sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

தோழர் உறுமலால் ஸ்டேஷனில் 'பதுங்கிய' சிறுத்தை... காலரை துாக்கிவிட்டு 'சென்சாரில்' சுருட்றாங்க பணத்தை!

/

தோழர் உறுமலால் ஸ்டேஷனில் 'பதுங்கிய' சிறுத்தை... காலரை துாக்கிவிட்டு 'சென்சாரில்' சுருட்றாங்க பணத்தை!

தோழர் உறுமலால் ஸ்டேஷனில் 'பதுங்கிய' சிறுத்தை... காலரை துாக்கிவிட்டு 'சென்சாரில்' சுருட்றாங்க பணத்தை!

தோழர் உறுமலால் ஸ்டேஷனில் 'பதுங்கிய' சிறுத்தை... காலரை துாக்கிவிட்டு 'சென்சாரில்' சுருட்றாங்க பணத்தை!


ADDED : மார் 31, 2025 11:47 PM

Google News

ADDED : மார் 31, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அப்பப்பா என்ன வெயில்.... இப்பவே கண்ணைக்கட்டுதே, அடுத்த மாசமெல்லாம் எப்படி இருக்கும்னு தெரியலயே...'' புலம்பியவாறு சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா. டீபாயின் மீதிருந்த தண்ணீரை எடுத்து, 'மடக், மடக்'கென குடித்தவள், சற்றே ஆசுவாசமானாள்.

''வெயில் காலம், தண்ணி நிறைய தேவைப்படுது மித்து. சிட்டிக்குள்ளயாவது ஏதாவது ஒரு வகையில தண்ணீர் சப்ளை செஞ்சுடறாங்க. ஆனா, வில்லேஜ்களில் தான் வெயில் காலத்துல, தண்ணிக்கு திண்டாட வேண்டிய நிலைமை வரும்ன்னு சொல்றாங்க...'' என்றாள் சித்ரா.

''இல்லக்கா. மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டமெல்லாம் வந்ததுக்கு அப்புறம், பஞ்சாயத்துகளில் குடிநீர் சப்ளை நல்லா இருக்குன்னு சொல்றாங்க. ஒவ்வொரு கிராமத்திலயும் தண்ணி தொட்டி வச்சிருக்காங்க. அதுல இருந்து தான், வீடுகளுக்கு வாட்டர் சப்ளை செய்றாங்க. குடிநீர் திறந்து விடற வேலையை, பம்ப் ஆபரேட்டர்ங்க தான் செஞ்சுட்டு வர்றாங்க. இப்ப, ஸ்பெஷல் ஆபீசர்ங்க பொறுப்புக்கு வந்ததுக்கு அப்புறம், 'சென்சார் உபகரணம்' மூலமா, குடிநீர் சப்ளையை 'கன்ட்ரோல்' பண்ற சிஸ்டத்தை கொண்டு வரலாம்ன்னு 'பிளான்' போட்டிருக்காங்களாம்.

''இதுல என்ன ஒரு கூத்துன்னா, சென்சார் உபகரணத்தோட விலை, 25 ஆயிரத்தை கூட தாண்டாதாம். ஆனா, 49 ஆயிரத்துக்கு 'பில்' போடச் சொல்லி ஊராட்சி செயலாளர்களை 'டார்ச்சர்' பண்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ங்கற மாதிரி, ஸ்பெஷல் ஆபீசர்ஸ், கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க போலயே...'' 'உச்' கொட்டிய சித்ரா, ''நாம பேசறத ரூரல் கவனிக்கிற போலீஸ் ஆபீசர் உன்னிப்பா கவனிக்கிறாராம். அத வச்சு, நடவடிக்கை கூட எடுக்கிறாராம்'' என பேச்சை மாற்றினாள்.

'மூனு' சீட்டில் சிக்கிய கிளப்!


''ஊத்துக்குளி பக்கத்துல இருக்கற ஒரு கிளப்ல, பணம் வைச்சு 'மூனு' சீட்டு நடக்குதுன்னு நாம பல தடவை பேசினோமில்ல. அத வச்சு, கிளப்ல, 'ரெய்டு' போக சொல்லியிருக்காரு பெரிய ஆபீசரு. ரெய்டு போன போலீஸ்காரங்க, சீட்டு விளையாடிக்கிட்டு இருந்த, 28 பேரை 'அரெஸ்ட்' பண்ணி, 71 ஆயிரத்தை பறிமுதல் பண்ணியிருக்காங்க'' என்றாள் சித்ரா.

''அடடே பரவாயில்லையே...'' திருப்திப்பட்டு கொண்டாள் மித்ரா.

''அதே மாதிரி, சிட்டிக்குள்ளேயும், ரூரல்லேயும் கஞ்சா, போதை, லாட்டரி, கொலை, கொள்ளைன்னு நிறைய பிரச்னை இருக்குது. ஒவ்வொரு ஸ்டேஷன் லிமிட்லயும் இந்த மாதிரி பிரச்னை வர்றதுக்கு யார் காரணம்ன்னு கண்டுபிடிச்சு, பெரிய ஆபீசர் கவனத்துக்கு கொண்டு போறதுக்கு தான், ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ஒற்றர் படை இருக்காங்க. ஆனா, வேலியே பயிரை மேய்ற மாதிரி, உளவுப்பிரிவு போலீஸ்காரங்களே தப்புதண்டா நடக்க 'சப்போர்ட்' பண்றாங்களாம். அந்த மாதிரி போலீஸ்காரங்களை, ரூரலை கவனிக்கிற பெரிய ஆபீசர் அடையாளம் கண்டுக்கிட்டு, ஸ்டேஷன் டூயிங் டியூட்டிக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டு இருக்காராம்''

''இன்னொரு விஷயத்தையும் சொல்லி முடிச்சிடறேன் மித்து. உடுமலை பக்கத்துல இருக்கற 'மங்கல'கரமான ஸ்டேஷன் லிமிட்டுக்குள்ல, பொள்ளாச்சி லிமிட்ல லாட்டரி வித்திட்டு இருக்கறவங்க, தங்களோட லாட்டரி வியாபாரத்தை விரிவுபடுத்த 'ரெடி' ஆகிட்டாங்களாம். அவங்களுக்கு 'ரூட்' போட்டு கொடுத்ததே போலீஸ்காரங்க தான்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

'தண்ணீர்' அரசியல் எடுபடுமா?


''அத்திக்கடவு - அவிநாசி திட்டம், அரசியல் முக்கியத்துவம் பெற துவங்கிடுச்சாம்,'' என பேச்சை மாற்றினாள் மித்ரா.

''அப்படியா, விளக்கமா சொல்லு மித்து...'' என்றாள் சித்ரா.

''நார்த் தொகுதி இப்ப அ.தி.மு.க., வசமிருக்குது. தொகுதிக்குள்ள, 10 வில்லேஜ் பஞ்சாயத்தில, நல்ல ஓட்டு வங்கி இருக்குதாம். இந்த கிராமங்கள்ல இருக்கற குளம், குட்டைகள் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துல இணைச்சதால, தண்ணீர் நிரம்பிடுச்சு. இதனால, இப்ப வாழை, நிலக்கடலை, காய்கறின்னு புதுசுபுதுசா விவசாயம் பண்றாங்க. தொகுதிக்குள்ள, அ.தி.மு.க., வோட செல்வாக்கு அதிகமாகிடுச்சாம். இதைெயல்லம் கூட்டிக்கழிச்சு பார்த்து, வர்ற எலக்ஷன்ல 'சீட்' வாங்கறதுக்கு, காய் நகர்த்த ஆரம்பிச்சிட்டாங்களாம்,''

''அதிலும், குறிப்பா, நார்த், அப்புறம் பல்லடம் விஐபினு ஒரு பட்டாளமே 'சீட்' கேட்டு, துண்டு விரிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். வர்ற எலக்ஷன்ல தொகுதியை எப்படியாவது தக்க வைக்கணும்ன்னு கணக்குப் போட்டு, எம்.எல்.ஏ., கனவுல மிதந்துட்டு இருக்க, ஆளுங்கட்சி கார்ப்ரேஷன் வி.ஐ.பி., என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்காராம்...'' விளக்கினாள் மித்ரா.

''ஆளுங்கட்சின்னு சொல்லவும் தான் எனக்கு இன்னொரு 'மேட்டர்' ஞாபகத்துக்கு வருது. பூண்டி முனிசிபாலிட்டில, 15 கோடியில கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ற வேலை நடந்துட்டு இருக்கு. இதுல, கமிஷன் வெட்டோணும்னு சில கவுன்சிலருங்க, முரண்டு பிடிக்கிறாங்களாம். 'டெண்டரை, சென்னையிலயே முடிச்சிட்டாங்க. 'டாப் லெவல்'லயே 'டீலிங்' எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு சொன்னாலும் கமிஷன் கேட்டு அடம் பிடிக்கறாங்களாம்...'' என்றாள் சித்ரா.

'மறந்து' போன பொதுநலம்


''ஊருக்குள்ள சரக்கு, கஞ்சா நெறைய இடத்தில புழக்கத்துல இருக்கு. அத கட்டுப்படுத்துங்கன்னு, ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கற தோழர்ஸ், வீரபாண்டியில பெரிய லெவல்ல ஆர்ப்பாட்டம் செஞ்சாங்கல்ல...'' நிறுத்தினாள் மித்ரா.

''ஆமான்டி. அதுக்கென்ன?''

''அதுல, இன்னொரு 'அரசியலும்' இருக்குதாம். அங்கிருந்த கடை முன்னாடி உட்கார்ந்துட்டு இருந்த போதை கும்பலுக்கும், கடைக்காரருக்கும் தகராறு ஏற்பட, போதைக்கும்பல் கடைக்காரரையும், அவரது மகனையும் அரிவாள்ல வெட்டிட்டாங்க. ரெண்டு பேத்துக்கும் நல்ல காயமாம். வெட்டுப்பட்ட அந்த கடைக்காரரோட குடும்பம், தோழர் கட்சியை சேர்ந்தவங்களாம். அதுக்காக தான் அத்தனை பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினாங்கன்னு மக்கள் பேசிக்கிறாங்க...''

''இந்த மாதிரி டிஸ்ரிக்கிட் பூரா கஞ்சா, சரக்கு போதையால கொலை, கொள்ளைன்னு தொடர்ந்து நடந்துட்டுகிட்டே தான் இருக்கு. அதுக்கெல்லாம் ஒத்தை அறிக்கையோட 'சைலண்டா' இருக்கற தோழர்கள் படை, தங்களோட கட்சியை சேர்ந்தவங்களுக்கு ஒரு பிரச்னைன்னா மட்டும், பெரிய 'லெவல்ல' பிரச்னை பண்றது எந்தளவுக்கு நியாயம்? இது சுயநலமில்லையா...'' என்றாள் சித்ரா.

'அடேங்கப்பா' தோழர்


''என்னங்க சார் உங்க கொள்கைன்னு, மத்த கட்சிக்காரங்க கேக்கற மாதிரி ஆயிடுச்சுங்க்கா. அக்கா, தோழர்களைப்பத்தி இன்னொரு மேட்டர் இருக்குதுங்க,'' என்ற மித்ரா, தொடர்ந்தாள்.

''திருப்பூர் சவுத் ஏரியாவுல தோழர் கட்சியை சேர்ந்த ஒருவர் தன்னோட கட்டடத்தின் கீழ் தளத்தில் இருக்கற கட்டடத்தை, 'சிறுத்தை' கட்சிக்கு வாடகைக்கு விட்டிருக்காரு. போன மூனு மாசமா வாடகையே தரலையாம். 'கரன்ட் பில்'லும் கட்டலையாம். அதனால கட்டடத்தை காலி பண்ணுங்கன்னு கட்டட ஓனர் சொல்லவே, காலி பண்ணவே இல்லையாம்,''

''இதனால, போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு கட்டப்பஞ்சாயத்து பண்ணி, ஒரு மாச வாடகையை 'அட்வான்ஸ்'ல கழிச்சுட்டு, கட்டத்தை காலி பண்ண வச்சிருக்காரு அந்த தோழர். என்னதான் நாம சிறுத்தை மாதிரி சீறினாலும் ஸ்டேஷன் வரை ஏத்தி, அடக்கிட்டாங்களேன்னு, புலம்பிட்டே காலி பண்ணிட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.

''இப்டியெல்லாம் 'அட்ராசிட்டி' பண்ணா என்னதான் பண்றது,'' என அங்கலாய்த்த சித்ரா, ''பிரஸ் ஸ்டிக்கர்' ஒட்டிக்கிட்டு ஊருக்குள்ள வலம் வர சிலரு, அதோடு சேர்த்து 'லாயர்'ங்கிற ஸ்டிக்கரும் ஒட்டிக்கிட்டு வலம் வர்றாங்களாம். வக்கீல் தொழில் பண்றவங்க, பகுதி நேர மற்றும் முழு நேர ரிப்போர்ட்டரா வேல செய்யக் கூடாதுங்கறது, சுப்ரீம் கோர்ட் ஆர்டர். ஆனா, அதுகூட தெரியாம இப்டி ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டு, கட்டப்பஞ்சயத்து பண்ணி, கல்லா கட்டற வேலையில சிலர் இருக்காங்கன்னு சொல்லி, அதுபத்திய மேட்டர்களை பார் கவுன்சில்கிட்ட புகாரா கொடுத்திட்டாங்களாம்,'' என்றாள்.

''இப்படித்தான், திருப்பூர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலில் உள்நோயாளியா தங்கி சிகிச்சை பெற வருபவர்களை பார்க்க வரும் அவங்களோட ரிலேஷன்ஸ்கிட்ட கருத்து, கம்ப்ளைன்ட்களை பதிவு செய்ய, 'ரெஜிஸ்டர் மெயின்டெய்ன்' பண்றாங்களாம். இதுல ஒருத்தர், 'டாக்டரை பார்க்க வந்தா தொட்டுக்கூட பார்க்கிறது இல்ல; தள்ளி உட்கார சொல்றாரு' ன்னு எழுதி வைச்சது மட்டுமில்லாம, 'சென்னையில நடந்தது மறந்து போச்சா'ன்னு, எக்ஸ்ட்ரா ஒரு 'பிட்' போட்டுட்டாரு...''

''போன வருஷம், சென்னை ஆஸ்பிட்டல்ல, சரியா ட்ரீட்மென்ட் தரலைன்னு சொல்லி, டாக்டர் ஒருத்தரு கத்தியால குத்திய சம்பவம் நடந்துச்சுல்ல. அத சுட்டிக்காட்டி தான், இப்படி எழுதிட்டாருன்னு, டாக்டர்ங்க புரிஞ்சுக்கிட்டாங்களாம். ஆனா, இந்த விஷயம் ஹாஸ்பிடல் வட்டாரத்துல பரபரப்பாயிடுச்சு,'' என்ற மித்ரா, ''சரிங்க்கா... நான் கிளம்பறேன்'' என்றாள். ''இரு மித்து, பிரியாணி செஞ்சிருக்கேன். சாப்பிட்டு போவயாமா..'' என, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.






      Dinamalar
      Follow us