/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
ஆளுங்கட்சி ஆதரவால் தப்பிய போலீஸ் 'தலை'கள்
/
ஆளுங்கட்சி ஆதரவால் தப்பிய போலீஸ் 'தலை'கள்
ADDED : அக் 20, 2025 11:11 PM

தீ பாவளிக்கு எடுத்த புத்தாடையை அணிந்து கொண்டு, பண்டிகைக்கு தயாரித்த பலகாரங்களுடன், சித்ராவும், மித்ராவும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தோழி வீட்டுக்கு புறப்பட்டனர்.
ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சித்ரா, ''மித்து, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் ரெண்டு பேரும் தங்க நாணயங்களோட, சென்னைக்கு போயிட்டுக்கு வந்தாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.
''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். சட்ட சபை நடந்துக்கிட்டிருந்த சமயம். துறையின் முக்கியப் புள்ளியான 'மீசை'க்காரர்கிட்ட இருந்து, ஆபீசருக்கு அழைப்பாம். அவரும், இன்ஜினியரிங் செக்சன் ஆபீசரும் 'தீபாவளி வாழ்த்து' சொல்லிட்டு வந்திருக்காங்க. அப்போ, தங்கத்துல அன்பளிப்பு கொடுத்தாங்களாம்,''
''அதே மாதிரி, மக்கள் பிரதிநிதியும், 'முறை' செஞ்சிட்டு வந்திருக்காங்க. ஜோனுக்கு ரெண்டு பவுன் வீதம் 10 பவுன் கலெக்சன் பண்ணுனாங்கன்னு, கார்ப்பரேஷன் வட்டாரத்துல பேசிக்கிறாங்க. அதுதவிர, ரெண்டு 'ல'கரம் வீதம் 10 'ல'கரம் ரொக்கமா வசூலிச்சதாவும் சொல்றாங்க.
எந்தெந்த டிபார்ட்மென்ட்டுல இருந்து, எத்தனை பாக்ஸ் ஸ்வீட்ஸ் வாங்கித் தரணும்னு ஒவ்வொரு செக்சனுக்கும் தனித்தனி உத்தரவு போயிருக்கு. மேலிடத்துல அவருக்கு, 'சப்போர்ட்' பண்றதுனால, ஆபீசர்களும் 'அட்ஜஸ்ட்' பண்ணிப் போக ஆரம்பிச்சிட்டாங்களாம்,''
ஆபீசர்களுக்கு பரிசு ''மேற்கு மண்டல பொறுப்பாளரான, மாஜி அமைச்சர் தரப்புல இருந்து, கலெக்ட்ரேட் ஆபீசர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்தாங்களாமே...'' என, நோண்டினாள் மித்ரா.
''ஆமா மித்து. உண்மைதான்! வழக்கம்போல ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு வேஷ்டி, சட்டை, சேலை, ஸ்வீட்ஸ் கொடுத்தாங்க. நிர்வாகி ஒருத்தர்கிட்ட, 'என்னங்க, வருஷம் முழுக்க உழைக்கிறோம்; எங்களுக்கு எதுவும் இல்லையா'ன்னு ஒரு ஆபீசர் கேட்டிருக்கிறார். இந்த விஷயம் 'பொறுப்பாளர்' காதுக்கு போயிடுச்சு,''
''உடனே, தனது ஊர் டீமை களமிறக்கி, கலெக்டர் ஆபீஸ் முழுவதும் எத்தனை செக்சன் இருக்கு; எத்தனை ஆபீசர்ஸ் இருக்காங்கன்னு லிஸ்ட் எடுத்திருக்காங்க. அவுங்களுக்கு புத்தாடை, ஸ்வீட்ஸ், பட்டாசு வழங்க உத்தரவிட்டிருக்காரு.
உள்ளூர் கட்சிக்காரங்க இல்லாம, அந்த ஊர்க்காரங்களே களமிறங்கி, ஆபீசர்ஸ் முதல் ஸ்டாப் வரை ஒவ்வொருத்தரின் தகுதிக்கு தகுந்தமாதிரி, தீபாவளி பரிசுகளை வாரிக் கொடுத்து, சந்தோஷப்படுத்தி இருக்காங்க,''
''இதே மாதிரி, அ.தி.மு.க., 'மாஜி' கிட்ட இருந்தும் முக்கியமான ஆபீசர்களுக்கும், தொகுதிக்குள்ள இருக்கற முக்கிய பிரமுகர்களுக்கும், எவர்சில்வர் தட்டோட பண்டிகை பரிசு போயிருக்கு. முக்கிய வி.ஐ.பி.,கள், ஆபீசர்கள், ஒப்பந்ததாரர்கள் பல பேரும், அவர் வீட்டுக்குப் போயி, வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்காங்க,''
ஆளுக்கொரு கிரைண்டர் ''சிட்டிக்குள்ளேயும் உடன்பிறப்புகள், தடபுடலா கொண்டாடுனாங்களாமே...''
''தடபுடல்னா கொஞ்சம் நஞ்சமல்ல... ஒவ்வொரு வார்டுலயும் அமர்க்களப்படுத்தி இருக்காங்க. உடன்பிறப்புகள் சந்தோஷத்துல திளைக்கிறாங்க. 22வது வார்டு கவுன்சிலர் கணவர், இளைஞரணி அமைப்பாளரா இருக்காரு. அவுங்க வார்டுல 11 பூத் வருது. ஒவ்வொரு பூத்திலும் தலா 10 பேரு இருக்காங்க. அவுங்க குடும்பத்துக்கு வேஷ்டி, சட்டை, சேலை, ஸ்வீட்ஸ், காரத்தோட, ஆளுக்கொரு கிரைண்டர் கொடுத்திருக்காரு,''
''இன்னாள் மேயர், முன்னாள் மேயர், சென்ட்ரல் ஜோன் சேர்மன் உள்ளிட்டவங்க, கட்சிக்காரங்களுக்கு இனிப்போட எவர்சில்வர் பாத்திரமும் கொடுத்து அசத்தியிருக்காங்க. இதுல, ஆர்.எஸ்.புரம் ஏரியா செயலாளர் ஜீன்ஸ் பேன்ட், சட்டை எடுத்துக் கொடுத்திருக்காரு.
அவுங்க ஏரியா மாவட்ட செயலாளரான தொண்டாமுத்துார்காரரும் அவர் பங்குக்கு ஆளுக்கொரு டிரஸ் எடுத்துக் கொடுத்திருக்காரு. வரப்போற அசெம்ப்ளி எலக்சன்ல, தொண்டாமுத்துாரை 'துடைச்சு' எடுக்கணுங்கிறது, ஆளுங்கட்சி பிளானாம். அதுக்காக, கட்சிக்காரங்களை இப்பவே தயார் செய்ய ஆரம்பிச்சிட்டாங்களாம்...''
ரத்தத்தின் ரத்தங்கள் சோகம் ''ஆனா, அ.தி.மு.க., சைடுல கட்சிக்காரங்க இந்த தடவை பெருசா எதுவும் செய்யலைன்னு ஒரு 'டாக்' ஓடிட்டு இருக்கே...''
''ஆமாப்பா... கேள்விப்பட்டேன். வழக்கமா, அ.தி.மு.க., சைடுல வார்டு செயலாளர்களுக்கு ஐந்தாயிரம் வழங்குவாங்க. இந்த தடவை கொடுக்கலை. ஆளுங்கட்சி தரப்புல கரன்சியை அள்ளி விட்டிருக்காங்க. போட்டிக்கு கரன்சி செலவழிக்க, அ.தி.மு.க., தரப்புல யாரும் தயாரா இல்லை.
அசெம்ப்ளி எலக்சன் நேரத்துல, செலவு நிறைய வரும்னு கணக்குப் போட்டு வச்சிருக்காங்க. அதனால, தைப்பொங்கலுக்கு கவுரவப்படுத்திடலாம்னு, தள்ளிப் போட்டுட்டாங்களாம்.
முக்கியமானவங்களுக்கு மட்டும் புத்தாடை கொடுத்திருக்காங்க. பஞ்சாயத்து பிரசிடென்ட், டவுன் பஞ்சாயத்து பிரசிடென்ட் போஸ்ட்டிங்ல இருந்தவங்க மட்டும், 'தாராளம்' காட்டியிருக்காங்க; மத்தவங்க 'சைலன்ட்' ஆகிட்டாங்க; அதனால, ரத்தத்தின் ரத்தங்களுக்கு சோகம்,''
''அதேநேரத்துல, தீபாவளி கவனிப்புல பெரியநாயக்கன் பாளையம் வட்டாரத்துல ஆளுங்கட்சி முந்தியிருக்கு. கவுண்டம்பாளையம் தொகுதியில, 460 பூத் இருக்கு. ஒவ்வொரு பூத் பொறுப்பாளர்களுக்கும், ஐந்தாயிரம் கொடுத்திருக்காங்க. முக்கிய பொறுப்புல இருக்கறவங்களுக்கு புத்தாடை, ஸ்வீட்ஸ், பட்டாசு குடுத்திருக்காங்க. எலக்சன் வர்றதுனால உடன்பிறப்புகளுக்கு கவனிப்பு வழக்கத்தை விட, ஜாஸ்தியா இந்த வருஷம் அமைஞ்சிருக்கு...''
''ஆளுங்கட்சி சைடுல சர்வே எடுத்ததா சொன்னாங்களே...''
''ஆமா, மித்து! கரூர் சம்பவத்துக்கு முன்னாடி எடுத்த சர்வேயில விஜய்க்கு ஆதரவு அதிகமா இருந்துச்சு. இப்போ, அவுங்க செல்வாக்கு டேமேஜ் ஆகியிருக்கும்னு சொல்றதுனால ஈஸியா ஜெயிக்கலாம்னு உடன்பிறப்புகள் கணக்குப் போடுறாங்க. டார்கெட் 10க்கு 10ன்னு இருந்தாலும், 6ல இருந்து 7 வரைக்கும் ஜெயிக்கலாம்னு நினைக்கிறாங்க.
மூனே மூனு தொகுதியே கொஞ்சம் சிரமமா இருக்கும்னு ஆளுங்கட்சியில சிந்திச்சிட்டு இருக்காங்க. எலக்சன் நெருங்கும்போது உடன்பிறப்புகளுக்கும், ரத்தத்தின் ரத்தங்களுக்கும் இடையே போட்டி பெருசா இருக்கும்னு, உளவுத்துறையினர் எதிர்பார்க்கிறாங்க,'' என்றபடி, ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானம் அருகே உள்ள தோழியின் வீட்டுக்கு முன், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.
பட்டாசு கெளப்பிய வசூல் தோழிக்கு ஸ்வீட் பார்சல் வழங்கி, தீபாவளி வாழ்த்து சொல்லி விட்டு திரும்பிய மித்ரா, சிறுவர் - சிறுமியர் பட்டாசு வெடிப்பதை பார்த்து விட்டு, ''பயர் டிபார்ட்மென்ட்'காரங்க வசூல்ல பட்டாசு கெளப்பிட்டாங்களாமே...'' என, கிளறினாள்.
''அதையேன் கேக்குறே... நம்மூர்ல டெம்பரவரி பட்டாசு கடை நடத்தணும்னா, 'பயர் டிபார்ட்மென்ட்'டுல என்.ஓ.சி., வாங்கணும். இதுக்கு ஐந்தாயிரம் 'கப்பம்' கட்டச் சொல்லியிருக்காங்க. கரன்சியை அள்ளிக் கொடுத்த பிறகே சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. ஆபீசர்களுக்கு தெரிஞ்சவுங்க யாராச்சும், ரெகமெண்டேசன் செஞ்சா, தொகையில கொஞ்சத்தை குறைச்சு, மூவாயிரம் வாங்கியிருக்காங்க. போதாக்குறைக்கு போலீஸ் தரப்பிலும் வாங்கிட்டு போயிருக்காங்க. ஆன்லைன் சேல்ஸ், மழைனால சேல்ஸ் டல்லுன்னு பட்டாசு வியாபாரிகள் நொந்து போயிட்டாங்க,''
''கார்ப்பரேஷன்ல கான்ட்ராக்ட் லேபர்களை பழிவாங்குறதா, ஒரு 'டாக்' ஓடிட்டு இருக்கே. என்ன விவகாரம்...''
''அதுவா... சட்டப்படி, 8.33 பர்சன்டேஜ் போனஸ் தரணும்னு, லேபர் சைடுல கேட்டாங்க. கருணை தொகையா, 4,700 ரூபா கொடுத்தாங்க. கேள்வி கேக்குற ஊழியர்களை பழிவாங்குறதா அதிருப்தி கெளம்பியிருக்கு. ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த சுகாதார மேற்பார்வையாளர்களுக்கும், துாய்மை பணியாளர்களுக்கும் இடையே, உரசல் ஏற்பட்டுட்டு இருக்கு. அவுங்களோட சரியான வருகை பதிவேட்டை நிறுவனத்துக்கிட்ட கொடுக்காம, சிலரது பெயர்களை வேணும்னே நீக்கி, போனஸ் கெடைக்காம செஞ்சிட்டதா சொல்றாங்க,''
இன்ஸ்., மீது ஆக்சன் இல்லை ''விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட்டுல இருந்து எப்.ஐ.ஆர்., பைல் செஞ்சும் கூட ரெண்டு இன்ஸ்., மீது இன்னும் டிபார்ட்மென்ட் ஆக்சன் எடுக்கலையாமே...''
''ஆமாப்பா... உண்மைதான்! மோசடி கேஸ்ல ஒரு லேடி மேல, குற்றப்பிரிவு போலீஸ்காரங்க கேஸ் பைல் பண்ணுனாங்க. என்கொயரி செஞ்சப்போ கொடுமைப்படுத்தியதா கம்ப்ளைன்ட் கெளம்புச்சு. அவுங்க வீட்டுல ரெய்டு பண்ணுனப்போ, 375 பவுன் நகையை கைப்பத்தியிருக்காங்க. இந்த விவகாரத்துல ரெண்டு லேடி இன்ஸ்., சம்பந்தப்பட்டிருக்காங்க,''
''ரெண்டு பேரும் வெவ்வேறு டிஸ்ட்ரிக்ட்ல இப்போ டியூட்டி பார்க்குறாங்க. கோர்ட் டைரக்சன்ல அவுங்க மேல விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட் எப்.ஐ.ஆர். போட்டிருக்கு. வழக்கமா விஜிலென்ஸ் கேஸ் பைல் செஞ்சா, சஸ்பெண்ட் ஆக்சன் எடுப்பாங்க. ரெண்டு பேருக்கும் மேலிடத்துல செல்வாக்கு இருக்கறதுனால, இதுவரைக்கும் டிபார்ட்மென்ட் ஆக்சன் எடுக்கலைன்னு, போலீஸ் சைடுல பேசிக்கிறாங்க,''
''இதே மாதிரி, விஜிலென்ஸ் ஆபீசர்ஸ் அன்னுார் ஏரியாவுல ரெய்டு நடத்தி, கையும் களவுமா பிடிச்சும் கூட, 'முக்கியமானவரை' கேஸ்ல இருந்து தப்ப விட்டுட்டாங்களாமே...''
''ஆமா... மித்து! நீ சொல்றது கரெக்ட்டுதான்! மனையிட அங்கீகாரம் கொடுக்க லஞ்சம் வாங்கறப்போ, கையும் களவுமா பிடிச்சாங்க. இந்த விவகாரத்துல லஞ்சம் வாங்கச் சொன்ன ஒன்றிய ஆபீசரை விட்டுட்டாங்க; கீழ் ஊழியர் மேல நடவடிக்கை எடுத்திருங்காங்க. ஏன்னா, மனையிட அங்கீகாரம் பஞ்சாயத்து அளவுல தர மாட்டாங்க; ஒன்றியத்துல கொடுப்பாங்க.
இந்த விவகாரத்துல, விஜிலென்ஸ் ஆபீசர்களே தப்பு பண்ணி, தப்பு செஞ்ச ஆபீசரை தப்ப விட்டுட்டாங்கன்னு கம்ப்ளைன்ட் கெளம்பியிருக்கு,'' என்றபடி, சுந்தராபுரத்தை நோக்கி, ஸ்கூட்டரை செலுத்தினாள் சித்ரா.
பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா, நண்பர்களுக்கு போனில் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல ஆரம்பித்தாள்.