sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

மிட்நைட் 'அட்ராசிட்டி'யால் 'அப்செட்'டான 'டாலர் சிட்டி'

/

மிட்நைட் 'அட்ராசிட்டி'யால் 'அப்செட்'டான 'டாலர் சிட்டி'

மிட்நைட் 'அட்ராசிட்டி'யால் 'அப்செட்'டான 'டாலர் சிட்டி'

மிட்நைட் 'அட்ராசிட்டி'யால் 'அப்செட்'டான 'டாலர் சிட்டி'

1


ADDED : செப் 01, 2025 11:20 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:20 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''வா மித்து... இப்பதான் நெனைச்சேன், கரெக்டா வந்துட்ட. உனக்கு ஆயுசு வயசு,'' என வரவேற்றாள் சித்ரா.

சிரித்தபடியே ஹாலில் இருந்து சோபாவில் அமர்ந்த மித்ரா, ''எங்கக்கா... ஊருக்குள்ள எங்க திரும்பினாலும் குப்பை தான். அங்கங்கே குப்பையை எரிச்சும் விட்டுர்றாங்க; வந்து சேர்றதுக்குள்ள போதும், போதும்ன்னு ஆயிடுது,'' என சலித்துக் கொண்டாள் மித்ரா.

''அதான், பாறைக்குழி யை கண்டுபிடிச்சுட்டாங்கள்ல...'' சிரித்தாள் சித்ரா.

''ஆமாங்க்கா... நம்ம கார்ப்பரேஷனுக்கு, பாறைக்குழியை தேடி பிடிச்சு குப்பைக்கொட்றது தான் பெரிய சாதனையா இருக்கு. நிரந்தர தீர்வு பத்தியெல்லாம் பெரிசா கவலைப்படற மாதிரி தெரியல. அதுல பாத்தீங்கன்னா, போன வாரம் வரைக்கும் குப்பை அள்ளாம ஊர் முழுக்க, டன் கணக்குல குவிஞ்சு கிடந்துச்சுல்ல. அடுத்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் திருப்பூர் வராரு''

''ஏற்கனவே, சொத்து உயர்வு பிரச்னை, துாய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு பிரச்னைன்னு, ஏகப்பட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிக்காரங்க கிளப்பிட்டு இருக்கறப்போ, குப்பையை எடுக்கலைன்னா, அதயும் அரசியலா பண்ணுவாங்கன்னு நினைச்சு தான், அவசரஅவசரமா பாறைக்குழியை தேடிப் பிடிச்சு குப்பையை கொட்ட ஆரம்பிச்சுட்டாங்கன்னு பேசிக் கிறாங்க,''

''இதுநாள் வரைக்கும், 'குப்பை பிரச்னைக்கு நிரந்த தீர்வு வேணும்; பாறைக்குழியை தேடி போகக் கூடாது'ன்னு பேசிட்டு இருந்த இலை, தாமரைக்கட்சிக்காரங்க கூட 'சைலன்ட்' ஆகிட்டாங்களாம்'' என, ரகசியம் உடைத்தாள் மித்ரா.

''ஒரு வேளை பழனிசாமி வந்து போன பின்னாடி, மறுபடியும் குரல் கொடுப்பாங்களோ என்னவோ?'' என சிரித்தாள் மித்ரா.

பட்டய கிளப்பும் வசூல்! ''நம்ம மாவட்டத்துல இருக்கற ஒன்பது தாலுகாவிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ., அசிஸ்டென்ட் பணியிடங்கள் காலியா இருக்காம். அதையெல்லம் நிரப்ப போறாங்களாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவிய மித்ரா, ''இதுக்காக, நிறைய பேரு 'அப்ளிகேஷன்' போட்டிருக்காங்களாம். அந்தந்த வட்டார, தாலுகாவை கவனிக்கிற ஆபீசர்களோட 'ரெக்கமண்டேஷன்'ல தான் 'போஸ்டிங்' போடப் போறாங்களாம்,''

''இதுல ஒரு மேட்டர் என்னென்னா. போஸ்டிங் போட, 10 லட்சத்துல இருந்து, 12 லட்சம் வரைக்கும் சில ஆபீசர்ஸ் பேரம் பேசறாங்களாம். போதாக்குறைக்கு, அந்தந்த நகர, ஒன்றிய அளவுல இருக்கற ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்களும் தங்களோட பங்குக்கு, ஒரு 'லிஸ்ட்'டை கையில வச்சுக்கிட்டு, வசூல் வேட்டையில குதிச்சுட்டாங்களாம். குறிப்பா ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், அவிநாசி, உடுமலை தாலுகாவுல தான், வசூல்வேட்டை 'டாப்'ல போகுதாம்...''

''கொஞ்ச நாள் முன்னாடி கலெக்டர் ஆபீஸ்ல நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு வந்த ஒரு இளைஞர், 'வி.ஏ.ஓ., அசிஸ்டென்ட்' போஸ்டிங்க்கு, 12 லட்சம் ரூபா கேட்கிறாங்க. என்னால அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. காசு கொடுக்காம 'போஸ்டிங்' கிடைக்கும்ன்னு நினைச்சு தான் மனு கொடுக்கிறேன்'னு ஓபனா சொல்லியிருக்காரு. அந்த மனுவை வாங்கின ஆபீசர், 'நேரா கலெக்டரை போய் பாருங்க'ன்னு சொல்ல, அந்த 'கேப்'ல, எங்கிருந்தோ ஒரு 'போன்கால்' வந்தது. உடனே, அந்தபர் கலெக்டரை பார்க்காம வந்த வழியே கிளம்பிட்டாராம்...'' என்றாள் சித்ரா.

''அப்படியா... அவருக்கு போன் பண்ணினவரு யாராக இருக்கும்'' என, தலையை சொறிந்த மித்ரா, ''கலெக்டர் தலையிட்டு, இன்டர்வியூ செஞ்சு 'போஸ்டிங்' போட்டா தான் சரியா இருக்கும்,'' என்றாள் சித்ரா.

கண்ணுல காச காட்டப்பா! ''வெண்ணெய்க்கு பெயர் போன ஊர்ல இருக்கற தாலுகா ஆபீசில, முக்கிய பொறுப்புல இருக்கற ஒரு லேடி ஆபீசர், எந்தவொரு சர்டிபிகேட்டுக்கு 'சைன்' பண்றதுனாலும், காந்தி படம் போட்ட நோட்டை திணிக்கணுமாம். இல்லாட்டி, அப்ளிகேஷனை பென்டிங்கில போட்றுவாங்களாம். இதுக்காக, ஒருத்தரை வேலைக்கு வச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோ,''

''அவரு என்னடான்னா. ஆபீசர் தோரணையோட தனி கார்ல வலம் வர்றாராம்,'' என்ற சித்ரா, ''அதுமட்டுமில்லாம, அந்த லேடி ஆபீசர் சீட்டுக்கு முன்னாடி, 'சேர்' போடக்கூடாதாம். அவரை பார்க்க வர்றவங்களை நிக்க வச்சு பேசறது தான், அவரோடு 'ஸ்டைல்'ன்னும் சொல்றாங்க. ஆபீசரை பத்தி, கலெக்டர்கிட்ட ஒருத்தர் 'பெட்டிஷன்' கொடுக்க, விவகாரம் பரபரப்பாயி டுச்சு...'' என்றாள் சித்ரா.

'அவசரமாக' ஒரு தீர்மானம்! ''பல்லடம் யூனியனில் புது ஆபீசர், 'ஜாய்ன்' பண்ண அன்னைக்கே, பஞ்சாயத்து செகரட்ரியை மாத்தினது பெரிய 'இஷ்யூ' ஆச்சுல்ல; ஆளுங்கட்சிக் காரங்க 'பிரஷர்' தான் இதுக்கு காரணமாம். இந்த 'பஞ்சாயத்'தெல்லாம் கலெக்டருக்கே தெரியாதாம். இதனாலதான், டிரான்ஸ்பர் ஆர்டரையே கேன்சல் பண்ணிட் டாங்க...'' என்றாள் மித்ரா.

''ஆளுங்கட்சின்னு, நீ சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது...'' என்ற சித்ரா, ''பூண்டி முனிசிபாலிட்டில, 27 வார்டு இருக்கு. பொது நிதியில இருந்து, 2.80 கோடி ரூபாய்க்கு வளர்ச்சிப்பணி செய்ய, சென்னை போய் ஆர்டர் வாங்கிட்டு வந்திருக்காரு, சேர்மன். எல்லா வார்டுக்கும் சமமா தொகையை பங்கிட்டு, 'டெண்டர்' விட்டு, மீட்டிங்ல அஜெண்டா வச்சிட்டாரு...''

''இதுல, கடுப்பான ஆளுங்கட்சி கவுன்சிலர்ஸ், இந்த மேட்டரை, மினிஸ்டர், வட்டம், மாவட்டம்னு பலரையும் சந்திச்சு, 'நகராட்சி சேர்மன், மத்த கட்சி கவுன்சிலர்ங்களுக்கு கூடுதலா நிதி ஒதுக்குறாரு'ன்னு ஒன்னுக்கு ரெண்டா கொளுத்தி போட்டுட்டாங்க. திடீர்ன்னு பார்த்தா, கூட்டம் நடக்கிறதுக்கு முன்னாடி நாள் 'நைட்', அவசர தீர்மானம்ன்னு சொல்லி கவுன்சிலர்களுக்கு ஒரு 'அஜென்டா' வருதாம். அதுல பார்த்தா, ஆளுங்கட்சி கவுன்சிலருங்க வார்டுக்கு மட்டும், கூடுதலா நிதி ஒதுக்கி, தீர்மானம் இருக்காம். இதனால, கூட்டணி கட்சிக்காரங்களே கொதிச்சு போய், போராட்டம் பண்ணி, கடைசியில சரி சமமாக பிரிச்சு கொடுத்திட்டாங்க...'' என்றாள் சித்ரா.

முகாம் பணம் 'அபேஸ்' ''நானும் ஒரு ஆளுங்கட்சி மேட்டர் சொல்றேங்க்கா...'' என்ற மித்ரா, தொடர்ந்தாள். ''கார்ப்பரேஷனுக்கு பக்கத்துல இருக்கற மங்கலத்துல, ஆளுங்கட்சிக்குள்ள மினிஸ்டர் குரூப், 'மாவட்டம்' குரூப்ன்னு, ரெண்டு கோஷ்டி இருக்குது. உங்களுடன் ஸ்டாலின் முகாம் சம்மந்தமா, மக்கள்கிட்ட இருந்து 'அப்ளிகேஷன்' வாங்குறதுல, ரெண்டு குரூப்புக்குள்ள போட்டா போட்டி. ரெண்டு அணியும், ஒரு நாள் விட்டு ஒரு நாள்ன்னு, ரெண்டு முகாம் நடத்தி, மனு வாங்கறாங்களாம். அதுவும், முகாம் பணியில ஈடுபடறவங்களுக்கு 'கமகம' பிரியாணியெல்லாம் செஞ்சு போட்டு அசத்திட்டாங்க...'' என்றவள், டீபாய் மீதிருந்த தண்ணீரை குடித்து விட்டு, தொடர்ந்தாள்.

''உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துற செலவை ஈடுகட்ட, 50 ஆயிரம் வரை கவர்மென்ட் நிதி ஒதுக்குதாம். இதுல, ஊராட்சி பகுதியில, நிர்வாக பொறுப்பை கவனிக்கிற அதிகாரம் ஆபீசர் கையில இருக்கிறதால, நிறைய ஊராட்சிகள்ல, முகாமுக்கு செலவு பண்ற அமவுன்ட்டை, வேற ஏதாவது ஒரு பில்லில் 'அட்ஜஸ்ட்' பண்ணி, எடுத்துக்கோங்க'ன்னு ஊராட்சி செயலர்ங்க தலையில கட்டிட்டு, கவர்மென்ட் ஒதுக்குற தொகையை அப்படியே முழுங்கிடறாங்களாம். என்னடா... இது வம்பா போச்சுன்னு, செயலர்கள் புலம்பல் டிஸ்ட்ரிக்ட் புல்லா கேட்குதாங்க்கா,'' என்றாள்.

''இதெல்லாம் விஞ்ஞான ஊழல் கணக்கா, யாராலும் அவ்வளவு சீக்கீரம் கண்டுபிடிக்க முடியாதுடி மித்து...'' என்ற சித்ரா, ''கலெக்டர் ஆபீசில், இலவச ஸ்கூட்டர் கொடுத்தப்போ, மாற்றுத்திறனாளிங்க சிலரை, 'ேஷாரூம்' வந்து ஸ்கூட்டர் வாங்கிட்டுக் போங்கன்னு சொல்லியிருக்காங்க. அங்க போனா, வண்டியை மட்டும் கொடுத்துட்டு, ெஹல்மெட் கொடுக்கலையாம். கேட்டதற்கு, வண்டியாச்சும் கொடுத்தாங்களேன்னு சொல்லி ஆறுதல் பட்டுக்கிறாங்க,'' என்றாள்.

இதெல்லாம் நல்லால்ல... ''அக்கா, காங்கயத்துல, 'வாக்கிங்' போனப்போ, கீழே கிடந்ததா சொல்லி, ஒரு செயினை எடுத்து வந்து, எஸ்.பி.,கிட்ட கொடுத்து பாராட்டு வாங்கினார்ல, ஒரு போலீஸ்காரரு. ஆனா, அவரு ஒரு ஓட்டல்ல குளிச்சுட்டு வர்றப்ப, அங்கு கிடந்த செயினை எடுத்து கொடுத்து தான் நல்ல பேரு வாங்கிட்டார்ன்னு, சக போலீஸ்காரங்களே சொல்றாங்களாம்,'' என்ற மித்ரா, ''அந்த ஸ்டேஷன்ல வேல செய்ற, முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் பேரை வச்சிருக்கற ஒரு குட்டி ஆபீசர், போலீஸ்காரங்களை 'நாயே, பேயே'ன்னு சகட்டு மேனிக்கு திட்றாராம். அப்பப்போ, அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளையும் பேசறாராம்,'' என்றாள்.

''இது விஷயத்துல, பெரிய ஆபீசர் 'ஆக் ஷன்' எடுத்தாத்தான், மத்தவங்க திருந்துவாங்க. இல்லைன்னா 'கபில்தேவ்' பவுலிங் போட்டும், விக்கெட் விழாத கதைதான்...'' என்ற சித்ரா, ''மித்து, அதே ஊரை சேர்ந்த ஒருத்தர், கலெக்டர் கேம்ப் ஆபீசில, டிரைவரா இருக்காரு. அடிஷனால, 'லேண்ட் புரோக்கர்' வேலையும் பார்க்கிறார். போன வாரம், பெரிய நிலம் கிரயம் முடிஞ்சதுல, 2 சதவீதம் கமிஷன் கேட்டாரு. ஆனா, வித்தவரு கம்மியா பணம் தர்றதா சொல்ல, ரெண்டு பேருக்கும் 'பஞ்சாயத்து' கூடி, ஸ்டேஷன் வரைக்கும் போயிடுச்சு,''

''இத தெரிஞ்சுகிட்ட டிவி ரிப்போர்ட்டர் ஒருத்தர், 'ஸ்டேஷன்ல வச்சு எப்படி பஞ்சாயத்து பேசலாம்,'ன்னு கேட்க, சுதாரித்த ஆபீசர், 'உங்க பஞ்சாயத்தை வெளியே வச்சுகோங்க,'ன்னு அனுப்பிட்டாராம். அப்புறமா டிவி ரிப்போர்ட்டரை வச்சு, 'பஞ்சாயத்து' பேசி முடிச்சாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''மித்து, நம்ம சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்கு பேக்ஸைடு, காமாட்சி அம்மன் கோவில் வீதியில, 'மிட் நைட்'டுல, லேடீஸ், ஜென்ட்ஸ் கொண்ட ஒரு குரூப் 'சரக்கடிச்சுட்டு' பிளாட்பாரத்துல துாங்கிட்டிருக்கிறவங்கிட்ட தப்பா நடக்க 'ட்ரை' பண்றது, காசு கேட்டு மிரட்றது, போன் திருடுறதுன்னு, ஒரே 'அட்ராசிட்டி' பண்ணிட்டு இருக்குது. 'இவங்களோட அளப்பறையை ஒருத்தரு 'வீடியோ' எடுத்து வெளியிட, 'போலீஸ்காரங்களை கைக்குள்ள வச்சுட்டு இந்த மாதிரி அட்டகாசம் பண்றீங்களான்னு' ஒரு பப்ளிக் பேசறது தெளிவா ரெக்கார்டு ஆயிருக்கு...''

''சிட்டி முழுக்க பரவிய இந்த வீடியோவ பார்த்த கமிஷனர், 'அதபத்தி என்கொயரி பண்ணி, அந்த போலீஸ் யாருன்னு கண்டுபிடிக்க சொல்லிட்டாராம்,'' என்றாள் மித்ரா.

''அப்ப அடுத்த வாரம் கச்சேரி உண்டுன்னு சொல்லுடி,'' என சிரித்த சித்ராவிடம், '' சரிங்க்கா. மழை வர்ற மாதிரி இருக்கு,'' என்ற மித்ரா புறப்பட்டாள்.






      Dinamalar
      Follow us