sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

போலீசுக்கு 'கட்டுச்சேவல்' விருந்து; எஸ்.ஐ.,க்கு மேயர் 'கசப்பு மருந்து'

/

போலீசுக்கு 'கட்டுச்சேவல்' விருந்து; எஸ்.ஐ.,க்கு மேயர் 'கசப்பு மருந்து'

போலீசுக்கு 'கட்டுச்சேவல்' விருந்து; எஸ்.ஐ.,க்கு மேயர் 'கசப்பு மருந்து'

போலீசுக்கு 'கட்டுச்சேவல்' விருந்து; எஸ்.ஐ.,க்கு மேயர் 'கசப்பு மருந்து'


ADDED : ஜூன் 17, 2025 12:17 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''ஆடிக்காத்து, ஆனி மாசமே வீசுதே...'' எனக் கூறிக்கொண்டே சித்ரா வீட்டுக் குள் நுழைந்தாள் மித்ரா.

''புயலே ஓய்ஞ்சு போனது உனக்கு தெரியுமா...'' எனப் பேச்சைத் துவக்கினாள் சித்ரா.

''சண்டே அன்னிக்கு, அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளோட சி.எம்., காணொலி வாயிலா கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க... திருப்பூர்ல மொத்தம் 3 ஸ்கூல்.

''அன்னிக்கு புதிய பாரதம் எழுத்தறிவுத்திட்ட தேர்வு, குரூப் 1 தேர்வு வேற...

''அதிகாரிகள் தவிச்சிட்டிருந்தப்ப, சனிக்கிழமை நைட்தான், சி.எம்., புரொகிராம் கேன்சல்ன்னு சொல்லியிருக்காங்க...

''புயல் ஓய்ஞ்ச மாதிரி, அதிகாரிகள்கிட்ட 'பீலிங்'...''

''சித்ராக்கா... திருப்பூர் பக்கத்துல, எம்.எல்.ஏ., இல்ல திருமண வரவேற்புல சி.எம்., கலந்துக்கிட்டார்ல. சி.எம்., இருந்ததென்னவோ, சில நிமிஷம்தான்.

''அவரோட மருமகன் சபரீசனை, சுத்திச்சுத்தி தான் மினிஸ்டர்ஸ், எம்.எல்.ஏ.,க்கள், வி.ஐ.பி.,க்கள் எல்லாம் இருந்தாங்களாம்...

''நிர்வாகிகளைச் சந்திச்சதை பெரிய திரையில காட்டுனாங்களாம்... ஆனா, உடனே அதை 'கட்' செஞ்சுட்டு, வேற காட்சியைக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்களாம்''

''மேலிடத்துச் சமாசாரம்... அப்படித்தான் இருக்கும்''

'அறிந்தவள்' போல் பேசினாள் சித்ரா.

கல்லா கட்டிய அதிகாரிகள்


''சித்ராக்கா... 'காளை' ஊர் பக்கத்தில கனிம வளத்துறையினர் தனியார் இடத்துல சோதனை நடத்தினாங்க...

''ஐநுாறு யூனிட் கிராவல் மண் பதுக்கி வச்சிருந்தாங்களாம். சும்மா பேருக்கு அதிகாரிங்க புகார் கொடுத்திருக்காங்க...

''நிறைய வாகனங்கள் இருந்தாலும் ஒரு லாரியை மட்டும் 'கணக்கு' காட்டியிருக்காங்க...

''அனுமதி வாங்கியதை விட அதிகமா மண்ணைச் சுரண்டி வித்திருக்காங்க... இதில, அதிகாரிகள் எக்கச்சக்கமாக கல்லா கட்டிட்டாங்களாம்''

மித்ரா ஆதங்கப்பட்டாள்.

''மித்து... இதே காளை 'ஊர்' பக்கத்துல, சேவல் சண்டை நடத்துனதா சிலரை போலீஸ் கைது செஞ்சாங்க. நாலு டூவீலர், நாலு சேவல் பறிமுதல் செஞ்சதா எஸ்.ஐ., 'குமாரகார்த்திக்' வழக்குப்பதிவு செஞ்சிருக்காரு...

''ஆனா, நிஜத்துல 14 டூவீலர், ஒரு கார், 9 சேவல் பறிமுதல் செஞ்சிருக்காங்க...

''கட்டுச்சேவல் எல்லாம் விலை உசந்ததாம். அதிகாரிகள் வீட்டுக்கு 'விருந்தா' மாறுச்சாம். போலீஸ்காரங்களும் 'ருசி' பார்த்திருக்காங்க... இன்னும் சில சேவல்களை வித்துட்டாங்களாம்.

''வாகனங்களைத் திருப்பிக்கொடுக்குறதுக்கு பேரம் நடந்து முடிஞ்சுதாம். 'தில்' எஸ்.ஐ., இதுபோல ஏகப்பட்ட சர்ச்சைல சிக்குனாலும், அவரை மாத்த முடியாம இருக்கிறதுக்கு, அவருக்கான பின்புலம் 'ஸ்ட்ராங்கா' இருக்கிறதுதான் காரணமாம்''

''சித்ராக்கா... அரசு மகளிர் கல்லுாரில, கவுன்சிலிங்குக்கு எக்கச்சக்க ஸ்டூடண்ட்ஸ் வருவாங்கன்னு சொல்லி போலீஸ் பாதுகாப்பு கேட்ருக்காங்க.

'பேரிகார்டு எல்லாம் வச்சு போலீஸ் பாதுகாப்பு ஜோரா போட்ருந்தாங்க...

''ஆனா, எதிர்பார்த்த மாதிரி மாணவிகள் திரளல... ஓரளவுக்குத்தான் வந்திருந்தாங்க. இதுக்குத்தானா இந்த 'அலப்பறை'ன்னு போலீஸ் நொந்துட்டாங்களாம்''

புன்னகைத்தவாறே சொன்னாள் மித்ரா.

பக்தர்கள் கிண்டல்


''சித்ராக்கா... போன வாரம், ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம்ல, அஞ்சு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செஞ்சாங்கள்ல...

''கஞ்சாவை வீசியெறிஞ்சுட்டுப்போனவங்க யாருன்னு 'சிசிடிவி'யை வச்சு கண்டுபிடிக்கலாம்.

''ஆனா 'சிசிடிவி'க்குள்ள வராம குற்றவாளிகள் தப்பிச்சுட்டாங்கன்னு போலீஸ் 'கதை' விடறாங்களாம். உயரதிகாரிகள் விசாரிச்சா என்ன நடந்துச்சுன்னு தெரியும். ஆனா, எங்கே நடக்கப்போகுது''

''மித்து... ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்த்திருவிழாவை சிறப்பா கொண்டாடிட்டாங்க... வந்தவங்களுக்கு பிரதோஷக்குழு சார்பில வயிறார அன்னதானம் நடந்துச்சு...

''பா.ஜ., ஆன்மிக பிரிவு சார்புல, 'நம்ம ஊரு தேருங்க... வந்து இழுத்து பாருங்க...'ன்னு, தேர் படத்தோட, சின்ன பேனர் வச்சிருந்தாங்க.

''இதை கேள்விப்பட்ட 'சவுத்' வி.ஐ.பி., உடனே, சி.எம்., - டெபுடி சி.எம்.,- துறை அமைச்சர் படங்களோட, 'அறநிலையத்துறை'ங்கற பேர்ல 30 அடி பேனரை கோவில் முன்னாடி வச்சுட்டாராம்.

''இது அறநிலையத்துறை வச்சதா; அவசரமா வச்சதான்னு பக்தர்கள் கிண்டல் அடிச்சாங்களாம்.

''அப்புறம், கோவில் அறங்காவலரா இருப்பவர் தேரோட்டத்தப்ப 'மைக்'கை கையில வாங்கிட்டாராம். தேர்த்திருவிழா பத்திச் சொல்லாம, முதல்வர் - துணை முதல்வர் - அமைச்சர் - பொதுக்கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கின எம்.எல்.ஏ.,ன்னு, அவங்களுக்கு நன்றி சொல்லியே நேரத்தைக் கடத்தினாராம். அங்கிருந்தவங்க ரொம்ப 'காண்ட்' ஆயிட்டாங்க.

''இன்னொரு கொடுமை என்னன்னா, தேருக்கு முட்டுக்கட்டை - சன்னை போடுறவங்க 'சுக்குப்பால்' குடிச்சுட்டு இருந்தப்பவே, 'மைக்'ல 'அரகரா' போட ஆரம்பிச்சுட்டாராம்...

''பக்தர்களும் தேர் இழுக்க தயாராயிட்டாங்க. நல்ல வேளையா, முட்டுக்கட்டையை வச்சு வடம் பிடிச்சு இழுக்கறதை நிறுத்தச் சொல்லிட்டாங்க''

கடகடவெனச் சொன்னாள் சித்ரா.

எம்.எல்.ஏ., கண்ணீர்


''மித்து... முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் திடீர்ன்னு இறந்துட்டாரு... யாருமே நினைச்சுக்கூட பார்க்கல.

''ஆமாக்கா... கட்சி பாகுபாடு பார்க்காம, ஏழைங்களுக்கு உதவியிருக்காருன்னு சொல்றாங்க... ஏழைகள் வீட்ல யாராவது இறந்துட்டா, அவங்க வீட்டுக்கு பெர்சனலா நிதியுதவி செய்றதோட, நேரடியா துக்க நிகழ்ச்சிலயும் கலந்துக்குவார்ங்கறாங்க...

''எதற்கும் அசராத எம்.எல்.ஏ., பொள்ளாச்சியாரே, 'என்னோட, 54 வருஷ அரசியல் வாழ்க்கைல, இப்படியொரு தம்பியை பார்த்ததே இல்லைன்னு, இரங்கல் கூட்டத்துல கண்ணீர் விட்டு அழுதுட்டாராம்''

''ஆமா... மித்து... ஒருத்தர் இருக்கேல அவரோட பெருமைகள் தெரியறதில்லேங்கறது உண்மைதான்''

யதார்த்தத்தைச் சொன்னாள் சித்ரா.

''மித்து... கே.எஸ்.சி., ஸ்கூல்ல, மக்கள் வாக்கிங் போறாங்க... இப்ப சனிக்கிழமை வாக்கிங் போக போலீஸ் அனுமதிக்கிறதில்லையாம். காரணம், 'பேரேடு' நடத்தணும்ன்னு சொல்றாங்களாம்.

''பேரேடு நடத்த தனி மைதான வசதி இருக்குது... இல்லேன்னா, வேறொரு பள்ளி வளாகத்தில நடத்தலாம். இனியாவது வாக்கிங் போறவங்களை போலீஸ் தடுக்காம இருந்தா சரிதான்''

''சித்ராக்கா... சென்னையில் இருந்து சிட்டிக்கு இண்டலிஜென்ஸ் ஆபீசரா டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர், ரெண்டு வாரமா இழுத்தடிச்ச பின்னாடி, இப்ப பணியில சேர்ந்துட்டாராம்''

''மித்து... காசு புழங்கற இடமாச்சே... அதிரடியா இருப்பாரா; அடக்கிவாசிப்பாரான்னு பார்ப்போம்''

''அக்கா... காங்கயம் டி.எஸ்.பி., ஆபீஸ்ல அதிகார வட்டமா இருந்த அதிகாரியையும், டேமேஜ் செஞ்சிட்டிருந்த போலீஸ்காரர் பத்தியும் சொல்லியிருந்தோம்ல. இப்ப ஒருவழியா போலீஸ்காரரை ஆயுதப்படைக்கு மாத்திட்டாங்க. இனியாவது நல்ல மாற்றம் வருதான்னு பார்ப்போம்''

எதிர்பார்ப்புடன் கூறினாள் மித்ரா.

இதென்ன கூத்து?


''மித்து... நகராட்சி, மாநகராட்சில குப்பை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திட்டிருக்கு. துாய்மைப்பணியை, தனியார்மயமாக்கிட்டாங்க. இவங்ககிட்ட 'கவனிப்பு' வாங்கிப் பழகுன கவுன்சிலருங்க, மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பாங்களாங்கறது சந்தேகம்தான்னு, 'நேர்மை'யான கவுன்சிலர்கள் சொல்றாங்களாம்.

''நெருப்பெரிச்சல்ல மாவட்ட பதிவாளர் ஆபீஸ் பக்கத்துல இருக்கிற பாறைக்குழில மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளைக் கொட்டுது. இங்க குப்பை கொட்டுனா ஆபீசுக்குப் பாதிப்பு; இதனால குப்பை கொட்ட தடை விதிக்கணும்ன்னு மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்த ஆபீஸ்ல இருந்து லெட்டர் அனுப்பியிருக்காங்க...

''இதே நிர்வாகம்தான் தனியாரிடம் பெற்ற நிலத்தில் ஆபீஸ் கட்ட அனுமதி கேட்டபோது பாறைக்குழிகள் இல்லைன்னு உத்தரவாதக் கடிதமும் கொடுத்திருக்கு... இந்தக் கூத்தை எங்க போய்ச்சொல்ல...''

''நெருப்பெரிச்சல்ல குப்பை கொட்டுறத பொதுமக்கள் தடுத்தப்ப, ரோந்துப்பணி எஸ்.ஐ., ஒருத்தர், 'பொதுமக்கள் எதிர்க்கறாங்கல்ல... அப்புறம் எதுக்கு குப்பை கொட்ட வர்றீங்க'ன்னு குப்பை லாரில இருந்தவங்ககிட்ட சொல்லியிருக்காரு.இது மேயர் காதுக்கு போயிருச்சு.

''இதுதொடர்பா பேச்சுவார்த்தை நடந்தப்ப மேயரோட அதிகாரிகள் மட்டும் இருந்திருக்காங்க... அப்ப எஸ்.ஐ., போய் உக்காந்திருக்காரு... இதுதான் சந்தர்ப்பம்ன்னு நினைச்சாரோ என்னவோ, மேயரு, 'மாநகராட்சிக்கு எதிரா எப்படி நீங்க பேசலாம். அது உங்க வேலையில்லையே... கமிஷனர்ட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணப்போறேன்'னு 'பிடி...பிடி'ன்னு பிடிச்சிட்டாராம்... அலறிப்போயிட்டாராம் எஸ்.ஐ.,

''இதைக் கேள்விப்பட்ட போலீஸ்காரங்களோ, எஸ்.ஐ., எதுக்கு 'வம்படி'யா உக்காந்து 'வாங்கிக்கட்டிக்கிறாரு' அப்படின்னு 'கமென்ட்' பண்ணுனாங்களாம்''

''எஸ்.ஐ.,க்கு மேயர் கொடுத்த 'கடுகடு' கசப்பு மருந்து சரிதான்னு சொல்லுறீங்களாக்கா...''

கலகலவெனச் சிரித்தாள் சித்ரா.

இதுவா விபரம் சேகரிப்பு?


''சித்ராக்கா... ஆண்டிபாளையம் பகுதியில, ஒரு கோவில், வருவாய்த்துறை ஆவணங்கள்ல புறம்போக்கு நிலம்ங்கிற வகைப்பாட்டில் இருக்குதாம். இந்தக் கோவிலுக்கு, கட்சிக்காரங்களை திருப்திப்படுத்துறதுக்காக, அறங்காவலர்களை நியமிச்சிருக்காங்க... தலைவர் தேர்தலும் நடந்திருக்கு...''

''மித்து... இன்னொரு கோவில் மேட்டர். காலேஜ் ரோட்ல இருக்கிற 'காளி' கோவிலையொட்டி கொஞ்ச நிலம் கேட்பாரற்று இருக்கு. அங்க ஓட்டுக்கூரையோட பழைய கட்டடத்தில நுாலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடத்தை ஆக்கிரமிச்சு கோவில் நிர்வாகம் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடு செஞ்சிருக்காம். நீண்ட காலமாக இங்க இருக்கிற கடைகளும் ஆக்கிரமிப்பு இடத்துலதான் செயல்படுதாம்''

''சித்ராக்கா... தனியா உள்ள வீடு, தோட்டத்து வீட்ல வசிக்கிற முதியவர்கள் விவரங்களை போலீஸ்ல கணக்கெடுக்கிறாங்க. நல்லுார் ஸ்டேஷன் லிமிட்ல போலீசார் நேரடியா போகாமலே தெரிஞ்ச ஆளுங்களை வச்சு விபரம் சேகரிக்கிறாங்களாம்.

''அதுவும் சொந்த வீட்ல இருக்கறவங்க விபரத்தை சேகரிச்சுட்டு, வாடகை வீட்ல வசிக்கிறவங்கள கண்டுக்கிறதில்லையாம்.

''நேரடியா விசிட் செஞ்சு விபரம் சேகரிச்சாத்தானே சரியா இருக்கும். கமிஷனர் தான் இதைச் சரிப்படுத்தணும்''

''மித்து... எல்லாம் சரி... உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கா... பட்டுன்னு சொல்லு பார்க்கலாம்''

இருவரின் சிரிப்புச்சத்தமும் அடங்க நீண்ட நேரமானது.






      Dinamalar
      Follow us