sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

'லஞ்ச சேவை'க்கு மையம் துவக்கிய இன்ஸ்பெக்டர்

/

'லஞ்ச சேவை'க்கு மையம் துவக்கிய இன்ஸ்பெக்டர்

'லஞ்ச சேவை'க்கு மையம் துவக்கிய இன்ஸ்பெக்டர்

'லஞ்ச சேவை'க்கு மையம் துவக்கிய இன்ஸ்பெக்டர்


ADDED : ஜூன் 04, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விடியற்காலையிலேயே கோவிலில் வழிபட்டு திரும்பிக்கொண்டிருந்தாள் சித்ரா.

''நீங்க ஒன்னும் எலக்ஷன்ல நிக்கலயேக்கா... ரிசல்ட் வர்ற இன்னிக்கு இவ்வளவு பயபக்தியோட வர்றீங்க''

வழியில் பார்த்த மித்ரா வினவினாள்.

''அதெல்லாம் ஒன்னும் இல்ல மித்து... யாரு ஜெயிப்பாங்கன்னு சொல்லு பார்க்கலாம்...''

''இன்னும் ரெண்டு, மூனு மணி நேரத்தில தெரிஞ்சுறப் போகுதுக்கா... திருப்பூர்ல இந்திய கம்யூனிஸ்ட் - அ.தி.மு.க., - பா.ஜ.,ன்னு மூனு வேட்பாளர்களுமே ஜெயிச்சுருவோம்னு நம்பிக்கையோட இருக்காங்களாம்''

''மித்து... கடந்த முறை இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன்தான் ஜெயிச்சாரு... ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சு, மையத்திலிருந்து வெற்றிச் சான்றிதழை வாங்கீட்டு வெளியே வந்ததும், கூட்டணிக்கட்சியோட முக்கிய நிர்வாகிகள் ரெண்டு, மூனு பேரைப் பார்த்துட்டு கார்ல பறந்துட்டாராம்...

''அவருக்கு மாலை போட்டு வாழ்த்து கூற காத்திருந்தவங்க ஏமாற்றத்தோட திரும்பீட்டாங்களாம்...

''இந்த முறை சுப்பராயன் ஜெயிச்சுட்டார்னா, கடந்த முறை போலவே ரிப்பீட்டு ஆகும். மாலை, பட்டாசு எல்லாம் வேஸ்ட் ஆயிடும். வெறும் கையோடு போனாலே போதும்னு கூட்டணிக்கட்சிக்காரங்க நினைக்கிறாங்களாம்''

''சரிதாங்க்கா... அவங்க நெனைக்கறது''

ஆமோதித்தாள் மித்ரா.

'பஞ்சாயத்து' முடிந்தது


''சித்ராக்கா... திருப்பூர் மத்தியில இருக்கிற மகளிர் ஸ்டேஷன்ல, கணவரோட இன்னொரு பெண்ணுக்குத் தொடர்பு இருக்கிறதா புகார் கொடுக்க மனைவி போயிருக்காங்க...

''சில பெண் போலீஸ் காரங்க, பிரச்னையை தீர்த்து வைக்கிறேன்னு சொல்லி, பணம் வாங்கி யிருக்காங்க போல... ஆனா பிரச்னை தீரல... பணம் கொடுத்த பெண் பகிரங்கமாக போராட்டம் செஞ்சிருக்காங்க...

''பிரச்னை ஆகிடுமோன்னு பயந்து, இரு தரப்பையும் கைது செஞ்சு ஒரு வழியாக பிரச்னையை முடிச்சுட்டாங்க''

போலீசார் மன உளைச்சல்


''இதெல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல சகஜம்தானே மித்து... சிட்டில ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் கிரைம் பிரிவில் ஒற்றை இலக்கில்தான் போலீஸ்காரங்க இருக்காங்க... இளம் வயது எஸ்.ஐ.,க்கள் இல்லாம, ஓய்வு பெறும் நிலையில் உள்ள எஸ்.ஐ.,கள்தான் இருக்காங்க...

''விடுப்பு, பணி நிமித்தமாக என, போலீஸ்காரங்க பாதி பேரு இருக்கறதே இல்ல... இதனால, ஸ்டேஷன்ல அதிகாரியோட சேர்த்து, நாலே போலீஸ்காரங்கதான் இருக்கறாங்களாம்.

''தினமும் டூவீலர் திருட்டு, மொபைல் போன், நகை பறிப்புன்னு வழக்குகளை விசாரிக்க முடியாமல் போலீஸ்காரங்க மன உளைச்சலில் இருக்காங்க''

'உச்' கொட்டினாள் மித்ரா.

கோவில் நிலத்தில் கடத்தல்


''சித்ராக்கா... கோவில் நிலத்து மண்ணையும் கும்பல் வெட்டி கடத்துறாங்க,''

''குண்டடம் பக்கத்தில, சமீபத்தில் முறைகேடாக மண் கடத்திய விவகாரம் தொடர்பா, தொடர்ச்சியாக புகார் வந்துச்சு... மவுனம் களைந்த வருவாய்த்துறை அதிகாரிங்க ஆய்வு செஞ்சு, வாகனங்களைப் பறிமுதல் செஞ்சு, போலீஸ்ல புகார் கொடுத்தாங்க.

'' ஆய்வுக்கு போன போது, அங்கிருந்த ஹிந்து அறநிலையத்துறை கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் முறைகேடா கும்பல், மண்ணை வெட்டி எடுத்து சென்றது தெரிஞ்சுதாம். ஆனா, நடவடிக்கை எடுக்காம ஆய்வோடு நிறுத்திட்டாங்க,''

வேதனையுடன் சொன்னாள் மித்ரா.

வசூலிக்க 'டெக்னிக்'


''மித்து... திருப்பூர் தெற்கு பக்கத்துல வருவாய் ஆய்வாளரா இருந்த 'கலை'யான மனுஷன், ஆபீஸ் பக்கத்திலேயே தன்னோட மச்சினனுக்கு, இ-சேவை மையம் அமைச்சுக்கொடுத்தாராம்.

''பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ்னு வர்ற விண்ணப்பதாரர்கள், இ-சேவை மையத்துக்குப் போய் 'கவனிச்சுட்டு' போகணுமாம். அப்பத்தான் சான்றிதழ் கிடைக்குமாம்.

''கலையான மனுஷன இப்ப மாத்திட்டாங்க... புதுசா வந்திருக்கிற ஆபீசரும் பழைய பாணியையே கடைபிடிக்கிறாராம். மக்கள் நொந்து போறாங்க''

''சித்ராக்கா... கார்த்திக் அண்ணன் சொன்னது கரெக்ட் தான் போல இருக்கு... காசு கொடுத்தே பழகிட்டாங்க நம்ம மக்களும்'' மித்ரா பெருமூச்சு விட்டாள்.

விசாரணை இழுத்தடிப்பு


''சித்ராக்கா... திருப்பூர் வடக்கு பக்கம் பணியாற்றிய துணை தாசில்தார், முறைகேடா பட்டாவுல பெயர் மாற்றம் செஞ்சாராம். 'டிரான்ஸ்பர் ஆனப்புறம், பழைய 'சீட்'டுல அமர்ந்து இதைப் பண்ணியிருக்காரு.

''கலெக்டர்ட்ட புகார் கொடுத்திருக்காங்க.... பட்டாவை ரத்து செஞ்சாங்க...

''துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கணும்னு சமூக ஆர்வலர் ஒருத்தர் புகார் கொடுத்தார். புகார் கொடுத்து ஒரு மாசம் கழிச்சு, விசாரணைக்கு வருமாறு லெட்டர் வந்துச்சாம்.

''அதுவும் விசாரணை தேதிக்கு முன்தினம்தான் வந்துச்சாம். புகார்தாரர் அவகாசம் தரணும்னு பதில் அனுப்ப ஒரு வாரம் கழிச்சு மீண்டும் தேதி கொடுத்தாங்களாம்

''விசாரணைக்கு ஆஜரான அவர், முறைகேடா பட்டாவில் சேர்த்த பெயர் மற்றும் நிலம் அமைந்துள்ள பகுதி குறித்து தெரிவிச் சாராம்.

''ஆனா விசாரணை அதிகாரி, 'பட்டா மாற்றம் செஞ்ச நிலத்தின் சர்வே எண், பட்டா எண் எல்லாம் வேணும்னு சொல்லிட்டாராம்.

''முறைகேடு அலுவலரைக் காப்பாத்துற நோக்கில விசாரணைய இழுத்தடிக் கிறதா குற்றச்சாட்டு எழுந்திருக்கு''

மித்ரா ஆதங்கப்பட்டாள்.

மாட்டிக்கொண்ட ஆர்.ஐ.,


''மித்து... நல்ல ஊர் ஆர்.ஐ., லஞ்சம் வாங்கி சிக்கிட்டாங்க; ஆனா வி.ஏ.ஓ., தெளிவா தப்பிச்சுட்டாருன்னு பேசிக்கறாங்க. முதல்ல பதிவு செஞ்ச வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தை ரிஜக்ட் பண்ணிட்டாங்க. ரெண்டாவது முறை பதிவு செஞ்சுட்டு, மீண்டும் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு போய், பணம் கேட்டால் கொடுத்து, லஞ்ச ஒழிப்பில் சிக்க வைக்கலாம்னு திட்டமிட்டிருக்காங்க...

''இந்த விஷயம் தெரிஞ்சு வி.ஏ.ஓ., உஷாராயிட்டாராம். ரெண்டாவது விண்ணப்பத்துக்கு பரிந்துரை செஞ்சுட்டாரு...

''ஆர்.ஐ., அலுவலகத்துக்குப் போனவுடனே விவரம் தெரியாம, 7,000 ரூபாய் லஞ்சம் கேட்டு, ஆர்.ஐ., மாட்டிக்கிட்டாரு''

சித்ரா விழிகளை விரித்தாள்.

அதிகாரிகள் 'கப்சிப்'


''மித்து... திருப்பூர்ல போக்குவரத்து கழக மண்டல மேலாளர் சஸ்பெண்ட் விவகாரத்தில யாரும் வாய் திறக்கக்கூடாது. பெரிய இடத்து விவகாரம்ன்னு கோவை, திருப்பூர் உயரதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டதாம். அதனால 'கப்சிப்'ன்னு அதிகாரிங்க இருந்துட்டாங்களாம்''

''சித்ராக்கா... இப்படித்தானே காலம் காலமா நடக்குது. மாவட்ட குடும்ப நலத்துறை தரப்பில, குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை, ஆலோசனை முகாம்கள் குறித்த தகவல் பலருக்கும் தெரியறதில்லையாம்.

''முகாம் நடக்குமிடங்களைச் சொல்லாததால, ஒன்னு, ரெண்டு பேரு மட்டும்தான் வர்றாங்களாம். எவ்ளோ பேர் பங்கேற்றனர்ங்கற விபரமே இல்லாம உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிடறாங்களாம். அவங்களும் கண்டுக்கிறதில்லையாம்''

''மித்து... இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். சோமனுார்ல இருந்து திருப்பூர் வர்ற பஸ்கள் தாடிக்கார முக்கு, டவுன்ஹால், குமரன் ரோடு வழியாக பயணிக்காமல், இலவச பயணமாக வரும் பெண்களை கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் அருகே பாதி வழியில் இறக்கிடறாங்களாம்; ஏ.பி.டி., ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் போயிடறாங்களாம்''

''அடக் கொடுமையே... சித்ராக்கா... போக்குவரத்து விதிமுறை மீறிய வாகனங்கள் மீது திடீர் வாகன சோதனை நடத்தி கண்காணிக்கணும்னு போக்குவரத்து துறை உத்தரவிட்டுச்சு... ஆனா, திருப்பூர்ல போக்குவரத்து போலீசாரோ, வட்டார போக்கு வரத்து துறையினரோ கண்காணிக்கவே இல்லை. மாநகரில் அப்படியொரு நடவடிக்கை நடந்ததே தெரியல''

வீடு வந்தடைந்ததும், 'சூடா டீ போட்டு கொடுங்கக்கா'' என்று கேட்டாள் மித்ரா. 'அஞ்சே நிமிஷத்துல ஏலக்காய் மணக்க டீ ரெடியாயிடும்'' என்றுகலகலத்தாள் சித்ரா.






      Dinamalar
      Follow us