sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

சீமான் நடத்தப்போகும் மாநாடு தி.மு.க.,வினர் தாண்டும் எல்லைக்கோடு

/

சீமான் நடத்தப்போகும் மாநாடு தி.மு.க.,வினர் தாண்டும் எல்லைக்கோடு

சீமான் நடத்தப்போகும் மாநாடு தி.மு.க.,வினர் தாண்டும் எல்லைக்கோடு

சீமான் நடத்தப்போகும் மாநாடு தி.மு.க.,வினர் தாண்டும் எல்லைக்கோடு


ADDED : அக் 06, 2025 11:42 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தீ பாவளி டிரஸ் எடுக்க எப்பக்கா போலாம்?''

கேட்டுக்கொண்டே வந்தாள் மித்ரா.

''நாம என்ன தீபாவளி 'வசூல்' கணக்குப் பார்த்தா எடுக்கப்போறோம்''

''ஆமாக்கா... மாவட்டத்துல பத்திரப்பதிவு, வருவாய், வட்டாரப் போக்குவரத்துன்னு பல்வேறு துறைகளை விஜிலென்ஸ்காரங்க கண்காணிக்கிறாங்களாம்''

''ஆனா... இதெல்லாம் புரிஞ்சுக்கிட்டு உஷாரா, 'வசூல்' மேட்டரைக் கையாளறாங்க... ஆபீசுக்கு வெளியில வச்சு, தீபாவளி 'கிப்ட்'களை 'வசூல்' ஆபீசர்ஸ் வாங்கிக்கிறாங்களாம்... ''

''இந்த முறை யாரு சிக்குறாங்கன்னு பார்ப்போம்க்கா... தீபாவளிக்கு டுபாக்கூர் நிருபருங்களும் வசூல் வேட்டைக்குக் கிளம்பிட்டாங்களாம்.

''காங்கயத்துல வாடகைக் கார் மூலமா ஒவ்வொரு ரைஸ் மில்லுக்கும் 'விசிட்' அடிச்சு, வசூல்ல, 'துாள்' கெளப்பறாங்களாம். பணம் தரலேன்னா, விஜிலென்ஸ்க்குப் புகார் கொடுப்போம்ன்னு மிரட்டுறங்களாம். ரைஸ் மில் ஓனர்ஸ் ஆதங்கப்படுறாங்க''

கவலைப்பட்டாள் மித்ரா.

வழிகாட்டி நெறிமுறை வகுக்கப்பட வேண்டும் ''மித்து... கரூர்ல விஜய் பொதுக்கூட்ட நெரிசல்ல சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை நினைச்சா, கதிகலங்குது''

''ஆமாக்கா... சிறப்புக்குழு அமைச்சு விசாரணை நடக்குதுல்ல... திருப்பூர்லயும் அரசியல் கட்சிப் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடக்கறப்ப, அன்னிக்கு முழுக்க பொதுமக்களுக்கு சோதனையா அமைஞ்சுருது''

''ஆமா மித்து... மாநகராட்சி ஆபீஸ், அரிசிக்கடை வீதி... இப்படி சிட்டிக்குள்ள எந்த இடத்துல வச்சாலும், இதே சிக்கல்தான்''

''அக்கா... நெடுஞ்சாலைகள்ல நடத்தறது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறை கொண்டுவந்தாதான் சரிப்படும். இல்லைன்னா பனியன் தொழில் நகரான நம்ம ஊர்ல ரொம்பக் கஷ்டம்தான்''

விவசாயிகள் கூட்டத்தில் ஆர்.டி.ஓ., கண்டிப்பு ''மித்து... திருப்பூர் வருவாய் கோட்டத்துக்கு புது ஆர்.டி.ஓ.,வா சிவப்பிரகாஷ் பொறுப்பேற்றிருக்காரு... அவர் தலைமையில நடந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துல, விவசாயிகள் சிலர், வேளாண் துறை சாராத பிரச்னைகளை முன்னிறுத்தி பேசினாங்களாம்.

''சமூக ஆர்வலர் ஒருத்தரு, 'நாங்க கொடுக்குற மனுக்கள் மீது தீர்வு காண்றதில்ல... கூட்டத்துக்கு எல்லா துறை அலுவலர்களும் பங்கேற்கறதில்ல. அடையாள அட்டை அணியறதில்ல'ன்னு உச்சஸ்தாயில முழங்குனாராம்.

''ஆர்.டி.ஓ.,வும் முடிஞ்சவரைக்கும் சமாதானப்படுத்திப் பார்த்தார். முடியல...

''உடனே ஆர்.டி.ஓ., 'விவசாயிகள் தங்கள் பிரச்னைகளைத் தெரிவிக் கிறதுக்குத்தான் கூட்டம்; அதை மட்டும் பேசுங்க. பொதுப்பிரச்னைன்னா தனியா சொல்லுங்க... இல்லைன்னா, கலெக்டர் ஆபீஸ் குறைகேட்புக்கூட்டத்தில தெரிவியுங்க'ன்னு கண்டிப்பு கலந்த வார்த்தைகளுடன் சொன்னாராம்.

''அப்புறம் எல்லோரும் அமைதியாயிட்டாங்களாம்''

நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் அறிவிப்பு ''மித்து... மாநகராட்சி குப்பை விவகாரத்துல நிரந்தரத்தீர்வு நோக்கி நகர்றதா மேயர் சொல்றாரு...

'தற்காலிகமாக முதலி பாளையம் பாறைக்குழில, மாநகராட்சி குப்பை கொட்டுற விவகாரத்துல, விவசாய சங்கங்களைச் சேர்ந்த சிலரது எதிர்ப்புக்குரலோ வலுவாகிட்டே வருதே...''

''முதல்வரின் தனிப்பிரிவுக்கு சிலர் மனு கொடுத்திருந்தாங்க... மாநகர் நல அலுவலர் அனுப்புன பதில்ல, 'சுகாதார அலுவலர் மற்றும் ஆய்வாளர் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'ன்னு ஒத்தைவரில விளக்கம் அளிக்கப்பட்டிருக்கு... இதெல்லாம் என்ன மாதிரியான பதில்ன்னு விவசாயிகள் கேட்குறாங்க''

''அக்கா... நாம் தமிழர் கட்சி சீமான் வித்தியாசமா ஆடு - மாடு மாநாடு, மரங்களின் மாநாடுன்னு நடத்தி வித்தியாசமா கவனத்தை ஈர்க்கிறாருல்ல. முதலிபாளையம் குப்பை விவகாரம் தொடர்பா நடந்த போராட்டத்துல கலந்துக்கிட்ட நாம் தமிழர் கட்சி மாநில தொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் சுரேஷ்பாபு, 'எங்கள் தலைவரை, திருப்பூர் அழைச்சு வந்து குப்பை மாநாடு நடத்துவோம்'ன்னு சொன்னாராம்''

சித்ரா புன்னகைத்தாள்.

தொழில்துறையினர் உஷார் நடவடிக்கை ''மித்து... குண்டு மிரட்டல் இப்ப எல்லாம் சகஜமாயிடுச்சு... கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி ஆபீஸ்னு மட்டுமில்லாம, தொழில் அமைப்பு ஆபீசுக்கும் மிரட்டல் விட ஆரம்பிச்சுட்டாங்க...

''இ-மெயில் மூலமா விடுக்கப்படுற இந்த மிரட்டல் தொடர்பா, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமமா போச்சு...

''குண்டு மிரட்டல உதாசீனமும் படுத்த முடியல... வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீஸ், சல்லடை போட்டு தொழில் அமைப்பு ஆபீஸ்ல தேடியிருக்காங்க... ஆனா எதுவும் இல்ல... இந்த மாதிரியெல்லாம் போலி மிரட்டல் வந்துச்சுன்னா எங்களோட பணிகளுக்கும் பாதிப்பா அமையுதுன்னு தொழில்துறையினர் விரக்தியோட சொல்றாங்க''

''அவங்க சொல்றது சரிதான் சித்ராக்கா... ஒரே நாளில் 'செக் கிளியரிங்' உத்தரவு அமலுக்கு வந்ததாக தொழில்துறையினர் உஷாரா இருக்காங்களாம். இதற்குத் தகுந்தாற்போல், பணப்பரிமாற்ற நடவடிக்கைகளைக் கவனத்துடன் மேற்கொள்ள ஆரம்பிச்சிட்டாங்களாம்''

'சரிதானே' என்பது போல் தலையசைத்தாள் மித்ரா.

ஜாதிப்பெயர் நீக்கம் அதிகாரிகள் குழப்பம் ''வரும் 11ம் தேதி கிராம சபா கூட்டம் நடக்குது. இதுல ஊராட்சிகள்ல இடம்பெற்றுள்ள பகுதிகள், வீதிகள்ல இருக்கிற ஜாதிப்பெயரை நீக்க தீர்மானம் கொண்டுவந்து, பெயர்களை மாற்ற பரிந்துரைக்கணும்ன்னு சொல்லியிருக்காங்களாம்.

''சில ஊராட்சிகள் பெயர்கள் கூட ஜாதிப்பெயரைத் தான் தாங்கியிருக்கு... இதில் எப்படி வீதிப்பெயர்ல இருக்கிற ஜாதிப்பெயரை அகற்றுவதுன்னு அதிகாரிகள் குழம்புறாங்களாம்''

''சித்ராக்கா... கடந்த வாரம், திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்துச்சு. துவக்கி வச்சு பார்வையிட மேயர் தினேஷ்குமார் வந்தார்.

''கிளம்ப மேயர் ஆயத்தமானபோது, வார்டு செயலாளர் ஒருத்தர், 'எனக்கு ஏன் தகவல் கொடுக்கலை; நகரச் செயலாளர் வந்த பின் துவக்கவேண்டியதுதானே'ன்னு பிரச்னையைக் கிளப்புனாராம்.

''இதனால அங்கு ஒரே காரசாரம். அரசு நிகழ்ச்சிகள்ல ஆளும் கட்சியினர் தலையீடு இருந்தால் இப்படித்தான் இருக்கும். கோஷ்டிப்பிரச்னையை இப்படியெல்லாம் பொது இடத்திலயா கட்சிக்காரங்க பகிரங்கமா வெளிக்காட்டணும்; தி.மு.க., நிர்வாகிங்களுக்கு ஒரு 'எல்லைக்கோடு' தேவைன்னு மக்கள் பேசிக்கிட்டாங்களாம்''

''அரசியல்ல இதெல்லாம் சகஜம்தான்'' என்பதை முகபாவனையிலேயே காட்டினாள் மித்ரா.

இறந்த ஆடுகளுக்கு போலீஸ் காவல் ''மித்து... காங்கயம் பரஞ்சேர்வழில விவசாயி ஒருத்தரோட பட்டியில வெளிநாய் புகுந்து ஒன்பது ஆடுகளைக் கொன்னுருச்சு. இறந்த ஆடுகளைக் கொண்டுவந்து கலெக்டர் ஆபீஸ்ல போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்தாங்க.

''உஷாரான ஆபீசர்ஸ், தோட்டத்திலயே போலீசைக் குவிச்சிட்டாங்க... விவசாயிகளோ, ஆடுகளைப் பிரேதப் பரிசோதனைக்கு வழங்க மறுத்துட்டாங்க... கொட்டும் மழைல, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துச்சு...

''உரிய இழப்பீடு பெற்றுத்தர்றோம்ன்னு ஆபீசர்ஸ் சொன்னத விவசாயிகள் ஏத்துக்கல... ஏற்கனவே 75 லட்சம் ரூபாய்க்கு மேல இழப்பீடா தர வேண்டியதிருக்கு... எழுத்துபூர்வமா உறுதிெமாழிக்கடிதம்கேட்டாங்க...

''உடனே வருவாய்த்துறையினர் நழுவிட்டாங்க... இறந்த ஆடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்துச்சு... போலீஸ் அசந்த நேரத்தில, ராத்திரியோட ராத்திரியா ஏழு ஆடுகளோட உடல்களைத் துாக்கிட்டு போயிட்டாங்க... ரெண்டு ஆட்டோட உடலுக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்பு போட்ருக்காங்க.

''தாலுகா ஆபீஸ், கால்நடைத்துறை ஆபீஸ்னு எங்கயாவது போராட்டம் நடத்த வந்திருவாங்களோன்னு நினைச்சு எல்லா இடத்திலயும் போலீஸ் கண்காணிச்சுட்டு வர்றாங்களாம்''

''சித்ராக்கா... விவசாயிகள் போராட்டம் சரிதான். ஆனா, அதிகாரிகள் பாடு திண்டாட்டம்தான்... சரிக்கா... இப்பவே போனாதான் தீபாவளி டிரஸ்களை திண்டாட்டம் இல்லாம எடுக்க முடியும். அப்புறம் கூட்டம் கூடிருச்சுன்னா செலக்ட் பண்ணி வாங்க முடியாது... என்னக்கா சொல்றீங்க''

மித்ரா சொன்னதை தலையசைத்தபடியே ஆமோதித்தாள் சித்ரா.






      Dinamalar
      Follow us