sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

 ஆளுங்கட்சிக்கு வெண்ணெய்; முருகனுக்கு சுண்ணாம்பு! ஐகோர்ட் உத்தரவுக்கு அதிகாரிகள் அளிக்கும் மரியாதை

/

 ஆளுங்கட்சிக்கு வெண்ணெய்; முருகனுக்கு சுண்ணாம்பு! ஐகோர்ட் உத்தரவுக்கு அதிகாரிகள் அளிக்கும் மரியாதை

 ஆளுங்கட்சிக்கு வெண்ணெய்; முருகனுக்கு சுண்ணாம்பு! ஐகோர்ட் உத்தரவுக்கு அதிகாரிகள் அளிக்கும் மரியாதை

 ஆளுங்கட்சிக்கு வெண்ணெய்; முருகனுக்கு சுண்ணாம்பு! ஐகோர்ட் உத்தரவுக்கு அதிகாரிகள் அளிக்கும் மரியாதை


ADDED : ஜன 27, 2026 07:10 AM

Google News

ADDED : ஜன 27, 2026 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அ டடே... வாங்க சித்ராக்கா. எதிர்பார்க்கவே இல்ல...'' ஆச்சர்யத்துடன் வரவேற்றாள் மித்ரா.

சோபாவில் அமர்ந்த சித்ரா, செய்தித்தாளை புரட்ட ஆரம்பித்தாள்.

''அவிநாசி தாலுகா ஆபீஸ் வரைக்கும் போனேன் மித்து. ஒரு சின்ன வேலை. அப்டியே உன்ன பார்த்துட்டு, வீட்டுக்கு போயிடலாம்ன்னு வந்தேன்...'' என்ற சித்ரா, தொடர்ந்தாள்.

''அங்கிருக்கிற சீனிவாசபுரத்துல நல்லாற்றை ஆக்கிரமிச்சு ஆளுங்கட்சியோட ஆபீஸ் இருக்குன்னும், அப்புறப்படுத்தணும்ன்னு சொல்லி, அ.தி.மு.க. நிர்வாகி ஒருத்தரு, ஐகோர்ட்ல 'கேஸ்' போட்டிருந்தாராம். கோர்ட் வழிகாட்டுதல் படி, ரெவின்யூ ஆபீசர்ஸ், இடத்துல ஆய்வு செஞ்சதுல, ஆக்கிரமிப்பு தான்னு நிரூபணமாகிடுச்சாம். ஆக்கிரமிப்பை எடுக்கணும்ன்னு கோர்ட் 'ஆர்டர்' போட்டு, ஒரு வாரமாகியும் எந்தவொரு ஆக்ஷனும் இல்லையாம்...''

''இதேபோல, ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை, ஆக்கிரமிப்புன்னு சொல்லி 'ஆர்டர்' போட்ட அடுத்த நாளே இடிச்சாங்க. ஆனா, கோர்ட் 'ஆர்டர்' போட்டு ஒரு வாரமாகியும், ஆத்துக்குள்ளற இருக்கற ஆக்கிரமிப்பை எடுக்காம இருக்காங்கன்னு சொல்லி, போராட்டம் நடத்த 'ரெடி'யாகிட்டு இருக்காங்களாம். இந்த 'பிரஷர்'ல ரெவின்யூ பெரிய ஆபீசரை டிரான்ஸ்பர் பண்ண முயற்சி நடக்குதாம்...'' என்றாள் சித்ரா.

''இப்படி ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு சுண்ணாம்பு வைக்கலாமா. அதுவும் தவிர இந்த மாதிரி சட்ட சிக்கல்ல மாட்டி, பலிகடா ஆகிறது என்னமோ, ஆபீசர்ங்க தான்.என்னதான் பண்றது...'' அங்கலாய்த்த மித்ரா, ''கருவலுார்ல, 'வாட்ஸ் ஆப் குரூப்'ல, சேவக்கட்டுக்கு 'பெட்' கட்டி விளையாடறாங்கன்னு போன வாரம் பேசினோம்ல. இப்போ அந்த 'குரூப்'பை கலைச்சுட்டு, சேவலை சேல்ஸ் பண்ற மாதிரி பெயர் மாத்தி 'குரூப்' நடத்தறாங்களாம். இதோட பின்னணியில, ஆளுங்கட்சி வி.ஐ.பி.கள் இருக்கறதா ஒரு பேச்சு ஓடுது...'' என்றாள்.

மண்ணுக்குள்ள காசு? ''சிட்டி லிமிட்ல 'நைட்' நேரத்துல, டிராக்டரில் மண் கடத்தறது ஜாஸ்தியாயிடுச்சு. இதுசம்மந்தமா, அ.தி.மு.க.வினர், ஆர்.டி.ஓ.,கிட்ட புகார் பண்ண, அவரோட உத்தரவுல, தாசில்தார் ரெய்டு போயிருக்காரு. மண் கடத்தின ரெண்டு வண்டிகள பறிமுதல் பண்ணி, கொண்டு போயி நிறுத்தியிருக்காங்க. அதுக்குள்ள சவுத் வி.ஐ.பி.ஆபீஸ்ல இருந்து, போன் வந்திருக்கு. அதுக்கப்புறம், அந்த விவகாரம் என்ன ஆச்சுன்னே தெரியலையாம்...''

''அதே மாதிரி, ஊத்துக்குளியில இருக்க சில குவாரிகளோட உரிமக்காலம் முடிஞ்சும், தொடர்ந்து இயங்குதாம். அதை கவனிக்க வேண்டிய ரெவின்யூ ஆபீசர்ங்க கண்டுக்காம இருக்காங்களாம். அவங்களுக்கு மாசா மாசம் கமிஷன் போயிடுதுன்னு, விவசாயிகள் சங்கத்துக்காரங்க பேச ஆரம்பிச்சுட்டாங்க...'' என்றாள் சித்ரா.

மாஜியின் 'அட்ராசிட்டி' ''குன்னத்துார் - பெருந்துறை இடையே ரோடு போடற வேலை நடந்துகிட்டு இருக்கு. 'தோப்பு' வி.ஐ.பி,யோட ஆதரவாளராக இருக்க, ஊத்துக்குளி 'மாஜி' வி.ஐ.பி., ஒருத்தரு, கான்ட்ராக்டர்கிட்ட போயி, 10 பர்சன்ட் கமிஷன் கேட்டிருக்காரு. ''மேல' கொடுத்துட்டு தான் வர்றோம்; இப்படியே கொடுத்துட்டு இருந்தா எப்படி வேல செய்ய முடியும்' ன்னு அவரு கேட்க, ஒரு கட்டத்துல, கான்ட்ராக்டரை, ஆளுங்கட்சி 'மாஜி' அடிச்சிட்டாராம்,''

''இந்த விவகாரம், குன்னத்துார் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போக, கான்ட்ராக்டருக்கு ஆதரவா கூட்டம் கூடிடுச்சாம். 'தோப்பு' வி.ஐ.பி., ஸ்டேஷனுக்கு வந்து கட்டப்பஞ்சாயத்து பேசியிருக்காரு. ஆனா, அடிச்ச ஆளுங்கட்சி 'மாஜி' மேல, எப்.ஐ.ஆர். போட்டே ஆகணும்ன்னு சொல்லி, கான்ட்ராக்டருங்க மேலிடத்துக்கு புகார் அனுப்பிட்டாங்க...'' என்ற மித்ரா தொடர்ந்தாள்.

''இதேபோல, பல்லடத்துல, 'மாஜி' பஞ்சாயத்து தலைவருங்க சிலரு, அதிகாரத்துல இருந்தப்போ, பெரிய லெவல்ல 'கரப்ஷன்' செஞ்ச விவகாரம், தனி ஆபீசருங்க கவனத்துக்கு போக, 'மாஜி'கள், அப்படியே 'ஷாக்' ஆகிட்டாங்களாம். விவகாரம் வெளியே வர்றதுக்குள்ள, அந்த ஆபீசரை மாத்தியே ஆகணும்ன்னு, ஒத்தக்கால்ல நிக்கிறாங்களாம். இந்த விவகாரத்தை வைச்சு ஆளுங்கட்சிக்கு ஏழரையை கூட்டிடணும்ன்னு, எதிர்க்கட்சிக்காரங்க காய் நகர்த்த ஆரம்பிச்சுட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''பஞ்சாயத்துன்னு சொல்லவும் தான் எனக்கொரு மேட்டர் ஞாபகம் வருது சித்ராக்கா. உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தினாங்களல்ல. அதுக்காக, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துல இருந்தும், 50 ஆயிரத்துல இருந்து, ஒரு லட்சம் ரூபா வரை செலவு பண்ணியிருக்காங்க. இந்த 'அமவுன்டை' வாங்கிக் கொடுக்க, பெரிய ஆபீசர்ங்க ஆர்வம் காட்டாம இருக்காங்கன்னு, ஊராட்சி செயலாளருங்க புலம்பறாங்க.

'வசூல்' ஓய்வதில்லை ''பல்லடத்துல ஆளுங்கட்சியோட மகளிர் மாநாட்டை பெரிய லெவல்ல நடத்தி முடிச்சாங்கள்ல. செலவுக்கான செட்டில்மென்ட் எல்லாத்தையும், 'மாஜி' மந்திரியே பார்த்து முடிச்சுட்டாராம். அதுக்கப்புறமும், ஆளுங்கட்சி நிர்வாகிங்க சில பேரு, குவாரி ஓனர்கள் சில பேரை கூப்பிட்டு, 'நிறைய செலவு இருக்கு'ன்னு சொல்லி, லட்சக்கணக்குல வசூல் பண்ணிட்டாங்களாம். இது, மாநாட்டு பொறுப்பை கவனிச்சுக்கிட்ட 'மாஜி'க்கே தெரியாதாம்...'' என்றாள் சித்ரா.

''கரூர்ன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகம் வருது சித்ராக்கா... திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கரூர், ஒட்டன்சத்திரத்துக்கு, 'பிரைவேட்' பஸ் இயக்கறாங்க. ஆனா, அரசாங்க பஸ் இயங்கறது இல்லையாம். 'ஏன்னு கேட்டா...' 'ரூட் பெர்மிட் இல்லை'ன்னு சொல்லி ஒரே வார்த்தையில முடிச்சிடறாங்களாம். அதெப்படி, கவர்ன்மென்ட்டு பஸ்சுக்கு கொடுக்காத பெர்மிட், பிரைவேட் பஸ்சுக்கு கொடுக்க முடியும்? ன்னு மக்கள் கேட்கிறாங்க...'' என்றாள் மித்ரா.

தனி ஆவர்த்தனம்! ''தாராபுரத்துல இருக்க ஒரு ரெவின்யூ ஆபீசர், தன்னோட 'தனி ஆவர்த்தன'த்துக்கு ஒத்து போகாத டிரைவரை ஓரங்கட்ட 'பிளான்' பண்ணியிருக்காரு. ஒரு நாள், ஆபீஸ் டைம்க்கு முன்னாடியே வரச் செல்லியும் அவர் வரலைன்னு சொல்லி, தன்னோட சொந்த வண்டியில போய், ஆபீஸ் வேலையை பார்த்திருக்காரு. இதை ஒரு புகாரா, தன்னோட பெரிய ஆபிசர்ங்க கவனத்துக்கு கொண்டு போக, அந்த டிரைவருக்கு ஒரு மாசம் வேலையுமில்லாம செஞ்சு, 'டிரான்ஸ்பரும்' பண்ணிட்டாங்களாம்...'' என்றாள் மித்ரா.

''புகாரை சரியாக விசாரணை பண்ணா தானே, தப்பு யார் மேலன்னு தெரியும்...'' அங்கலாய்த்த சித்ரா தொடர்ந்தாள்.''காங்கயம் சப்-டிவிஷன்ல, போலீஸ் ஆபீசர்ஸ் மேல, 'ஆன்லைனில்' புகார் பண்றது அதிகமாகியிடுச்சாம். ஆனா, புகாரை விசாரிக்க வேண்டிய சப் - டிவிஷன் ஆபீசருக்கு, தமிழ் தெரியாததால, அங்க இருக்க போலீஸ் ஏட்டுகளே, குற்றச்சாட்டுக்கு ஆளான ஆபீசர்கள்கிட்ட 'கவனிப்பு' வாங்கிட்டு, புகாரை நல்லா விசாரிக்கிறது இல்லையாம். மனுதாரருக்கு தெரியாம 'கம்ப்ளைன்ட்'டை 'குளோஸ்' பண்ணிடறாங்களாம். இந்த 'தில்லாலங்கடி' வேலை, பெரிய ஆபீசர்க்கு தெரிய வர, அந்த புகார்களை மறுபடியும் துாசு தட்ட ஆரம்பிச்சிருக்காங்களாம்...'' என்றாள்.

''டிஜிட்டல் கிராப் சர்வே செஞ்சுட்டு இருக்காங்கள்ல. அக்ரி டிபார்ட்மென்ட்ல, 62 ஏ.ஏ.ஓ.ஸ் இந்த வேலைய பார்க்கிறாங்க. தினமும், 200 பதிவுக்கு மேல என்ட்ரி போடணும்ன்னு சொன்னாலும், 25 பேரோட 'பெர்பாமென்ஸ்' ரொம்ப 'வீக்'கா இருக்குன்னு, ஆபீசர்ஸ் புலம்பறாங்க. தினமும், 6, 10ன்னு, 50 'என்ட்ரி' கூட போடறது இல்லையாம். இவங்க மேல என்ன மாதிரி ஆக்ஷன் எடுக்கிறதுன்னு, யோசிச்சுட்டு இருக்காங்களாம். அவங்கள சரியா வேல வாங்காத, அந்தந்த வட்டாரத்தை கவனிக்கிற ஏ.டி.ஏ.,களுக்கு தான் சிக்கல் வரும் போல...'' என்றாள் மித்ரா.

''தீபாவளி பண்டிகை சமயத்தில, நலத்திட்ட உதவிகள் வழங்கறது சம்மந்தமா கார்ப்ரேஷனோட அனுமதியோட, ஒரு பொதுநல அமைப்பு பேனர் வைச்சாங்களாம்; அதுக்கு கட்டணமும் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த பேனரை அதே நாள்ல, அப்புறப்படுத்திட்டாங்களாம். இதுசம்மந்தமா விளக்கம் கேட்டு, அந்த பொது நல அமைப்பைச் சேர்ந்தவங்க கார்ப்ரேஷன் ஆபீசர்களுக்கு கடிதம் அனுப்ப, இப்பதான் பதில் அனுப்பியிருக்காங்களாம். அக். அனுப்பிய லெட்டருக்கு, ரெண்டு மாசம் கழிச்சா பதில் கடிதம் அனுப்புவாங்கன்னு, புலம்பறாங்க...'' என்ற சித்ரா, ''சரி... மித்து, நான் கிளம்பறேன்'' என, ஸ்கூட்டரை நோக்கி சென்றாள்.






      Dinamalar
      Follow us