sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

தபால் ஓட்டு நஷ்டம்... கமல் தந்த கஷ்டம்!

/

தபால் ஓட்டு நஷ்டம்... கமல் தந்த கஷ்டம்!

தபால் ஓட்டு நஷ்டம்... கமல் தந்த கஷ்டம்!

தபால் ஓட்டு நஷ்டம்... கமல் தந்த கஷ்டம்!


UPDATED : ஏப் 16, 2024 08:54 AM

ADDED : ஏப் 15, 2024 10:44 PM

Google News

UPDATED : ஏப் 16, 2024 08:54 AM ADDED : ஏப் 15, 2024 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''சித்ராக்கா... தபால் ஓட்டு போட ஆரம்பிச்சிட்டாங்களே...''

''மித்து... முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்னு திருப்பூர் தொகுதில 2 ஆயிரம் பேருக்கு மேல ஜனநாயக கடமைய வீட்டுல இருந்தே நிறைவேத்திட்டாங்க...

''தேர்தல் பணியில் ஈடுபடற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், போலீஸ், ஊர்க்காவல் படையினர் எல்லாம் தபால் ஓட்டுப் போட ஆரம்பிச்சிட்டாங்க...''

''சித்ராக்கா... பழைய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்னு தி.மு.க., தேர்தல் வாக்குறுதி கொடுத்துச்சு... ஆனா இதப்பத்தி இப்ப வரைக்கும் மூச்சே விடல... இதே மாதிரி பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படல...

''அரசு ஊழியருங்க, ஆசிரியருங்க ஆளும்கட்சி மேல அதிருப்தில இருக்கிறதுனாலே, இவங்க ஓட்டுங்க எல்லாமே ஆளும்கட்சிக்கு இந்த முறை விழறது சந்தேகம்னு சொல்றாங்களே, தபால் ஓட்டு 'நஷ்டமாச்சு'ன்னா கஷ்டம்தானே...''

''இதப்பத்தி ேஹஸ்யம் சொல்ல முடியுமா, மித்து... ஆனா... வெளித் தொகுதிக்காரங்களுக்கு தபால் ஓட்டுச்சீட்டு அனுப்ப தாமதிக்கிறாங்கன்னு ஏற்கனவே பிரச்னை ஓடிட்டிருக்கு...

''தபால் ஓட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான 'பார்ம் -12' தரமாட்டேங்கறாங்களாம். அதேசமயம் விண்ணப்பிச்சவங்களுக்கும் பாதி பேருக்கு மேல விண்ணப்பம் 'ரிஜெக்ட்' ஆயிருச்சுன்னு சொல்றாங்க... முடிஞ்சவரைக்கும் தபால் ஓட்டு பதிவைக் குறைக்க முயற்சிக்கிறதா சங்கத்துக்காரங்க புகார் வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்க...''

''சித்ராக்கா... தபால் ஓட்டுல வழக்கமா தி.மு.க., தான் முன்னணில இருக்கும்... திருப்பூர் தொகுதில இந்தத் தடவையும் தபால் ஓட்டுல தி.மு.க., கூட்டணி லீடுல வருமா?''

''மித்து... ஜூன் 4 அன்னிக்குப் பாத்துக்கலாம்...''

''அன்னிக்குத்தான் ரிசல்ட்டே தெரிஞ்சுருமேக்கா...''

கலகலவென சிரித்தாள் சித்ரா.

எது நாடகம்?


''மித்ரா... அவிநாசி பொதுக்கூட்டத்துல சி.எம்., கலந்துட்டார்ல... திருப்பூர், நீலகிரி வேட்பாளர்களை ஆதரிச்சுப் பேசுனாரு... கூட்டத்துல படுகர் பாரம்பரிய உடை உடுத்தி, பெண்கள் வந்திருந்தாங்கலாம்''

''பரவால்லையே... நீலகிரில இருந்து கூட்டத்துல கலந்துட்டாங்களா...''

''மித்து... அதுதான் இல்ல... வந்தவங்க எல்லாம் திருப்பூர்ல இருந்து வந்தவங்கதானாம்... சி.எம்., 'பா.ஜ., காரங்க நாடகம் நடத்துறாங்க'ன்னு பேசும்போது குறிப்பிட்டாராம்.. இதைக் கேட்டதும், இவங்கள அழைச்சுட்டு வந்தவுங்க நமுட்டுச்சிரிப்பு சிரிச்சாங்களாம்''

''சித்ராக்கா... அரசியல் கட்சிக்கூட்டங்களுக்கு பொதுமக்கள் பெரும்பாலும் போறதே இல்ல... கூட்டம் சேர்க்கிற கட்டாயத்துல கட்சிக்காரங்க இருக்காங்க...

''பணம் கொடுத்து, உணவு ஏற்பாடு செஞ்சு பெண்கள்னா சேலை, ஆண்கள்னா 'சரக்கு'ன்னு சிறப்பா கவனிச்சாதானே வர்றாங்க... இல்லைன்னா அடுத்த கூட்டத்துக்கு வரமாட்டாங்க...

''பணத்தை உடனடியா கொடுத்தாலும் பாதியில 'எஸ்கேப்' ஆயிடறாங்க... அதுக்காக புது 'டெக்னிக்'கை 'பாலோ' பண்றாங்களாம்....

''கூட்டத்துக்கு வர்றவங்ககிட்ட கட்சிக்கொடி, தொப்பி, துண்டு, பதாகைன்னு ஏதாவது ஒண்ணைக் கையில் கொடுத்துருவாங்க...

''கூட்டம் முடிஞ்சு திரும்பக் கொண்டுபோய் வாகனத்துல இறக்கிவிடும்போது, அந்தப்பொருளைத் திருப்பி வாங்கீட்டு, பேசிய பணத்தைக் கொடுத்துடுறாங்களாம்...''

''அடடே... நல்லா இருக்கே''

மித்ரா புன்னகைத்தாள்.

''மித்து... அவிநாசி பொதுக்கூட்டத்துல கலந்துக்கிட்ட சி.எம்., முந்துன நாள் இரவே திருப்பூர் வந்துட்டாரு... குறு, சிறு தொழில்துறையினர் சில பேரு சந்திக்கணும்னு ஆசைப்பட்டிருக்காங்க... ஆனா, கடைசில முடிவை மாத்தீட்டாங்களாம்.

''பொள்ளாச்சில குறு, சிறு தொழில்துறையினரை சி.எம்., சந்திக்கலையாம். மின் கட்டண உயர்வைக் கண்டிச்சுப் போராடுனதால சி.எம்., கோபத்துல இருப்பாரு போல...

''தேர்தல் சமயத்துல எதுக்குச் சந்திச்சுட்டுன்னு, திருப்பூர்லயும் குறு, சிறு தொழில்துறையினர் சி.எம்.,மை சந்திக்க முயற்சிக்கறதையே கைவிட்டுட்டாங்களாம்''

''அட... அப்படியா சேதி''

சித்ரா தலையசைத்தாள்.

போலீஸ் திணறல்


''மித்து... முந்தாநேத்து திருப்பூர் பாண்டியன் நகர்ல கமல் பிரசாரம் செய்ய வந்திருந்தார்ல... நல்ல கூட்டமாம்...''

''இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்காததுனால, போலீஸ் பாதுகாப்பு குறைவா இருந்துச்சு... கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாம திணறினாங்களாம். உதவி கமிஷனர் களமிறங்கித்தான் நிலைமையைச் சரிபண்ணியிருக்காரு...

''நடுரோட்டுல ஏற்கனவே டிராபிக் ஆன இடத்துல பிரசாரம் பண்ணுனா இப்படித்தான் நடக்கும்... ஒரு கட்டத்துல, கன்ட்ரோல் பண்ண முடியாம என்னமோ பண்ணுங்கன்னு போலீஸ் ஒதுங்கி நின்னுட்டாங்களாம்.

''கமல் ரெண்டு மணி நேரத்துக்கு மேல லேட்டா வந்ததும் இதுக்குக் காரணம்ங்கறாங்க... ஆனா, அவருக்குக் கட்சிக்காரங்களே லேட்டாதான் டைம் சொல்லியிருக்காங்கன்னும் சொல்றாங்க... எது உண்மையோ...''

''இன்னொரு சேதி தெரியுமா சித்ராக்கா... கமல் கட்சில இருக்காருல கவிஞர் சினேகன். அவரு பிரசாரத்துக்கு வந்திருந்தாராம். கட்சி மாவட்ட செயலாளர் பேசுறாருன்னு சொல்லியிருக்காரு...''

''கமல் கட்சிக்காரங்க, மாவட்டச் செயலாளர் கமல் ஜீவாதான் பேசப்போறார்னு நெனைச்சிருக்காங்க... ஆனா பேசுனது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் துரை வளவனாம். இது தெரிஞ்சதும் வி.சி.க., மாவட்டச் செயலாளருக்கு நன்றின்னு சொன்னாராம் சினேகன்''

பிரியாணி தந்த பா.ஜ.,


''சித்ராக்கா... ரம்ஜான் அன்னிக்கு மங்கலத்தில இருக்கிற ஓட்டல்கள்ல பிரியாணி விற்பனை களைகட்டியிருந்துச்சு...

''அங்க இருக்கிற பா.ஜ., காரங்க, ஒரு ஓட்டல்ல 10 ரூபா கொடுத்தா, பாக்குமட்டைல பிரியாணி வழங்க ஏற்பாடு பண்ணியிருந்தாங்களாம். அம்பது ரூபாய்க்கு பார்சல் பிரியாணியும் தந்தாங்களாம். தேர்தல்ன்றதுனால ப்ரீயா தரலையாம்''

''என்னது... பா.ஜ., காரங்களா... நம்ப முடியலையே''

சித்ரா ஆச்சர்யப்பட்டாள்.

'பாஸ்' தாராளம்


''சித்ராக்கா... வேட்பாளரோட பிரசாரத்துக்குச் செல்ற வாகனங்களுக்கு 'பாஸ்' வழங்கறதில மாவட்டத் தேர்தல் பிரிவு தாராளம் காட்டுதாம். சில வாகனங்கள், 'பைனான்ஸ்' கட்டாம பறிமுதல் செஞ்சவையாம்... வாகனத்தோட ஆவணங்களையெல்லாம் சரிபார்க்கறதே இல்ல...''

மித்ரா ஆதங்கப்பட்டாள்.

''மித்து... தேர்தல் நேரத்துல கூட காங்கயம், தாராபுரம், குண்டடம் பகுதில கிராவல் மண் கொள்ளை தொடர்ந்து நடந்துட்டு இருக்கு.

''குண்டடம் ஒன்றியத்துல பொறுப்பில் இருக்கிற ஆளும்கட்சி நிர்வாகி, அந்த ஏரியால மண் எடுத்தா, அவரைக் கவனிச்சுட்டுத்தான் போகணும்...

''மீறி எடுத்தா நடக்குறதே வேறேன்னு மல்லுக்கட்டி நிக்கறாராம். தினசரி லட்சத்துல கல்லா கட்றாராம். போலீசும் பயப்படுதாம். கனிம வளத்துறை அதிகாரிங்க பக்கத்துலகூட வர்றதே இல்ல... எப்படி இருக்கு பாரு அரசாங்கம்''

சித்ரா கவலைப்பட்டாள்.

திருட்டு சகஜம்


''சித்ராக்கா... திருப்பூர் ஜி.ெஹச்ல டூவீலர் திருட்டு சகஜமா நடக்குது... அலுவலகப்பணியாளர் வாகனத்தையும் திருடிடறாங்களாம்.

''புகார் கொடுத்தா போலீஸ் கண்டுக்கறது இல்ல. ஜி.ெஹச் நுழைவாயில் முன்னாடி இருக்கிற 'சிசிடிவி' கேமரா போலீஸ் கட்டுப்பாட்டுல இருக்காம். அதைச் சரிவர பராமரிக்காம அடிக்கடி 'ஆப்' செஞ்சிடறாங்களாம்... அந்த நேரத்துல டூவீலர துாக்கிடறாங்களாம்''

''மித்து... என்னத்த சொல்ல... வெயில் உக்கிரம் எப்பத்தான் குறையுமோ தெரிலையே...''

''சித்ராக்கா... ஜில்லுன்னு முலாம்பழ ஜூஸ் கொடுத்தீங்கன்னா எல்லாமே குறைஞ்சுரும்க்கா...''

இருவரின் சிரிப்பும் தெருவுக்கே கேட்டது.






      Dinamalar
      Follow us