/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
'பெண்டிங்' கோப்புகளை எடுத்தாங்களாம் தேடி... மழையா பொழிந்து கொட்டுச்சாம் ரூ. 14 கோடி!
/
'பெண்டிங்' கோப்புகளை எடுத்தாங்களாம் தேடி... மழையா பொழிந்து கொட்டுச்சாம் ரூ. 14 கோடி!
'பெண்டிங்' கோப்புகளை எடுத்தாங்களாம் தேடி... மழையா பொழிந்து கொட்டுச்சாம் ரூ. 14 கோடி!
'பெண்டிங்' கோப்புகளை எடுத்தாங்களாம் தேடி... மழையா பொழிந்து கொட்டுச்சாம் ரூ. 14 கோடி!
ADDED : செப் 17, 2024 04:39 AM

பணி நிமித்தமாக நகர் வலம் சென்ற சித்ரா, டவுன்ஹாலில் உள்ள கார்ப்பரேஷன் ஆபீசுக்குள் ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள்.
அங்குள்ள உணவகத்தில் டீ ஆர்டர் கொடுத்த மித்ரா, ''ஒரே ஒரு தீர்மானம் நிறைவேத்துனதுல மட்டும், 14 கோடி ரூபாய் கைமாறியிருக்குதாமே...'' என, விவாதத்தை சூடா ஆரம்பித்தாள்.
''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். ஜூலை மாசம் நடந்த கவுன்சில் மீட்டிங்ல அவசர அவசரமா, 333 தீர்மானங்களை நிறைவேத்துனாங்க. ஏ.டி.எம்.கே., ஆட்சியில இருந்து பெண்டிங்ல இருந்த ஏகப்பட்ட பைல்களை துாசி தட்டி எடுத்து, 102 லே-அவுட்டுகளுக்கு 'அப்ரூவல்' கொடுத்திருக்காங்களாம். லே-அவுட்டுகளை சேர்ந்தவங்களிடம் பேரம் பேசி, கமிஷனா பல 'ல'கரம் வாங்கியிருக்காங்களாம். 'டவுன் பிளானிங் கமிட்டி'க்கு அந்த தீர்மானங்களை கொண்டு போகாம, நேரடியாக, கவுன்சில்ல வச்சு, நிறைவேத்தி இருக்காங்களாம். கமிட்டியை சேர்ந்தவங்க 'என்கொயரி' செஞ்சதுல, 14 கோடி ரூபாய் கை மாறியிருக்கற தகவல் வெளிச்சத்துக்கு வந்திருக்கு; கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பா பேசிட்டு இருக்காங்க,''
கவுன்சிலரை காணலை
''அடேங்கப்பா... கவுன்சில்ல தீர்மானம் நிறைவேத்துறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா...'' என ஆச்சரியப்பட்ட மித்ரா, ''ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு கவுன்சிலரை காணலைன்னு சொல்றாங்களே...'' என கேட்டாள்.
''அதுவா... அவர் மேல திருப்பூர் மாவட்டத்துல மோசடி கேஸ் பதிவாகியிருக்கறதா பேசிக்கிறாங்க; கிட்டதட்ட ரூ.4.5 கோடி மோசடி செஞ்சிருக்கறதா சொல்றாங்க; 'அரெஸ்ட்'டாக வாய்ப்பு இருக்குன்னு போலீஸ் தரப்புல சொன்னதால, வெளிநாட்டுக்கு போயிட்டதா சொல்றாங்க. இதெல்லாம் ஆளுங்கட்சி வட்டாரத்துல 'ஹாட் டாபிக்'கா ஓடிட்டு இருக்கு... பவள விழா முடிஞ்சதுக்கு அப்புறம் ஆளுங்கட்சியில களையெடுப்பு நடக்கும்னு ஏற்கனவே சொல்லியிருக்காங்க. சொன்ன மாதிரி களையெடுப்பு நடக்குமான்னு உடன்பிறப்புகள் எதிர்பார்த்து காத்திட்டு இருக்காங்க,''
நடவடிக்கை இல்லையாமே!
''கார்ப்பரேஷன் இன்ஜினியர் மீது விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட் எப்.ஐ.ஆர்., பதிவு செஞ்ச பிறகும் இன்னும் நடவடிக்கை எடுக்காம இருக்காங்களாமே...''
''விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட்டுக்கு முக்கியமான இடத்துல இருந்து கம்ப்ளைன்ட் போயிருக்கு; ஒரு வாரமா கண்காணிச்சுட்டு இருந்துருக்காங்க. எல்லை மீறி போக ஆரம்பிச்சதும், வார்டு ஆபீசுக்கே போயி, கையும் களவுமா பிடிச்சிருக்காங்க. கணக்குல வராம வச்சிருந்த ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செஞ்சு எப்.ஐ.ஆர்., பதிவு செஞ்சும் கூட, அவர் மேல கார்ப்பரேஷன் நிர்வாகம் இன்னும் துறை ரீதியா நடவடிக்கை எடுக்காம இருக்காங்க. விசாரிச்சதுக்கு, விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட்டுல இருந்து இன்னும் 'ரிப்போர்ட்' கொடுக்கலைன்னு கூலா பதில் சொலறாங்களாம்,''
''அப்போ, அவரை காப்பாத்துறதுக்கு கார்ப்பரேஷன் சைடுல மூவ் பண்றாங்களா...''
''அதான் தெரியலை... கார்ப்பரேஷன் கமிஷனர் எப்பவும் ஸ்ட்ராங்க்கா நடவடிக்கை எடுப்பாரு; இந்த விஷயத்திலும் அப்படி நடவடிக்கை எடுக்கணும்னு நேர்மையான ஆபீசர்ஸ் விரும்புறாங்க...''
மசாஜ் சென்டர் விவகாரம்
''மசாஜ் சென்டர்ல மாமூல் வாங்குன விவகாரத்துல ஒன்பது பேர் சிக்கியிருக்காங்களாமே...''
''ஆமாப்பா... இதுசம்பந்தா 'பிரஸ் கிளப்' நிர்வாகிகள் சில பேரு, சிட்டி போலீஸ் கமிஷனரை நேர்ல சந்திச்சு பெட்டிசன் கொடுத்திருக்காங்க. சீனியர் ரிப்போர்ட்டர்னு ஒருத்தர், அடிக்கடி கமிஷனர் ஆபீசுக்கு வர்றதை வழக்கமா வச்சிருந்தாராம்; யூ டியூப் சேனல் நடத்துறதா சொல்லியிருக்காரு; அவரை, கமிஷனர் ஆபீஸ் பக்கம் வராதீங்கன்னு 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்களாம். இதுசம்பந்தமா மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை நடந்துட்டு இருக்குதாம். போலீஸ் தரப்புல அடுத்த கட்ட 'மூவ்' என்னவா இருக்கும்னு பலரும் தவியாய் தவிச்சிட்டு இருக்காங்க. இந்த விஷயத்துல, போலீஸ் கமிஷனர், இதுவரைக்கும் 'காம்ப்ரமைஸ்' ஆகாம இருக்காராம்,''
'கூல் லிப்' சேல்ஸ் ஜோர்
''ஸ்கூல் ஸ்டூடன்ஸ்கள்ட்ட போதை கலாச்சாரம் எல்லை மீறி போகுதாமே...''
''சிட்டிக்குள்ள இருக்கற கவர்மென்ட் ஸ்கூல், கார்ப்பரேஷன் ஸ்கூல் பக்கத்துல 'கூல் லிப்' சேல்ஸ் சக்கைப்போடு போடுது. நீயோ... நானோ... போயி கேட்டா கொடுக்க மாட்டாங்களாம்; அப்படின்னா என்னான்னு கேட்பாங்களாம். ஸ்டூடன்ஸ்களுக்கு மட்டுமே தெரியற 'கோட் வேர்டு' இருக்குதாம். அந்த வார்த்தைய சொன்னா, கடைக்காரர் புரிஞ்சுக்கிட்டு, 'கூல் லிப்' கொடுப்பாராம்,''
''இதேமாதிரி, கண்ணுல மை தடவுற மாதிரி தடவிக்கிறாங்க; அது ஒரு விதமான போதை தருதாம். ஒரு வித மயக்கத்துலேயே கிளாஸ்ல ஸ்டூடன்ஸ் ஒக்கார்ந்திருக்காங்களாம். டீச்சர்ஸால அடிக்கவும் முடியலை; திட்டவும் முடியலைன்னு புலம்புறாங்க,''
'பர்த் டே பார்ட்டி'
''காலேஜ் ஸ்டூடன்ஸ் அட்ராசிட்டி தாங்க முடியலைன்னு சொல்றாங்களே...''
''அதுவா... கோவைப்புதுார் ஏரியாவுல காலேஜ் ஸ்டூடன்ஸ் நிறையப் பேர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்காங்க. யாருக்காவது 'பர்த் டே' வந்தா.. மிட் நைட் 12:00 மணிக்கு மேல நடுரோட்டுல நின்னு கேக் வெட்டி கொண்டாடுறாங்க; 'பர்த் டே பார்ட்டி'ங்கிற பேர்ல இவுங்க அடிக்கற லுாட்டிக்கு அளவே இல்லையாம். நைட் ரோந்து போலீஸ்காரங்க கோவைப்புதுார் ஏரியாவுல ஒரு ரவுண்ட் வந்தா, இந்த மாதிரி ஸ்டூடன்ஸ் செயல்பாட்டை கன்ட்ரோல் பண்ணலாம்னு அந்த ஏரியா பப்ளிக் சொல்றாங்க,''
அரிசி கடத்தல் ஜோர்
இருவரும் பேசிக் கொண்டே விக்டோரியா ஹால் முன் வந்தனர். அங்குள்ள சிக்னலில், ரேஷன் கடைகளுக்கு அரிசி லோடு ஏற்றிச் செல்லும் லாரி நின்று கொண்டிருந்தது.
அதைக்கவனித்த மித்ரா, ''அக்கா... நமமூர்ல ரேஷன் அரிசி கடத்தல் ஜோரா நடக்குது. இதுல கொடுமை என்னான்னா... கடத்தல் வண்டிகள்ல சில போலீஸ்காரங்க 'எஸ்காட்' போறாங்க. கடத்தல் கும்பல்ல சமுதாய பிரச்னையும் பிண்ணிப் பிணைஞ்சிருக்காம். தொழில் போட்டியில வெளியே கசிய ஆரம்பிச்சிருக்கு. பிரச்னை வேறு விதமா வெடிக்கிறதுக்கு முன்னாடி, போலீஸ் தரப்பிலோ அல்லது மாவட்ட நிர்வாகம் தரப்பில அதிரடி நடவடிக்கை எடுக்கணும்னு விரும்புறாங்க,''
முட்டல் மோதல்
''அதெல்லாம் இருக்கட்டும். காரமடை ஏரியாவுல ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்குள்ள முட்டல் மோதல் நடந்துச்சாமே...''
''ஆமாக்கா... வார்டு செயலாளருக்கே தெரியாம, அவரது வார்டுக்குள்ள கட்சிக் கொடியேத்துற விழாவுக்கு இன்னொரு கோஷ்டிய சேர்ந்தவங்க ஏற்பாடு செஞ்சிருக்காங்க. கொடியேத்த வந்த ஆளுங்கட்சி நிர்வாகி, காருக்குள்ள இருந்துக்கிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை அனுப்பி வச்சிருக்காரு. அவுங்களை, வார்டு செயலாளரின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி, துரத்தியடிச்சிருக்காங்க. அதைப்பார்த்ததும் கொடியேத்த வந்த கட்சி நிர்வாகி, காருல சிட்டாய் பறந்துட்டாராம். வடக்கு மாவட்டத்துல உடன்பிறப்புகள் மத்தியில பரபரப்பா பேசிட்டு இருக்காங்க,''
கவனமா இருக்கணும்!
''கிரீம் பன் அரசியல் விவகாரம் என்னாச்சுன்னு சொல்லவே இல்லையே...''
''அதுல, இன்டஸ்ட்ரிக்காரங்க ரொம்பவே அப்செட்டுல இருக்காங்களாம். கவர்மென்ட் ஆபீசர்ஸ், மினிஸ்டர்ஸ்னு உயர்பொறுப்புல இருக்கறவங்க கலந்துக்கிற பங்சன்ல ரொம்பவும் கவனமா பேசனும்னு உஷார்படுத்தி இருக்காங்களாம். அசோசியேசன் சார்புல யாரு பேசுனாலும், அசோசியேசன் சார்ந்த மற்ற மெம்பர்ஸ் நெலமையை புரிஞ்சு நடந்துக்கிடணும்னு சொல்றாங்களாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தொழில்துறையினரை குளிர்விக்கிற மாதிரி, ஏதாச்சும் முக்கியமான அறிவிப்பு வந்தாலும் வரும்னு எதிர்பார்க்குறாங்களாம்,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.
பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, மொபைல் போனுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்க்க ஆரம்பித்தாள்.