sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

கண்டா... வரச்சொல்லுங்க!

/

கண்டா... வரச்சொல்லுங்க!

கண்டா... வரச்சொல்லுங்க!

கண்டா... வரச்சொல்லுங்க!


ADDED : ஜன 30, 2024 12:18 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொடர் விடுமுறை முடித்து ஊருக்கு திரும்பிய மித்ராவின் வீட்டுக்கு சென்று பார்த்தாள் சித்ரா.

''என்னடி மித்து. ஊரில் இருந்து வந்ததும், பழைய துணிகளை மூட்டை கட்டிட்டு இருக்கற... பார்த்து நல்லதா இருந்தா மட்டும் கொடு. இல்லாட்டி, இடுவம்பாளையத்தில் ஆன மாதிரி பிரச்னை ஆயிடும்...''

''அக்கா... என்னக்கா சொல்றீங்க?''

''மித்து, ஆளும் கட்சி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம், இடுவம்பாளையத்தில் நடந்தது. கட்சிக்காரங்களே பெரிசா ஆர்வம் காட்டாததால், எப்படியாச்சும், கூட்டத்தை காமிக்கோணும்ட்டு, சுற்றுப்பகுதியிலிருந்து ஆட்களை அழைத்து வந்தனர்''

''அதுக்காக, லேடீஸ்களுக்கு சேலையும், ஜென்ட்ஸ்களுக்கு 'சரக்கும்' கொடுக்க ஏற்பாடு செஞ்சிருதாங்க. கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே 'சரக்கு' வாங்க ஜென்ட்ஸ் நடையை கட்டிட்டாங்க. கூட்டம் முடிஞ்சதும், லேடீஸ்க்கு சேலையை கொடுத்தாங்க...''

''வீட்டுக்கு போய் பார்சலை பிரிச்சு பார்த்த போது, சேலைகள் எல்லாம் பழசாம். டென்ஷனான லேடீஸ் பலரும் அந்த சேலைகளை அடுத்த நாள் லோக்கல் நிர்வாகிகள் முகத்தில் வீசி எறியாத குறையாக திருப்பி கொடுத்துட்டாங்களாம்...''

இப்படியும்ஏமாற்றலாமா?


''ம்ம்... எப்டியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க்கா...'' என்ற மித்ரா, ''தகவல் உரிமை சட்டத்தில் ஏதாச்சும், கேள்வி கேட்டு, டீடெய்ல் கேட்டால், நகல் எடுக்க கட்டணத்தை அரசு கருவூலத்தில் செலுத்தணும். ஆனால், உரிய ஆபீஸ்களில் அங்குள்ள மெஷினிலேயே நகல் எடுத்து விடுகின்றனர்,''

''கருவூலத்தில் செலுத்திய பணமும், மீண்டும் அந்த ஆபீசுக்கே, திரும்ப வழங்கப்படுகிறது. இதில், விண்ணப்பதாரர் செலுத்தும் பணம், ஆபீசரின் பாக்கெட்டுக்கு சென்று விடுகிறதாம். இதனால், ஒரு ரூபாய் செலவாகும் பிரதிக்கு அஞ்ச ரூபாய், வெற்றுத்தாளுக்கு கூட காசு என இஷ்டம் போல் வசூலிப்பதாக, மக்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்...'' என்றாள்.

''எப்படியெல்லாம் பணத்தை சுருட்ட ஐடியா பண்றாங்க,'' என ஆதங்கப்பட்ட சித்ரா, ''லோக்சபா எலக் ஷனில் 'சீட்' கேட்டு எதிர்க்கட்சியில கடும் போட்டியாம்...'' என அரசியல் மேட்டருக்கு தாவினாள்.

''யாரெல்லம்கேட்கிறாங்க்கா...''


''இல்லடி. இந்த தடவ, புது முகத்துக்குதான் 'சீட்'டுனு, கட்சி மேலிடம் சொல்லிட்டாங்களாம். இத தெரிஞ்சுகிட்டு, மூன்று பேர் மத்தியில் கடும் போட்டியாம். இந்த ரேஸில், மாவட்ட, மாநகராட்சி கவுன்சிலர்களும் இருக்காங்களாம். ஆளுங்கட்சி கூட்டணியில, மறுபடியும் 'சிட்டிங்' தோழர் கட்சிக்கே ஒதுக்கப்படும் என, அக்கட்சியினர் பேசி வருகின்றனர்,''

''அக்கா... இதேபோல, மத்தியில ஆளும்கட்சி நிர்வாகிகள் மத்தியிலும், 'சீட்' கேட்டு பயங்கர போட்டியாம். ஆளாளுக்கு ஒரு விஐபி-ஐ புடிச்சுகிட்டு, 'சீட்'டுக்கு காய் நகர்த்துறாங்களாம்,''

''ஓ....'' என ஆச்சரியப்பட்ட சித்ரா, ''அந்த கட்சியில, இதுக்கு முன்னாடி, கேன்டிடேட்டை வலைவீசி தேடுவாங்க. இப்ப நிலைமை மாறிடுச்சு. போட்டியும் அதிகமாயிடுச்சு,'' என சிரித்தாள்.

விபத்து ஒன்றுவசூல் பல...


அப்போது, போலீஸ் வாகனம் ஒன்று சென்றதை, ஜன்னல் வழியே பார்த்த மித்ரா, ''அக்கா, சிற்பக்கூடம் அதிகமுள்ள ஊர் போலீஸ்காரங்க, ரோந்து வாகனத்தை காட்டி வசூல் அள்றாங்களாம்...'' என்றாள்.

''கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடி...''

''அக்கா, அந்த ஸ்டேஷன் ரோந்து வண்டி சமீபத்தில், சென்டர்மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கு. அதில, வண்டியோட முன்பகுதி சேதமானது. இதனால, பயந்துபோன, வண்டியை ஓட்டிய டிரைவர், தனது சொந்த செலவில் சரி செய்து விட்டார்,''

''அவரிடம் அதற்கான பில்லை வாங்கிய, அதே ஸ்டேஷனை சேர்ந்த எஸ்.ஐ., மற்றும் இன்னொரு போலீஸ்காரரும், போலீஸ் ரோந்து வண்டியை சரி செய்ய பணம் வேண்டும் என்று, லாரிக்காரங்க கிட்ட காட்டி பணத்தை வசூல் பண்றாங்களாம்...''

''இந்த விஷயம், மத்த போலீஸ்காரங்க மத்தியில 'ஹாட் டாபிக்கா' பேசப்படுது. இதில என்ன கொடுமைன்னா, ஆபீசர் காதுக்கு இந்த விஷயம் போனாலும்கூட, அவரு விசாரிச்ச மாதிரி தெரியல,'' என்றாள் சித்ரா.

''அக்கா, சென்னை போலீஸ்காரர்களின் அலட்சியத்தால் ரவுடிகள் வீடியோ வெளியாகி இருக்கு,'' என்றாள் மித்ரா.

''எந்த வீடியோவை சொல்ற...'' சித்ரா கேட்டாள்.

''ரெண்டு நாளைக்கு முன்னாடி, திருப்பூருக்கு வந்த பல்வேறு மர்டர் கேஸில் தொடர்புடைய, மூன்று ரவுடிகளை, சிட்டி போலீசார் பிடிச்சு, சென்னை போலீஸ்கிட்ட ஒப்படைச்சாங்க. வீரபாண்டி ஸ்டேஷனில், சென்னை போலீசாரின் கஸ்டடியில் இருக்கும் போதே, டேபிள் மேலே இருந்த மொபைல் போனை எடுத்து, வீடியோ, ஆடியோவை பதிவு செய்து பலருக்கும் அனுப்பி விட்டனர்...''

''இந்த மேட்டரில், சென்னை போலீசாரின் அலட்சியம் காரணமாக தான், அக்யூஸ்ட்ஸ் ஒருத்தர், தைரியமாக மொபைல் போனை எடுத்து ரெக்கார்ட் செஞ்சிருக்காரு. கஷ்டப்பட்டு பிடித்து கொடுத்த திருப்பூர் சிட்டி போலீசாருக்கு தேவையில்லாத கெட்ட பெயரை ஏற்படுத்திட்டு போயிருக்காங்க,'' என்றாள் மித்ரா.

உஷாரானபோலீசார்...


''மித்து, போன வாரம், அவிநாசி ஏரியாவில, திருவள்ளுவர் தினத்தன்று 'சரக்கு' விற்பனை 'ஜிபே'யில் பண்றாங்கன்னு பேசினோம்மில்ல. அதனால, தைப்பூச நாளுக்கு முதல் நாளே, எல்லா 'டாஸ்மாக்' கடைக்கும் போன மதுவிலக்கு போலீஸ், 'நாளைக்கு சரக்கு விற்க மாட்டோம். மீறி விற்றால், கடைக்கும், 'பார்'-க்கும் 'சீல்' வைக்க சம்மதிக்கிறேன்னு,' கடை சூபர்வைசர், 'பார்' உரிமையாளர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்களாம். அதனால, இல்லீகல் 'சரக்கு' சேல்ஸ் எங்கயும் நடக்கலையாம்...'' என்றாள் சித்ரா.

''அடடே... இது நல்ல ஐடியாவா இருக்கே,'' என்ற மித்ரா, ''அவிநாசி கும்பாபிஷேக விழாவுக்கு வரும் வாகனங்களை நிறுத்த பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தை ஒதுக்கி தர கோவில் நிர்வாகத்தினர் தரப்பில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தனர். அதேபோல, டாய்லெட் யூஸ் பண்றதுக்கும் பெர்மிஷன் கேட்டிருக்காங்க...,''

''ஆனா, ஸ்கூல் எச்.எம்., டாய்லெட் எல்லாம் யூஸ் பண்ணக்கூடாது. வேண்டுமென்றால், பார்க்கிங் பண்ணிக்கலாம்னு ஸ்டிரிட்டா சொல்லிட்டாங்களாம். இதுக்காக, சி.இ.ஓ.,கிட்ட பேசி பெர்மிஷன் வாங்க, வார்டு கவுன்சிலர்கள் முயற்சி பண்றாங்களாம்...'' என்றாள்.

''சரி பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு. மித்து, என்கிட்ட அவிநாசி மேட்டர் ஒன்னு இருக்கு. கும்பாபிஷேக விழாவுக்கு, சிட்டிங் வி.ஐ.பி.,யை வருமாறு அவங்க கட்சிக்காரங்க அழைப்பு விடுத்தாங்களாம். ஆனால், வி.ஐ.பி.,யோ 'அதற்கும் பார்க்கலாம்,' என்று சொல்லிட்டாராம்...''

''தொகுதிக்குள்ள தலைகாட்டாத இவரை வச்சிட்டு, லோக்சபா எலக் ஷனை எப்படி சந்திப்பது என இப்போதே கட்சிக்காரங்களின் புலம்பல் சத்தம், ராசிபுரம் வரைக்கும் கேக்குதாம்,'' என்று சொல்லி சிரித்தாள் சித்ரா.

''நானும் கூட கேள்விப்பட்டிருக்கேன். அவரு... இப்டித்தாங்க்கா. எதுக்குமே வர்றதில்லையாம். சமீபத்துல கூட சேவூருக்கு பக்கத்துல, ஒரு கவர்மென்ட் ஸ்கூலில், பட்டியல் இனத்தை சேர்ந்த சமையலர் சமைச்சு, பொது விருந்து சாப்பிடணும்னு கோர்ட் உத்தரவு போட்டுச்சு...''

''அதுக்கான ஏற்பாடும் நடந்துச்சு... ஆனா, அதுக்கும், 'தன'மான அந்த வி.ஐ.பி., வரலே. அதனால, 'கண்டா... வரச்சொல்லுங்கன்னு!' அவங்க கட்சிக்காரங்களே கிண்டல் பண்ற அளவுக்கு நிலைமை போயிடுச்சாம்...'' என்ற மித்ரா, ''அக்கா... பல்லடத்துல டிவி ரிப்போர்ட்டர வெட்டுன சம்பவத்துல, என்னவெல்லாமோ சர்ச்சை வெளியாகிட்டு இருக்கு,''

''இது விஷயத்துல, பொதுமக்களும் குழம்பி போயிருக்காங்க. அந்த சம்பவத்துக்கு பின்னாடி, பெரிய நெட்வொர்க்கே இருக்காம். போலீசும் சம்பந்தப்பட்டு இருக்கலாம்னு ஒரு பேச்சு பல்லடம் பூராவும் இருக்குது. இதுக்கு காரணமும் உண்டு...''

''அந்த ரிப்போர்ட்டர் மேலயும் பலரும் அப்பப்ப புகார் சொன்னபடிதான் இருந்தாங்க. அதனால தான்,

அஞ்சு நாளாகியும் போலீஸ் வாயே திறக்காம இருக்காங்கன்னும் சொல்றாங்க்கா...'' என்ற சித்ரா, ''ஓகே., மித்து. நான் கெளம்பறேன்...'' என்றவாறு ஹெல்மெட் சகிதம் புறப்பட்டாள்.






      Dinamalar
      Follow us