/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
'மப்புல' பைக் ஓட்டி மாட்டிய ஆசாமிக்கு 'சிபாரிசு; ' ஸ்டேஷனில் 'லேப்டாப்' உடைச்சு ஏட்டய்யா 'ரவுசு'
/
'மப்புல' பைக் ஓட்டி மாட்டிய ஆசாமிக்கு 'சிபாரிசு; ' ஸ்டேஷனில் 'லேப்டாப்' உடைச்சு ஏட்டய்யா 'ரவுசு'
'மப்புல' பைக் ஓட்டி மாட்டிய ஆசாமிக்கு 'சிபாரிசு; ' ஸ்டேஷனில் 'லேப்டாப்' உடைச்சு ஏட்டய்யா 'ரவுசு'
'மப்புல' பைக் ஓட்டி மாட்டிய ஆசாமிக்கு 'சிபாரிசு; ' ஸ்டேஷனில் 'லேப்டாப்' உடைச்சு ஏட்டய்யா 'ரவுசு'
ADDED : ஜன 06, 2026 08:42 AM

'ஹே ப்பி நியூ இயர் சித்துக்கா...'' வாழ்த்து சொன்ன மித்ராவுக்கு, ''சேம் டு யூ மித்து...'' சொல்லி கை குலுக்கினாள் சித்ரா.
''இந்த தடவ வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு, பெருமாள் கோவில்ல வழக்கத்தை விட எக்கச்சக்க கூட்டம்...'' மித்ரா சொல்ல, ''ஆமா மித்து. பக்தர்கள் நீண்ட 'க்யூவில்' நின்னாங்க. தெற்கு வாசல் வழியா, 50 ரூபா கட்டணம் வசூலிச்சு, சிறப்பு தரிசனத்துக்கு வி.ஐ.பி.,க்களை மட்டும் அனுமதிச்சாங்க. இத பார்த்த மத்த பக்தர்களும், 'நாங்களும், பணம் தர்றோம்; எங்களையும் அந்த வாசல் வழியா விடுங்கன்னு சொல்லி, 100, 200 ரூபாயை கையில வைச்சுக்கிட்டு, கோவில் ஊழியர்கள்கிட்ட வாக்குவாதம் பண்ணியிருக்காங்க. இதனால சலசலப்பாகி, ஒரு கட்டத்துல சிறப்பு தரிசனத்தை கொஞ்ச நேரம் நிறுத்திட்டாங்க...'' என்றாள் மித்ரா.
பொங்கல் 'அரசியல்' ''ஆன்மிக விஷயத்துல, இந்த மாதிரி பிரச்னை எதுவும் இல்லாம பார்த்துக்கணும்...'' அங்கலாய்த்த மித்ரா, ''எப்படியோ. இந்த வருஷம் பொங்கலுக்கு, மூவாயிரம் ரூபா தரப்போறாங்க. போன, 3 வருஷமா பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் தான் கொடுத்தாங்க. பணம் தரல. இந்த தடவ 'எலக்ஷன்' வரப்போகுதுல்ல. அதான் பணமும் சேர்த்து தர்றாங்க. பரிசு தொகை வாங்க மக்களுக்கு 'டோக்கன்' தர்றதையே மக்களை திரட்டி, அரசு விழா மாதிரி நடத்த அங்கங்க இருக்கற ஆளுங்கட்சிக்காரங்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''மக்களுக்கு என்னதான் நலத்திட்டங்கள் கொடுத்தாலும், லஞ்சம், ஊழல், கட்டப்பஞ்சாயத்துன்னு நிறைய நடக்குது சித்ராக்கா... இதெல்லாம் தான், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தரப்போகுது...'' தொடர்ந்தாள் மித்ரா.
பஞ்சமில்லாமல் கஞ்சா! ''அவிநாசி பக்கத்துல இருக்கற கருவலுார்ல, கஞ்சா புழக்கம் தாராளமா இருக்காம். சின்ன சின்ன பசங்க கஞ்சா போதையில 'அட்ராசிட்டி' பண்றாங்களாம். அதுவும், 'நைட்' நேரத்துல வண்டியில சுத்துறது, சத்தம் போடறதுன்னு, ரொம்ப 'நியூசென்ஸ்' பண்றாங்களாம். குறிப்பா சொல்லோணும்னா, 'நியூ இயர்' அன்னைக்கு 'ஓவர் அட்ராசிட்டி'யாம்,''
''அதே ஊருக்கு பக்கத்துல இருக்கற ஆலம்பாளையத்துல, போன வாரம் ஒரு நிலத்தை 'சர்வே' செய்ய போன லேடி ரெவின்யூ ஆபீசரை, 'சர்வே செய்யக் கூடாது'ன்னு சொல்லி, அந்த கட்டட ஓனர், ஆபீசரை அறைக்குள்ள பூட்டி வைச்சாருல்ல, இது எவ்வளவு பெரிய தப்பு. ஆனாலும், ஒரு சிலர்'கட்டப்பஞ்சாயத்து' பேசி பிரச்னையை முடிக்க பார்த்திருக்காங்க. ஆனா, தாலுகா பெரிய ஆபீசர் ஒத்துக்காததால, வேற வழியில்லாம சின்னதா ஒரு 'கேஸ்' போட்டு விட்டுட்டாங்களாம். அரசாங்க ஆபீசர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலைதான் இருக்கு பாரேன்...''
''போன வாரம் மங்கலம் ரோட்ல, ஒரு 'பாஸ்ட் புட்' கடை பக்கத்துல, பைக் ஓட்டிட்டு வந்த ஒரு வாலிபர், செம்ம போதையில இருந்தாராம். பெரிய கத்தியை எடுத்து, தன்னோட 'பைக்'கையே 'சைக்கோ' மாதிரி வெட்ட ஆரம்பிச்சுட்டாராம். இத பார்த்து, மக்கள் சத்தம் போட்டுட்டு ஓடவே, தகவல் தெரிஞ்சு வந்த போலீஸ்காரங்க, வாலிபரை மடக்கிப்பிடிச்சு ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. ஆனா, அவரோட பேரு, ஊரை மட்டும் கேட்டுட்டு, எழுதி வாங்கிட்டு அனுப்பி வைச்சிட்டாங்களாம்; 'கேஸ்' போடலையாம்,'' என போலீஸ் மேட்டரை மூச்சுவிடாமல் சொல்லிய சித்ரா, ''இப்படி இருந்தா... சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்காம என்ன பண்ணும்,'' என்று ஆவேசப்பட்டாள்.
காக்கிச்சட்டை 'களேபரம்' ''இப்பெல்லாம் சில போலீஸ்காரங்க கூட, இந்த மாதிரி 'அட்ராசிட்டி' பண்றாங்க அக்கா...'' என்ற மித்ரா தொடர்ந்தாள்.
''குடிபோதையில பைக் ஓட்டியதா சொல்லி, ஒருத்தர பிடிச்சு, ஊத்துக்குளி போலீஸ்காரர், ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்க. அவரை வெளியே கூட்டிட்டு வர்றதுக்காக, அதே ஊர்ல குடியிருக்கிற, மடத்துக்குளத்துல வேல பார்க்குற போலீஸ்காரர் ஒருத்தரு போயிருக்காரு. ஆனா, அவரை விட முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இதனால கடுப்பான அந்த போலீஸ்காரரு, அங்க இருந்த 'கவர்ன்மென்ட்' லேப்டாப்பை எடுத்து உடைச்சிட்டாராம். அடுத்தநாள் புதுசா ஒரு 'லேப்டாப்'பையும் வாங்கி கொடுத்துட்டாராம்,'' என்றாள்.
''இதெல்லாம் தெரிஞ்சும் மாவட்ட அதிகாரி 'கப்சிப்'னு தான் இருக்காரு. மித்து, நாளைக்கு 'லோகு' அண்ணன் வீட்டுக்கு வர்றதா சொன்னார். நீயும் வாயேன்,'' என்ற சித்ரா, ''கொஞ்ச நாள் முன்னாடி, வி.ஐ.பி. பந்தோபஸ்த் டியூட்டிக்காக, செங்கப்பள்ளி ரோட்ல போலீஸ்காரங்க இருந்திருக்காங்க. காங்கயம் ஸ்டேஷன்ல வேல பார்க்குற ஒரு போலீஸ்காரருக்கும், ஊத்துக்குளி ஸ்டஷன் போலீஸ்காரர் ஒருத்தருக்கும் ஏதோ வாக்குவாதம் வர, காங்கயம் போலீஸ்காரர், இவரை தள்ளிவிட்டிருக்காரு. இது, பெரிய ஆபீசர் கவனத்துக்கு போக, அவரைஏ.ஆர்.க்கு மாத்திவிட்டுட்டாராம்,'' என்றாள் மித்ரா.
அப்போது, அருகிலுள்ள கோவிலில், 'கணபதியே' சரணம்...' என பாட்டுஒலிபரப்பானது.
காசு... பணம்... துட்டு ''அனுப்பர்பாளையம் ஸ்டேஷன் லிமிட்ல இருக்கற 'பார்'ல, 'சில்லிங் சேல்ஸ்' நடக்குதுங்ற புகார் அடிப்படையில, ஸ்டேஷன் ஆபீசரை, 'கன்ட்ரோல் ரூமு'க்கு மாத்திட்டாராம் சிட்டி பெரிய ஆபீசர்,'' சித்ரா சொல்ல, ''ஆனா, ரூரல்ல இருக்கற நிறைய கடைகள்ல, சில்லிங் சேல்ஸ் மட்டுமில்லாமா, 24 மணி நேரமும் சரக்கு விக்கிறாங்களே. அத மாவட்ட ஆபீசர் கண்டுக்க மாட்டேங்குறாரே...!'' அங்கலாய்த்தாள் மித்ரா.
''அ.பாளையம் ஸ்டேஷன் சம்பந்தமா, இன்னொரு மேட்டர் கேளுடி மித்து. சிறுபூலுவபட்டியில, ஒருத்தரோட வீட்ல வளர்த்துகிட்ட இருந்த நாய், கட்டியிருந்த சங்கிலியோட ரோட்டுக்கு வர, திரும்பவும் வீட்டுக்கு போக வழி தெரியாம, அங்கேயும் இங்கேயும் சுத்திக்கிட்டு இருந்திருக்கு. இத பார்த்த போலீஸ்காரங்க சிலரு, நாயை பிடிச்சு கொண்டு போய், பக்கத்துல இருக்கற ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர்ங்ககிட்ட கொடுத்து, 'இத பார்த்துக்கோங்க... யாராவது வந்து கேட்டா கொடுத்துடலாம்,''ன்னு சொல்லியிருக்காங்க...
''ரெண்டு நாள் கழிச்சு, நாயோட உரிமையாளருக்குக்கு நாய் இருக்கற இடம் தெரிய வர, '2,500 ரூபாயை பராமரிப்பு செலவுக்கு கொடுத்துட்டு, நாயை வாங்கிட்டு போங்கன்னு போலீசார் சொல்ல, அவரும் பணத்தை கொடுத்துட்டு, வாங்கிட்டு போயிட்டாராம்....''
''இதோட முடிஞ்சா சரி...ஆனா, அந்த ஸ்டேஷன்ல வேல செய்ற சின்ன ஆபீசரு ஒருத்தரு, 'உங்க நாய் இருக்கற இடத்தை நான் தானே அடையாளம் காண்பிச்சேன். எனக்கும் பணம் குடுங்கன்னு கேட்டு நச்சரிக்கிறாராம். 'இதென்னடா வம்பா போச்சு'ன்னு புலம்பறாராம் நாயோட உரிமையாளரு. 'எல்லாம் உன்னால தான்'னு, தன்னோட நாயை திட்டிக்கிட்டு இருக்காராம்,'' என்ற மேட்டர் முழுவதையும் சொல்லி சிரித்தாள் சித்ரா.
அரசியல் 'காய்ச்சல்' அடுத்து, அரசியல் மேட்டருக்கு தாவிய மித்ரா, ''திருப்பூர் நார்த் பகுதி மத்திய ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரு, பதவிக்கு பரிந்துரைக்க பணம் கேட்கிறார்ன்னு ஒரு பேச்ச அடிபடுது,'' என்று சொல்லி, ''பல்லடம் தொகுதியை தக்க வைக்க சிட்டிங் எதிர்க்கட்சி வி.ஐ.பி. காய் நகர்த்திட்டு இருக்காராம். ஆனா, இந்த தடவ 'சீட்' வாங்கியே ஆகோணும்ன்னு, 'மாஜி' வி.ஐ.பி.,யும் காய் நகர்த்திட்டு இருக்காராம். இவருக்கு 'சீட்' வாங்கி தர்றதுல்ல, அவரோட மகள் ரொம்ப ஆர்வமா இருக்காங்களாம். போஸ்டர் அடிக்கிறது, அது, இதுன்னு தலைமையோட கவனத்தை ஈர்க்க வலுவா அரசியல் பண்றாங்களாம்; இது, கட்சிக்காரங்க சிலருக்கு பிடிக்கலையாம்...'' கூடுதல் தகவல் சொன்னாள்.
''மித்து, அதேபோல, திருப்பூர்ல டி.டி.வி. கட்சி குரூப்ல முக்கிய பொறுப்புல இருந்த ஒருத்தரு, திரும்பவும் இலை கட்சியில சேர்ந்துட்டாருல்ல. இப்போ, அவரு கூட இருந்த சிலரு, விஜய் கட்சிக்கு தாவறதுக்கு தயாராகிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
'தண்ணீர்' சாம்பார் ''புத்தாண்டு அன்னைக்கு, மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் ஸ்டாப்ஸ் எல்லாரும் வேலைக்கு வந்துட்டாங்களாம். இதனால், நெகிழ்ந்து போனாராம் புதுசா வந்திருக்க பெரிய டாக்டரு. ஆனா, நோயாளிங்களுக்கு குடுக்கிற சாப்பாடு விஷயத்துலயும் கவனம் செலுத்தணும்ன்னு சொல்றாங்க. தட்டுல சாம்பார் தண்ணியாட்டம் ஓடுதாம். பொரியல், கீரை இப்டி எது கேட்டாலும் கிடைக்கிறது இல்லைன்னு, நோயாளிங்க புலம்பறாங்களாம்...'' என்றாள் சித்ரா.
''அக்கா, நெருப்பெரிச்சல்ல, அரசு நிலத்தை ஆக்கிரமிச்சு தனிநபர் ஒருத்தரு கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாருல்ல. அடுத்தடுத்து புகார் பறந்ததால, அதோடு அடிப்படையில, ரெவின்யூ ஆபீசர்ங்க, 'நோட்டீஸ்' ஒட்டினாங்க. ஆனா, இ.பி.லைன் கட் பண்ணவே இல்லையாம். இதப்பார்த்து சிலர் வரிசையா புகார் செஞ்சதால, 'கரன்ட் கட்' பண்ணாங்களாம்'' என்ற மித்ரா, ''சரிங்க்கா, நான் கிளம்பறேன்'' என்றபடி எழுந்தாள்.
உடனே சித்ரா, ''கொஞ்சம் இரு. நியூ இயர் அதுவுமா, ஸ்வீட் சாப்பிட்டு போ'' என்ற சொல்லி, 'பால்கோவா' கொடுத்தாள்.

