/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
கோடியில போடறாங்க ரோடு... மாமூல 'வெட்டிட்டு' போடு! ஆளுங்கட்சி உ.பி.,ஸ் 'அட்ராசிட்டி': வசூலில் தோத்து போகும் 'மெட்ரோ சிட்டி'
/
கோடியில போடறாங்க ரோடு... மாமூல 'வெட்டிட்டு' போடு! ஆளுங்கட்சி உ.பி.,ஸ் 'அட்ராசிட்டி': வசூலில் தோத்து போகும் 'மெட்ரோ சிட்டி'
கோடியில போடறாங்க ரோடு... மாமூல 'வெட்டிட்டு' போடு! ஆளுங்கட்சி உ.பி.,ஸ் 'அட்ராசிட்டி': வசூலில் தோத்து போகும் 'மெட்ரோ சிட்டி'
கோடியில போடறாங்க ரோடு... மாமூல 'வெட்டிட்டு' போடு! ஆளுங்கட்சி உ.பி.,ஸ் 'அட்ராசிட்டி': வசூலில் தோத்து போகும் 'மெட்ரோ சிட்டி'
UPDATED : மார் 12, 2024 02:38 AM
ADDED : மார் 12, 2024 01:28 AM

சற்றே வெயில் தணிந்த மாலை நேரம், மாநகராட்சி பூங்காவுக்கு சென்றனர் சித்ராவும், மித்ராவும். அங்கிருந்த கேன்டீனில், 'பாப்கார்ன்' வாங்கி கொண்டு, ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
''பூங்கா பராமரிப்பு ரொம்ப சுமாரா தான் இருக்குங்க்கா...'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து. சிட்டிக்குள்ல இந்த பூங்கா இருக்கு, சுத்தியும் ரோடு. இதுல, பூங்காவை, 'பொல்யூஷன்' இல்லாம பராமரிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும், இன்னும் கொஞ்சம் நல்லாவே பராமரிக்கலாம்,'' என, ஆதங்கப்பட்டாள் சித்ரா.
''திடீரென, மித்ராவின் மொபைல் போனுக்கு ஒரு 'மெசேஜ்' வர, எடுத்து பார்த்தவள் அதிர்ந்தாள். ''அய்யோ... என்னக்கா இது. என் வண்டி 'நோ பார்க்கிங்ல' நிறுத்தியிருந்ததா சொல்லி, டிராபிக் போலீஸ்காரங்க, 100 ரூபாய் 'பைன்' போட்டிருக்கிறதா, 'மெசேஜ்' வருது'' என்றாள்.
''உனக்கு மட்டுமில்ல மித்து, இதுபோல, 'டிராபிக் ரூல்ஸ்' மீறுனதா, 'மெசேஜ்' வருது. 'பைன் அமவுன்டை' ஆன்லைன்ல கட்டிக்கலாம். கோயமுத்துார்ல இருந்து, சிட்டிக்கு புதுசா வந்திருக்கிற ஒரு ஆபீசர், அங்க டிராபிக்கை மட்டும் தான் பார்த்துட்டு இருந்தாராம். இங்க, டிராபிக்கோட சேர்த்து, சட்டம் ஒழுங்கையும் கவனிக்கிறாராம்,''
''இதுல என்ன ஒரு கொடுமைன்னா, டிராபிக் விதிமீறல் சம்மந்தமா நிறைய கேஸ் போடணும்ன்னு, அதிகாரிகளுக்கு 'டார்கெட்' பிக்ஸ் பண்ணி, 'டார்ச்செர்' பண்றாராம். வேற வழியில்லாம, 'நோ பார்க்கிங்'ல நிற்கிற வண்டிங்க, சிக்னல்ல பச்சை லைட் வர்றதுக்கு முன்னாடி சிக்னலை கடந்து போக 'ட்ரை' பண்ற வண்டிகளோட நம்பரை, மொபைல் போன்ல போட்டோ எடுத்து வைச்சுக்கிட்டு, அப்புறம் 'பைன்' போட்டு, வண்டியோட உரிமையாளரோட போன் நம்பருக்கு 'மெசேஜ்' அனுப்பறாங்களாம்,'' என நிலைமையை விளக்கினாள் சித்ரா
அதிகாரத்தை சொல்லி...
''கனிம வளம் கடத்தல் விவகாரத்தில ஆளுங்கட்சி பலத்தை காண்பிச்சிட்டாங்க பார்த்தீங்களா,'' என, 'சட்'டென பேச்சை மாற்றிய மித்ரா தொடர்ந்தாள்.
''தாராபுரத்துல இருந்து, எந்தவொரு அனுமதியும் வாங்காம, கிராவல் மண் ஏத்திட்டு வந்த ஒரு லாரியை, இளம் அதிகாரி ஒருத்தரு மடக்கிப்பிடிச்சாருல்ல; 'அவங்க நம்மாளுங்க தான்; லாரியை விட்ருங்க'ன்னு மினிஸ்டரோட பி.ஏ., ஒருத்தரு 'பிரஷர்' கொடுக்க, அந்த அதிகாரி ஒத்துக்கவே இல்லை யாம்,''
''எங்களுக்கு ஒத்து போகலைன்னா துாக்கி அடிச்சுடு வோம்,'னு, பி.ஏ., தரப்பு மிரட்டியும், அந்த ஆபீசரு வளைஞ்சு போகலையாம். 'மேலிடம்' வரைக்கும் பேசி, லாரியை விடுவிக்க வச்சிட்டாங்களாம். அந்த கனிம வள ஆபீசரையும், பல்லடத்துல ரெவின்யூ பிரிவுக்கு மாத்திட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''நிறைய இடங்கள்ல மினிஸ்டர், எம்.எல்.ஏ., பேரை சொல்லிக்கிட்டு ஆளுங்கட்சிக்காரங்க பண்ற அளப்பறை தாங்க முடியலையாம். எலக்ஷன் டைம் இப்டி பண்ணா, மக்கள்கிட்ட கெட்ட பேரு தானே வரும். இப்டி தான், அவிநாசி, மங்கலம் ரோட்ல, ஒரு கோடி ரூபாய் மதிப்புல ரோடு போடப்போறாங்களாம். ஆனா, எங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காம ஒரு செங்கலை கூட தொடக்கூடதுன்னு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,ங்க 'பிரஷர்' கொடுத்துட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அங்க மட்டுமில்ல மித்து, எல்லா பக்கமும் இப்படி தான் நடக்குது. இப்படியே போச்சுன்னா, போலீஸ் பாதுகாப்போட தான், கான்ட்ராக்டர்ங்க வேலை செய்ய வேண்டியிருக்கும் போல...'' என சிரித்த சித்ரா, ''அவிநாசின்னு சொன்னதும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது,'' என தொடர்ந்தாள்.
''அவிநாசி பக்கத்துல இருக்கற சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துல, ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா வாழைத்தார் ஏலம் கொண்டு வந்தாங்க. பொதுவா, 'புரோக்கர்'ங்க பிடியில தான் வாழைத்தார் வர்த்தகம் நடந்துட்டு இருக்காம். இந்த நிலைமைலேயும், விவசாயிங்க சிலரு கடைவெட்டு வாழைத்தாரை எடுத்துட்டு வந்து, ஏலத்துல வித்துட்டு இருந்தாங்களாம்''
''திடீர்ன்னு பார்த்தா, அங்கிருந்த ஆபீசரை 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்களாம். இதனால, போன வாரம் நடக்க இருந்த ஏலத்துக்கு, சில விவசாயிங்க வாழைத்தாரை கொண்டு வந்தும், வியாபாரிங்க வராததால, ஏலத்தை ரத்து பண்ணிட்டாங்களாம்,'' என நொந்துக் கொண்டாள் சித்ரா.
''ஏதாவது புதுசா ஒரு டெவலப்மென்ட் பண்ணலாம்ன்னு வர்ற அதிகாரிகளை இப்படி, 'டக்'குன்னு மாத்தினா என்னதான் பண்றது,'' என ஆதங்கப் பட்டாள் மித்ரா.
'பஞ்சாயத்து' இன்னும் தீரல!
கையில் இருந்த 'பாப்கார்ன்' தீர்ந்து போக, இருவரும், மெல்ல 'வாக்கிங்' சென்றனர். ''பூங்காவில் ஆங்காங்கே ஜோடியாய் அமர்ந்திருந்த, காதல் ஜோடிகளை, 'வாட்ச்மேன்' விரட்டிக் கொண்டிருந்தார்.
''இந்த வாட்ச்மேனை பார்த்ததும், எனக்கு பல்லடம் மேட்டர் ஒன்னு ஞாபகத்துக்கு வருதுங்க்கா,'' என்ற மித்ரா, ''அந்த தாலுகா ஆபீசில, நைட் நேரத்துல கமிஷன் கைமாறின விவகாரத்தை பார்த்த 'நைட் வாட்ச்மேனை' சம்மந்தமே இல்லாம 'டிஸ்மிஸ்' பண்ணாங்கல்ல. ஆறு மாசமாகியும், அவருக்கு சம்பளம் தரலையாம்'' என ஆதங்கப்பட்டாள்.
''ஊத்துக்குளி, தட்டாஞ்சிறை பக்கத்துல இருக்கற ஒரு ரேஷன் ஊழியரு, கடையை சரியா திறக்கறது இல்லைன்னு, சம்மந்தப்பட்ட அதிகாரிகிட்ட சிலரு 'கம்ப்ளைன்ட்' பண்ணியிருக்காங்க. இத தெரிஞ்சுக்கிட்ட அவர், புகார் கொடுத்தவரை கூப்பிட்டு மிரட்டியிருக்காராம். இதனையும் ஆதாரத்தோட, கூட்டுறவுத்துறை அதிகாரிங்க கவனத்துக்கு கொண்டு போயிருக்காங்க சில சமூக ஆர்வலருங்க. அதுக்கப்புறம், அந்த ஊழியரை 'சஸ்பெண்ட்' பண்ணியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''இந்த பிரச்னையை ஆரம்பித்திலயே கிள்ளி எறிஞ்சிருந்தா, இந்தளவுக்கு நிலைமை போயிருக்காதுல்ல'' என, அங்கலாய்த்த மித்ரா, ''நிறைய இடங்கள்ல வீடுவீடாக போய் ரேஷன் அரிசியை வாங்குற 'பிசினஸ்' கனஜோரா நடக்குதாம். வண்டி, சாக்குப்பை சகிதமா போற ஆட்கள், கிலோவுக்கு, 10 ரூபாய் வரைக்கும் கொடுத்து ரேஷன் அரிசியை வாங்கிட்டு போறாங்களாம். இதனால, ரேஷன்கார்டு வைச்சிருக்கறவங்க, ரேஷன் அரிசி எப்படியிருந்தாலும் வாங்கிட்டுப் போய் வீட்ல வைச்சிக்கிறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''எந்தெந்த வகையில காசு பார்க்கணுமோ அந்தந்த வகையில காசு பார்க்கிறது பலருக்கு தொழிலாவே போச்சு...'' என்ற மித்ரா,''போயம்பாளையம் பழனிசாமி நகர்ல, 76 சென்ட் நிலம், ரெவின்யூ ரெக்கார்டுல, 'கல்லாங்குத்து'ன்னு பதிவாகி இருக்காம். அதோட வழிகாட்டி மதிப்பு, பூஜ்யம்ன்னு குறிப்பிட்டிருக்காங்களாம். ஆனா, அந்த இடத்தை சிலரு ஆக்கிர மிச்சு, கடைங்க கட்டி வாடகை வசூல் பண்ணிட்டு இருக்காங்களாம். இதுசம்மந்தமா அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அனுப்பியும், நடவடிக்கை இல்லைன்னு அங்க இருக்கற சிலரு புலம்பறாங்க,'' என்றாள்.
''சரிங்க அக்கா கிளம்பலாம்'' என, மித்ரா சொல்ல, ''ம்ம்ம்... போலாம்'' என, மித்ராவும் ஆமோதிக்க, இருவரும், பூங்காவை விட்டு வெளியே சென்றனர். ஸ்கூட்டரில் நொய்யல் ஆற்றை கடந்து மித்ரா விரட்ட, ''என்ன அக்கா... நொய்யல் ஆத்துல சில இடங்கள்ல சாயக்கழிவை திறந்து விடறாங்களாமே'' என கேட்க, ஆமா மித்து.
ஞாயிற்றுக்கிழமைல, சாயங்கால நேரத்துல, சில பனியன் கம்பெனிக்காரங்க சாயக்கழிவுநீரை திறந்து விடறாங்களாம். ஞாயிற்றுக்கிழமை அதிகாரிங்க யாரும் கண்காணிக்க மாட்டாங்கங்ற தைரியத்துல தான் இப்படி பண்றாங்க. அதிகாரிங்க கொஞ்சம் கவனிச்சா பரவாயில்ல,'' என்றாள் சித்ரா.

