sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

சூரிய 'ஸ்டேட்டஸ்' கொதிச்ச 'லோட்டஸ்'

/

சூரிய 'ஸ்டேட்டஸ்' கொதிச்ச 'லோட்டஸ்'

சூரிய 'ஸ்டேட்டஸ்' கொதிச்ச 'லோட்டஸ்'

சூரிய 'ஸ்டேட்டஸ்' கொதிச்ச 'லோட்டஸ்'


ADDED : ஏப் 29, 2024 11:23 PM

Google News

ADDED : ஏப் 29, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''வெயில் சூடும் குறையல... தேர்தல் சூடும் இன்னும் தணியல...''

வியர்வையைத் துடைத்துக்கொண்டே சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

''ஆமாமா... பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம், தி.மு.க., - அ.தி.மு.க., காரங்க வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செஞ்சதை உடும்புப்பிடியா பிடிச்சிட்டு விடமாட்டேங்கறாராம். புகார் கொடுத்தாலும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கலைன்னு கொதிக்கிறாராம்..''

''அவரு சொல்றதுல நியாயம் இருக்குதானே சித்ராக்கா...''

''மாநகராட்சி ஆளும் கட்சி பெண் கவுன்சிலர் ஒருத்தரோட கணவர், தன்னோட வார்டுல பூத் வாரியா வாக்காளர் எண்ணிக்கையையும், வாக்காளருக்கு தலா 300 ரூபாய்ன்னு மொத்தமா வழங்குன தொகையையும் கணக்கு எழுதி, வாட்ஸாப் ஸ்டேட்டஸா வச்சுட்டாராம். இந்த ஆதாரம் போதாதா முருகானந்தம் புகார்ல, உண்மை இருக்குங்கறதுக்கு...''

''கொடுமையால்ல இருக்கு சித்ராக்கா''

''மித்து... சூரியக்கட்சிக்காரரோட ஸ்டேட்டஸ பாத்து பா.ஜ., காரங்க கொதிச்சுபோயிட்டாங்களாம். ஆனா மொதல்ல 'ஷாக்' ஆனது தி.மு.க., நிர்வாகிங்கதானாம்.

''மத்த இடத்தில 500 ரூபா கொடுத்தாங்க... இங்க மட்டும் 300 ரூபாயா குறைஞ்சது ஏன்னு ஆளும்கட்சியில ஒரு தரப்பினர் கமென்ட் அடிக்கிறாங்களாம்...

''சித்ராக்கா... அப்ப... கொடுத்ததைச் சுருட்டீட்டாங்களா...''

கலகலவெனச் சிரித்தாள் சித்ரா.

விரைவு பஸ் 'லட்சணம்'


''சித்ராக்கா... திருப்பூர்ல இருந்து சென்னை செல்ல 37 பேர் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்ல 'புக்' பண்ணியிருக்காங்க... இவங்க முன்பதிவு செஞ்ச பஸ் வரவே இல்லையாம். வேற பஸ் வந்திருக்கு...

''பயணிகள் இருக்கை எண்களும் மாறி மாறி இருந்துச்சாம்... பயணிகள் ஆவேசப்பட, டிரைவரும், கண்டக்டரும் ஒதுங்கி நின்னுட்டாங்களாம். அதிகாரிகள்தான் சமாதானம் செஞ்சிருக்காங்க...

''அடுத்த பஸ் இல்லேங்கறதால கோபத்தோட பயணிகள் அந்த பஸ்சுலயே ஏற வேண்டியதா போச்சு...

''கேட்டா, எல்லாமே சென்னைல இருந்துதான் முடிவு செய்றாங்க... கோவை கோட்ட அதிகாரிகள்கூட தலையிடறதில்லைன்னு சொல்லிட்டு நகர்றாங்களாம்...

''விரைவு பஸ்கள்தான் இப்படீன்னா, திருப்பூர் கிளையைச் சேர்ந்த அரசு பஸ்கள் பலவும் சாலை வரி, தகுதிச்சான்று இல்லாமதான் ஓடுதாம். ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தால் பல பஸ்கள் ஓடவே முடியாத நிலை ஏற்படுமாம்க்கா''

''வெளங்குன மாதிரிதான்...''

சபித்தாள் சித்ரா.

ரேஷன் அரிசி போட்டா போட்டி


''மித்து... வீதி வீதியா வீட்டுக்கு வீடு வந்து ரேஷன் அரிசி வச்சிருக்கீங்களான்னு கேட்டு, வியாபாரிகள் படையெடுக்கிறாங்களாம்...

''கிலோ ஆறுல இருந்து எட்டு ரூபா வரைக்கும் வாங்குறாங்களாம். பத்து ரூபா வரைக்கும் விலை கொடுக்கிறதால, பேரம் பேசி வியாபாரிகள்கிட்ட பொதுமக்களும் விக்கிறாங் களாம்...''

நொந்துகொண்டாள் மித்ரா.

'விளையாட்டு' அல்ல இது


''மித்து... குட்டீஸூக்கு லீவு விட்ட பின்னாடி, பல வீடுகள்லயும் குட்டீஸை சமாளிக்க முடியாம பெற்றோர் திண்டாடறாங் களாம்...''

''சித்ராக்கா... அதுதான் குழந்தைகள் கையில மொபைல்போனைத் திணிச்சுடறாங்களே...''

''இல்ல மித்து. இப்பெல்லாம் ஏதாவது ஒரு பயிற்சி முகாம்ல சேர்த்து விட்டுடறாங்க...

''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில கோடைக்காலப் பயிற்சி முகாம் நடத்துறாங்க...

''இதுக்கு பதிவு செய்றது கட்டாயம். ஆனா, மாவட்ட விளையாட்டு அலுவலர் தரப்பில் இருந்து பதிவு முடியும் கடைசி நாள் அன்னிக்குத்தான் பத்திரிகைகளுக்குச் செய்திக்குறிப்பே வழங்கி யிருக்காங்க... அப்புறம் எப்படி முகாமுல மாணவர்கள் சேர முடியும்?''

''நீங்க சொல்றது சரிதாங்க்கா... அமைச்சர் உதயநிதி 'விளையாட்டா' இதை எடுத்துக்காம இருக்கணும்''

மித்ரா ஆமோதித்தாள்.

புகார் தந்தால் மிரட்டல்


''சித்ராக்கா... மாநகராட்சி நாலாவது மண்டலத்துல வேலை பாக்குற நிரந்தரத் துாய்மைப்பணியாளர் முறையா பணிக்கு வர்றதில்ல...

''காலைலயும், மாலைலயும் வருகைப்பதிவு மட்டும் காட்டிட்டு 'எஸ்கேப்' ஆயிடறாங்களாம்.

''தட்டிக் கேட்டால் ஆளும் கட்சி தொழிற்சங்கம்ன்னு கெத்து காட்டுறதா, புகார் தெரிவிக்கிற சமூக ஆர்வலர்கள் சொல்றாங்க...

''தொழிற்சங்க நிர்வாகிகள்ட்ட இருந்தும் புகார் கொடுத்தவங்களுக்கு 'அன்பான' மிரட்டல் வருதாம். அதிகாரிகளோ என்ன செய்றதுன்னு தெரியாம முழிக்கிறாங்களாம்''

மித்ரா மிரண்டவள் போல விழித்தாள்.

பாயாத நடவடிக்கை


''மித்து... சிட்டிக்குள்ள கஞ்சா வேட்டையில் போலீஸ்காரங்க களமிறங்கிட்டாங்க. நல்ல விஷயம் தான். ஆனா ஆளும்கட்சி பின்னணில இருக்கறவங்கள போலீஸ் கண்டுக்கறதில்லையாம்.

''பல இடங்கள்ல குட்கா வினியோகத்துக்குத் துணையா இருக்காங்களாம்.

''இவங்கள ஆளுங் கட்சியே கண்டிக்கணும்... இல்லேன்னா போலீஸ் காரங்களே நடவடிக்கை எடுக்கணும்''

''சித்ராக்கா... போலீஸ்காரங்கள வேலைல இருக்க விட மாட்டீங்க போல...''

சிரித்தாள் மித்ரா.

சூதாட்ட கிளப்கள் ஜோர்


''மித்து... சிட்டில எட்டு இடத்துல சூதாட்ட கிளப் சூப்பரா செயல்படுதாம். இதுல, வீரபாண்டி - கூலிபாளையம் பகுதிகள்ல, போலீஸ் செக்போஸ்ட் பக்கத்துலயே இந்த அநியாயம் நடக்குதாம்.

''தேர்தல் பிஸில போலீஸ்காரங்க இருக்க, லோக்கல் ஸ்டேஷன் போலீஸ்காரங்களை கையில போட்டுக்கிட்டு, சூதாட்ட கிளப் ஜோரா நடக்குதாம். பாரபட்சம் இல்லாம கண்காணிப்பை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுத்தா பரவால்ல...

''உயரதிகாரிங்கதான் அக்கறையோட கவனிச்சு போலீஸ்ல இருக்கிற கருப்பு ஆடுகளைக் களையெடுக்கணும்''

சித்ரா ஆவேசப்பட்டாள்.

இழுத்தடிப்பு அதிகாரி


''சித்ராக்கா... அமர்நாத் யாத்திரை செல்ல ஜூலை 1 முதல் ஆக., 18ம் தேதி வரைக்கும் அனுமதி வழங்கியிருக்காங்களாம்.

''யாத்திரை செல்ல விரும்பறவங்க அரசு மருத்துவமனைல இருக்குற அதிகாரிட்ட உடல் தகுதிச்சான்று பெறணுமாம். ஆனா அந்த அதிகாரி உடனடியா தர்றதில்லையாம். மூணுல இருந்து அஞ்சு நாள் வரைக்கும் இழுத்தடிக்கிறாராம்.

''அமர்நாத்தான் போகணுமா... இங்க இருக்கிற சாமியைக் கும்பிட வேண்டியதுதானேன்னு கேட்கிறாராம்.

''தாமதமா சான்றிதழ் கொடுக்குறதுனால, விரும்பிய நாள்ல யாத்திரை செல்ல முடியறதில்லையாம். பக்தர்கள் 'கோபாலா... கோபாலா'ன்னு புலம்பறாங்களாம்...''

மித்ரா கலங்கினாள்.

கிடைக்காத பருப்பு


''மித்து... தேர்தல் 'பிசி' நேரத்தில, ரேஷன்ல பருப்பு, கோதுமை கிடைக்கலையாம். தேர்தலுக்குப் பின்னாடி நகரப்பகுதில கோதுமை வழங்கிட்டாங்க. பருப்பு தரலையாம்.

''ஊரகப்பகுதிக்கு, கடைசி வாரம் வரைக்கும் பருப்பு, கோதுமை கிடைக்கலையாம்.

''ரேஷன் கடைல கேட்டா, 'லோடு' வரலைன்னு சொல்லிட்டாங்க. வழக்கமா ஒரே தவணைல வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை, தேர்தல் நடந்த வாரத்துல, மூணு தவணையா கொடுத்தாங்களாம்''

மித்ரா விசனப்பட்டாள்.

'சரக்கே கதி' அதிகாரி


''மித்து... பல்லடம் யூனியன் ஆபீஸ்ல இருக்கற அதிகாரி வேலையே பார்க்கறதில்லையாம். ஊழியர்கள் புலம்பித்தள்றாங்க... ஆபீசரோ 'சரக்கே கதி'ன்னுட்டு இருக்காராம்''

''சித்ராக்கா... 'மனோகரா' பட சிவாஜி மாதிரிப் பேசி என்ன ஆகப்போகுது... எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்க வேண்டியிருக்கு... சம்மர் வெகேஷன்ல எங்கயாவது போயிட்டுவந்தா டென்ஷன் எல்லாம் தானாகுறைஞ்சுடும்...''

''அதுவும் சரிதான்...''

வீட்டுக்குச் செல்ல மித்ரா ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்ய விடைகொடுத்தாள், சித்ரா.






      Dinamalar
      Follow us