/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
சட்டவிரோத 'பார்'களில் மாமூல் 'நிரப்பும்' அதிகாரிகள்
/
சட்டவிரோத 'பார்'களில் மாமூல் 'நிரப்பும்' அதிகாரிகள்
சட்டவிரோத 'பார்'களில் மாமூல் 'நிரப்பும்' அதிகாரிகள்
சட்டவிரோத 'பார்'களில் மாமூல் 'நிரப்பும்' அதிகாரிகள்
UPDATED : மே 21, 2024 03:40 AM
ADDED : மே 21, 2024 12:23 AM

வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வரும்ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற சித்ராவும், மித்ராவும், மனமுருகி விஸ்வேஸ்வரரை வழிபட்டு, வெளிப்புற வளாகத்துக்கு வந்தனர்.
''சேதி சொல்ற துறையை கவனிக்கிற மினிஸ்டரு 'அப்செட்'ல இருக்காராம்...'' என, அரசியல் மேட்டரை கிளறினாள் சித்ரா.
''ஏங்க்கா என்னாச்சு?''
''கட்சிக்காரங்க, எதாவது வேலையா வந்தா பொறுமையா பேசி, செஞ்சு கொடுக்கிறேன்னு சொல்ற மினிஸ்டரு, இப்போ, யாராவது போனாங்கன்னா, கொஞ்சம் 'வெயிட்' பண்ணுங்க; ஜூன் நாலாம் தேதிக்கு அப்புறம் பார்க்கலாம்ன்னு சொல்றாராம். 'ஏன் இப்படி பேசறாரு?' ன்னு விசாரிச்சா, சமீபத்துல சென்னை போனவரு, 'சின்னவரை' பார்த்து பேசியிருக்காரு,''
''அப்போ, 'ஈரோடு தொகுதியில, நாம ஜெயிச்சாலும் ரொம்ப கம்மியான ஓட்டு வித்தியாசம் தான் கிடைக்கும்ன்னு, உளவுத்துறை 'ரிப்போர்ட்' சொல்லுது; உங்க ஏரியாவுல கட்சிக்குள்ள கோஷ்டி பூசல் அதிகம்ன்னு வேற சொல்றாங்க. ரிசல்ட்டுக்கு அப்புறம் பார்த்துக்கறேன்'னு அவர் சொன்னதா, சொல்றாங்க. 'எலக்ஷன் ரிசல்ட்' வந்ததுக்கு அப்புறம், நம்மள பந்தாடிடுவாங்களோங்கற பயம் வந்துடுச்சு போலன்னு, கட்சிக்காரங்க பேச ஆரம்பிச்சுட்டாங்க,''
''ஆளுங்கட்சிக்குள்ள கோஷ்டி பூசல் எக்கச்சக்கமா இருக்கு. கட்சி நிர்வாகியோட பிறந்தநாளுக்கு கூட ரகசியமா தான் வாழ்த்து சொல்ல வேண்டிய நிலமைல நிர்வாகிங்க இருக்காங்களாம்,'' என்ற சித்ரா, ''தெற்கு வட்டாரத்துல கட்சியை கவனிக்கிற வி.ஐ.பி.,யோட பிறந்த நாளுக்கு, கார்ப்பரேஷன்ல பொறுப்புல இருக்கற சில ஆளுங்கட்சிக்காரங்க வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்காங்க; இத ரகசியமா வச்சிக்கிட்டாங்களாம்,''
''வாழ்த்து சொல்றத ஒரு தப்பா...'ன்னு சக கட்சிக்காரங்க கேட்டத்துக்கு, 'அட போப்பா...அவருக்கு வாழ்த்து சொன்னது தெரிஞ்சா, தெற்கு வி.ஐ.பி., கோவிச்சுக்குவாரு'ன்னு சொல்றாங்களாம்,'' என நீண்ட நேரம் விளக்கினாள் சித்ரா.
''நீங்க சொல்றது பார்த்தா, எலக்ஷன் ரிசல்ட் முடிஞ்சதுக்கு அப்புறம், கட்சிக்குள்ள நிறைய பேரோடு பதவி காலியாகும் போலயே... மினிஸ்டர், மாவட்ட லெவல்ல இருக்கறவங்க மேல மட்டுமில்லாம, குறுநில மன்னர்கள் கணக்கா, கட்சிக்கு கெட்ட பேரு ஏற்படுத்திக்கிட்டு இருக்கற கட்சிக்காரங்க மேலேயும் நடவடிக்கை எடுத்தாங்கன்னா நல்லா இருக்கும்'' என்றாள் மித்ரா.
கலெக் ஷன் அள்ளும் இல்லீகல் 'பார்'
''அவிநாசியில, 11 'டாஸ்மாக்' கடை 'பார்' இருக்காம். இதுல, அஞ்சு 'பார்'காரங்க தான், மாசாமாசம் கவர்ன்மென்டுக்கு பணம் கட்டி, 'லைசென்ஸ்' வாங்கி செயல்படறாங்களாம். மத்த கடைக்காரங்க, டிடி கொடுக்காம, இல்லீகலா நடத்தறாங்களாம்,''
''இதனால, கவர்மென்ட்டுக்கு பல லட்சம் ரூபா வருவாய் இழப்பு ஏற்படுதாம். இத தடுக்க வேண்டிய போலீஸ், மதுவிலக்கு, கலால் துறை அதிகாரிங்க 'சைலன்டா' இருக்காங்களாம்,'' என்ற சித்ரா,''அங்க இன்னொரு கூத்தும் நடந்திருக்கு'' என தொடர்ந்தாள்.
''ஒன்றிய பொறுப்பை கவனிக்கிற ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரு, தன்னோட எல்லைக்குட்பட்டு இருக்கற எந்தவொரு 'டாஸ்மாக்' கடை 'பார்'லேயும், இல்லீகல், சில்லிங் சரக்கு ஓட்டக்கூடாது; அப்படி ஓட்டினா நடவடிக்கை எடுக்கணும்ன்னு, போலீசுக்கு 'பெட்டிஷன்' கொடுத்திருக்காராம். அதனால இல்லீகல், சில்லிங் விற்பனை மூலமா, கல்லா கட்டிக்கிட்டு இருந்த கட்சிக்காரங்க 'அப்செட்' ஆகி, அவருக்கு எதிரா திரும்பிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அந்த ஊர் ஸ்டேஷனுக்கு புதுசா வந்த ஒரு சின்ன ஆபீசர் கூட, எப்பவும் ஒரு சிவிலியன் இருக்காராம். அவருக்கு, நிழல் மாதிரி செயல்பட்டு, 'டீலிங்' கூட 'கல்லா' கட்டறாராம்,'' மித்ரா சொன்னாள்.
''போலீஸ்ன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது மித்து,'' என்ற சித்ரா, ''காங்கயத்துல ஆடு திருடின கும்பலை, உள்ளூர்க்காரங்க சிலரு 'செம மாத்து' போட்டு, போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருக்காங்க. அடிச்சவங்க மேல போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சாம். தங்களை எப்படியாவது காப்பாத்திக்கணும்ன்னு, பெரிய ஆபீசர்கிட்ட 'கோரிக்கை' வச்சாங்களாம். உங்க மேல 'கேஸ்' போடாம இருக்க முடியாது; ஆனா, பெரிசா பிரச்னை வராம பார்த்துக்கறேங்கற மாதிரி ஆபீசர் சொல்லிட்டாராம்...'' என்றாள்.
''அக்கா, நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன்'' என்ற மித்ரா, ''ஊதியூர் பக்கம், ஒரு லேடி சந்தேகப்படற மாதிரி சுத்திக்கிட்டு இருக்கிறதா போலீசுக்கு தகவல் வர்ற, அந்த லேடியை ஹாஸ்டல்ல சேர்த்துர்றோம்ன்னு சொல்லி கூட்டிட்டு போயிருக்காங்க. ஆனா, அந்த லேடி 'எஸ்கேப்' ஆகிட்டாங்கன்னு சொல்லியிருக்காங்க,''
''இதற்கிடையில காமநாயக்கன்பாளையத்துல, அந்த லேடி சம்மந்தமான 'மிஸ்ஸிங்' கேஸ் இருக்கிற விவரம் தெரியவர, பதறிப்போன போலீஸ் அங்கேயும், இங்கேயும் தேடியும், 'லேடி' கிடைக்கலையாம். இதுல, என்ன விஷயம்ன்னா, 'லேடி' விஷயத்துல 'ரிஸ்க்' எடுக்க விரும்பாத போலீஸ்காரங்க, ரயில்வே ஸ்டேஷன்லேயே விட்டுட்டு போய்ட்டதா சொல்றாங்க,'' என ரகசியம் உடைத்தாள்.
''கமிஷன், அது, இதுன்னு தி.மு.க., நிர்வாகிங்க ஏதாவது ஒரு வகையில காசு சம்பாதிக்கிறாங்க. ஆனா, நமக்கு கட்சியை நடத்தக்கூட காசு வர்றதில்லைன்னு புலம்பறாங்களாம் கூட்டணியில இருக்கற காங்கிரஸ்காரங்க,'' என்றாள் மித்ரா.
''அவங்க புலம்பல் சரிதான் மித்து. கொஞ்சம் நாள் முன்னாடி, கட்சியோட மாநில தலைவரு கலந்துக்கிட்ட கூட்டம் திருப்பூர்ல நடந்துச்சு. இதுல, கட்சி நிர்வாகிங்க சிலரு, அவருக்கு சால்வை, புத்தகம் பரிசா கொடுத்தாங்க. இத கவனிச்ச, மாவட்ட நிர்வாகி ஒருத்தரு, 'இந்த புத்தகம், சால்வையை எல்லாம் வச்சுக்கிட்டு என்ன பண்றது; அதுக்கு பதிலா கட்சியை நடத்த நிதி கொடுத்தாக்கூட நல்லா இருக்கும்'ன்னு, பல முறை 'மைக்'ல சொல்லியும், கடைசி வரை யாருமே கண்டுக்கலையாம்,'' என்றாள் சித்ரா.
'மாணவ'தொழிலாளர்கள்!
''நடந்து முடிந்த, பிளஸ் 1 பொதுத் தேர்வுல, மாநில அளவுல, 3வது இடம் பிடிச்சும், கல்வித்துறை அதிகாரிங்க சந்தோஷமா இல்லையாம். பிளஸ் 2வில், ஸ்டேட் லெவலில் பர்ஸ்ட் ரேங்க் வாங்கி, கலெக்டர் முன்னிலையில, கேக் கொடுத்து, மகிழ்ச்சியை பரிமாறிக் கிட்டாங்க. ஆனா, பிளஸ் 1 ரிசல்ட் வந்தப்போ, அந்த உற்சாகம் கொஞ்சம் கூட இல்லையாம்,''
''பத்தாம் வகுப்புல, 21வது இடத்துக்கு தள்ளப்பட்டது தான், இந்த 'அப்செட்'டுக்கு காரணம்ன்னு சொல்றாங்க. இதுதொடர்பா, தலைமையாசிரியர்கள் கலந்துக்கிட்ட ஆலோசனைக் கூட்டத்துல, மாணவர்கள் நிறைய பேரு 'பெயில்' ஆக என்ன காரணம்ன்னு, பெரிய ஆபீசர் கேட்க, பல காரணங்களை தலைமையாசிரியர்ங்க சொல்லியிருக்காங்க,''
''அதுல சிலரு, குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு போறாங்க; பகல்ல ஸ்கூல்ல உட்கார்ந்து துாங்கறாங்க; பாடத்தை கவனிக்கிறதே இல்லைன்னு சொல்ல, அவங்கள தட்டியெழுப்பி பாடம் சொல்லிக் கொடுங்கன்னு, பெரிய ஆபீசர் சொன்னாராம்...'' என்றாள் சித்ரா.
மாவட்ட எல்லையில் எல்லையில்லா வசூல்
''மாவட்ட எல்லையில் வசூலில், அவிநாசி போலீசார் கில்லியாக இருக்கின்றனர்,'' என்றாள் சித்ரா.
''எப்படிங்க்கா சொல்றீங்க?''
''நம்ம டிஸ்ட்ரிக்ட் எல்லையான அவிநாசி லிமிட்டில், நரியம்பள்ளி புதுாரில், கொரோனா காலத்தில், போலீஸ் செக்போஸ்ட் வந்தது. அதுக்கப்புறம் நிலைமை சகஜமான பின்னாடியும், செக்போஸ்ட் எடுக்காம விட்டுட்டாங்க,''
''இப்ப இந்த செக்போஸ்ட் போலீஸ்காரங்களுக்கு ரொம்ப சவுரியமாக போச்சு. அதிகாரிங்க யாரும் எட்டி பார்க்காத காரணமாக, எப்.ஓ.பி.,ங்கிற போலீஸ் நண்பர்கள் குழுன்னு சொல்லிட்டு, ரெண்டு மூனு பசங்களை போட்டுட்டு, போற, வற வண்டியை சோதனை செய்ற பெயரில் வசூல் பண்றாங்களாம்,''
''அதிலும், இப்ப சம்மர் சீசன் என்பதால, ஊட்டிக்கு போற ஒரு வண்டியும் விட்டு வைக்கிறதில்லையாம். அதில்லே.. இதில்லேனு... சொல்லி, 500 - ஆயிரம் ரூபா வரைக்கும் கறந்துடறாங்களாம். இதனால, அந்த ரோட்டில போறதுக்கே யோசிக்கிறாங்களாம். உட்கோட்ட அதிகாரி, இதனை கண்டுக்கிட்டா பரவாயில்லை,'' என சித்ரா முடிக்கவும், ஆர்டர் செய்த சமோசாவும், இஞ்சி டீயும் வந்தது. இருவரும் சுவைக்க ஆரம்பித்தனர். மழையும் ஓய ஆரம்பித்து.

