sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

 பாவையர் காட்டில் கொட்டுது பரிசு மழை; கோவையில் பா.ஜ., வீசுது 'நாலுக்கு' வலை

/

 பாவையர் காட்டில் கொட்டுது பரிசு மழை; கோவையில் பா.ஜ., வீசுது 'நாலுக்கு' வலை

 பாவையர் காட்டில் கொட்டுது பரிசு மழை; கோவையில் பா.ஜ., வீசுது 'நாலுக்கு' வலை

 பாவையர் காட்டில் கொட்டுது பரிசு மழை; கோவையில் பா.ஜ., வீசுது 'நாலுக்கு' வலை


UPDATED : ஜன 13, 2026 10:37 AM

ADDED : ஜன 13, 2026 05:03 AM

Google News

UPDATED : ஜன 13, 2026 10:37 AM ADDED : ஜன 13, 2026 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி நிமித்தமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சித்ரா, கேன்டீன் பகுதியில் ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள்.

அதிகாரி ஒருவரை சந்தித்து விட்டு வந்த மித்ரா, ''மாவட்ட நிர்வாகம் மேல ஆளுங்கட்சி தலைமை அதிருப்தியில இருக்குதாமே,'' என, நோண்டினாள்.

''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலரும் அரசு உயரதிகாரிகளை சந்திச்சு, கட்சி லெட்டர் பேடுல பொதுமக்களின் கோரிக்கையை எழுதி, மனு கொடுக்குறாங்க. அது சம்பந்தமா நடவடிக்கை எடுக்கறதே இல்லைன்னு தலைமையிடம் புகார் சொல்லியிருக்காங்க. அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிச்சிட்டு இருக்காங்க. உளவுத்துறையில இருந்தும் 'ரிப்போர்ட்' போயிருக்குதாம்,''

விவசாயிகள் அதிருப்தி ''விவசாயிகளும் அதிருப்தியில இருக்காங்களாமே... ஏனாம்...''

''அவுங்க கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் காது கொடுத்து கேட்டு செஞ்சு கொடுக்கலைன்னு நினைக்கிறாங்க. மனித - விலங்கு மோதல் பிரச்னை ரொம்ப நாளா இழுத்துக்கிட்டே போகுது. சின்னவேடம்பட்டி ஏரி பிரச்னையில விவசாயிகள் கோர்ட் படியேறி, தடை உத்தரவு வாங்கியிருக்காங்க. 'டியூகாஸ்' விவகாரத்துல துணிச்சலா நடவடிக்கை எடுத்த அதிகாரியை வேறிடத்துக்கு மாத்திட்டாங்க... இப்படி... விவசாயிகள் பட்டியல் நீண்டுக்கிட்டே போகுது...''

''நம்மூர்ல இருக்கற பெரும்பாலான விவசாயிகள் சங்கத்துக்காரங்க, ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுல இருக்காங்க. எதிர்க்கட்சிகளை சேர்ந்தவங்க, அந்த சங்கங்களை அவங்க பக்கம் இழுக்க முயற்சி பண்றாங்க,''

பழநிக்கு விசிட் ''நம்மூருக்கு ஆய்வுக்கு வந்திருந்த தேர்தல் அதிகாரி, பழநிக்கு போயிட்டு வந்தாராமே...''

''அதுவா... மூனு நாள் பயணமா வந்திருந்தாரு. முதல்நாளே நம்மூர்ல ஆய்வு செய்றதா இருந்துச்சு. குடும்பத்தோட வந்திருந்த அவரு, பழநிக்கு போயி, சுவாமி தரிசனம் செய்ய ஆசைப்பட்டாரு. அதனால, நிகழ்ச்சி நிரலை மாத்தியமைச்சாங்க. பழநியில இருந்து திரும்பி வர்றப்போ, உடுமலை வழியா திருப்பூரு போனாரு. ஞாயித்துக்கிழமை கலெக்டர் ஆபீசுல கூட்டம் நடத்தி, 'அட்வைஸ்' பண்ணிருக்காரு,''

தடபுடல் விழா ''ஆளுங்கட்சி தரப்புல வார்டுக்குள்ள தடபுடலா பொங்கல் விழா நடத்திட்டு வர்றாங்களாமே...''

''ஆமாப்பா... பெண்களை ஈர்க்குற மாதிரி விழா நடத்தி, பரிசு கொடுக்குறாங்க. ரத்தினபுரி ஏரியாவுல கோலப்போட்டி நடத்தி, அண்டா பரிசு கொடுத்தாங்க. ஆறுதல் பரிசா, போட்டியில கலந்துக்கிட்ட எல்லோருக்கும் சில்வர் ஹாட் பாக்ஸ் கொடுத்தாங்க. கோலப்போட்டியில முதல் பரிசு வாங்குனது அ.தி.மு.க., பூத் ஏஜன்டாம். இதை கேள்விப்பட்டு ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க ஆச்சரியப்பட்டாங்க. இருந்தாலும், அவுங்களுக்கும் பரிசு கொடுத்து கவுரவப்படுத்தி இருக்காங்க,''

''அ.தி.மு.க., தரப்புல நேர்காணல் நடந்துச்சே... என்ன நடந்ததுன்னு விசாரிச்சீங்களா...''

''அதுவா... சம்பிரதாய சடங்கு போல, விருப்ப மனு கொடுத்தவங்கள மொத்தமா கூப்பிட்டு ஒக்கார வச்சு, இ.பி.எஸ். பேசியிருக்காரு. யாரை வேட்பாளரா அறிவிச்சாலும் ஜெயிக்க வைக்கணும்னு பொத்தாம் பொதுவா 'அட்வைஸ்' பண்ணியிருக்காரு. தனியா பேசுறதுக்கு ஒரு நிமிஷம் வாய்ப்பு கொடுத்திருக்காங்க. 'சீட்' கேட்கறவங்க தங்களை பத்தி முழுசா சொல்ல முடியலைன்னு அங்கலாய்க்கிறாங்க,''

''கவுண்டம்பாளையத்தில 52, அவிநாசியில 43, மேட்டுப்பாளையத்துல 25 பேரு விருப்ப மனு கொடுத்திருக்காங்க. இதே மாதிரி தெற்கு தொகுதியிலும் 23 பேர் மனு கொடுத்திருக்காங்க. சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கே மறுபடியும் வாய்ப்பு கொடுப்பாங்கன்னு சொல்றாங்க. ஆனா, மேட்டுப்பாளையத்தை பா.ஜ. குறி வைக்குது. நெருக்கடி கொடுத்தா விட்டுக் கொடுக் கலாம்னு அ.தி.மு.க.வினர் சொல்றாங்க,''

நாலுக்கு இரண்டு ''பா.ஜ. தரப்புல நாலு தொகுதி கேக்குறதா சொல்றாங்களே... ''

''ஆரம்பத்துல ரெண்டு தொகுதி கேட்டாங்க. லோக்சபா எலக்சன்ல, தனித்து போட்டியிட்டு, அண்ணாமலை, 4.5 லட்சம் ஓட்டு வாங்குனதுனால, பா.ஜ. தலைமை, கொங்கு மண்டலத்தை குறி வச்சு களமிறங்குது. எல்லா தொகுதிக்கும் பூத் ஏஜன்ட் நியமிச்சிருக்காங்க. தொகுதி வாரியா ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்காங்க.

தேசிய தலைவரை நம்மூருக்கு அனுப்பி, பொங்கல் விழாவை தடபுடலா நடத்தி இருக்கு. உயர்மட்ட நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி, ஆலோசனை செஞ்சாரு. பக்கத்துல இருந்த கிராமத்துக்கு போயி, 125 நாள் வேலை திட்ட பயனாளிகளுடன் பேசியிருக்காரு,''

''கெத்து காட்டாம, நிர்வாகிகள் கூட சகஜமா சிரிச்சு பேசி பழகுனது, பா.ஜ.காரங்ககிட்ட உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கு. தேசிய தலைவர் கூட 'செல்பி' எடுக்கற அளவுக்கு தொண்டர்கள் நெருக்கமா இருந்திருக்காங்க. நம்மூர்ல பா.ஜ.வுக்கு ஓட்டு வங்கி இருக்கறதுனால, நாலு தொகுதிக்கு குறி வச்சிருக்காங்க. தொகுதி பங்கீடு பேச்சு வர்றப்போ, ரெண்டு இறுதி செய்றதுக்கு வாய்ப்பிருக்குன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க.

யாருக்கு தொகுதி ''மேட்டுப்பாளையத்தை கைப்பத்துறதுக்கு ஆளுங்கட்சி தரப்புல மூன்றெழுத்து புள்ளிகள் காய் நகர்த்திட்டு வர்றாங்களாமே...''

''ஆமா, நானும் கேள்விப்பட்டேன். ஒருத்தரு கோடிக்கணக்குல பணத்தை அள்ளி விடுறாரு. ஏற்கனவே வாய்ப்பு கொடுத்து, வெற்றியை நழுவ விட்ட அவரு, மறுபடியும் 'சீட்' வாங்குறதுக்காக, ஏகப்பட்ட நிகழ்ச்சி நடத்த, கட்சி தலைமையின் கவனத்தை தன் பக்கத்துக்கு இழுக்க முயற்சி பண்றாரு. இன்னொருத்தரு தன்னோட மனைவிக்கு 'சீட்' வாங்கறதுக்கு முட்டி மோதுறாரு,''

பெண்கள் ஓட்டு 'டார்கெட்' ''ஆளுங்கட்சி தரப்புல பெண்கள் ஓட்டுக்கு 'டார்கெட்' பிக்ஸ் பண்ணியிருக்காங்களாமே...''

''ஆமாப்பா... நம்ம மாவட்டத்துல இருக்கற 10 தொகுதியிலும் ஆண்களை விட பெண்கள் ஓட்டுகளே ஜாஸ்தியா இருக்கு. முதல்முறை ஓட்டளிக்கப் போற கல்லுாரி மாணவியர் பலரும் விஜய் கட்சிப் பக்கம் சாய்றாங்க. 1,000 ரூபா நிதியுதவி, லேப்-டாப் கொடுத்தாலும் விஜய் கட்சி மேல அவுங்களுக்கு ஈர்ப்பு இருக்கு,''

''ஆளுங்கட்சி தரப்புல பல 'ரூட்'டுல சர்வே எடுத்திருக்காங்க. வீட்டுக்கு ஒன்னு அல்லது ரெண்டு ஓட்டு விஜய் கட்சிக்குப் போகலாம்னு 'ரிப்போர்ட்' கிடைச்சதுனால, பெண்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்காங்க. பொங்கல் விழா நடத்தி, பரிசு மழையை கொட்டிட்டு வர்றாங்க,''

''கார்ப்பரேஷன் ஏரியாவுல அ.தி.மு.க. செயல்பாடு வேகம் எடுத்த மாதிரி தெரியலையே...''

''ஆமா, மித்து! மாநகர் மாவட்ட ஏரியாவுல 'வீக்'கா இருக்கறதா அவுங்க கட்சிக்குள்ள பேச்சு ஓடிட்டு இருக்கு. பப்பாளி பெயர் கொண்டவர், பணம் வாங்கிட்டு, வார்டு செயலாளர் பதவி போட்டுக் கொடுக்க, 'மாவட்டத்துக்கு' பரிந்துரை செய்றதா புகார் கிளம்பியிருக்கு.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இதய தெய்வம் மாளிகையில நடந்த கூட்டத்துக்கு, மாவட்ட செயலாளரே 'லேட்'டா வந்ததா வேலுமணி 'ஓபன் மீட்டிங்'ல பேசியிருக்காரு. வழக்கமா லேட்டா வர்ற அவரே, ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வந்திருந்தாரு.

மத்த நிர்வாகிகள் பலரும் அதுக்கப்புறம் வந்திருக்காங்க. இதை மேடையில் வெளிப்படையா சொல்லி, இனிமே அலட்சியமா இருக்கக் கூடாதுன்னு, 'அலெர்ட்' பண்ணியிருக்காரு,''

- பேசியபடி நடக்க ஆரம்பித்தாள் சித்ரா. பின்தொடர்ந்து சென்றாள் மித்ரா.






      Dinamalar
      Follow us