sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

கோவைக்கு யாருமில்லே 'பொறுப்பு'.. போலீசுக்குள்ளே ஏனிந்த வெறுப்பு?

/

கோவைக்கு யாருமில்லே 'பொறுப்பு'.. போலீசுக்குள்ளே ஏனிந்த வெறுப்பு?

கோவைக்கு யாருமில்லே 'பொறுப்பு'.. போலீசுக்குள்ளே ஏனிந்த வெறுப்பு?

கோவைக்கு யாருமில்லே 'பொறுப்பு'.. போலீசுக்குள்ளே ஏனிந்த வெறுப்பு?


UPDATED : மே 13, 2025 06:48 AM

ADDED : மே 13, 2025 01:04 AM

Google News

UPDATED : மே 13, 2025 06:48 AM ADDED : மே 13, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் சித்ராவும், மித்ராவும் 'ஷாப்பிங்' புறப்பட்டனர்.

காந்திபுரம் கிராஸ்கட் ரோடு வழியாகச் சென்றபோது, ஆளுங்கட்சியின் மாவட்ட அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''என்னக்கா, நம்ம மாவட்டத்துக்கு இன்னும் பொறுப்பு அமைச்சரே நியமிக்காம இருக்காங்களே... ஏனாம்...'' என கிளறினாள்.

''ஆமாப்பா... உடன்பிறப்புகள்கிட்ட நானும் விசாரிச்சேன். ஈரோட்டுக்காரரை நியமிப்பாங்கன்னு ஆரம்பத்துல எல்லோரும் நினைச்சிட்டு இருந்தாங்க; தலைமையில இருந்து எந்த அறிவிப்பும் வரலை. ஈரோட்டுக்காரரும் நம்மூருக்கு வரலை; கரூர்காரரும் எட்டிப்பார்க்கலை,''

''புதுசா வட்ட செயலாளர்கள் நியமிக்கறது, பகுதி கழகத்தை பிரிச்சு செயலாளர்கள் நியமிக்கறது சம்பந்தமா, 'மாவட்டங்களும்' கரூர்காரரை பார்த்து, பேசிட்டு வந்திருக்காங்க. இன்னமும் அந்த ஊர்க்காரங்க கட்டுப்பாட்டுல தான் நம்மூரு இருக்குது,''

கதர்சட்டைகள் குஸ்தி


''அதெல்லாம் இருக்கட்டும்... 56வது வார்டு இடைத்தேர்தல்ல, தி.மு.க., போட்டியிடப் போகுதா அல்லது கூட்டணி தர்மம்னு காங்கிரசுக்கு தள்ளிவிடப் போகுதா...''

''காங்கிரசுல ஏகப்பட்ட கோஷ்டி இருக்கறது ஊரறிந்த விஷயம். ஏர்போர்ட்டுல மோதிக்கிட்ட ரெண்டு கோஷ்டியுமே காங்கிரசுக்கு மறுபடியும் வாய்ப்பு தரணும்னு, ஆளுங்கட்சி தரப்புல பேசியிருக்காங்க.

போதாக்குறைக்கு உள்ளூர்காரங்களும் சென்னைக்கு படையெடுத்திருக்காங்க. கவுன்சிலர் 'சீட்'டை வாங்குறதுக்கு ஒவ்வொரு கோஷ்டியும் குஸ்தி போடுறாங்க. தி.மு.க.,வோ, காங்கிரசோ யார் போட்டியிட்டாலும், 'கெத்தா' ஜெயிச்சுக் காட்டணும்னு, 'பிளான்' போட்டிருக்காங்க...''

அந்த இரண்டு கவுன்சிலர்கள்


''கருமத்தம்பட்டி ஏரியாவுல ரத்தத்தின் ரத்தங்கள் அதிருப்தியில இருக்கறதா கேள்விப்பட்டேனே...''

''அதுவா... கார்ப்பரேஷன்ல நடக்குற முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, கவுன்சில் மீட்டிங்ல ஏ.டி.எம்.கே., கவுன்சிலர்கள் குரல் கொடுக்குறாங்க; வெளிநடப்பு செய்றாங்க; போராட்டம் பண்றாங்க. ஆனா, கருமத்தம்பட்டி நகராட்சியில 'கப்-சிப்'னு இருக்காங்களாம்,''

''குப்பை பிரச்னையில இருந்து டெண்டர் வரைக்கும், ஆளுங்கட்சியை சேர்ந்த ரெண்டு கவுன்சிலர்களே, சேர்மனுக்கு எதிரா போராட்டம் நடத்துறாங்க; சேர்மனும் ஆளுங்கட்சியை சேர்ந்தவருதான். இருந்தாலும் அவுங்க கட்சியில இருந்தே எதிர்ப்பு குரல் கேக்குது.

ஆனா, தப்பை சுட்டிக் காட்ட வேண்டிய இடத்துல இருக்கற, ஏ.டி.எம்.கே., கவுன்சிலர்கள் மூனு பேரும் 'சைலன்ட்'டா இருக்காங்க. இலைக்கட்சிக்குள்ள உட்கட்சி பூசலா அல்லது ஆளுங்கட்சி தரப்புக்கு அனுசரிப்பான்னு புரியாம, ரத்தத்தின் ரத்தங்கள் தவிக்கிறாங்க...'' என்றபடி, வடகோவை மேம்பாலத்தில் இருந்து இறங்கி, பாரஸ்ட் ஆபீஸ் வளாகத்துக்குள், ஸ்கூட்டரை செலுத்தினாள் சித்ரா.

'உற்சாக' ஆபீசர்ஸ்


''அக்கா... வனத்துறை ஆபீசர்ஸ் மூனு பேரு, 'உற்சாகத்துல' கார்ல போயி, ஆக்ஸிடென்ட்டுல சிக்கிட்டாங்களாமே...''

''அந்தக்கூத்தை ஏன் கேக்குற. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, உடுமலை வனப்பகுதியில சீமைக்கருவேல மரம் வெட்டுறதுக்கு டெண்டர் விட்டிருக்காங்க. 'வருமானம்' வந்ததை கொண்டாடுற விதத்துல, அமராவதி வன அலுவலகத்துல, மூனு முக்கியமான ஆபீசர்ஸ் யூனிபார்முல 'ஜாலியா' இருந்திருக்காங்க; 'உற்சாகம்' குறையாமலேயே, அதிகாலையில் கார்ல நம்மூருக்கு திரும்பியிருங்காங்க,''

''போடிபட்டிங்கற ஊர்கிட்ட வந்தப்போ, புளியமரத்துல கார் மோதி, அவுங்களுக்கு காயம் பலமா விழுந்திருக்கு; கார் முன்பகுதி நொறுங்கிடுச்சு. அரசு மருத்துவமனைக்குப் போனா, விஷயம் விபரீதம் ஆகிரும்னு, பிரைவேட் எலும்பு முறிவு மருத்துவமனைல 'அட்மிட்' ஆகிட்டாங்க.

போலீசாருக்கு விஷயம் தெரிஞ்சது. இருந்தாலும், விபத்துனு மட்டும் சி.எஸ்.ஆர்., கொடுத்துருக்காங்க. வனத்துறை உயரதிகாரிகளை சரிக்கட்டி, நடவடிக்கை எடுக்காம இருக்கறதுக்கான வேலைய பார்த்துட்டு இருக்காங்களாம்,''

''போலீஸ்காரங்களும் நிறையவே ஒத்துழைப்பு தந்துருக்காங்க. யூனிபார்ம்ல எல்லை மீறிய விஷயத்துக்கு, வனத்துறை நடவடிக்கை எடுக்கணும்னு, அங்கிருக்கற விவசாய அமைப்புகள் கோரிக்கை வச்சுருக்காங்க. ஆனைமலை புலிகள் காப்பக தலைமை அலுவலகம் கோவையில இருக்கறதுனால, என்ன நடவடிக்கை எடுக்கப் போறாங்கன்னு, 'வெயிட்' பண்ணிட்டு இருக்காங்க,'' என்ற சித்ரா, வனக்கல்லுாரியில் இருந்து காந்திபார்க் செல்ல, ஸ்கூட்டரை திருப்பினாள்.

பந்தோபஸ்து டூட்டி


''ரூரல் போலீஸ்காரங்க புலம்பல் சத்தம் அதிகமாகிடுச்சாமே...'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''ஆமாப்பா... மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை போலீஸ் ஸ்டேஷன்ல போதுமான எண்ணிக்கையில போலீஸ்காரங்க இல்ல. இருக்கறவங்களை வச்சு சமாளிக்கிறாங்க. இப்போ, என்னடான்னா... பந்தோபஸ்து டூட்டின்னு வெவ்வேற டிஸ்ட்ரிக்ட்க்கு அனுப்புறாங்க. அதனால, ஸ்டேஷன் டூட்டி பாதிக்குதுன்னு புலம்புறாங்க,''

''டூட்டியில இருக்கறவங்களே ஓய்வு இல்லாம, எல்லா வேலையும் செய்றதுனால, மனஉளைச்சல்ல இருக்காங்க. கேஸ் என்கொயரி ரொம்ப தொய்வா இருக்குதாம். இதே நிலைமை நீடிச்சா, மேட்டுப்பாளையம் உட்கோட்டத்துல, குற்ற வழக்கு எண்ணிக்கை ஜாஸ்தியாகிடும்னு போலீஸ்காரங்க அச்சப்படுறாங்க...''

கொம்பு சீவும் ஆபீசர்


''நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரங்களுக்கு, ஸ்டேஷன் போலீஸ்காரங்க எந்த தகவலும் சொல்லக் கூடாதுன்னு, தடை போட்டிருக்காங்களாமே... உண்மைதானா...''

''ஆமாப்பா.. நீ சொல்றது கரெக்ட்டுதான்! சிட்டி லிமிட்டுல இருக்கற 'துணை'யான ஆபீசர் ஒருத்தரு, இப்படி ஆர்டர் போட்டிருக்காரு. அப்புறம்... நுண்ணறிவு பிரிவு இன்பர்மேஷன் சொல்றதுக்கு முன்னாடி, ஸ்டேஷன்ல இருந்து தகவல் வரணும்னு கறாரா சொல்லியிருக்காராம்...அதனால, கொஞ்ச நாளாகவே ரெண்டு பிரிவுக்கும் இடையே 'அக்கப்போர்' ஓடிட்டு இருக்கு,''

''இதுக்கு இடையில, செல்வபுரம் போலீஸ்காரங்க ஒருத்தரை 'என்கொயரி'க்கு ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க; சம்பந்தப்பட்ட அமைப்பை சேர்ந்தவங்க முற்றுகையிட்டதால ஏரியாவே பரபரப்பாகிடுச்சு. கடைசியில, நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரங்க தலையிட்டு, பிரச்னையை தீர்த்து வச்சிருக்காங்க,''

''போலீஸ்ல எத்தனை பிரிவு இருந்தாலும், ஒன்னா சேர்ந்து வேலை பார்த்தா தான் சிட்டியில அமைதி இருக்கும்னு ஆபீசர்ஸ் உணரணும். டிபார்ட்மென்ட்டுக்குள்ளேயே கொம்பு சீவி விட்டா, எலக்சன் நேரத்துல ஏழரையில போயி முடிஞ்சிடும்னு, நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரங்க சொல்றாங்க...'' என்ற சித்ரா, காந்தி பார்க் அருகே ஸ்கூட்டரை நிறுத்தி, அங்குள்ள பேக்கரிக்குள் நுழைந்தாள்.

நைட் வரை மீட்டிங்


பில்டர் காபி ஆர்டர் கொடுத்த மித்ரா, ''கலெக்டர் ஆபீசுல இருந்து வீடியோ கான்பரன்ஸ் முறையில நைட் ஒன்பது மணி வரைக்கும், மீட்டிங் நடத்துறாங்களாமே...'' என, நோண்டினாள்.

''அதுவா... மகளிர் திட்டம்ங்கிற பேருல ஒரு செக்சன் இருக்கு; 44 சூபர்வைசர்கள் வேலை பார்க்குறாங்க. குழு உருவாக்குறது; கவர்மென்ட் மானியம் கெடைச்சதா; அச்சீவ்மென்ட் எப்படியிருக்குன்னு கண்காணிக்கிறது இவுங்களோட டூட்டி,''

''ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலையில, 10:00 மணிக்கு கலெக்டர் ஆபீசுக்கு வரச்சொல்றாங்க; நைட் 7:00 மணி வரைக்கும் மீட்டிங் நடத்துறாங்க. மகளிர் திட்ட ஆபீசுல இருக்கற சின்ன ரூம்ல, அத்தனை பேரையும் ஒக்கார வச்சு பேசுறாங்க; வால்பாறை, பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார்ல இருந்து வர்ற லேடீஸ், வீடு திரும்புறதுக்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க,''

''இதுமட்டுமில்ல... தெனமும் சாயாங்காலம், 5:00 மணிக்கு 'வீடியோ கான்பரன்ஸ்ல' உதவி திட்ட அலுவலர், 44 பேருக்கும் 'அட்டனன்ஸ்' எடுத்துட்டு, நைட், 9:00 மணிக்கே மீட்டிங்கை முடிக்கிறாராம். கலெக்டரோ, திட்ட அலுவலரோ எந்த நடவடிக்கையும் எடுக்காம வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்கன்னு அங்கலாய்க்கிறாங்க...'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.

ஓயாத மணல் கடத்தல்


''மணல் கடத்தல் இன்னமும் குறையலையாமே...''

''ஆமா... நீ சொல்றது கரெக்ட். மாவட்ட நிர்வாகம் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும், ஏரியாவை மாத்தி, மாத்தி கொள்ளையடிக்கிறாங்க. மணல் கடத்துன வாகனங்களை பறிமுதல் செஞ்சிருக்கோம்னு ஸ்டேட்மென்ட் விட்டு, 'ரிக்கார்டு' பதிவு செய்றதுல கனிம வளத்துறை கவனம் செலுத்துது.

கனிம வள கொள்ளைக்கு உடந்தையா செயல்படுற, வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., - தாசில்தார்கள் மேல துறை ரீதியாநடவடிக்கை எடுக்கறதுக்கு, கலெக்டர் தயக்கம் காட்டுறாரு. அதனால, கனிம வள கொள்ளை இன்னமும் தொடருது. ரெவின்யூ ஆபீசர்ஸ் மேல கடுமையான நடவடிக்கை எடுத்தா, கடத்தல் கட்டுப்பாட்டுக்குள் வரும்னு, நேர்மையான ஆபீசர்ஸ் வெளிப்படையா பேச ஆரம்பிச்சிட்டாங்க,''

''ஏன்னா, அன்னுார் தாலுகாவுல அக்கரை செங்கப்பள்ளி, குப்பனுார், கரியாம்பாளையம், பெரிய புத்துார், பொகலுார், வடக்கலுார் பகுதியில, பட்டா நிலங்கள்ல இருந்தும், தெனமும் சட்ட விரோதமா, லோடு லோடா மண் எடுத்துட்டு போறாங்க. இன்பர்மேஷன் கொடுத்தாலும், ஆளுங்கட்சிக்காரங்க நிர்பந்தத்தால, ரெவின்யூ ஆபீசர்ஸ் மவுனமா இருக்காங்க,'' என்ற சித்ரா, ஆர்.எஸ்.புரம் கலையரங்கம் அருகே ஸ்கூட்டரை நிறுத்தினாள். அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடைக்குள் இருவரும் நுழைந்தனர்.






      Dinamalar
      Follow us