sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

'புஸ்வாணம்' ஆன அதிகாரி அதிரடி; நமத்துப்போகாத 'தோழர்' சரவெடி

/

'புஸ்வாணம்' ஆன அதிகாரி அதிரடி; நமத்துப்போகாத 'தோழர்' சரவெடி

'புஸ்வாணம்' ஆன அதிகாரி அதிரடி; நமத்துப்போகாத 'தோழர்' சரவெடி

'புஸ்வாணம்' ஆன அதிகாரி அதிரடி; நமத்துப்போகாத 'தோழர்' சரவெடி


ADDED : ஏப் 29, 2025 06:35 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூடான விவகாரத்துடன் வந்தாள் மித்ரா.

''சித்ராக்கா... ஆன்லைன்ல விண்ணப்பிச்சா 30 நாளுக்குள்ள கட்டட அனுமதி கொடுக்கணும்னு ரூல்ஸ் இருக்கு... 30 நாள்ல அனுமதி கொடுக்கலைன்னு, மாவட்டத்தில 7 ஊராட்சி செயலர்களைப் பணியில் இருந்து விடுவிக்கச்சொல்லி ஊராட்சி களோட 'பெரிய' அதிகாரி அதிரடி நடவடிக்கை எடுத்தாரு...

''இப்ப, அது புஸ்வாணம் ஆயிருச்சு... சென்னைல ஏற்பட்ட சர்வர் கோளாறுதான் 'அப்டேட்' ஆகாததுக்கு காரணம்னு தெரியவந்திருக்காம்.

''இதனால, இப்ப என்ன பண்ற துன்னு தெரியாம அதிகாரிகள் கையைப் பிசையறாங்களாம்''

''மித்து... அதிரடி நல்லதுதான். ஆனா, அதுல ஆபத்தும் இருக்கு... சிட்டில மன நிலை பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில இருக்கறவங்கல மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரில சிகிச்சை அளிக்கணும்னா, ஸ்டேஷன்ல இருந்து போலீஸ் தரப்புல, மருத்துவக்குழு அளிக்கிற தகவல் அடிப்படைல சி.எஸ்.ஆர்., பதிவு பண்ணிக் கொடுக்கணும்.

''தெற்கு உள்ளிட்ட ஸ்டேஷன்கள்ல மனிதாபிமானம் பார்க்காம, சி.எஸ்.ஆர்., பதிவு பண்ண மறுத்துடறாங்களாம். கமிஷனர்தான் இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்''

ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் சித்ரா.

''அக்கா... கல்வி அலுவலக ஊழியர், வங்கிக்கணக்குல இருந்து 3 லட்சம் ரூபா கையாடல் செஞ்சுட்டாராம்.

''சாதி அடிப்படையில கண் காணிப்பாளர் கரிசனம் காட்டி ஒரு வருஷமா நடவடிக்கை ஏதும் இல்லாம ஊழியரை காப்பாத்துனாராம்.

''பணத்தைத் திரும்ப கட்டுன பின்னாடி, நடவடிக்கை எடுத்த மாதிரி, அவரை 'காளை' ஊருக்கு மாத்திட்டாங்களாம்''

விரக்தியில் ஓதுவார்


''மித்து... அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா தொடர்பா அவிநாசில தான் வழக்கமாக அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடக்குமாம். இந்த முறை திருப்பூர்ல நடத்தியிருக்காங்க... இது சரிதானான்னு கேள்வி எழுந்திருக்கு.

''தேர்த்திருவிழா பத்திரிகை அச்சடிச்சதில ஏராளமான பிழை இருந்துச்சாம். இதுனால, பத்திரிகை வினியோகம் 'லேட்'டாயிருச்சு.

''மணியம் வேலையையும் சேர்த்துப்பார்த்து வந்த ஓதுவார்தான் இதுக்குக் காரணம்னு கடுமையா அவரைத் திட்டிட்டாங்களாம்.

''விரக்தியடைஞ்ச அவர், நான் ஓதுவார் வேலையை மட்டும் பார்த்துக்கறேன்னு எழுதிக்கொடுத்துட்டு ஒரு வார 'லீவு'ல போய்ட்டாராம்''

''சித்ராக்கா... போக்குவரத்து விதிமுறை மீறுனா போலீசார் 'பைன்' போடுறது 'ஓகே'. ஆனா, சிட்டில, வாகனங்களை ஒழுங்கான இடத்துல நிறுத்துனா கூட, 'நோ பார்க்கிங்'ல நிறுத்துனதா சொல்லி 'பைன்' போடுறாங்களாம்.

''அதேமாதிரி மாதத் துவக்கம் மற்றும் இறுதி வாரத்துல 'பைன்' அதிகம் வசூலிக் கணும்கறதுக்காக, மங்கலம் ரோடு மாட்டுக்கொட்டகை போன்ற வளைவு மற்றும் விபத்து பகுதி கள்ல திடீர்னு வாகனங்களை நிறுத்துறாங்களாம்.

''கமிஷனர் சொல்ற அறிவுரையைக் காத்துல பறக்க விடுறதுனா இதுதான்''

அங்கலாய்த்தாள் மித்ரா.

மேயர் 'இருட்டடிப்பு'


''அக்கா... விசைத்தறியாளர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர்றது தொடர்பான பேச்சுவார்த்தைல, மேயர் தினேஷ்குமாரோட பங்களிப்பு முக்கியமானதா இருந்திருக்கு...

''ஆனா பேச்சுவார்த்தை முடிவுல இவரோட பேரை இருட்டடிப்பு பண்ணீட்டதா வடக்கு மாவட்ட தி.மு.க.,ல சலசலப்பு எழுந்திருக்கு''

''மித்து... அரசியல்ல இது சகஜம்தான். மாநகராட்சி அலுவலகத்துல மேயர்கிட்ட மனு கொடுக்க பொதுமக்கள் பலரும் தினமும் வர்றாங்க...

''கட்சிக்காரங்க, கூட்டணிக் கட்சிக்காரங்க, வி.ஐ.பி.,க்கள், மேயரோட உதவியாளர் அறை வழியா போய் உடனடியா மேயரைச் சந்திக்க முடியுதாம். ஆனா, பொதுமக்கள் சந்திக்கிறதுக்கு நீண்ட நேரம் ஆகுதாம்.

''மேயர் எல்லாரையும் ஒரே மாதிரி 'ட்ரீட்' பண்ணனும்னு மக்கள் ஆதங்கப்படறாங்க... சரிதானே''

தலையை அசைத்தாள் மித்ரா.

'ரகசியம்' காக்காத போலீஸ்


''மித்து... போயம்பாளையத்துல ஒரு வழிபாட்டுத்தலத்துல கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துனதா ஒருத்தர் '100'க்கு போன் பண்ணியிருக்காரு...

''இதை விசாரிக்க வந்த அனுப்பர்பாளையம் போலீஸ், புகார் சொன்ன நபர் 'யார்'னு சொல்லிட்டாங்களாம். உடனே, ஆளாளுக்கு போன் பண்ணி, புகார்தாரரை வசை பாடியிருக்காங்க. போலீஸ்காரங்களே இப்படிப் பண்ணலாமான்னு புகார் கொடுத்தவர் புலம்புறாராம்''

''சித்ராக்கா... திருமுருகன்பூண்டி நகராட்சி தேர்தல்ல, தி.மு.க., அதிக இடங்களைக் கைப்பற்றினாலும், கூட்டணிங்கறதால, மா.கம்யூ.,வுக்கு நகராட்சி தலைவர் பதவின்னு தி.மு.க., மேலிடம் முடிவு பண்ணுச்சு.

''கடைசில, இ.கம்யூ., - தி.மு.க., கவுன்சிலர்கள் சேர்ந்து தி.மு.க., கவுன்சிலர் குமாரை நகராட்சி தலைவராக தேர்ந் தெடுத்துட்டாங்க. இதுக்குப் பரிசா இ.கம்யூ.,வுக்கு துணைத்தலைவர் பதவி வழங்கினாங்க...

''இதனால ஏற்பட்ட கோபம், மா.கம்யூ.,வுக்கு இன்னும் தீரல. வழக்கமா மே தின கூட்டம், ஊர்வலத்தை மா.கம்யூ.,வும், இ.கம்யூ.,வும் இணைஞ்சுதான் நடத்துவாங்க.

''ஆனா இப்பத் தனித்தனியா நடத்துறாங்கன்னா பார்த்துக்கோங்கக்கா''

''தோழர்கள் பத்தவச்ச 'சரவெடி' இன்னும் நமத்துப்போகலேன்னு சொல்லு''

இருவரும் கலகலத்தனர்.

கஞ்சா கடத்தல் ஜோர்


''மித்து... அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துல 3 வருஷத்துக்கு மேல வேலை செய்ற ஆபீசர்ைஸ டிரான்ஸ்பர் செய்றதுக்கான நடவடிக்கை துவங்கியிருக்கு... கேள்விப்பட்டதும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இதே இடத்துலயே ஆபீசர்ஸ் நங்கூரம் போட்டுட்டாங்களாம்''

''அக்கா... அரசு டவுன் பஸ்ல பெண்களுக்கு இலவசம்ங்கறதால, தனியார் பஸ்களுக்கு கலெக்ஷன் குறைஞ்சிருச்சு... பெண்கள், மாணவியர்களை ஈர்க்க, தனியார் பஸ்கள்ல, குறைந்தபட்ச கட்டணம் அஞ்சு ரூபான்னு அறிவிப்பு வச்சிருக்காங்களாம்.

''மித்து... வடமாநிலங்கள்ல இருந்து ரயில் மூலமா கஞ்சா கடத்தப்பட்டு வர்றது தெரிஞ்சு விஷயம்தான்.

''ஆனா... பகல் நேர ரயில்கள்ல சோதிக்கிற ரயில்வே போலீஸ், இரவு நேர ரயில்கள்ல சோதிக்கறதில்ல... இதைத் தெரிஞ்சுக்கிட்டு, இதுக்கேத்த மாதிரி கஞ்சா கடத்தல் ஜரூரா நடக்குது''

''அக்கா... புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு 100 மீ., தொலைவில் மதுக்கடை இருக்கு. பார் இல்லாததால, ரோட்டோரத்தில அமர்ந்து 'குடி'மகன்கள் மது குடிக்கிறாங்களாம். போலீசார் கண்காணிப்பு பேருக்குக்கூட இல்லையாம்''

நிஜத்தை வெளிப்படுத்தினாள் மித்ரா.

மிரட்டிய இன்ஸ்பெக்டர்


''மித்து... கலெக்டர் ஆபீஸ்ல குறைதீர்ப்புக் கூட்டம் திங்கள்கிழமைதோறும் நடக்குது...கலெக்டர் கார் முன்னாடி, ஒரு பெண், குடும்ப பிரச்னை காரணமாக கெரசின் ஊத்தி தீக்குளிக்க முயன்றார். போலீசார் யாருக்கும் தெரியாம ஸ்டேஷனுக்கு கொண்டுபோறதுக்காக ஜீப்ல அந்தப் பெண்ணை ஏத்துனாங்க.

''இதைத் தெரிஞ்சுக்கிட்ட பத்திரிகைகாரங்க விசாரிக்கப் போனதும், இன்ஸ்பெக்டர், அந்தப் பெண்ணிடம், 'ஒண்ணும் சொல்லக்கூடாது'ன்னு மிரட்டுனாராம்''

''அக்கா... 'காளை' ஊர்ல நகராட்சி கமிஷனரா இருந்தவரு, கொசு ஒழிப்பு பணியாளர் நியமனத்துல முறைகேடை கண்டறிஞ்சு, 40 பேரை பணில இருந்து நீக்குனார். இந்த ஆத்திரத்துல, சில அலுவலர்களோட துாண்டுதல்ல 3 பெண் தொழிலாளர்கள், அவர் மேல வன்கொடுமைப் புகார் கொடுக்க வச்சாங்க...

''இதனால சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர், ஐகோர்ட்ல வழக்கு தொடர்ந்து நிரபராதின்னு தன்னை நிரூபிச்சு மீண்டும் வேறு இடத்தில் பணியில் இணைஞ்சிருக்காரு...

''பொய்ப்புகாரால தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக பெண் தொழிலாளரிடம் தலா 50 லட்சம்ன்னு ஒண்ணரைக் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிச்சிருக்காராம். நோட்டீஸை வாங்கினவங்க, அதிர்ச்சில உறைஞ்சிருக்காங்களாம்''

''சரி... சரி... நீ ஏன் அதிர்ச்சில உறைஞ்ச மாதிரி இருக்கே... கூலா, ஆரஞ்ச் ஜூஸ் குடி''

ஜூஸை ருசிக்கத் துவங்கினாள் மித்ரா. வெயில்தணிவதாக இல்லை.

''கட்சிக்காரங்க, கூட்டணிக்கட்சிக் காரங்க, வி.ஐ.பி.,க்கள், மேயரோட உதவியாளர் அறை வழியா போய் உடனடியா மேயரைச் சந்திக்க முடியுதாம். ஆனா, பொதுமக்கள் சந்திக்கிறதுக்கு நீண்ட நேரம் ஆகுதாம்''

''பகல் நேர ரயில்கள்ல சோதிக்கிற ரயில்வே போலீஸ், இரவு நேர ரயில்கள்ல சோதிக்கறதில்ல... இதைத் தெரிஞ்சுக்கிட்டு, இதுக்கேத்த மாதிரி கஞ்சா கடத்தல் ஜரூரா நடக்குது''






      Dinamalar
      Follow us