sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

கூட்டம் முடியற வரைக்கும் இருந்தா 'சேர்' சொந்தம்; ஆளுங்கட்சியுடன் தோழர்களுக்கு 'பந்தம்'

/

கூட்டம் முடியற வரைக்கும் இருந்தா 'சேர்' சொந்தம்; ஆளுங்கட்சியுடன் தோழர்களுக்கு 'பந்தம்'

கூட்டம் முடியற வரைக்கும் இருந்தா 'சேர்' சொந்தம்; ஆளுங்கட்சியுடன் தோழர்களுக்கு 'பந்தம்'

கூட்டம் முடியற வரைக்கும் இருந்தா 'சேர்' சொந்தம்; ஆளுங்கட்சியுடன் தோழர்களுக்கு 'பந்தம்'

2


ADDED : நவ 19, 2024 06:36 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:36 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடிக்கடி மழை பெய்வதால், வெளியே எங்கும் செல்ல முடியாத சூழலில், மித்ராவை போனில் அழைத்தாள் சித்ரா.

குறுஞ்செய்தி


''ஹலோ, மித்து எப்படியிருக்க. எந்த தடவையும் இல்லாத வகையில, இந்த முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்ல அரசியல் கட்சிகளோட ஈடுபாடு அதிகமாகியிருக்காம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா... நல்லாருக்கேன். ரெண்டு வருஷத்துல சட்டமன்ற தேர்தல் வரப்போகுதல்ல; அதுக்கு இப்பவே, அரசியல் கட்சிங்க 'ரெடி'யாயிட்டாங்க. ஒவ்வொரு கட்சியும், பூத் கமிட்டியை பலப்படுத்துற வேலையில தீவிரமா இருக்காங்க. குறிப்பா, ஏ.டி.எம்.கே.,காரங்க ரொம்ப ஸ்பீடா வேலை செய்றாங்க. வர்ற 'எலக்ஷன்'ல ஜெயிச்சே ஆகணும்ங்கறது, கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை கொடுத்திருக்கற, 'அசைன்மென்ட்'டாம். 'வாக்காளர் பட்டியல்ல யாரு, யாரை புதுசா சேர்த்திருக்கோம். அட்ரஸ் மாற்றம் பண்ணியிருக்கோம்ங்கற தகவலை, தலைமைக்கு மொபைல் போனில் மெசேஜ் 'அப்டேட்' செய்யணுமாம்,'' என்றாள் மித்ரா.

''வர்ற தேர்தல்ல, சொத்து வரி உயர்வு விவகாரத்தை தான், ஏ.டி.எம்.கே., கையில எடுக்கப் போறாங்க. கார்ப்ரேஷன்ல, 150 மடங்கு வரைக்கும் சொத்து வரி உயர்த்திட்டாங்க. பூண்டி நகராட்சியில நிர்ணயம் பண்ணியிருக்கற குடிநீர் கட்டணம், திருப்பூர் கார்ப்ேரஷனை விட அதிகமாம். இந்த வரி உயர்வும், கட்டண உயர்வும் தான், எங்களோட வெற்றியை தீர்மானிக்க போகுதுன்னு ஏ.டி.எம்.கே., இப்பவே மார்தட்றாங்களாம்...'' என்றாள் சித்ரா.

மவுனமே பதிலாக...


''இதுல என்ன ஒரு கொடுமைன்னா, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வுக்கு எதிரா, ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கற தோழர்கள் தான், முதல்ல எதிர்ப்புக்குரல் கொடுத்து, ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. வர்ற தேர்தல்ல, அவங்க நிலைப்பாடு எப்படின்னு தெரியலையே,'' என சிரித்தாள் மித்ரா.

''இத்தனை நடந்தும் கூட, கார்ப்ரேஷன் தரப்புல 'கப்சிப்' தான். ஒரு வேளை அணி மாறிடுவாங்கன்னு சொல்ல வர்றீயா...'' பதிலுக்கு சிரித்தாள் சித்ரா.

''அக்கா, அப்புறம், சிக்கண்ணா காலேஜ் சுத்தி நிறைய கடைகளில் பான்பராக், அப்புறம் புகையிலை பொருட்கள் தடையில்லாம விக்கிறாங்கன்னு மக்களே சொல்றாங்க. சிட்டி போலீஸ் அதிகாரி, அந்த ஏரியாவை கொஞ்சம் கவனிச்சா பரவாயில்ல,'' என்றாள் மித்ரா.

பதிலே இல்லை...


''மித்து, மாவட்ட கலைத்திருவிழா நடந்ததுதில்ல. அதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்யவில்லை. அவசர கதியில் தான் பதிவு நடந்தது. காலை, 7:00 மணிக்கு வந்த ஒரு அம்மாபாளையம் ஸ்கூல் ஸ்டூடண்ஸூக்கு, 11:00 மணிக்கு தான் பெயர் பதிவு நடந்துள்ளது. அதிலும், பள்ளியின் பெயரை சுள்ளிபாளையம் என மாற்றி எழுதி விட்டனர்,''

''இது தெரிந்து, ஆசிரியர்கள் கேட்டதற்கு, 'உங்க ஸ்கூல் பேர் லிஸ்டிலயே இல்ல,'ன்னு சொல்லவும், அம்மாபாளையம் ஸ்கூல் டீச்சர்ஸ் 'ஷாக்' ஆயிட்டாங்களாம். அப்புறமா, பள்ளி மேலாண்மை குழு ஒருத்தர் தீவிரமா முயற்சி செஞ்சு, நடனமாட வச்சாங்களாம். இதுபத்தி உயரதிகாரிகிட்ட சொல்லலாம்னா, அவரோட போன் 'நாட் ரீச்சபிள்'னு வந்துதாம்.,''

''இது தெரிஞ்சுகிட்ட பேரண்ட்ஸ் சிலர், காலையில, அஞ்சு மணிக்கு எழுந்திருச்சு.. மேக்கப் எல்லாம் போட்டு இங்க வந்திட்டோம். இப்படி ஸ்கூல் பேர மாத்தி எழுதி ஏன்தான் இப்படி குழப்பம் பண்றாங்கன்னு தெரியலே...' என புலம்பினராம்,'' சீறினாள் சித்ரா.

''இது எல்லாம் ரொம்ப ஓவருங்க்கா...'' என்றாள் மித்ரா.

காத்திருக்கும் தண்டனை


''வாலிபர் கிட்ட பணத்தை லவட்டிய போலீஸ்காரர்கள் தொடர்பான என்கொயரி சூடுபிடிச்சிருச்சு '' என்றாள் சித்ரா.

''கடந்த வாரம் பஸ் ஸ்டாண்டுக்குள்ள ஒரு கடையில ராத்திரி 'பர்த்டே' கொண்டாடினாங்க. அதில், 'டிரிங்க்ஸ்' பண்ணிட்டு, பாட்டிலை வெளியே போட போனப்போது, அவுட் ஸ்டேஷனில் இருந்த போலீஸ்காரர் வாலிபர்களை அழைத்து வந்து விசாரணைக்கு அமர வைத்தார். 'பீட்' போலீசும், சம்பந்தப்பட்டவங்கிட்ட சில ஆயிரம் ரூபாயை 'டிமாண்ட்' செஞ்சு வாங்கிட்டாங்க. இந்த மேட்டர் கமிஷனர் காதுக்கு போக, விசாரிக்கிறாங்களாம். கண்டிப்பா, நடவடிக்கை பாய போவது உறுதியாம்...'' என்றாள் சித்ரா.

''கரெக்ட்டுங்க்கா. ஸ்ட்ரிட்டான ஆபீசர் இருந்தாதான் நல்லது. சிட்டியில 18 வயசுக்கு கம்மியா இருக்கறவங்க டூவீலர் ஓட்டறது அதிகமாயிடுச்சு. முக்கியமா, ஸ்கூல் பசங்க டூவீலர்ல தான் ஸ்கூல்க்கு, அதுவும் ெஹல்மெட் போடாம போறாங்க. அந்த பசங்களுக்கு அட்வைஸ் பண்ண அதிகாரி தான் நடவடிக்கை எடுக்கோணும்னு, பப்ளிக் பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

சும்மா அதிருதில்ல...


''பெரிய அதிகாரி லீவில் இருந்தாலும், சிட்டி மேல ஒரு கண் வச்சிட்டேதான் இருக்காங்களாம். இதனால தேவையில்லாம, எதையும் செஞ்சு மாட்டிக்க வேணாம்னு, சிட்டி லிமிட்டிலுள்ள போலீஸ்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா 'கப்சிப்'ன்னு இருக்காங்க,'' கூடுதல் தகவல் சொன்னாள் மித்ரா.

''வசூலில் எப்போதும் கில்லியாக இருக்கும் ஒரு ஆபீசர், ஆளும்கட்சிகாரர்கிட்டயே கைய நீட்டிருக்காரு,'' அடுத்த தகவலுக்கு தாவினாள் சித்ரா.

''என்ன மேட்டருக்கா?''

''ஆளுங்கட்சி கவுன்சிலரின் உறவினர் ஒருவர், தன்னோட இடத்தை அளவீடு செய்து, சப்-டிவிஷன் செய்ய, வடக்கால உள்ள ஆபீசரை அணுகியிருக்காரு. அவரு, வேலையை முடிக்க, மூனு லட்சம் கேட்டிருக்காரு. கடைசியா, 60 ஆயிரம் வாங்கிட்டு, வேலய முடிச்சு கொடுத்துட்டார். அதற்கான ஆவணத்தை கேட்டால், இன்னும் ஒரு, 50 ஆயிரத்தை வேணும்னு கன்டிஷன் போட்டிருக்கார்,''

''இது விஷயம் தெரிஞ்சு, ஆளும்கட்சி கவுன்சிலர் அதிர்ச்சியாகி, உயரதிகாரி கிட்ட இந்த விஷயத்தை கொண்டு போயிருக்காரு. இதனால, சம்பந்தப்பட்ட ஆபீசரின் உதவியாளரை வேறு இடத்துக்கு மாத்திட்டாங்க. ஆனா, முக்கியமான நபரை விட்டுட்டாங்களாம். ஆளும்கட்சி காரங்க கிட்ட இவ்வளவு தைரியமாக வாங்கற அதிகாரி, மக்கள்கிட்ட எப்படி வசூல் பண்ணுவாங்கன்னு கஷ்டமாத் தான் இருக்கு,'' என்றாள் மித்ரா.

''ஒரு சிலர் செய்ற தவறால, ஒட்டுமொத்தமா எல்லாருக்கும் கெட்ட பேர் தான்,'' என்றாள் சித்ரா,

என்ன ஒரு ஐடியா


''அக்கா, கூட்டத்தை கூட்ட, கட்சிக்காரங்க ரூம் போட்டு யோசிப்பாங்க போல. ரெண்டு நாள் முன்னாடி, ஏ.டி.எம்.கே., சார்பில பெருமாநல்லுாரில் பொதுகூட்டம் நடத்தினாங்க. இதுல, மக்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு புதுசா ஒரு மேட்டரை சொல்லி, அது சக்ஸஸ் ஆயிடுச்சாம்,''

''அது என்ன மேட்டர்டி....''

''கூட்டத்துக்கு வர்றவங்க, கூட்டம் முடியும் வரை, சேரில் அமர்ந்திருந்தால், அந்த சேரை அவங்களே எடுத்து செல்லலாம் என்று சொன்னதால், கூட்டம் அள்ளிடுச்சாம். கூட்டம் முடிஞ்சதும், ஒவ்வொருத்தாரும், ரெண்டு, மூனு சேர் எடுத்துட்டு போயிட்டாங்க. ஒரு சிலர் எல்லாம், குடும்பமாக வந்து உட்கார்ந்து, ஐந்தாறு சேர்களை துாக்கிட்டு போனாங்க. நின்னுட்டு இருந்தவங்க மக்கள் தான், கடைசி வரை சேர் கிடைக்கும்னு நெனச்சு ஏமாந்து விட்டனர்,'' விளக்கினாள் மித்ரா.

''இந்த மாதிரி ஐடியாக்களுக்கு ஸூம் மீட்டிங் போட்டு யோசிப்பாங்களோ,'' சொன்னாள் சித்ரா.

நான் ரொம்ப பிஸி


''அவிநாசியில காசிகவுண்டம்புதுார், டீச்சர்ஸ் காலனி மற்றும் ராயன் கோவில் காலனி பகுதியில போன வாரத்துல ஒரே நைட்டில் நாலு வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் திருட டிரை பண்ணிருக்காங்க. ஒரு வீட்டில் எதுவும் கிடைக்காததால, கதவையும் ஜன்னலை சேதப்படுத்திட்டாங்க. தகவல் தெரிஞ்சு போன போலீஸ்காரங்க, அந்த ஏரியாவுல, கஞ்சா குடிச்சுட்டு சுத்திட்டு இருந்தவங்களை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்களாம். திருட்டு குறித்து கம்ப்ளைன்ட் கொடுக்கப் போனா, 'இதுக்கெல்லாம் கம்ப்ளைன்ட் குடுப்பீங்களான்னு' கேள்வி கேட்டு திருப்பி அனுப்புகிறாராம். அதில்லாம, யாராவது போனில் கேட்டாலும் ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்களாம்,'' பதில் சொன்னாள் மித்ரா.

''பிரச்னைன்னு போலீசிடம் போனா, அவங்க இப்படி பண்ணா நல்லவாயிருக்கு மித்து...''

தொடர்பு எல்லைக்கு அப்பால்..


''அவிநாசி ஜி.எச்.,-ல் வரும் நோயாளிகளில் ஆண், பெண் நோயாளிகளுக்கு ஒரே அறையில் தான் ஊசி போடுகின்றனர். இதனால், பெண் நோயாளிகளுக்கு பெரும் தர்ம சங்கடம் ஏற்படுகிறது. அது மட்டுமில்லை, டியூட்டியில் உள்ள டாக்டர் பேர், டியூட்டி டைம், புகார்கள் குறித்து, தெரிவிக்க வேண்டிய தொடர்பு அலுவலர், தொடர்பு நெம்பர் என எவ்விதமான விவரங்களும் பொது அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்படுவதில்லைன்னு நோயாளிகள் புலம்புகின்றனர்,'' என விளக்கினாள்.

''அங்க மட்டுமில்ல. எல்லா கவர்மென்ட் ஆஸ்பத்திரியிலும் இதே நிலை தான்...''ஆதங்கப்பட்டாள் சித்ரா,

''அக்கா, தீபாவளி பட்டாசு சேல்ஸ் ஊத்துக்குளி வட்டாரத்துல அமோகமாக நடந்துச்சு. எந்த வரைமுறையும் இல்லாம பலரும் பட்டாசு வித்தாங்களாம். இதுக்காக, போலீசாருக்கு 'கிப்ட் பாக்ஸ்' கொடுத்து அமுக்கிட்டாங்களாம். இதில் என்ன வேடிக்கைன்னா, பண்டிகை முடிஞ்சும் கூட மூனு நாள் வரைக்கும் பட்டாசு வித்தாங்களாம். எந்த பாதுகாப்பும், பெர்மிஷன் இல்லாம பட்டாசு கடைகள் எப்படி வச்சாங்கன்னு, விவரம் தெரிஞ்சவங்க கேள்வி கேட்டதற்கு போலீஸ் அதிகாரிகள் யாருமே பிராப்பரா பதில் இல்லையாம்,'' என மித்ரா ஆவேசமானாள்.

ஒன்னும் தெரியலே...


''இந்த பல்லடத்துல, என்னதான் போலீஸ் கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திட்டு தேடினாலும், 'குட்கா' சேல்ஸ் குறையவே இல்லையாம். அதிலும், சில ஆட்டோக்காரங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா எங்கிருந்தோ சப்ளை ஆகுதாம். ஆனா, போலீசுக்குத்தான் அத பத்தி எதுவுமே தெரிய மாட்டேங்குது...'' மித்ரா சொன்னதும், ''ஓ.கே., மித்து. செகண்ட் கால்ல எங்க அங்கிள் ரெண்டு மூனு தடவ கூப்பிட்டுட்டாரு. நான் அவர்கிட்ட பேசறேன்...'' என்றவாறு லைனை மாற்றினாள்.






      Dinamalar
      Follow us