sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

பதிவுத்துறை 'உண்டியல் லேடி'யால் பலரும் கிலி

/

பதிவுத்துறை 'உண்டியல் லேடி'யால் பலரும் கிலி

பதிவுத்துறை 'உண்டியல் லேடி'யால் பலரும் கிலி

பதிவுத்துறை 'உண்டியல் லேடி'யால் பலரும் கிலி


ADDED : செப் 08, 2025 11:02 PM

Google News

ADDED : செப் 08, 2025 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹெல்மெட் அணிந்து கொண்டு, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் நகர்வலம் புறப்பட்டனர்.

பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''என்னக்கா, நம்மூருக்கு ஐகோர்ட் நீதிபதிகள் வந்திருந்தாங்களே... 'இன்ஸ்பெக்சன்' நடந்துச்சே; என்னாச்சாம்... விசாரிச்சீங்களா...'' என, கொக்கி போட்டாள்.

''ஆமா... 'பாரஸ்ட் பார்டர்'ல உருக்கு கம்பியில வேலி அமைக்கிறது சம்பந்தமா நேர்ல போயி பார்த்திருக்காங்க. விவசாயிகள் சொன்னதையும், 'பாரஸ்ட் ஆபீசர்ஸ்' சொன்னதையும், பதிவு செஞ்சிருக்காங்க. கனிம வளம் கடத்துன ஏரியாக்கள்ல, 'ட்ரோன்' பறக்க விட்டு பார்த்திருக்காங்க.

ரெவின்யூ டிபார்ட்மென்ட் தரப்புல என்னென்ன ஆக்சன் எடுத்திருக்காங்கன்னு, 'லிஸ்ட்' போட்டிருக்காங்க. இருந்தாலும், கடமையை கடந்து சமூக அக்கறையோட செயல்படுங்கன்னு 'அட்வைஸ்' பண்ணுனதா, உளவுத்துறை போலீஸ்காரங்க சொன்னாங்க,''

''தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவை சேர்ந்தவங்க, நீதிபதிகளை நேர்ல பார்த்து கம்ப்ளையின்ட் பண்ணினாங்களாமே...''

''அதுவா... தடாகம் பகுதிக்கு நேர்ல போறதுக்கு 'பிளான்' வச்சிருந்தாங்க. மேட்டுப்பாளையத்துலயே லேட்டானதுனால, அந்த ஏரியாவுக்கு போக முடியலையாம். நீதிபதிகள் இருந்த இடத்துக்கு குழுவினர் போயி பார்த்திருக்காங்க.

4,000 கோடி ரூபாய்க்கு கனிம வளம் சுரண்டல் நடந்திருக்கறதை சுட்டிக்காட்டி, கோர்ட் கண்காணிப்புல, 'ரிடையர்டு' ஜட்ஜ் தலைமையில, 'என்கொயரி' செய்றதுக்கு 'ஸ்பெஷல் கமிட்டி' அமைக்க கேட்டிருக்காங்க. இது சம்பந்தமான 'கேஸ் என்கொயரி' இந்த மாசம் வரப்போகுது. அப்போ, என்ன நடக்குமோன்னு ரெவின்யூ ஆபீசர்ஸ்சும், மைன்ஸ் ஆபீசர்ஸ்சும் உதறல்ல இருக்காங்க.

ஏன்னா, ஏற்கனவே ஐகோர்ட் நியமிச்ச நீதிபதிகள் குழு, கனிம வளம் சுரண்டுன ஏரியாக்கள்ல 'இன்ஸ்பெக்சன்' செஞ்சு, போட்டோ ஆதாரங்களோட கோர்ட்டுல 'ரிப்போர்ட்' பண்ணிட்டாங்க. இப்போ, நீதிபதிகளே நேர்ல பார்த்துட்டாங்க. இனி, என்ன நடக்குமோன்னு பயத்துல உறைஞ்சு போயிருக்காங்க...''

வர்றாரு இ.பி.எஸ்., ''நம்ம டிஸ்ட்ரிக்ட்ல இன்னையில இருந்து, இ.பி.எஸ்., மறுபடியும் பிரசாரத்தை துவங்குறாராமே...''

''ஆமா மித்து! தொண்டாமுத்துார்ல ஆரம்பிச்சு... கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறைன்னு ரூட் மேப் போகுது. அப்புறம், திருப்பூர் டிஸ்ட்ரிக்ட்ல பிரசாரம் செஞ்சுட்டு, சூலுார் வழியா சிட்டிக்குள்ளே நுழைஞ்சு, சிங்காநல்லுார்ல முடிக்கற மாதிரி பயணத் திட்டம் ரெடி பண்ணியிருக்காங்க,''

''இன்னைக்கு செல்வபுரம் சிவாலயா சிக்னல் பகுதியில, 'ரோடு ஷோ' பிளான் பண்ணியிருக்காங்க. தொண்டாமுத்துார்லயும், குனியமுத்துார்லயும் வேன்ல இருந்தபடி பேசுவாராம். 'மாஜி' மினிஸ்டர் வேலுமணி தொகுதிங்கிறதுனால, 'மாஸ்' காட்டியாகணும்னு கட்சிக்காரங்களுக்கு சொல்லியிருக்காங்க.

மீட்டிங்கை 'டிஸ்டர்ப்' செய்ற மாதிரி, ஆம்புலன்ஸ் வந்தா, பின்விளைவுகளுக்கு நாங்க பொறுப்பில்லைன்னு, போலீஸ்காரங்ககிட்ட ரத்தத்தின் ரத்தங்கள் தெளிவா சொல்லிட்டாங்களாம். ஆனா, இ.பி.எஸ்., பேசுற பாயின்ட்டுக்கு பக்கத்துல கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் இருக்கு. ஆம்புலன்ஸ் வந்தா எப்படி சமாளிக்கிறதுன்னு, போலீஸ்காரங்க குழம்பிக்கிட்டு இருக்காங்க,''

ஆர்ப்பாட்டம் பின்னணி ''உக்கடம் ஏரியாவுல கம்யூ., கட்சிக்காரங்க ஆர்ப்பாட்டம் நடத்துனாங்களே... அதுல ஏதாச்சும் தகவல் இருக்குதா...''

''தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி, இண்டஸ்ட்ரி முக்கிய நிர்வாகிகளை அழைச்சிட்டு போயி, பைனான்ஸ் மினிஸ்டரை நேர்ல சந்திக்க வச்சு, அவுங்க பிரச்னையை சென்ட்ரல் கவர்மென்ட் தீர்க்குறதுக்கான வேலையை செஞ்சாங்க.

நாங்களும் இருக்கோம்னு காட்டுறதுக்காக, தி.மு.க. தரப்புல திருப்பூர்ல ஆர்ப்பாட்டம் நடத்துனாங்க. அதனால, நம்மூர்ல ரெண்டு கம்யூ., கட்சிக்காரங்களும், வி.சி. கட்சிக்காரங்களும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்காங்க.

சொல்ற அளவுக்கு கூட்டம் பெருசா இல்லைன்னு, உளவுத்துறைக்காரங்க சொன்னாங்க... அதே நாள்ல காங்கிரஸ் கட்சிக்காரங்க, வாக்காளர் பட்டியல் பிரச்னையை சுட்டிக் காட்டி, தெற்கு தாலுகா ஆபீசுக்கு எதிரே, தனியா ஆர்ப்பாட்டம் நடத்துனாங்க,''

''அப்படியா... கம்யூ., வும், வி.சி.யும் கை கோர்த்து தனியா ஆர்ப்பாட்டம் நடத்துனதுனால, மக்கள் நல கூட்டணிக்கு மறுபடியும் அச்சாரம் போடுறாங்களோன்னு சந்தேகப்பட்டுட்டேன்...'' என, கிண்டலடித்தாள் மித்ரா.

''மித்து, வரப்போற அசெம்ப்ளி எலக்சன்ல சிட்டிக்குள்ள ஒரு தொகுதிய வாங்கியே தீரணும்னு கம்யூ., உறுதியா இருக்காங்க. அதுக்காக, ஒவ்வொரு பிரச்னையையும் மையப்படுத்தி, ரோட்டுக்கு வர்றாங்கன்னு ஆளுங்கட்சி தரப்புல சொல்றாங்க,''

''ஆளுங்கட்சி தரப்புல, மாணவரணி நிர்வாகிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறாங்களே... ஏனாம்...''

''அவரு, எஜுகேஷன் மினிஸ்டருக்கு நெருக்கமாம். அவர் வழியா, 'சின்னவர்' பழக்கமாகி இருக்காரு. கட்சிக்காரங்கள ஈர்க்குற மாதிரி, வார்த்தைகளை கோர்த்து, மேடையில சரளமா பேசுறதுனால, தலைமையில இருக்கறவங்க கவனத்தை திருப்பி இருக்காரு. அதனால, 'மாவட்டத்துக்கு' தொகுதி கெடைக்குமா அல்லது கடைசி நேரத்துல கல்தா கொடுப்பாங்களான்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,''

முட்டல், மோதல் ''மேட்டுப்பாளையத்துல தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் உரசல் அதிகமாயிடுச்சாமே...''

''அதுவா... சிட்டிங் எம்.எல்.ஏ.வா, ஏ.கே.எஸ். இருக்காரு. தொகுதிக்குள்ள கவர்மென்ட் பங்சன் எதுவா இருந்தாலும் போயிருவாரு. காரமடைக்கு பக்கத்துல சென்னிவீரம்பாளையத்துல, 'நமக்கு நாமே' திட்டத்துல சமுதாய கூடம் கட்டியிருக்காங்க. எம்.எல்.ஏ.ங்கிற முறையில திறந்து வச்சாரு. தி.மு.க. காரங்க ஆட்சேபனை தெரிவிச்சு, தகராறு செஞ்சிருக்காங்க,''

''நீலகிரி எம்.பி.ராஜா தலைமையில திறக்கறதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கோம்; அதுக்கு முன்னாடி, திறக்கக் கூடாதுன்னு வாக்குவாதம் பண்ணியிருக்காங்க. அதனால, திறந்த சமுதாய கூடத்தை ஆபீசர்ஸ் வந்து மூடிட்டாங்க.

எம்.பி.சுற்றுப்பயணம் வர்றப்போ 'ஓபன்' பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தாங்க; அவரு அந்த ஏரியாவுக்கே வரலை. எலக்சனுக்கு இன்னும் ஏழு மாசம் இருக்கு. அதுக்குள்ள தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் உரசல் ஆரம்பமாகிடுச்சு. எலக்சன் சமயத்துல என்னென்ன நடக்குமோன்னு, ஆபீசர்ஸ் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க,''

''செங்கோட்டையன் கட்சி பொறுப்பை, ஏ.கே.எஸ்.,க்கு கொடுத்துருக்காங்களே...''

''யெஸ் மித்து, 'மாஜி' மினிஸ்டர் வேலுமணி ரெகமண்டேஷன்ல பொறுப்பு கொடுத்திருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். நம்மூர் மட்டுமில்லாம, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தையும் 'மாஜி' தன்னோட 'கன்ட்ரோல்ல' வச்சிருக்காரு. இனி, ஈரோடும் அவர் 'கன்ட்ரோல்ல' வந்துரும்னு ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க...''

புரோக்கர்களுக்கே வாய்ப்பு ''உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்படி போயிக்கிட்டிருக்கு. நீங்க நேர்ல போயி பார்த்தீங்களா...'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''ஆமாப்பா... நானும் சில இடங்கள்ல நடந்த 'கேம்ப்'க்கு போயிருந்தேன். பப்ளிக் நிறையப் பேரு வந்து பெட்டிசன் கொடுக்குறாங்க. பர்த் சர்ட்டிபிகேட் கொடுக்குறது, சொத்து வரி பெயர் மாற்றம் செய்றது, ஆதார் அப்டேட் செய்றது, புது ஆதார் கொடுக்கறதுன்னு சின்ன சின்ன வேலையை உடனே செஞ்சு கொடுக்குறாங்க... மத்த பெட்டிசன்களை அந்தந்த ஆபீசுக்கு 'ரெகமண்ட்' பண்ணி அனுப்புறாங்க. அதெல்லாம், புரோக்கர்ஸ் சம்பாதிக்கிறதுக்கே வழிவகுக்குதுன்னு சொல்றாங்க,''

''பெரியநாயக்கன்பாளையம் ஏரியாவுல நடந்த, கேம்ப்கள்ல பட்டா மாறுதல் உள்ள ரெவின்யூ சம்பந்தமான பெட்டிசன்களை, அந்தந்த வி.ஏ.ஓ., ஆபீசுக்கு அனுப்பியிருக்காங்க. ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லி, பெட்டிசன்களை சில வி.ஏ.ஓ.,க்கள் நிராகரிச்சிடுறாங்க. புரோக்கர் வழியா போனா, ஓகே கொடுக்குறாங்க. கேம்ப்ல பெட்டிசன் கொடுத்தவங்க பலரும் ஏமாற்றத்துல இருக்காங்க,''

ஊழல் சந்தேகம் ''வடகோவை சிந்தாமணி கூட்டுறவு சங்கத்து மேல ஒரு கம்ப்ளைன்ட் வந்துச்சே... அதைப்பத்தி விசாரிச்சீங்களா...''

''அதுவா... கூட்டுறவு சங்கத்துல ஒவ்வொரு வருஷமும் தணிக்கை செஞ்சு பேரவை கூட்டம் நடத்தணும். சிந்தாமணி சங்கத்துல ஆறு வருஷமா தணிக்கை நடத்தவே இல்லைன்னு சொல்றாங்க. தணிக்கை செய்ய வேண்டிய பல ஆவணங்கள், காணாமப் போயிடுச்சுன்னு சொல்றாங்க. ஆறு வருஷத்துல எவ்ளோ ஊழல் நடந்திருக்கும்னு, விவசாயி ஒருத்தரு கேள்வி கேட்டிருக்காரு. சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவங்க, கண்டுக்காம நகர்ந்து போறாங்களாம். இந்த விவகாரத்துல மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி, ஊழல், முறைகேடு நடந்திருந்தா, 'என்கொயரி' செஞ்சு வெளிச்சத்துக்கு கொண்டு வரணும்னு, விவசாயிகள் விரும்புறாங்க,''

வாரி குவிக்கும் ஆபீசர் ''கோவை பத்திரப் பதிவுத்துறையில இருக்கற ஒரு 'பவர் புல் லேடி', கரன்சியை வாரிக் குவிக்கிறாராமே...''

''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். மேலிடத்துக்கு வேண்டப்பட்டவருன்னு பத்திரப் பதிவுத்துறையில பேசிக்கிறாங்க. அஞ்செழுத்து பேரோட அஞ்சு வருஷமா நம்மூர்லயே சுத்தி, சுத்தி வர்றாராம்.

வேற போஸ்ட்டிங்கிற்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சாலும், கொஞ்ச நாள்ல கூடுதல் பொறுப்பா வாங்கிடுறாராம். பணம் கொழிக்கற போஸ்ட்டிங்ல இருக்காரு. லஞ்சமா கரன்சி கொடுக்காம ஒரு கையெழுத்து கூட வாங்க முடியாதுன்னு சொல்றாங்க,''

''பொதுவா, ஒரு இடத்துக்கான 'வேல்யூ' பிக்ஸ் பண்றதுக்கு, சுத்து வட்டாரத்துல இருக்குற அதிகபட்ச 'வேல்யூ' பார்த்து முடிவு பண்ணுவாங்க. சம்பந்தப்பட்ட ஆபீசர், அவுங்க இஷ்டத்துக்கு ஒரு மதிப்பை 'பிக்ஸ்' பண்ணிடுவாங்களாம்.

டீல் முடிஞ்சதும் ரேட்டை குறைப்பாங்களாம். பெருசா குறைக்க மாட்டாங்களாம். லஞ்சமும் கொடுத்தாகணும்; சலுகையும் கெடைக்கறதில்லைன்னு பதிவுத்துறையை சேர்ந்தவங்க புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, செல்வபுரத்தை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.






      Dinamalar
      Follow us