sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

மேயர் - எம்.எல்.ஏ., பேசாமல் தவிர்ப்பு; தி.மு.க. - அ.தி.மு.க., போட்டியால் 'தகிப்பு'

/

மேயர் - எம்.எல்.ஏ., பேசாமல் தவிர்ப்பு; தி.மு.க. - அ.தி.மு.க., போட்டியால் 'தகிப்பு'

மேயர் - எம்.எல்.ஏ., பேசாமல் தவிர்ப்பு; தி.மு.க. - அ.தி.மு.க., போட்டியால் 'தகிப்பு'

மேயர் - எம்.எல்.ஏ., பேசாமல் தவிர்ப்பு; தி.மு.க. - அ.தி.மு.க., போட்டியால் 'தகிப்பு'


ADDED : ஏப் 22, 2025 06:32 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''எத்தனை பேர் வந்தாலும் 'சித்ரா - மித்ரா' கூட்டணியை உடைக்க முடியாதுக்கா...''

கலகலத்தவாறே வந்தாள் மித்ரா.

''பா.ஜ., மாவட்ட தலைவர் சீனிவாசனும், அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., குணசேகரனும் 'பிரஸ் மீட்'ல சொன்ன மாதிரியே சொல்றியே மித்து...''

''ஆமாக்கா... அ.தி.மு.க., கவுன்சிலர் கண்ணப்பன் 'இன்டோர் மீட்டிங்'ல பா.ஜ.,வோட கூட்டணி குறித்து பேசுனது வெளியில கசிஞ்சுது... இதனால ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு ஸ்ட்ராங்கா முற்றுப்புள்ளி வச்சிட்டாங்க ரெண்டு பேரும்''

''மித்து... அ.தி.மு.க., மாநகர் மாவட்ட அலுவலகத்துல நடந்த அந்த மீட்டிங்ல மாவட்டச் செயலாளர் 'பூத் கமிட்டி'யை ஆய்வு செஞ்சப்ப, இளைஞர்களைத் தான் நிர்வாகியா போடணும்ன்னு 'ஸ்ட்ரிக்'டா சொன்னாராம். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும், பகுதி அணி பிரிவிலும், சிறுபான்மையினரை நிர்வாகிகளா கண்டிப்பா இடம்பெறணும்னு ஆர்டர் போட்டாராம்''

மகளிரணி குஷி


''அக்கா... அமைச்சர் பொன்முடிக்கு எதிரா அ.தி.மு.க., மகளிரணி களத்துல குதிச்சு ஆர்ப்பாட்டம் நடத்துனாங்கள்ல...

''மகளிரணி ரொம்பவே குஷியாயிட்டாங்களாம். வழக்கமா, இந்த மாதிரி ஆர்ப்பாட்டத்துல, கட்சியோட மாவட்டச் செயலாளர், நிர்வாகிகள் பேசி, கோஷம் போடுவாங்க. இந்தத் தடவை, மாவட்ட செயலாளர் உட்பட யாருமே மேடை ஏறல.

''மகளிரணி நிர்வாகிகள் மட்டும், கருப்பு சேலை, பேட்ஜ் அணிஞ்சு மேடைல முழங்கியிருக்காங்க... நிர்வாகிகள் அமைச்சர் பொன்முடியையும், தி.மு.க.,வையும் பொளந்து தள்ளியிருக்காங்க...''

''மித்து... நீட் தேர்வு விவகாரத்தில தி.மு.க.,வை விமர்சிச்சு, திருப்பூர்ல அ.தி.மு.க., சார்பில ஆர்ப்பாட்டம் நடந்துச்சு. போராட்டத்துல, ரெண்டு மாவட்ட செயலாளர்கள், மேலும் ரெண்டு எம்.எல்.ஏ., - மூனு முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கலந்துட்டாங்க. அனைவரும் பேசுனா நேரம் போதாதுன்னு சொல்லி, பொள்ளாச்சி ஜெயராமன் மட்டும் பேசுனா போதும்னு உடுமலை ராதாகிருஷ்ணன் சொன்னாராம். இதுக்கு எல்லோரும் ஒத்துக்கிட்டாங்களாம்''

சரியான போட்டி


''சித்ராக்கா... தி.மு.க.,வைக் கண்டிச்சு திருப்பூர்ல அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்துன அதே நேரம், பதிலடியா தி.மு.க., மாணவர் அணியினர் அ.தி.மு.க.,வைக் கண்டிச்சு ஆர்ப்பாட்டம் நடத்துனாங்களாம். இதனால ரெண்டு கட்சிக்காரங்க கிட்டயுமே 'செம' தகிப்பாம்''

''மித்து... சபாஷ் சரியான போட்டிதான். மக்களுக்கு நல்லது செய்றதில இந்தப்போட்டியைக் காட்டுனா நல்லா இருக்கும்ல''

''சித்ராக்கா... அ.தி.மு.க., நடத்துன ஆர்ப்பாட்டத்துல, மாணவரணி நிர்வாகி ஒருத்தர் 'ஜெ.ஜெயலலிதா'ன்னு குறிப்பிட்டு பேசினாராம். உடனே முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், 'அம்மான்னு சொல்லணும். பேரைச் சொல்லக்கூடாது'ன்னு திருத்தினாராம்''

''மித்து... திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க., செயலாளரா இருந்த மேயர் தினேஷ்குமாரை, வடக்கு மாவட்டத்துக்கு செயலாளரா நியமிச்சிட்டாங்க; வடக்கு மாவட்ட செயலாளரா இருந்த எம்.எல்.ஏ., செல்வராஜ், மத்திய மாவட்ட செயலாளராயிட்டார்.

''தினேஷூக்கும், செல்வராஜூக்கும் ஏழாம் பொருத்தம். மாவட்ட செயலாளர்களான பிறகு பொது இடத்துல ரெண்டு பேரும் சந்திச்சுக்கவே இல்லையாம். வக்ப் வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்துல ரெண்டு பேரும் பங்கெடுக்க வேண்டியிருந்துச்சு... ஆனா, நேருக்கு நேர் பேசுறத தவிர்த்துட்டாங்களாம்''

''சித்ராக்கா... ம.தி.மு.க., முதன்மைச் செயலாளரா துரை தேர்வானதும், மொதல்ல வாழ்த்து தெரிவிச்சதோட, திருப்பூர்ல நடந்த பொங்கல் விழாவுக்கு அழைச்சு திருப்பூர் மாநகர மாவட்ட ம.தி.மு.க.,வினர் நெருக்கமானாங்க. மாவட்ட தலைவர் தனக்கு கவுன்சிலர் 'சீட்' உறுதியானது முதல், துரை மேல ரொம்ப நம்பிக்கையா இருந்தாரு... துரை ராஜினாமா முடிவை அறிவிச்சதும், திகைச்சுப்போயிட்டாங்களாம். அடுத்த நாள் ராஜினாமா வாபஸ்னு அறிவிச்ச பின்னாடிதான் நிம்மதியானாங்களாம்''

இதென்ன சோதனை?


''மித்து... மாநில அளவிலான நகராட்சி அலுவலர்கள் இடம் பெற்றிருக்கிற வாட்ஸ்ஆப் குரூப்ல, காங்கயம் நகராட்சி அலுவலகத்துல அகோரிகளை அழைச்சுட்டு வந்து பூஜை நடத்துன சம்பவத்தைக் குறிப்பிட்டு ஒருத்தர் பதிவிட்டாராம். மற்றொருவர், ஏன் இந்தச் சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கலேன்னு கேட்ருக்காரு. இது விவாதமாக, இந்தப் பதிவுகளை மற்றொருத்தர் 'டெலிட்' பண்ணுனாராம். பதில் பதிவுபோட்ட அலுவலரை, ஊழியர் சங்க நிர்வாகின்னு சொல்லி ஒருத்தர் போன்ல கூப்பிட்டு மிரட்டுனாராம்''

''என்னடா இது... 'கருத்து சுதந்திரத்துக்கு' வந்த சோதனை. சித்ராக்கா... அறநிலையத்துறை வெளியிடுற ஆன்மிகப் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு''

''மித்து... அதுக்கென்ன இப்ப''

''அக்கா...திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில்ல இருக்கிற புக் ஸ்டாலை, ஒரு வாரமா திறக்கலையாம். பக்தர்கள் புத்தகத்தை வேடிக்கை மட்டும் பார்த்துட்டு, வாங்க முடியாம போயிடறாங்க...

''உதவி கமிஷனர்ல துவங்கி செயல் அலுவலர் வரை பல இடங்கள் காலியா இருக்கு. கூடுதல் 'பொறுப்பு' பார்க்கிறவங்களும் இருக்காங்க... இதுல எங்க போய் புத்தகம் விக்கிறதாம்''

''மித்து... நெருப்பெரிச்சல்ல அரசு சார்பில பெண் மற்றும் ஆண் தொழிலாளர் தங்கும் விடுதிகள் கட்டியிருக்காங்க... ஆனா பயன்பாட்டில் இல்ல. பெரிய கட்டடம் பாழடைஞ்சு கிடக்குது.

''ஒரேயொரு செக்யூரிட்டி இருக்காராம். அவரு அப்பப்ப வருவாரு... போவாருங்கிறாங்க...

''இத்தனைக்கும் பராமரிப்பு உள்ளிட்ட சில செலவுகளுக்கு, திருப்பூர்ல இருக்கற சங்கம், மாசம் 35 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவும் செஞ்சிட்டு இருக்குதாம்''

'மோசடி' பெண்மணி


''சித்ராக்கா... திருப்பூர்ல, அப்பாவி நபர்கள்ட்ட ஆவணங்களை வாங்கி, அவங்களோட மொபைல் போனைப் பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனங்கள்ல கடன் வாங்கிடறாராம், ஒரு பெண்மணி.

''கடன் தொகையைத் தன்னோட வங்கிக்கணக்குல, அதே மொபைல்போனில் 'ஜிபே' மூலம் மாத்திடறாராம். பாதிக்கப்பட்டவர் ஆதாரங்களோட புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். போலீஸ் உயர் அதிகாரிட்ட புகார் சொல்லியும், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியும் வேலைக்கு ஆகலையாம். 'எங்கே போனாலும் நாங்கதான் விசாரிக்கணும்'னு பாத்திர பாளையம் போலீஸ் காரங்க 'கெத்து' காட்றாங்களாம்.

''மோசடி பெண் மணிக்கு ஆதரவா 'சீட்டா' கட்சி பிரமுகர் ஒருத்தரும் டீல் பேசுறாராம்''

மின்சாரம் திருடலாமா?


''மித்து... பி.என்., ரோடு, போயம்பாளையத்துல, புறக்காவல் நிலையத்துக்கு மின் வாரிய அனுமதியின்றி மின் கம்பத்தில இருந்து மின்சாரம் எடுக்கிறாங்களாம். சட்டத்தை மதிக்க வேண்டிய காவல்துறையே மின்சாரத்தைத் திருடலாமான்னு கேள்வி எழுந்திருக்கு...''

''அக்கா... அனுப்பர் பாளையம் போலீஸ் காரங்க, நைட்ல அங்கேரி பாளையம் ரோட்டுல சந்தில மறைஞ்சு நின்னு, மது குடிச்சுட்டு வாகனம் ஓட்டி வர்றவங்களை மடக்கி, அபராதம் விதிக்கிறாங்களாம். போலீசை பார்த்ததும் 'குடி'மகன்கள் சிக்காமல் இருப்பதற்காக வண்டியை வேகமா ஓட்டுறது, திரும்பிப் போக முயற்சிக்கிறதாலா விபத்துல சிக்குறாங்க... ரோட்டுல நடந்து செல்றவங்க மேலயும் மோதிடறாங்க... ஏன்... போலீசுக்கே இதனால பாதுகாப்பு கிடையாது''

''ஆமா மித்து... தென்னம்பாளையத்துல அதிகாலை நேரத்துல, ெஹல்மெட் அணியாம, ஒருவழிப்பாதைல விதிமீறி வந்த வாகன ஓட்டிகளை டிராபிக் போலீஸ்காரங்க மடக்கிப்பிடிச்சாங்களாம்.

''ஒரு வாகன ஓட்டி நிக்காமப் போகப் பார்த்தாராம். சடார்னு பின்னாடி அவரோட சட்டையைப் பிடிச்சு வண்டி சாவியை எடுத்துக்கிட்டாராம்.

''மூனு மணி நேரம் கழிச்சு, அட்வைஸ் மழை பொழிஞ்சு, அபராதத்தை வசூலிச்ச பின்னாடிதான் அந்த வாகன ஓட்டியை அனுப்பிச்சாராம்''

''இதுக்குப் பேரு 'ரிவெஞ்ச்' ஆமா... சரிதானக்கா''

''சரி... சரி... இன்னும் எத்தனை நேரத்துக்கு இப்படிப் பேசிப் பேசியே 'பழிக்குப்பழி' வாங்கப்போற''

கலகலவென சிரித்தவாறே இருவரது உரையாடலும் முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us