/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
பாதி விலைக்கு 'சரக்கு' கேட்ட போலீசு... 'போலி' டாக்டரின் 'ஜாலி'யான ரவுசு
/
பாதி விலைக்கு 'சரக்கு' கேட்ட போலீசு... 'போலி' டாக்டரின் 'ஜாலி'யான ரவுசு
பாதி விலைக்கு 'சரக்கு' கேட்ட போலீசு... 'போலி' டாக்டரின் 'ஜாலி'யான ரவுசு
பாதி விலைக்கு 'சரக்கு' கேட்ட போலீசு... 'போலி' டாக்டரின் 'ஜாலி'யான ரவுசு
ADDED : மே 26, 2025 11:28 PM

மழை துாறலிலும், வீட்டுக்கு வந்த மித்ராவை வரவேற்ற சித்ரா, சூடாக காபி கொடுத்தாள்.
''போன வாரம் தான் வெயில் வாட்டி வதைக்குதுன்னு பேசினோம். இந்த வாரம் பாருங்க அக்கா, 'க்ளைமேட்' அப்படியே மாறி போயிடுச்சு. ரேஷன் கடை வரைக்கு போக வேண்டியிருந்துச்சு; அப்படியே உங்கள பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்'' என்றவாறே சோபாவில் அமர்ந்தாள் மித்ரா.
''போன வாரம், அரண்மனைப்புதுார் ரேஷன் கடைல ரெவின்யூ ஆபீசர்ஸ் ரெய்டுக்கு போனப்போ, சம்மந்தமே இல்லாத ஒரு லேடி, பொருட்களை சப்ளை பண்ணிட்டு இருந்தாங்களாமே. 'இது சம்மந்தமா நடவடிக்கை எடுக்கப்படும்'ன்னு சொல்லிட்டு போன ஆபீசர்ங்க, 'சைலன்ட்டா' இருக்கிறதா பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''அந்த ரேஷன் கடைல இருந்த லேடி, தற்காலிக ஊழியராம்; 'பேக்கர்'ன்னு சொல்றாங்க. கடையோட விற்பனையாளரு, பக்கத்துல இருக்கற கடையையும் கவனிக்க வேண்டியிருக்கிறதால, அங்க போய்ட்டார்ன்னு சொல்றாங்க. இதுதான், இந்த குழப்பத்துக்கு காரணமாம். ரெவின்யூ ஆபீசர்களுக்கும், சொசைட்டி ஆபீசர்களுக்கும் எந்தவொரு விஷயத்துலயும், 'அன்டர்ஸ்டாண்டிங்,' இல்லையாம். இது விஷயத்துல கூட அப்படி தான் நடந்திருக்கும்ன்னு பேசிக்கிறாங்க,''
முன்னாளும் இந்நாளும்
''ஏன் தான் இப்படியெல்லாம் பண்றாங்களோ... புகாரோட பின்னணியை விசாரிக்காம 'ஆக்ஷன்'ல குதிச்சிடறாங்க போல...'' என அங்கலாய்த்த மித்ரா, ''சென்னிமலையில இருக்கற ஒரு கோவில் விவகாரத்துல 'பொலிடிக்கல்' வார்நடக்குதாம்க்கா?'' என வேறு மேட்டருக்கு தாவினாள்.
''விவரமா சொல்லு மித்து,''
''சென்னிமலையில இருக்கற பழமையான கோவிலை புனரமைக்கணும்ன்னு, அங்க இருக்கற ஊர்க்காரங்க ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்காங்களாம். ஆனா, கோவிலை புனரமைப்பு செய்ற விவகாரத்துல, ரெண்டு தரப்புக்கு இடையே கருத்து மோதல் இருக்காம். இதுல, ஒரு தரப்புக்கு ஆதரவா, தொகுதியோட 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வான மினிஸ்டரும், கோவிலை சீக்கிரமா கட்டி முடிக்கணுங்கறதுல ஆர்வமா இருக்கற மற்றொரு தரப்புக்கு ஆதரவா, அந்த தொகுதியோட மாஜி எம்.எல்.ஏ.,க்கும் 'பனிப்போர்' மூண்டிருக்காம். 'கோவில் புனரமைப்புக்கு அங்க இருக்கற ஆளுங்கட்சி நிர்வாகிங்க தான் முட்டுக்கட்டையா இருக்காங்க'ன்னு சொல்றாங்க. இந்த விவகாரம் அரசியல் ரீதியான மோதலுக்கு வழிவகுக்கும்னு சொல்றாங்க...'' என விஷயத்தை சொல்லி முடித்தாள்.
கழுவுற மீன்ல நழுவுறது போல
''மினிஸ்டர்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுங்க அக்கா...'' என்ற மித்ரா தொடர்ந்தாள். ''பால்வளத்துறை மினிஸ்டரு மனோ தங்கராஜ், போன வாரம் கலெக்டர் ஆபீஸ்ல ஆய்வுக்கூட்டம் நடத்தியிருக்காரு. ஏதோ கடமைக்கு வந்து, ஆபீசர்ங்க சொல்றதை மட்டும் கேட்டுட்டு போகாம, கூட்டுறவு சங்க செயலாளர்களை கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துட்டாராம். கால்நடை வளர்க்கிறவங்க எண்ணிக்கை குறைவா இருக்கிறதையும், ஆவினுக்கான பால் கொள்முதல் குறைவா இருக்கிறதையும் தெரிஞ்சு கடுப்பாய்ட்டாராம்.
''டாம்கோ', 'தாட்கோ' திட்டங்கள்ல கடன் கொடுத்து, பால் உற்பத்தியாளர்களோட எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது தானே... ன்னு கேட்டு, செமய்யா 'டோஸ்' விட்டிருக்காரு. ஒரு கட்டத்துல, 'கூட்டுறவு சங்கத்தை இழுத்து மூடிடலாமா'ன்னு கூட கேட்டிருக்காரு. அப்படியே 'ஷாக்' ஆன ஆபீசர்ங்க, பதில் சொல்ல முடியாம, ஸ்கூல் பசங்க மாதிரி தலை குனிஞ்சு உட்கார்ந்துட்டாங்களாம்,''
''இதயெல்லாம் ரிப்போர்ட்டர்ஸ் நோட் பண்றதை பார்த்த ஆபீசர் ஒருத்தர், 'நியூஸ் வந்துடுச்சுன்னா மானம், மரியாதை போயிடும்'ன்னு பயந்து, 'வாங்க...டீ ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்'ன்னு சொல்லி, அவசர, அவசரமா 'பிரஸ்'க்காரங்களையெல்லாம் வெளியே அனுப்பிட்டு, சத்தமே இல்லாம ரெண்டு கதவையும் இழுத்து சாத்திட்டு, தன்னோட கடமையை 'கச்சிதமா' செஞ்சுட்டார்,''என்றாள்.
''இதே மாதிரி தான், லாஸ்ட் வீக், கூட்டுறவு துறை செயலாளர், நம் மாவட்டத்துல சில ரேஷன் கடைகள்ல ஆய்வு செஞ்சாரு. அவிநாசியில இருக்கற சிவில் சப்ளை குடோனுக்கும் போய் பார்த்திருக்காரு. 'பொருட்களை மூட்டையா எடுத்துட்டு வரும் போது, எடை குறைவாக இருக்கு'ன்னு, ஏற்கனவே ஒரு கம்ப்ளையன்ட் போனதால, அங்க இருந்த டிஜிட்டல் தராசுல, ஒரு கிலோ பாக்கெட்டை வைச்சு எடை காண்பிச்சு, 'அளவெல்லாம் சரியாத்தான்' இருக்குங்கற மாதிரி ஒரு தோற்றத்தை சிவில் சப்ளை ஆபீசர்ங்க உருவாக்கிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''இதே மாதிரி தான், திருப்பூர்ல இருந்த கோயமுத்துார் போற பிரைவேட் பஸ்க்காரங்க, அவிநாசிக்குள்ள வராம, பை பாஸ்ல ஏறி, போயிடறாங்களாம்; அதுவும், குறிப்பிட்ட நேரத்துல, குறிப்பிட்ட பஸ்க்காரங்க தான் இப்படி பண்றாங்களாம். இத நல்லா தெரிஞ்சிருந்தும் கூட அதை கவனிக்க வேண்டிய ஆர்.டி.ஓ., கண்டும் காணாம இருக்காராம். பிரைவேட் பஸ்காரங்களுக்கும், ஆபீசர்களுக்கும் டீலிங் எதுவும் இருக்குமோன்னு, பயணிங்கள் சந்தேகப்படறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
கசிந்த ரகசியம்:மசியாத போலீஸ்
''இப்படி பூசி மெழுகுறதே ஆபீசர்களுக்கு வேலையா பேச்சு...'' என சலித்துக் கொண்ட மித்ரா, ''போன வாரம், முருகம்பாளையத்துல 'ஜோலி'ங்கற ஒரு போலி டாக்டரை, ரெய்டு நடத்தி பிடிச்சாங்கள்ல. போலீஸ்காரங்க, அந்த போலி டாக்டர்கிட்ட விசாரிச்சுட்டு இருந்தப்போ, ''அன்னைக்கு அந்த குழந்தை இறந்தப்பவே, உன்னை துாக்கி உள்ளே வைச்சிருந்தா எல்லாம் சரியா இருந்திருக்கும்,'' என சத்தமாக முணுமுணுக்க, அது மருத்துவக் குழுவினர் காதில் விழுந்துடுச்சாம்,''
''என்ன சொன் னீங்க...'ன்னு மருத்துவக் குழுவினர் கேட்க, 'அவரை எங்ககிட்ட விடுங்க; நாங்க பார்த்துக்கிறோம்' ன்னு விஷயத்தை விழுங்கிய படியே, போலீஸ்காரங்க போய்ட்டாங்களாம். 'அப்படி என்ன தான் நடந்திருக்கும் தெரியலையே'ன்னு, இப்போ வரைக்கும் மெடிக்கல் டீம் குழப்பிட்டு இருக்காங்களாம்,'' என்றாள்.
''போலீஸ் மேட்டர் ஒன்னு சொல்றேன்'' என்ற சித்ரா, ''நம்ம மாவட்டத்துல சட்டம் ஒழுங்கை கவனிக்கிற போலீசுக்கு உதவியா, 2 மாசமா, போச்சம்பள்ளியை சேர்ந்த, 7வது பட்டாலியன் ஒரு கம்பெனி போலீஸ்காரங்க, சிவன்மலையில தங்கியிருக்காங்க. இதுல, 4 பேரு, அங்கிருக்கற, 'டாஸ்மாக்' கடையில தினமும் 'சரக்கு' அடிச்சிட்டு, 'பாதி விலைக்கு கொடுங்க'ன்னு மிரட்ட, 'டாஸ்மாக்' ஊழியருங்க ஒத்துக்கலையாம்; இதனால பிரச்னை வந்திருக்கு,''
''இந்த விவகாரம் பட்டாலியன் பெரிய ஆபீசர் கவனத்துக்கு போக, 'இது தப்பு'ன்னு, வார்ன் பண்ணிருக்கார். அத்தோட, இந்த விவகாரம் மாவட்டத்தை கவனிக்கிற பெரிய ஆபீசர் கவனத்துக்கு போக, என்கொயரி கமிஷன் போட்டிருக்காங்களாம்,'' என்றாள், சித்ரா.
தோழர்களின் அரசியல் நாடகம்
''ஸ்மார்ட் சிட்டின்னு சொல்லிக்கிற கார்ப்பரேஷன் லிமிட்ல, டெய்லி 800 மெட்ரிக் டன் குப்பை சேருதுன்னு சொல்றாங்க. குப்பை கொட்ட இடமில்லைங்கற விஷயமும், அதுக்காக பாறைக்குழியை தேடி அலையறதுங்கிற விஷயமும் ஊரறிஞ்சது. மூனு மாசமா, காளம்பாளையம் பாறைக்குழியில, குப்பையை கொட்டிட்டு இருக்காங்க. 'இங்க குப்பைக்கொட்ட கூடாது'னு கிராம மக்கள் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சுட்டு வர்றாங்க,''
''இதுல என்ன ஒரு விஷயம்ன்னா, இந்த மேட்டர்ல, இதுவரை 'சைலன்ட்டா' இருந்த தோழர்கள், திடீர்ன்னு 'வைலன்டாகி' 'குப்பைக்கொட்ட கூடாது'ன்னு, கொடி பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். ஒரு பாறைக்குழியில முழுசுமா குப்பை கொட்டி முடிச்சுட்டாங்க; இன்னொன்றும் நிரம்பற நிலமைல இருக்காம். இதுவரைக்கும் கண்டும் காணாம இருந்த தோழர்களுக்கு திடீர் 'ஞானோதயம்' வர காரணம் தெரியலையேன்னு, மக்கள் சரளமா 'கமென்ட்' அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''ஞானோதயம்ன்னு நீங்க சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது'' என்ற மித்ரா, ''முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில்ல தங்க கோபுரம் விவகாரம் எப்படியோ முடிவுக்கு வந்திருச்சு. தங்க கோபுரம் அமைச்சு கொடுக்க அறங்காவலர் ஒருவர் தயாரா இருந்தும், ஹிந்து அறநிலையத்துறை ஆபீசர்ங்க அனுமதி கொடுக்காம இழுத்தடிச்சாங்களாம். கும்பாபிேஷக தேதி குறிச்ச பின்னர் தான், அனுமதி கொடுக்கிறது தொடர்பா பேசி முடிவெடுத்திருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
''மித்து, லிங்கேஸ்வரர் ஊர் மேட்டர் மூனு இருக்கு. சொல்றேன் கேளு. போன வாரம், பைபாஸ் ரோட்டில் இருக்கற ஒரு ஓட்டல்ல மிட்நைட்ல ரெண்டு பேர் கூரையை பிரிச்சு உள்ளே குதித்து திருட டிரைப்பண்ணி, ஒன்னுமில்லேன்னு எஸ்கேப் ஆயிட்டாங்க. இதப்பத்தி, ஹோட்டல் மேனேஜர், கிரைம் பிராஞ்சில் புகார் செஞ்சதற்கு, அங்கிருக்கிற லேடி ஆபீசர், 'எதுவும் திருட்டுப் போகலயே. அப்புறம் எதுக்கு கம்ப்ளைன்ட் குடுத்து எங்களை டென்ஷன் பண்றீங்கன்னு திட்டி அனுப்பிட்டாராம். இதே ஆபீசர் தான், டூவீலர், போன் மிஸ்ஸிங்குன்னு போனா, அவ்வளவு ஈஸி யாக எப்.ஐ.ஆரே போடற தில்லை. ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி அனுப்பிடறாராம்'' என்றாள், சித்ரா.
''ஆமாங்க்கா, நானும் கேள்விப்பட்டிருக்கேன், அவங்க எப்பவுமே அப்டித்தானாம்,'' ஆமோதித்த மித்ரா, ''அதே ஊர்ல விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. ரொம்பவும் பழமையான கோவிலா இருந்தும், நிதியில்ல, கோவில்ல இடமில்லன்னு ஏதோ சொல்லி அன்னதானம் போட அறநிலையத்துறை முன்வரலே. கடைசில அங்கிருக்கற வணிக நண்பர்கள் ஒன்னா சேர்ந்து அன்னதானம் போட்டாங்களாம்,''
''அவங்க எப்பவுமே அப்டித்தானே. இது கூடவா தெரியாதுன்னு,'' சிரித்த சித்ரா, ''தெக்கலுார்ல பஸ் நிக்காத விவகாரத்தை, தாலுகா ஆபீசில 'டிஸ்கஸ்' பண்ணாங்களாம். கண்டிப்பா எல்லா பஸ்சும் ஊருக்குள்ள போய்த்தான் ஆகணும்னு தாசில்தார் ஸ்டிட்டா சொல்லிட்டாராம். திருப்பூர், கோவையிலிருந்து அவிநாசிக்கு டிக்கெட் குடுக்க கண்டக்டர்கள் சங்கடப்படறாங்களாம்...''
''ஆனா, இது தெரிஞ்சுமே, இதப்பத்தி டிஸ்கஸ் பண்ணலையாம். அட அதுகூட பரவாயில்ல. தெக்கலுார் பிரச்னைக்கு அல்லாரும் போனோம். ஆனா, அவங்க நமக்கு சப்போர்ட் பண்ணைலையேன்னு நொந்துட்டாங்களாம். பக்கத்து பக்கத்து ஊர்லயே இப்டிபன்னா என்ன பண்றதுடி...'' முடித்தாள் சித்ரா.
''சரிங்க்கா... மழை வேகமா வர்ற மாதிரி இருக்கு; நான் கிளம்பறேன்'' என்றவாறே எழுந்தாள் மித்ரா.