sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

மாநாட்டுக்கு போகாமல் தாய்லாந்துக்கு டூர் ;கோவை தொகுதியில் போட்டி போட பேஜார்!

/

மாநாட்டுக்கு போகாமல் தாய்லாந்துக்கு டூர் ;கோவை தொகுதியில் போட்டி போட பேஜார்!

மாநாட்டுக்கு போகாமல் தாய்லாந்துக்கு டூர் ;கோவை தொகுதியில் போட்டி போட பேஜார்!

மாநாட்டுக்கு போகாமல் தாய்லாந்துக்கு டூர் ;கோவை தொகுதியில் போட்டி போட பேஜார்!


ADDED : ஜன 23, 2024 01:43 AM

Google News

ADDED : ஜன 23, 2024 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'டிவி'யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த, அயோத்தி ராமர் கோவில் நிகழ்வுகளை, உணர்ச்சி பொங்க, பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.

நகர்வலம் சென்று திரும்பிய மித்ரா, ''என்னக்கா, நிகழ்ச்சி துவங்கியிருச்சா,''என்று கேட்டுக் கொண்டே, சோபாவில் வந்தமர்ந்தாள்.

டீக்கடை கணக்கு


''மலை கோவில்ல டீக்கடை கணக்கை கூட, செட்டில் பண்ணாம பஞ்சாயத்து செஞ்சதா கேள்விப்பட்டேனே...''

''அதுவா... கோவில் வளாகத்துல மேம்பாட்டு பணி நடந்துட்டு இருக்கு. வேலை பார்க்குறவங்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் கொடுக்கச் சொல்லி, அறங்காவலர் குழுவை சேர்ந்த ஒருத்தரு உத்தரவிட்டிருக்காரு. அதை நம்பி, தெனமும் டீ, பஜ்ஜி, போண்டா கொடுத்திருக்காங்க. டீக்கணக்கு, மூவாயிரம் ரூபாயை தொட்டுருச்சு,''

''குழுவை சேர்ந்தவர்கிட்ட டீ செலவு கணக்கை, கடைக்காரர் சொன்னதும் ஏகத்துக்கும் கொந்தளிச்சிட்டாராம். இப்போ, கடையை துாக்குறதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டு இருக்காராம். டீ குடிச்சதுக்கு காசு கேட்டது ஒரு குத்தமாயான்னு டீக்கடைக்காரர் புலம்பிட்டு இருக்காரு,''

உடன்பிறப்புகள் தவிப்பு


''அதெல்லாம் இருக்கட்டும். சேலம் மாநாடு சம்பந்தமா விசேஷமான தகவல் ஏதாவது இருக்கா?''

''அந்த கூத்தை ஏன் கேக்குறீங்க... தனியார் பஸ்களை 'புக்' பண்ணி, ஆளுக்கு, 500 ரூபா கொடுத்து நம்மூர்ல இருந்து ஏகப்பட்ட பேரை அனுப்புனாங்க. பாதுகாப்பு ஏற்பாடு சரியா செய்யலையாம். அதனால, பை பாஸை தாண்டி, மாநாடு நடந்த இடத்துக்கு அவுங்களால போக முடியலையாம்,''

''அசைவ பிரியர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, சைவ பிரியர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, கோபி 65 கொடுத்திருக்காங்க. இருக்கையில் இருந்த ஒவ்வொருத்தருக்கும் கொடுத்த மஞ்சப்பையில பிஸ்கட், பிரட் பாக்கெட், ஜாம், மிக்சர், கேக் இருந்திருக்கு,''

''இது எதுவுமே பலருக்கும் கிடைக்கலையாம். அதனால, வாங்குன காசை வச்சு ஓட்டல்ல சாப்பிட்டாங்களாம். கடுப்பான பலரும், கூட்டிட்டுப் போன, ஆளும்கட்சி நிர்வாகிகளுக்கு 'செம டோஸ்' கொடுத்திருக்காங்க. வேற வழியில்லாம, ஊர் திரும்புற வழியில, சொந்தக்காசைப் போட்டு, சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்காங்க. 'சரக்கு' சப்ளை மட்டும், கட்டுப்பாடில்லாம நடந்துச்சாம்,''

தாய்லாந்து டூர்


''மித்து, இதெல்லாம் பரவாயில்லை. இன்னொரு குரூப், சேலம் மாநாட்டுக்கு டிமிக்கி கொடுத்துட்டு, தாய்லாந்து டூர் போயிட்டு வந்துருக்கு,''

''அப்படியா... கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்...''

''கார்ப்பரேஷனுக்கு அருகாமையில் உள்ள ஊரில், நடிகரின் பெயருடன் கூடிய, பகுதி கழக செயலாளர் ஒருத்தரு, நண்பர்களோட தாய்லாந்து, ஹாங்காங் போயிருக்காரு. லக்கேஜ்களோட விமான நிலையத்தில நிக்கிற மாதிரி, வெளிநாடுகள்ல எடுத்த போட்டோவெல்லாம் மொபைல் போன்ல 'ஸ்டேட்டஸ்' வச்சிருக்காங்க,''

''அதைப்பார்த்த ஆளுங்கட்சியின் உடன்பிறப்புகள் கொந்தளிச்சிட்டாங்க. சேலம் மாநாட்டுக்கு தொண்டர்களை அழைச்சுட்டு போகாம, இந்த நேரத்துல வெளிநாட்டுக்கு டூர் போனது சரியான்னு கேள்வி கேட்டு, ஆதங்கத்தை கொட்டி இருக்காங்க...''

ஆள் இல்லையாம்!


''லோக்சபா தேர்தல்ல இந்த முறையும் தி.மு.க., தரப்புல யாரும் போட்டி போட தயாரா இல்லையாமே...''

''ஆமாப்பா... நானும் விசாரிச்சேன். பா.ஜ.,கட்சியில போட்டி போடுறதுக்கு, நிர்வாகிங்க பலரும் 'சீட்' கேட்டு, தேசிய தலைமையில முட்டி மோதிட்டு இருக்காங்க. தி.மு.க., கூட்டணியில கமல் ஐக்கியமாகி, கோவையை கேப்பாருன்னு எதிர்பார்த்தாங்க,''

''ஓகோ...''

''கமல் கட்சியில போதுமான தொண்டர் படை இல்லாததால, ரொம்பவும் யோசிக்கிறாராம். அவரு போட்டியிட வாய்ப்பு இல்லைன்னு, கம்யூ., கட்சிக்காரங்க நினைக்கிறாங்க. சிட்டிங் எம்.பி.,ங்கிறதுனால, தொகுதியை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு, மா.கம்யூ., தரப்புல அழுத்தம் கொடுக்குறாங்களாம்,''

''தி.மு.க.,விலும் கோடிக்கணக்குல செலவு செய்றதுக்கு யாரும் தயாரா இல்லையாம். அமைச்சர் செந்தில்பாலாஜி பொறுப்பாளரா இருந்தா, எப்படியும் ஜெயிக்க வச்சுருவாருன்னு நம்பி போட்டி போடலாம்; இப்போ, நிலைமை வேற மாதிரியிருக்கு.

மாவட்ட செயலாளர்களை நம்பி, கோடிக்கணக்குல செலவு செஞ்சா அவ்ளோதான்னு, ஆளுங்கட்சி நிர்வாகிங்க நினைக்கிறாங்க. அதனால, கூட்டணி கட்சிக்கு தொகுதியை தள்ளி விட்டுட்டு, பிரசாரத்துக்கு மட்டும் உடன்பிறப்புகள் போவாங்களாம்...''

''நீலகிரி தொகுதியில, பா.ஜ., சார்புல மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டி போடுறது உறுதியாகிடுச்சாமே,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.

''ஆமாப்பா... அப்படித்தான் சொல்றாங்க. அடிக்கடி நீலகிரிக்கு விசிட் செஞ்சு, ஒவ்வொரு சட்டசபை தொகுதி நிலவரத்தையும் கேக்குறாராம். மேட்டுப்பாளையத்துல முகாம் அலுவலகம் திறந்திருக்காங்க,''

''இதைப்பார்த்துட்டு, அ.தி.மு.க.,வை சேர்ந்த ரத்தத்தின் ரத்தங்களும் களமிறங்கி, வார்டு வாரியா வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆங்காங்கே தாமரை, இரட்டை இலை சின்னங்களை வரைஞ்சிட்டு இருக்காங்க. ஆனா, தி.மு.க., தரப்புல 'சைலன்டா' இருக்காங்க. உடன்பிறப்புகள் சோர்வா இருக்காங்க.

ஆக் ஷனுக்கு தயக்கம்


''சூலுார் ஒன்றியத்துல ஆளுங்கட்சியை சேர்ந்த ஊராட்சி தலைவர் ஒருத்தரு விதிமீறல்ல ஈடுபட்டதை, 'ஆடிட்'டுல கண்டுபிடிச்சிருக்காங்க. உள்ளாட்சி சட்ட விதி - 205ன் படி தலைவர் பதவி பறிக்கச் சொல்லி, மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செஞ்சும், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்ங்கிறதுனால, தயக்கம் காட்டுறாங்களாம்... இதுசம்பந்தமா, இப்போ, கோர்ட்டுல கேஸ் போட்டிருக்காங்களாம். எலக்சன் சமயத்துல நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி வருமோன்னு, ஆபீசர்ஸ் புலம்புறாங்க...''

போலீசிலும் ஜாதி அரசியல்


''போலீஸ் ஆபீசர்ஸ் சில பேரு ஜாதி, மதம் பார்த்து செயல்படுறதா சொல்றாங்களே... விசாரிச்சீங்களா...''

''அது, ரொம்ப நாளாவே நடக்குது, மித்து! பி.ஆர்.எஸ்., வளாகத்துல ஆயுதப்படை பிரிவு செயல்படுது. வி.ஐ.பி.,கள் வரும்போதும், பண்டிகை சமயங்களிலும், அரசு விழாக்களுக்கும் ஆயுதப்படை போலீஸ்காரங்களை பணி அமர்த்துவாங்க. இவுங்களுக்கு ஜாதி பார்த்து தான் 'டூட்டி' ஒதுக்குறாங்களாம்.

போலீஸ்காரங்க யாராவது லீவு கேட்டா... அவுங்க மதத்தை பார்த்து கொடுக்குறாங்களாம். டூட்டி பார்க்குற இடத்துல ஜாதியையும், மதத்தையும் புகுத்துறதை ரெண்டு ஆபீசர் செய்ற வேலைன்னு, ஆயுதப்படையை சேர்ந்தவங்க சொல்றாங்க,''

'வசூல் ராணி' ஆபீசர்


''சரவணம்பட்டி, கணபதி ஏரியாவுல போலீஸ் ஆபீசர் மேடம் ஒருத்தங்க, வசூலுக்காகவே ஒரு ஆளை நியமிச்சிருக்காராம். நில விவகாரம், கட்டடம் காலி செய்றது, கொடுக்கல் வாங்கல் பிரச்னை, குடும்பப் பிரச்னைன்னு, ஸ்டேஷனுக்கு வர்ற, வராத பிரச்னை எல்லாத்தையும், கட்டப்பஞ்சாயத்து பேசி முடிச்சிர்றாராம்,''

''ஆபீசர் நியமிச்சிருக்கிற ஆள், 'வாட்ஸ் அப்' அழைப்பு மூலமாவே பேசுறாராம். பிரச்னைகளை கேட்டு, மேடம் கிட்ட பேசிட்டு, 'ரேட்' சொல்றாராம். அதுக்கு ஒத்துக்கிட்டு பணத்தை உடனே 'செட்டில்' செஞ்சா, பிரச்னையை அவங்களுக்கு சாதகமா மாத்த, ஸ்டேஷன்ல எல்லா வேலைகளும் நடக்குமாம்,''

''கேட்டதைக் கொடுக்க மறுத்துட்டா, எதிர்தரப்புல பேச ஏற்பாடு நடக்குமாம். இவரைப் பத்தி சிட்டி பெரிய ஆபீசருக்கு பல முறை புகாரும் போயிருச்சாம். ஏதோ ஒரு காரணத்தால, நடவடிக்கை எடுக்காம இருக்காராம்,''

பி.எம்.சி.,க்கு 'பைன்'


''கார்ப்பரேஷன் கமிஷனர் சிவகுரு பிரபாகரன், தடாலடி பேர்வழின்னு கேள்விப்பட்டிருக்கேன்... இந்த மாதிரி செய்வாருன்னு எதிர்பார்க்கலை...''

''ஏம்ப்பா... என்னாச்சு... என்ன நடந்துச்சு...''

''தெனமும் ஏதாச்சும் ஓரிடத்துல கள ஆய்வு செய்வாரு. தப்பா வேலை செஞ்சுக்கிட்டு இருந்தா, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்குற மாதிரி, எப்படி வேலை செய்யணும்னு சொல்லிக் கொடுக்குறாரு. மறுபடியும் அதே ஏரியாவுக்கு போகும்போது, சொல்லிக் கொடுத்த மாதிரி வேலை செய்யாம இருந்திருந்தா... அவ்ளோ தான்,''

''சரி, நல்ல விஷயம்தானே,''

''மேல கேளு...கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ரத்தினபுரிக்கு ஆய்வுக்கு போன அவரு, சூயஸ் நிறுவனத்துக்கு, 10 லட்சம் ரூபாய் 'பைன்' போட்டிருக்காரு. அதோட விடலை. சூயஸ் நிறுவனத்துக்கும், கார்ப்பரேஷனுக்கும் இடையே பாலமா இருக்குற பி.எம்.சி., நிறுவனத்துக்கும், 2 லட்சம் ரூபா 'பைன்' போட்டிருக்காரு. இதை கேள்விப்பட்டு, கார்ப்பரேஷன் ஆபீசர்களே ஆடிப் போயிருக்காங்க. இதே ரீதியில போனா, சம்பளத்துல கை வச்சிருவாரோன்னு பயந்துட்டு இருக்காங்க...''

அடாவடி டாக்டர்


''கார்ப்பரேஷன் ஆஸ்பிட்டல்ல டாக்டர் ஒருத்தரு அடாவடியா நடந்துக்கிறாராமே...''

''அதுவா, 61வது வார்டு கள்ளிமடையில நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுது. டூட்டி டாக்டர் ஒருத்தரு, அவர் இஷ்டப்பட்ட நேரத்துக்கு தான், ஆஸ்பிட்டலுக்கு வருவாராம். சில சமயம் எட்டு மணிக்கு வருவாராம்; சில சமயம், 10 மணியாகிடுமாம்,''

''இது சம்பந்தமா யாராவது கேள்வி கேட்டா, கமிஷனரை சொல்லச் சொல்லுங்கன்னு அதட்டுறாராம்... கமிஷனரும் கொஞ்சம் சிரத்தை எடுத்து, பொதுமக்கள் அதிகமா எங்கெங்கே பாதிக்கப்படுறாங்கன்னு, காது கொடுத்து கேட்டு ஆக் ஷன் எடுக்கணும்னு விரும்புறாங்க...'' என்றபடி, ராமர் கோவில் விழாவை, பயபக்தியுடன் தொடர்ந்து, பார்க்க ஆரம்பித்தாள் மித்ரா.






      Dinamalar
      Follow us