தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ கலெக்டர் ஆபீசின் 'லாபி': 'மாஜி'க்கு எகிறுது 'பிபி'

 கலெக்டர் ஆபீசின் 'லாபி': 'மாஜி'க்கு எகிறுது 'பிபி'

 கலெக்டர் ஆபீசின் 'லாபி': 'மாஜி'க்கு எகிறுது 'பிபி'


ADDED : செப் 22, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 06:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''டூ வீலர் சோதனையில், தன்னோட கஸின் பிரதரை வைத்து 'கல்லா' கட்டறார் தெரியுமா?,'' என ஆரம்பித்த சித்ராவிடம், ''நீங்களே சொல்லிடுங்க...'' மித்ரா கூறினாள்.

''மித்து, வடக்கால, சிட்டி டிராபிக் டிரைவரின் கஸின் பிரதர் ஒருத்தரு, போலீசாருடன் சேர்ந்து கொண்டு வெகிள் செக்கப் பண்றாராம். இத பத்தி, அதிகாரிகளுக்கு நல்லா தெரிஞ்சும், கண்டுக்காம இருக்காராம். அதேபோல, ஸ்டேஷன்ல ரெண்டு மூனு கோஷ்டி செயல்படுதாம். ஏற்கனவே, சவுத் ஸ்டேஷன்ல வெளிநபரை ஸ்டேஷனுக்குள்ள விட்டதால, டூவீலர்கள் திருட்டு போய், நடவடிக்கை எடுத்தாங்களாம்,''

''அதுபோல இங்கயும் ஏதாவது பிரச்னை வர்றதுக்குள, சிட்டி பெரிய ஆபீசர் நடவடிக்கை எடுத்தா பரவாயில்ல. இந்த மாதிரி விஷயம், அதிகாரிக்கு சுத்தமா பிடிக்காது என்பதால, கண்டிப்பா ஆக் ஷன் எடுப்பாரு. பொருத்திருந்து பார்க்கலாம்,'' விளக்கினாள் சித்ரா.

தோழர்கள் டென்ஷன் ''தாராபுரம் பை எலக் ஷனுக்கு, நாமினேஷன் தாக்கல் செய்ய ஆளுங்கட்சி வேட்பாளர், மினிஸ்டர், எம்.எல்.ஏ.க்கள், கட்சிக்காரங்க என தடபுடலாக வந்திருக்காங்க. இதனால, தோழர் கட்சியினர் வெளியில வெயிட் பண்ணாங்க. ஆளுங்கட்சிக்காரங்க பண்ணின அலப்பறையை பார்த்து, இன்ஸ்., எஸ்.ஐ., கிட்ட தோழர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வெளுத்து வாங்கிட்டாங்க. பிரச்னை பெரிசாயிட்டு, என்ன பண்றதுன்னு, ரெண்டு சைடிலும் சமாதானம் செய்த போலீசார், சாதுர்யமாக பேசி வெளியில அனுப்பிட்டாங்க,'' என இடைத்தேர்தல் மேட்டர் சொன்னாள் மித்ரா.

''சமீபத்துல, பல்லடம் போலீஸ், 130 கிலோ கஞ்சா பிடிச்சு பேட்டியெல்லாம் குடுத்தாங்கல்ல. ஆனா, அது இங்க புடிக்கலயாம். ஏற்கனவே உள்ள கேஸில் கிடச்ச க்ளூவ வச்சு டிரெயின்ல நார்த் ஸ்டேட்டுக்கு போயி புடுச்சதாம். 'கரடி' ஊர் டாஸ்மாக் பார்ல, 24 மணி நேரமும் சரக்கு சேல்ஸ் ஆகுதாம். அதேபோல, பக்கத்துல இருக்கற வில்லேஜ்லயும் ஓபன் சேல்ஸ் ஜோரா நடக்குதாம்,'' என, சித்ரா போலீசின் 'தில்லாலங்கடி' குறித்து ஆவேசமானாள்.

ஆள விடுங்க சாமி --''பின்னலாடை வாரியம் அமைக்கும் முயற்சியாக, முதல் கட்ட கூட்டமும் நடந்துச்சு. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுவதை நினைத்து தொழில் துறையினர் மகிழ்ச்சியில இருந்தாங்க. ஆனால், 'வாரியம் அமைக்கலாம்; ஆனால், நிதி ஆதாரம் அரசிடம் இல்லை. தொழில் துறையினர் தான் ஏதாவது செய்யணும்,'னு சூசகமாக சொல்லிட்டாங்களாம். இதைக்கேட்டு, 'ஷாக்' ஆன, தொழில்துறையினர், 'எங்களிடம் பணமெல்லாம் இல்ல. அரசுதான் நிதி ஒதுக்கணும்,' என ஓபனாக சொல்லீட்டாங்களாங்க்கா,''

''ஓ... முட்டுக்கட்டை இப்டி போடறாங்களா...'' என்ற சித்ரா, ''சூரிய கட்சியில் 'மாஜி' மினிஸ்டர்,எம்.எல்.ஏ., மேயர் என மூவரும், தனித்தனி கோஷ்டியா செயல்படுறதால இத 'டீல்' பண்றதுக்காகவே, சென்னையில சிலர் இருக்காங்களாம். கட்சியில ஏகப்பட்ட மாற்றம் செய்யப்போற நெலையில, கோஷ்டிப் பிரச்னை உச்சகட்டத்த எட்டிடுச்சாம்,''

''கட்சியில தன்னோட பதவியைப் பறிக்கிறதுக்கு முக்கிய காரணமே, கார்ப்ரேஷன் மாஜி வி.ஐ.பி. தான் காரணம்னு, தெற்கு தொகுதி பெரியவர் ஏகப்பட்ட 'காண்டுல' இருக்காராம். போன வாரம் கட்சி மீட்டிங்கில கூட, கடுமையாக வசைபாடி நிர்வாகிகள் மத்தியில பேசிட்டாராம். அத அப்டியே சிலர் 'காபி பேஸ்ட்' செய்து 'குமார'வரின் காதுல ஓத, அவர் கொதிச்சு போய் கெடக்கறாராம்,''

''அக்கா, துணை தாசில்தார் அந்தஸ்துல உள்ள ஆபீசர்களை பேரளவுக்கு மூனு பேரை மட்டுமே டிரான்ஸ்பர் செஞ்சாங்களாம். மீதமுள்ள ஆபீசர்கள் அதேயிடத்தில தான், ஒர்க் பண்றாங்க. இதற்கு, கலெக்டர் ஆபீசில 'லாபி' நடத்தும் சில ைஹயர் அபிஷியல்ஸ் தான் காரணமாம். தங்களுக்கு பேவரைட் ஆபீசர்களை, அதேயிடத்துல வச்சு, வேண்டியதை சாதிச்சுக்கராங்களாம். இதனால என்ன பிரச்னைன்னு கேட்டா, அடுத்த ரேங் ஆபீசர்கள் புரமோஷன் வாங்கறது பிரச்னையாயிடும்னு புலம்பித் தள்றாங்களாம்...'', என மித்ரா சொன்னதும், ''சரி வா. கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போலாம்,'' கூறிய சித்ரா வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us