sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

காலேஜில் புகுந்த அரசியல்... ஆளுங்கட்சியில் அடித்த புயல்!

/

காலேஜில் புகுந்த அரசியல்... ஆளுங்கட்சியில் அடித்த புயல்!

காலேஜில் புகுந்த அரசியல்... ஆளுங்கட்சியில் அடித்த புயல்!

காலேஜில் புகுந்த அரசியல்... ஆளுங்கட்சியில் அடித்த புயல்!


ADDED : மார் 05, 2024 12:53 AM

Google News

ADDED : மார் 05, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அப்பப்பா... இப்பவே இந்த வெயில் கண்ணை கட்டுதே; ஏப்ரல், மே மாசமெல்லாம் எப்படி தான் சமாளிக்கப் போறோமோ...'' என, வியர்வையை துடைத்தபடி, சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

''வா மித்து. நீ சொல்றது 'கரெக்ட்' தான். கோடை மழை பெய்யலைன்னா, குடிக்கற தண்ணிக்கே திண்டாட்டம் வந்துடும் போல...'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.

'பிரிட்ஜில்' இருந்த 'லெமன் ஜூஸ்' எடுத்து வந்து டீபாய் மீது வைத்தாள் சித்ரா. 'டிவி'யை 'ஆன்' செய்தாள் மித்ரா. செய்தி சேனலில், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

'கிலி' ஏற்படுத்திய மோடி அலை!


''பல்லடத்துக்கு மோடி வந்து போனதுக்கு அப்புறம், அ.தி.மு.க., - தி.மு.க.,காரங்க கூட 'கிலி' அடிச்ச மாதிரி இருக்காங்களாம். அந்த பொதுக்கூட்டத்துல, 2 லட்சம் பேருக்கு மேல கூட்டம் திரண்டுடுச்சாம். அத்தனையும் ஓட்டுகளா மாறிடுச்சுன்னா, நம்ம கதை கந்தல் தான்னு, புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களாம், தி.மு.க., - அ.தி.மு.க.,க்காரங்க''

அந்த கூட்டத்துல பேசின மோடி, எம்.ஜி.ஆரையும், ஜெ.,வையும் புகழ்ந்து தள்ளினார்ல. இதுக்கு பதிலடி தர்ற மாதிரி, 'தமிழ்நாட்ல எம்.ஜி.ஆர்., - ஜெ., பேரை சொல்லாம யாரும் அரசியல் பண்ணவே முடியாது'ன்னு சொல்லி அ.தி.மு.க.,க்காரங்க, பி.ஜே.பி.,க்காரங்களை கடுப்பேத்திட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.

''நம்ம ஸ்டேட்டில் கஞ்சா, போதை பொருள் புழக்கம் அதிகமாகிடுச்சுன்னு சொல்லி, அ.தி.மு.க.,வினர் மாநிலம் முழுக்க, பெரிய அளவுல ஆர்ப்பாட்டம் பண்ணாங்கல்ல. ஆனா, திருப்பூர்ல பாத்திங்கன்னா, கார்ப்ரேஷன் ஆபீஸ் முன்னாடி ஆர்ப்பாட்டம் செஞ்சிருக்காங்க,''

''என்ன காரணம்ன்னு விசாரிச்சா, கார்ப்ரேஷன் செயல்பாடு ரொம்ப மோசமாக இருக்காம்; நிர்வாகத்துல வெளிப்படை தன்மையே இல்லையாம். பாதாள சாக்கடை திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம்ன்னு, எதுவும் உருப்படியா இல்லையாம். அதனால, கார்ப்ரேஷனை கண்டிக்கிற கூட்டமாகவும் ஆர்ப்பாட்டத்தை மாத்திட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''கார்ப்ரேஷன் எல்லைக்குள்ள, அதிகமா ஓட்டு வாங்கணும், அ.தி.மு.க.,காரங்க திட்டம் போட்டுட்டாங்க போல...'' என்ற சித்ரா,''ஆளுங்கட்சியோட ஓட்டுக்கு வேட்டு வைக்க, ஆளுங்கட்சியில இருந்து கழட்டி விடப்பட்டவரே காய் நகர்த்துறாராம்,'' என பேச்சை மாற்றினாள்.

'சேம்சைட் கோல்' சேர்மனின் 'லகலக'


''காங்கயத்துல, ஜல் ஜீவன் திட்டத்துல குழாய் பதிக்க போடப்பட்ட குழிகளை மூடலையாம்; இதனால, மக்கள் ரொம்ப சிரமப்படறாங்களாம். இதபத்தி கேட்டா, 'எலக்ஷன் வரப்போகுதுல்ல, இந்த மாதிரி இருந்தா தான், ஆளுங்கட்சிக்கு கெட்ட பேரு வரும்; லோக்கல் மினிஸ்டரு மேல மக்களுக்கு அதிருப்தி வரும். ஓட்டு குறையும்ங்ற மாதிரி முனிசிபல் வி.ஐ.பி., ஆட்களே சொல்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''ஏன், அந்த வி.ஐ.பி.,யும், ஆளுங்கட்சியை சேர்ந்தவரு தானே... அவரு ஏன் ஆளுங்கட்சியோட ஓட்டுக்கு வேட்டு வைக்கணும்'' வெள்ளந்தியாய் கேட்டாள் மித்ரா.

''அவர் கூட்டணி தர்மத்தை தாண்டி, உள்ளாட்சி வி.ஐ.பி.,யாக ஜெயிச்சாராம். அவரை பதவி விலக சொல்லியும் விலகலையாம். இதனால, கட்சியில இருந்து நீக்கிட்டாங்களாம். இந்த கோபத்துல தான், இப்படி பேசுறார்ன்னு சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.

''வர்ற எலக்ஷன்ல, திருப்பூர் தொகுதியில, திரும்பவும் தோழர் கட்சியை சேர்ந்தவங்க தான் போட்டி போடுவாங்க போல. இப்ப இருக்கவரு தான், திரும்பவும் நிக்கப் போறாரான்னு, கட்சிக்காரங்ககிட்ட கேட்டா, மத்த கட்சி மாதிரி விருப்ப மனு கொடுத்து 'சீட்' கேட்கிற நடைமுறை எங்க கட்சியில இல்ல,''

''தேசிய தலைமை யாரை கைகாட்டுதோ, அவங்க தான் வேட்பாளரு. அவங்களுக்கு தான் நாங்க தேர்தல் வேலை செய்தாகணும். இப்போதைக்கு தேர்தல் நிதி மட்டும்தான் வசூல் செய்ய சொல்லியிருக்காங்கன்னு சொல்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''பொது தேர்வு துவங்கிடுச்சு; டீச்சர்களுக்கு வேறவேற ஸ்கூல்ல டியூட்டி போட்டிருக்காங்க. இதுல என்ன ஒரு கொடுமைன்னா. சில சீனியர் டீச்சர்ஸ், 'எங்களுக்கு வேற இடத்துல 'டியூட்டி' போடுங்க; நீங்க 'டியூட்டி' போட்டிருக்க ஸ்கூல் ரொம்ப துாரம்னு, பெரிய அதிகாரிகள் கிட்ட போய் கோரிக்கை வைக்கிறாங்களாம். ''எல்லாத்துக்கும் பக்கம் பக்கமா இருக்க ஸ்கூல்ல தான் 'டியூட்டி' போட்டிருக்காங்க,''

''இப்படி எங்களை தொல்லை பண்ணிங்கன்னா, கலெக்டர்கிட்ட புகார் சொல்லி, துறை ரீதியா நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்'ன்னு, சொல்ற அளவுக்கு நிலைமை போயிடுச்சாம்,'' என்றாள் மித்ரா.

வேண்டாத வேலை...


''மித்து, சிட்டியிலுள்ள ஒரு கவர்மென்ட் காலேஜில், முன்னாள் மாணவர் அறக்கட்டளை என்ற பெயரில், படிக்கிற பசங்ககிட்ட டொனேஷன் நன்கொடை வசூல் பண்றாங்க. 'இப்படி வசூல் பண்ற தொகை, எங்கே போகுதுன்னு தெரியலை'ன்னு சி.எம்., தனிப்பிரிவுக்கு பெட்டிஷன் பறந்துடுச்சாம்...'' என்றாள் சித்ரா.

''அக்கா, இதேபோல அவிநாசி காலேஜில நடந்த ஒரு விஷயத்தை சொல்றேன் கேளுங்க. ஒரு ஓட்டல் அறைல, அந்த காலேஜ் மாணவர்கள் ஏற்பாட்டுல, தி.மு.க., வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், 'தமிழ் மாணவர் மன்றம்' துவக்க விழா நடைபெற இருக்கிறதாவும், இதுல, கட்சியோட மாவட்ட செயலாளர், கட்சியோட முக்கிய நிர்வாகிங்க கலந்துக்க போறதாவும் 'வாட்ஸ் ஆப்'ல தகவல் வந்துச்சாம்''

''இதனை பார்த்த, காலேஜ் மேனேஜ்மென்ட், அப்படியே 'ஷாக்' ஆகிட்டாங்களாம். 'எங்களுக்கே தெரியாம, எப்படி எங்க பசங்களை வெச்சு இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணலாம்; இப்போ, 'இன்டர்னல் எக்ஸாம்' வேற நடந்துட்டு இருக்கு'ன்னு சொல்லி, பசங்க யாரும் காலேஜ்ல இருந்து வெளியே போகாத மாதிரி, 'கேட்'டையெல்லாம் பூட்டி வச்சுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''படிக்கற பசங்களுக்கு அரசியல் எதுக்கு...'' என அங்கலாய்த்த சித்ரா, போலீஸ் மேட்டருக்கு தாவினாள்.

''ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வடக்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல, ஒரு 'போக்சோ' கேஸ் போட்டிருக்காங்க. இது சம்பந்தமாக வழக்கு நடந்து, முடிஞ்சும் போச்சாம். வழக்கு போடறப்போ, புகார்தாரருங்க, வழக்குல சம்மந்தப்பட்டவங்ககிட்ட இருந்து விசாரணைக்குன்னு வாங்கி வைச்ச மொபைல் போன்களை இதுவரை திருப்பித்தராம வச்சிருக்காங்களாம். எப்போ கேட்டாலும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அலைக்கழிக்கிறாங்களாம்,'' என்றாள்.

''இப்படி பண்ணா என்னங்க்கா பண்றது?'' என ஆதங்கப்பட்ட மித்ரா, ''ஒவ் வொரு மாசமும், மூன்றாவது வாரத்துல, சப்-கலெக்டர் ஆபீசில், கோட்ட அளவுல விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்துவாங்களாம். அதுல, தீர்வு கிடைக்காத பட்சத்துல, மாச கடைசியில, கலெக்டர் தலைமையில நடக்குற கூட்டத்துல, விவாதிச்சு முடிவெடுப் பாங்களாம்,''

''ஆனா, இப்பெல்லாம், கலெக்டர் தலைமையில நடக்குற கூட்டத்துக்கு ஒரு நாள் முன்னாடி தான், கோட்ட அளவிலான கூட்டம் நடத்துறாங்களாம். சப் - கலெக்டர் ஆபீசில் நடக்கிற குறைகேட்பு கூட்டம் சம்மந்தமா 'மீடியா'க்காரங்களுக்கு கூட தகவல் சொல்றது இல்லையாம். சின்ன ரூம்ல கூட்டம் நடக்கிறதால, விவசாயிங்க கால்கடுக்க நின்னுக்கிட்டே தான், குறைகளை சொல்ல வேண்டியிருக்காம்,'' என்றாள்.

ஆளுங்கட்சியின் 'டார்ச்சர் கேம்'


''ஆளும்கட்சி 'டார்ச்சர்' தாங்காமதான், அதிகாரி 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு போனதா பேசிக்கறாங்க,'' என, பல்லடம் முனிசிபல் குறித்து மித்ரா கேட்க, 'டெண்டர் விவகாரத்துல ஆரம்பிச்சு, அதிகாரிக்கும், வி.ஐ.பி.,க்கும் ஏழாம் பொருத்தமா ஆகிடுச்சாம். 'அதனால்தான் வந்த கொஞ்ச நாளாலயே அதிகாரி டிரான்ஸ்பர் ஆகிட்டாராம்,'' என்றாள் சித்ரா.

''தன்னோட ரூமுக்கு யார் வந்தாலும் மொபைல் போன் எடுத்துட்டு வரக்கூடாதுன்னு தனியா ரூல்ஸ் போட்டிருக்காராம் அந்த சவுத் பொல்யூஷன் ஆபீசில உள்ள 'சாமி'யான அதிகாரி. கலெக்டர் ஆபீசிலகூட இந்த மாதிரி கட்டுப்பாடு இல்லையே! என்ற மித்து, 'ஒரு வேளை, எங்க தன்னோட குட்டு வெளிப்பட்டுருமோன்னு பயத்துல இப்படியான ரூல்ஸ் போட்டுருக்காரோ என்னவோ,'' என்ற சித்ரா,

''எலக் ஷன் டைமில, இன்னும் என்னென்ன கூத்து நடக்கப்போகுதுன்னு தெரியலே,'' என்ற மித்ராவிடம், ''வா மித்து. கடைவீதி வரைக்கும் போய்ட்டு வந்துடலாம்,'' என, சித்ரா சொல்ல, ''ஓ.கே.,'' என்றாள்.






      Dinamalar
      Follow us