் மிரட்சி


''இலைக்கட்சிக்காரங்க வேகத்தை பார்த்து, ஆளுங்கட்சியை சேர்ந்த உடன்பிறப்புகள் மிரண்டு போயிட்டாங்களாமே...''

''நீங்க கேக்குறது கரெக்ட்டு தான்! இலைக்கட்சியில அந்தளவுக்கு பூத் கமிட்டியை ஸ்ட்ராங்கா வச்சிருக்காங்க. ஆளுங்கட்சியில சில வார்டுகள்ல, கிளை செயலாளர்களே இல்லையாம். கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி, 10 தொகுதியும் நமக்குதான்னு பிரசாரம் செஞ்சிட்டு இருந்தாங்க.

நம்மூர்ல இருக்கற அரசியல் சூழலையும், ஜனங்க மனசையும் பார்த்துட்டு, அஞ்சு தொகுதி ஜெயிச்சாலே பெருசுன்னு மாத்துனாங்க... இப்போ என்னடான்னா... ஒன்னுமே இல்லாததுக்கு மூனு தொகுதி ஜெயிச்சாலே போதுங்கன்னு, ஆளுங்கட்சி தரப்புல முணுமுணுக்கிறாங்களாம்...''

சீட்டுக்கு மோதும் புள்ளிகள்


''தொகுதியில போட்டி போடுறதுக்கே, ஆளுங்கட்சியில தகுதியான ஆள் இல்லையாம். யாரை நிறுத்தலாம்னு ரெண்டெழுத்து டீம்ல இருக்கறவங்க, ஆலோசனை செஞ்சிட்டு இருக்காங்களாம். கமல் கட்சியில இருந்து வந்தவரு, சிங்காநல்லுாரை கேக்குறாராம்.

இலைக்கட்சியில இருந்து வந்தவரு, வடக்கு அல்லது கவுண்டம்பாளையத்தை கேக்குறாராம். மேட்டுப்பாளையத்துக்கு மூன்றெழுத்துக்காரருக்கு மறுபடியும் சான்ஸ் கொடுக்கலாமான்னு, ஆலோசனை ஓடிட்டு இருக்குதாம்...''

''வடக்கு தொகுதியை கைப்பத்துறதுக்கு, கார்ப்பரேஷன் ரெண்டெழுத்து மண்டல தலைவர் 'மூவ்' பண்ணிட்டு இருக்காரு; சின்னவருக்கு வலதும், இடதுமா இருக்கற ரெண்டு மினிஸ்டர்களோட ஜாதியை சேர்ந்த நிலைக்குழு தலைவர் ஒருத்தரு, தெற்கு தொகுதியை கைப்பத்துறதுக்கு முயற்சி பண்றாரு. பட்டியலினத்தைச் சேர்ந்த ரெண்டு நிலைக்குழு தலைவர்கள், வால்பாறையை குறி வச்சிருக்காங்க...''

''ஆனா... சொல்ற பேச்சை கேக்குறவங்களுக்கு, 'சீட்' கொடுக்கறதுக்கு ஐடியா வச்சிருக்காங்களாம். ஏன்னா... சில பேரு எம்.எல்.ஏ., ஆகிட்டா... மினிஸ்டர் பதவிக்கு மூவ் பண்ணுவாங்க. நம்மூர்ல பெரிய ஆள் ஜெயிச்சு மினிஸ்டராகிட்டா, மூன்றெழுத்து ஊர்க்காரரின் கெத்து போயிடும். அதனால, 'கட்டுப்பட்டு' நடக்குறவங்கள மட்டும், செலக்ட் பண்ணப் போறதா உடன்பிறப்புகள் மத்தியில பேசிக்கிறாங்க,''

கவுன்சிலர் கணவரின் 'டீல்'


''அதெல்லாம் இருக்கட்டும்... ஆளுங்கட்சி லேடி கவுன்சிலரோட வீட்டுக்காரர், சாலையார தள்ளுவண்டி கடைக்காரங்கள்ட்ட 'கப்பம்' கேக்குறாராமே...''

''அதுவா... சிங்காநல்லுார்ல இருந்து ராமநாதபுரம் வரைக்கும், 80 தள்ளுவண்டி கடைகள் இருக்குது. சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து, ஒவ்வொரு கடையா போயி, இனிமே கடை நடத்தக் கூடாதுன்னு, 'வார்னிங்' செஞ்சிருக்காங்க. அதுக்கு, 'கார்ப்பரேஷன் கொடுத்த அடையாள அட்டை இருக்குது'ன்னு வியாபாரிகள் சொல்லியிருக்காங்க. அதையெல்லாம் போலீஸ்காரங்க கண்டுக்கலையாம்...''

''வியாபாரிகள் ஒன்னு சேர்ந்து, ஸ்டேஷனுக்கு போயிருக்காங்க. அங்க, 'கவுன்சிலரை போயி பாருங்க'ன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பியிருக்காங்க. கவுன்சிலர் ஆபீசுக்கு வியாபாரிகள் போயிருக்காங்க.

லேடி கவுன்சிலரோட வீட்டுக்காரர், பஞ்சாயத்துப் பேசியிருக்காரு. ஒவ்வொரு கடைக்காரங்களும் அஞ்சாயிரம் ரூபா தந்தா பெர்மிஷன் வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்காரு.

அப்புறம்... காலையில இருந்து நைட் வரைக்கும் செயல்படுற கடைக்கு ஒரு ரேட், மதியம் மட்டும் நடத்துற கடைக்கு ஒரு ரேட், நைட் மட்டும் நடத்துற கடைகளுக்கு ஒரு ரேட்னு பிக்ஸ் பண்ணியிருக்காரு. அந்த தொகையை மாசா மாசம் தரணும்னு, 'கட் அண்டு ரைட்'டா பேசியிருக்காரு. அதைக்கேட்டு, வியாபாரிகள் அரண்டு போயிருக்காங்க...''

தேதியிலும் சூட்சுமம்


''அதெல்லாம் இருக்கட்டும்... கார்ப்பரேஷன் பட்ஜெட் தேதியை ஏன் மாத்துனாங்களாம்... அதுல, ஏதாச்சும் வில்லங்கம் இருக்குதா...''

''ஆமாக்கா... போன மாசம் நடந்த கவுன்சில் மீட்டிங்ல, ஆளுங்கட்சி கூட்டணி கட்சிக்காரங்களே களேபரம் பண்ணிட்டாங்க. அது, ஆளுங்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருச்சு. இப்போ, சட்டசபை நடந்துக்கிட்டு இருக்கு. ஏதாச்சும் வில்லங்கமா நடந்துச்சுன்னா... சட்டசபையில எதிரொலிக்கும்னு பயப்படுறாங்க... அதனால, ஒரு மணி நேரத்துக்குள்ள கவுன்சில் மீட்டிங்கை முடிச்சுட்டு, பட்ஜெட் தாக்கல் செய்யச் சொல்லியிருக்காங்களாம்...''

''இருந்தாலும், கவர்மென்ட் கவனத்தை ஈர்க்குறதுக்கு ஏதாச்சும் செய்யணும்னு மா.கம்யூ.. கட்சிக்காரங்க நினைக்கிறாங்க. அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துறதுக்கு பேசியிருக்காங்க. காங்கிரஸ் கட்சிக்காரங்க ஒத்து வர்றாங்களாம்; ம.தி.மு.க.,காரங்க ஒத்துவர்றதில்லையாம்.

அதனால, யோசிச்சிட்டு இருக்காங்க... ஆளுங்கட்சியில அதிபெரும்பான்மை இருக்கறதுனால, 'ஆல்பாஸ்' சிஸ்டத்துல எல்லா தீர்மானத்தையும், நிறைவேத்தப் போறாங்களாம்...''

''இதுல இன்னொரு சூட்சுமமும் இருக்குன்னு சொல்றாங்க. அது, என்னான்னா... ஏ.டி.எம்.கே., கவுன்சிலரை ரெண்டு மீட்டிங்கிற்கு 'சஸ்பெண்ட்' பண்ணியிருந்தாங்க. போன மாச மீட்டிங்கிற்கு அவரு வரலை. இந்த மாசம் ஒரே நாள்ல ரெண்டு கூட்டம் நடக்கப் போகுது. கவுன்சில் கூட்டத்துல கலந்துக்க முடியாது.

அடுத்ததா பட்ஜெட் கூட்டம் நடக்கப் போகுது. அதுல, கலந்துக்கிறதுக்கு உரிமை இருக்குங்கிறதுனால வருவாரு; பட்ஜெட் சம்பந்தமா பேசுவாருன்னு எதிர்பார்க்குறாங்க... அவருக்காகவே, பட்ஜெட் கூட்ட தேதியை மாத்தி வச்சாங்களான்னு, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பேசிக்கிட்டு இருக்காங்க...''

'காலை ஒடிச்சிடுவேன்'


''சனிக்கிழமை யாராச்சும் 'பெட்டி' எடுத்துக்கிட்டு, தாலுகா ஆபீசுக்குள்ள வந்தா காலை ஒடிச்சிடுவேன்னு, ஆபீசர் ஒருத்தர் 'வார்னிங்' குடுத்து இருக்காராமே...''

''அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க... ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்றவங்களுக்காக... நார்த் தாலுகா ஆபீசுல ஸ்பெஷல் வேலை செஞ்சிட்டு இருக்காங்க. அது சம்பந்தமா... நம்ம ரெண்டு பேரும் ஏற்கனவே பேசியிருந்தோம். அதை கேள்விப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆபீசரை, கலெக்டர் ஆபீசுல அதிகாரி வெளுத்து வாங்கியிருக்காரு.

டென்ஷனான நார்த் ஆபீசர், தாலுகாவுல இருக்கற ஊழியர்களுக்கு, எச்சரிக்கை விடுத்திருக்காராம். யாராச்சும் சனிக்கிழமை 'பெட்டி' எடுத்துக்கிட்டு வந்தா, காலை ஒடிச்சிடுவேன்னு சொல்லியிருக்காராம். அதனால, தாலுகா ஆபீஸ் ஊழியர்கள் அரண்டு போயிருக்காங்க...''

மாசந்தோறும் 'கப்பம்'


''அதெல்லாம் இருக்கட்டும். புதுசா வந்திருக்கிற வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும், 'ரேட் பிக்ஸ்' பண்ணியிருக்காங்களாமே...''

''யெஸ்... ஏற்கனவே பல 'ல'கரம் கொடுத்தே 'போஸ்ட்டிங்' வாங்கிட்டு வந்திருக்காங்க. இனிமே... சம்பாதிக்கிற லஞ்சப் பணத்துல இருந்து, ஒவ்வொரு மாசமும் ஒரு தொகையை கொடுக்கணும்னு கறாரா சொல்லிட்டாங்களாம். 'கப்பம்' கட்டலைன்னா... எந்த நேரத்திலும் எந்த ஊருக்காவது துாக்கியடிச்சுருவோம்னு மிரட்டுறாங்களாம்... அதனால, ஏண்டா இந்த ஊருக்கு வந்தோம்னு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சில பேரு, புலம்பிட்டு இருக்காங்க...''

எஸ்.ஐ., கன்ட்ரோலில் ஸ்டேஷன்


''போலீஸ் துணை கமிஷனரிடம் மனு கொடுத்தாலும் கூட, சுந்தராபுரம் ஸ்டேஷன்ல ஆக்சன் எடுக்கறதில்லையாமே... அந்தளவுக்கு கட்டப்பஞ்சாயத்து நடக்குதுன்னு சொல்றாங்களே... உண்மைதானா...''

''ஆமாக்கா... உண்மைதான்! நானும் விசாரிச்சேன். சுந்தராபுரம் ஸ்டேஷன்ல இருக்கற ரெண்டு எஸ்.ஐ.,க்கள், பப்ளிக்கிற்கு மரியாதை கொடுக்கறதே இல்லையாம். கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் ஆக்சன் எடுக்கறதில்லை. அது சம்பந்தமா விசாரிச்சா... அந்த பைல் எங்க இருக்குன்னே தெரியலை; இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வாங்கன்னு, திருப்பி அனுப்புறாங்க...''

''இன்ஸ்., 'ஆக்டிவ்'வா இருந்தாலும், அவரு காதுக்கு எதுவும் தெரியாத அளவுக்கு ஸ்டேஷன் நிர்வாகத்தை, அவுங்க கன்ட்ரோல்ல வச்சிருக்காங்களாம்... துணை கமிஷனர்கிட்ட மனு கொடுத்தாலும், ஆக்சன் எடுக்கறதில்லை.

கரன்சி கொடுத்தா மட்டுமே, வேலை நடக்கும்னு சொல்லாம சொல்றாங்களாம்... அதனால, ஸ்டேஷனுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கறதுக்கே, பப்ளிக் போறதுக்கு பயப்படுறாங்களாம்...'' என்றபடி, நகர்வலத்துக்கு தயாரானாள் மித்ரா.






      Dinamalar
      Follow us