sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ தேர்தல் பார்வையாளர்கள் 'இன்பச் சுற்றுலா'

 தேர்தல் பார்வையாளர்கள் 'இன்பச் சுற்றுலா'

 தேர்தல் பார்வையாளர்கள் 'இன்பச் சுற்றுலா'


ADDED : ஏப் 14, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 04:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''நுாறு டிகிரியைத் தாண்டிருச்சுக்கா வெயில்...''

வியர்வை சொட்ட சொட்ட சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

''ஆமா மித்து... ஆனா, அதைவிட பிரசாரம் அனல் கக்குது...

அண்ணாமலை 'டாப் கீர்' ''பா.ஜ., அண்ணாமலை பிரசாரம் எப்படி இருந்துச்சு...''

''வழக்கம்போல 'டாப் கீர்'க்கா. அவிநாசில பா.ஜ., போட்டி போடும்ன்னு, முதன்முறையா போன தேர்தலப்பவே சொன்னவரு அண்ணாமலை.

''அப்ப, அ.தி.மு.க., கோட்டையா இருக்குற ஊர்ல எப்படி பா.ஜ., நுழையும்னு கேள்வி கூட எழுந்துச்சு... போன தடவ, முருகன் எவ்ளோ முயற்சி செஞ்சும், தாராபுரம்தான் கிடைச்சுது...

''இந்த முறை கரெக்டான காய் நகர்த்தலோட அவிநாசி, பா.ஜ.,வுக்குச் சாத்தியமாயிடுச்சு... முருகன் சாதிச்சுட்டாரு.

''அண்ணாமலை தன்னோட பேச்சுல மத்திய அரசு திட்டங்கள், புள்ளிவிவரங்களோட ஆளும்கட்சியையும் போட்டுத் தாக்குனாருக்கா...''

''ஆனா மித்து... பிரசாரத்துல பார்க்க முடிஞ்சாலும், அண்ணாமலை களத்துல போட்டி போடலையேங்கற வருத்தம், மாவட்டத்துல பா.ஜ., காரங்க முகத்துல இழையோடத்தான் செய்யுது''

''அரசியல்ல இதெல்லாம் சகஜம்க்கா... அவிநாசில களம் இறங்குனவுடனே முருகன் சுறுசுறுப்பாயிட்டாரு...

''மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலும் தொழில்துறையினர் சந்திப்பு, பிரஸ் மீட், பிரசாரம்ன்னு கலக்கீட்டாரு...

''எல்லா தரப்பையும் சந்திச்சு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கிற வேட்பாளர் முருகன், அவிநாசி - அத்திக்கடவு திட்டம் 2.0 உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அள்ளிவீசுறாரு...''

''மித்து... போன தடவ, அவிநாசி தொகுதில தி.மு.க.,வோட பிரசாரம் அவ்ளோ களைகட்டல... இந்தத் தடவை வரிஞ்சு கட்றாங்க போலயே''

''ஆமாக்கா... தி.மு.க., வேட்பாளர் கோகிலாமணி, ஒரு டாக்டர். வாக்காளர்களோட நாடித்துடிப்பை தெரிஞ்சுக்கிட்டு, இயல்பா பேசுறாருன்னு சொல்றாங்க...

''முருகன் நிக்கறதுனால, 'டப் பைட்' கொடுக்கணும்ங்கறது மேலிடத்து உத்தரவாம். அதேநேரம், 'விசில்'காரங்களும், 'விவசாயி'களும் அவிநாசி கிராமங்களுக்குள்ள அமைதியா ஓட்டு வேட்டையாடுறாங்களாம்.''

பெர்சனல் அட்டாக் ''மித்து... திருப்பூர் தெற்குல போட்டி காரசாரமாகுதாம்... தி.மு.க., வேட்பாளர் மாஜி மேயர் தினேஷ்குமாரும் பா.ஜ., வேட்பாளர் தங்கராஜூம் பரஸ்பரம் பிரசாரத்துல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாங்களாம்.

''இருதரப்பு தொண்டர்கள் தரப்புல 'பெர்சனல் அட்டாக்' அளவுக்குப் போயிருதாம். அதை ரெண்டு வேட்பாளர் தரப்பும் தவிர்த்தா, போட்டி சுவாரசியமா இருக்கும்.

''அப்புறம் தெற்குல அ.தி.மு.க., காரங்க பழைய வேகத்துல செயல்படணும்ன்னு பா.ஜ., காரங்க எதிர்பார்க்கிறாங்களாம்''

''நீ சொல்றது கரெக்ட் மித்து... தாராபுரத்துலயும், காங்கயத்துலயும் இந்த முறை தி.மு.க. - அ.தி.மு.க., ரெண்டு வேட்பாளர்களுக்குமே 50:50 சான்ஸ்ன்னு சொல்லிக்கிறாங்களே''

''ஆமாக்கா... ரெண்டுமே போன தடவை தி.மு.க., கைப்பற்றுன தொகுதிகள். காங்கயத்துல மினிஸ்டர் சாமிநாதன் மீண்டும் வெற்றிபெற்றாகணும்ங்கறது தி.மு.க.,வுக்கு கவுரவப்பிரச்னை...

''சீட் கிடைக்காததுனால ஆதங்கத்துல இருக்கிற மற்றொரு தரப்பு சாமிநாதனுக்கு எந்தளவு ஆதரவு கொடுக்கும்ங்கற திக்... திக்... தி.மு.க., தரப்புல இருக்கு...

''ஆனா, இதை அ.தி.மு.க. சாதகமாக்குமாங்கற ஒரு கேள்வியும் எழுது... ஏன்னா அங்கேயும் கோலோச்சுற கோஷ்டிப்பூசல்தான்.

பிளஸா... மைனஸா! ''தாராபுரத்தைப் பொறுத்தவரைக்கும், சீட் கிடைக்கலைன்னாலும் மினிஸ்டர் கயல்விழி, தி.மு.க., வேட்பாளர் இந்திராணியோட பிரசாரத்துல களமாடறாங்க... அது பிளஸா, மைனஸாங்கறது ரிசல்ட் வர்றப்பத்தான் தெரியும்.

''போன தடவை இந்தத் தொகுதில பா.ஜ., முருகன் நின்னாரு. பிரசாரத்துல துாள் கிளப்பினாரு... அதுக்கு சமமா, இந்த முறை அ.தி.மு.க., வேட்பாளர் சத்தியபாமாவோட பிரசாரமும் இருந்தாதான், தி.மு.க.,வை எதிர்கொள்ள முடியும்ன்னு 'டாக்' ஓடுது''

''மித்து... திருப்பூர் வடக்குல அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தனுக்கு இணையா இன்னும் 'தோழர்' ரவி பிரசாரத்தைத் தீவிரப்படுத்தலைங்கறாங்க...

''த.வெ.க., வேட்பாளரா மாஜி எம்.பி., சத்தியபாமா நிக்குறதனால, ஓட்டு பிரிஞ்சா, இரட்டை இலையோட கதிர் அரிவாளும் 'சான்ஸ்' எடுக்கலாம்.

''விசில் காரங்களும், இவங்களுக்குச் சமமா முட்டி மோதுனா, களம் இன்னும் சுவாரசியமா இருக்கும்ன்றாங்க...

''அக்கா... பல்லடத்துல போன தடவையக் காட்டிலும் இந்தத் தடவை தி.மு.க., தரப்புல பிரசாரம் தீவிரமா இருக்குதாம்.

''அ.தி.மு.க., கோட்டையை அசைச்சுப் பார்க்கிற எண்ணத்தோட வேட்பாளரா களமிறங்கியிருக்கிற எம்.எல்.ஏ., செல்வராஜ் 'துாள்' கிளப்பறாராம்.

''ஆனா, அனுபவம் வாய்ந்த அ.தி.மு.க., வேட்பாளர் பரமசிவமும் சும்மா இருப்பாரா?

''ரெண்டு தரப்போட மோதலும் அனல் கக்கப்போறது உறுதிங்கறாங்க...''

''மித்து... மாவட்டத்துல த.வெ.க. வேட்பாளர்கள் பிரசாரம் இன்னும் 'டாப் கீர்'ல போக மாட்டேங்குதாம்.

''ஆனா, ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் சமமா செலவு பண்ண முடியாததால, இந்தத் தொய்வு இருக்குறதா சொல்றாங்க...

''இருந்தாலும், வேட்பாளர்களை விட வாக்காளர்கள் அதில முன்னுரிமை கொடுக்கறது விஜய்க்கு மட்டும்தானே...''

''அக்கா... இதைப் பத்தியெல்லாம் அலட்டிக்காம இருக்குறவங்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்தான்.

''அவங்க உண்டு; அவங்கப் பிரசாரம் உண்டுன்னு களத்துல தனித்துவமா தெரியறாங்க...''

இதுதானா செயல்பாடு? ''சரி மித்து... மாவட்டத்துல எட்டு தொகுதிகள்ல ரெண்டு தொகுதிக்கு ஒருத்தர்னு நாலு பொது பார்வையாளர்கள்; நாலு செலவினப் பார்வையாளர்கள், ஒரு காவல் பார்வையாளர்னு நியமிச்சாங்களே...

''எங்க அவங்களோட சத்தத்தையே காணோம்?''

''அக்கா... கொளுத்துற வெயிலுக்கு இதமா, இந்தப் பார்வையாளர்கள் ஊட்டி, கொடைக்கானல்ன்னு, குடும்பத்தோட இன்பச் சுற்றுலா போயிட்டாங்களாம்.

''வெள்ளிக்கிழமை நைட் சைரன் வாகனங்களை நிறுத்தீட்டு, வேறு வாகனத்துல கிளம்பி ஜாலியா அனுபவிச்சுட்டு இப்பத்தான் திரும்பிவந்திருக்காங்க.

''இவங்க அசால்டா இருந்தா 'கவனிப்பு' எல்லாம் கச்சிதமா முடிஞ்சிருதுன்னு ஒரு பேச்சு இருக்குக்கா.''

''தேர்தல் ஆணையம் பாராமுகமா இருக்குது... ஆனா, ஆணையமே இந்த மாதிரி ஆபீசர்ைஸ நம்பித்தானே இயங்குது...''

''மித்து... ஜில்லுன்னு ஒரு முலாம் பழ ஜூஸ் குடிப்போமா''

ஜூஸ் தயாரிக்கத் தயாரானாள் சித்ரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us