தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ சுடுகாட்டிலும் 'தஞ்சம்' புகுந்த லஞ்சம்!

 சுடுகாட்டிலும் 'தஞ்சம்' புகுந்த லஞ்சம்!

 சுடுகாட்டிலும் 'தஞ்சம்' புகுந்த லஞ்சம்!


ADDED : செப் 29, 2026 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 07:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

--- ''சவ அடக்கத்திலும் காசு பார்க்கற கொடுமை நடக்குது மித்து,'' என ஆதங்கத்துடன் ஆரம்பித்தாள் சித்ரா.

''அடக்கடவுளே''

''சிட்டிக்குள்ள பி.என். ரோட்டுல இருக்கற ஹிந்துக்கள் மயான இன்சார்ஜாக உள்ள ஆட்கள், சடலங்கள கொண்டு வர ஆம்புலன்ஸ் ரெடி பண்ணி தர்றாங்க. யார் அதிகமா கமிஷன் தர்றாங்களோ அவங்கள தான் கூப்பிடறாங்க. மயான வாசலில் உள்ள ஒருத்தர் கமிஷன் கொடுக்க முடியாதுன்னு சொன்னதால, அவர கூப்பிடுறதில்லையாம்,''

''இதேமாதிரி, துக்க காரியம் நடந்த வீட்டுல, எக்கச்சக்கமா பணத்தை வாங்கிட்டு தான் வேல செய்றாங்களாம். இதுபோக, மாற்று மதத்தை சேர்ந்த ஒருத்தரோட சடலத்த புதைச்சிட்டாங்களாம். இப்டித்தான் போன வாரம் ஒரு சடலத்தை கொண்டு வர்றப்போ, இன்னொரு ஆம்லென்ஸ் டிரைவர் வண்டிய குறுக்கே போட்டு பிரச்னை செய்திருக்கார். இவ்ளோ நடந்தும் கூட, கார்ப்பரேஷன் ஆட்கள் எட்டிக்கூட பார்க்கலையாம்,''

''கடைசியில மயானத்துக்கும் ஊழல் போயிடுச்சு போல...'' என்ற மித்ரா, ''அக்கா, வேலம்பாளையம் பக்கத்துல, ராஜிவ் நகரில் ஒருத்தர், தனது வீட்டுக்கு பின்னாடி கஞ்சா செடி வளர்க்கிறாராம். இத தெரிஞ்சுகிட்ட அங்குள்ள குடியிருப்புவாசிகள், போலீசுக்கு சொல்லியும், யாரும் வரலையாம்,'' கூடுதல் தகவல் சொன்னாள்.

''அவிநாசிக்கு பக்கத்துல ஒரு கிராமத்துல, ஒரு சிறுமிக்கு, முதியவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கார். இத தெரிஞ்சுகிட்ட ஒருத்தர், சைல்டு லைனுக்கு போன் பண்ணவும், போலீஸ் போய் விசாரிச்சிருக்காங்க. அப்ப ஆபீசர் ஒருத்தர், கம்ப்ளைன்ட் செஞ்சவரோட செல்போன் நம்பரை பப்ளிக்கா சொல்லிருக்கார். இத தெரிஞ்சகிட்ட முதியவரோட சொந்தக்காரங்க, ராத்திரியானா, அவரோட வீட்டில் கல் வீசுறது, அழுகிய காய்கள், முட்டைகளை வீசுறதுன்னு ரொம்ப கேவலமா நடந்துக் கறாங்களாம்...''

''இதில என்ன கொடுமைன்னா, இத்தனையும் தெரிஞ்சுகிட்ட போலீஸ், அந்த முதியவரை இதுவரைக்கும் அரெஸ்ட் பண்ணலையாம். அந்த ஸ்டேஷன்ல, போக்சோ கேஸ்கள்ல ரொம்பவும் அலட்சியம் காட்டறதா, ஏற்கனவே பிரச்னை இருக்கு,'' கொட்டித் தீர்த்தாள் சித்ரா.

''அக்கா, அதே ஊர் முனிசிபாலிட்டில லஞ்ச ஒழிப்பு போலீசார், ரெய்டு நடத்தி, ஜிபே-ல் அஞ்சு லட்சம் பணம் வச்சிருந்த ஒரு ஆபீசர் மேல கேஸ் பைல் பண்ணப்போறாங்களாம். அதேபோல இன்னும் ரெண்டு பேர் மேலயும் நடவடிக்கை பாயும் போல இருக்குது. அந்த ஆபீசில, பெர்மனென்ட் கமிஷனர் இல்லாததால் மேனேஜர், எஸ்.ஐ., இன்ஜி., இவங்க மூனு பேர் வச்சது தான் சட்டம்னு, கவுன்சிலர்ஸ் சிலர் ஓபனாவே சொல்றாங்க...''

''இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ...'' சொன்ன சித்ரா, ''குண்டடம் யூனியன் ஆபீசுல, கம்ப்யூட்டர், குடிக்கறதுக்கு தண்ணி வசதி எதுவுமே கிடையாதாம். அங்கிருந்த கான்ட்ராக்டர்ஸ் வச்சுது தான் சட்டமாம். ஆபீசர்களும் கண்டுக்கறதில்ல. இதப்பத்தி மாவட்ட ஆபீசர் காதுக்கு கொண்டு போகாம மறைச்சிடறாங்க. இந்த டிஜிட்டல் யுகத்தில இப்டியும் ஒரு ஆபீசான்னு, எல்லாரும் கேட்கறாங்களாம்...'' சலித்து கொண்ட சித்ரா, சூடான பில்டர் காபியை மித்ராவுக்கு கொடுத்தாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us