sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

பங்கமாகும் பணி நியமன 'ரகசியம்'; தங்கம் வசமாகாமல் போலீஸ் 'வசியம்'

/

பங்கமாகும் பணி நியமன 'ரகசியம்'; தங்கம் வசமாகாமல் போலீஸ் 'வசியம்'

பங்கமாகும் பணி நியமன 'ரகசியம்'; தங்கம் வசமாகாமல் போலீஸ் 'வசியம்'

பங்கமாகும் பணி நியமன 'ரகசியம்'; தங்கம் வசமாகாமல் போலீஸ் 'வசியம்'


ADDED : ஏப் 08, 2025 05:58 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''திருப்பூர்ல சூறைக்காத்து, மழைன்னு வெளுத்து வாங்குது... சட்டுன்னு வானிலை மாறிப்போச்சு, சித்ராக்கா''

''மித்து... இதனாலதான் வீட்டுக்கே வரலையோ... ஏற்கனவே சிட்டில இருக்கிற ரோடுகள் பல்லாங்குழியா இருக்கு... இப்ப பெஞ்ச மழைல இன்னும் மோசமாயிருச்சு...

''ஸ்மார்ட் சிட்டின்னு சொல்லிக்கிறாங்க... ஆனா, எனக்கென்னமோ ஒரு மாற்றமும் தெரியல.

''சூறைக்காத்துல மரங்கள், மின் கம்பங்கள் நிறைய இடங்கள்ல சாய்ஞ்சிடுச்சு... அதிகாரிகள் போர்க்கால வேகம் காட்டணும்.

''இப்பவே பிரச்னைகளை சரிபண்ணீட்டா, மழைக்காலத்துல 'பாதுகாப்பா' இருக்கலாம்''

''நீங்க சொல்றது சரிதான்... சத்தமே இல்லாம பி.டி.ஓ., பணி மாறுதல் நடந்திருக்கு... தெரியுமாக்கா''

''மித்து உனக்குத் தெரிஞ்ச ரகசியத்தைச் சொல்லேன்''

ஆர்வமானாள் சித்ரா.

சத்தமின்றி மாற்றம்


''சித்ராக்கா ஊரக உள்ளாட்சிகள்ல மக்கள் பிரதிநிதிகள் இல்லைங்கறதால, தனி அலுவலர்கள் ராஜ்யம்தான் நடக்குது. பி.டி.ஓ.,க்கள் தான் தனி அலுவலர்களா செயல்படறாங்க...

''பணி அனுபவம் உள்ள பி.டி.ஓ.,க்கள் ஊராட்சிகள்ல தனி அலுவலரா கோலோச்சத்தான் விரும்பறாங்களாம். கடந்த வாரம் சத்தம் இல்லாம, ஆறு பி.டி.ஓ.,க்கள் இத்தகைய பொறுப்புக்கு மாறீட்டாங்களாம்''

''நிதியை முறையா பயன்படுத்துனாங்கனா சிறப்புத்தான்''

சித்ரா 'பட்'டெனச் சொன்னாள்.

மக்கள் குறைகேட்பு


''சித்ராக்கா... சிட்டி போலீஸ் அதிகாரிட்ட, மனு கொடுக்கவும், பிரச் னைகளை எடுத்துக்கூறவும், பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் வர்றாங்க...

''குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, மீட்டிங் ஹால்ல ஒவ்வொருத்தரையும் வரவழைச்சு, குறைகளைக் கேட்கறாராம்... வெளிப்படைத்தன்மையோட பாரபட்சம் இல்லாம இருக்கறதா, மக்கள் பாராட்டுறாங்க... இதுதொடர்ந்தா நல்லது.

''ஒவ்வொரு அதிகாரியுமே, அனைவரையும் சமமா பாவிச்சு குறைகளைக் கேட்டா, எந்தவிதமான குற்றச்சாட்டும் எழாதுல்ல''

மித்ரா சரியாகத்தான் சொன்னாள்.

போலீஸ் அதிர்ச்சி


''மித்து... லாட்ஜ்கள்ல கஞ்சா, போதைக் கும்பல் யாராவது தங்கியிருக்கிறாங்களான்னு போலீசார் தொடர்ந்து சோதனை நடத்திட்டு வர்றாங்க...

''ஒரு அறைல சோதனை செஞ்சப்ப மூணரைக் கிலோ தங்க நகைகள் இருந்துச்சாம். போலீசார் ஷாக் ஆயிட்டாங்களாம்.

''அறைல தங்கியிருந்தவங்ககிட்ட விசாரிச்சப்ப, ஒருத்தருக்கு விக்கறதுக்காக கொண்டுவந்தோம். பல டிசைன்ல நகைகள் இருக்குன்னு அசால்டா சொல்லியிருக்காங்க. செக் பண்ணிப்பார்த்தா பில் எல்லாம் கரெக்டா வச்சிருந்தாங்களாம்.

''இந்த மாதிரி தங்கியிருக்கிறது ஆபத்து... இப்பத்தான் பல்லடம் பக்கத்துல தங்க நகை வியாபாரிட்ட இருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடிச்சுட்டுப் போயிட்டாங்க... நீங்க உடனடியா உங்க ஊருக்குக் கிளம்புங்கன்னு, பத்திரமா சென்னைக்கு ரயில் ஏத்தி போலீசே அவுங்கள அனுப்பிச்சு வச்சிருக்காங்க...''

''சித்ராக்கா... தங்கத்தை மத்தவங்க வசப்படுத்த முடியாத மாதிரி, போலீஸ் 'வசியம்' பண்ணீட்டாங்கன்னு சொல்லுங்க''

கலகலத்தாள் மித்ரா.

''சித்ராக்கா... ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் சந்திப்புப்பாலம் பக்கத்துல இரவு நேரத்தில பணிமுடிந்து செல்றவங்களோட வாகனங்கள போலீசார் 'சடார்'ன்னு நிறுத்தறாங்களாம். உடனடியாக 'செக்' பண்ணி அனுப்பாம இழுத்தடிக்கிறாங்களாம். ெஹல்மெட் போட்டவங்க, ஆவணங்கள் சரியா கொண்டுவர்றவங்கதான் ரொம்பவே பாதிக்கப்படுறாங்களாம்.

''ஆனா... தினமும் ராத்திரி நேரத்தில ரயில்வே பாலத்துக்குக் கீழே, காதைக் கிழிக்கிற மாதிரி ஹாரன் சத்தத்தோட பைக் சாகசம் நடத்துறவங்கள கண்டுக்கறதில்லையாம்''

மித்ரா 'உச்' கொட்டினாள்.

தைரிய 'ஆபீசர்'


''சித்ராக்கா... திருப்பூர் ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தைப் பலரும் ஆக்கிரமிச்சிருக்காங்க...

''மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே சிலர், கோவில் நிலத்துல வீடு கட்டி வசிக்கிறாங்களாம். இவங்ககிட்ட கோவில் நிர்வாகம் வாடகை வசூலிக்குது.

''ரொம்ப காலமாக வாடகை வசூலிக்கப்படறதில்ல. அவங்களும் வாடகையை முறையா செலுத்தறதில்ல...

''இப்ப இருக்கிற செயல் அலுவலர், வாடகையைக் கணக்கிட்டு நோட்டீஸ் கொடுத்திருக்காரு.

''கடந்த வாரம் மட்டும் மூணு வீடுகளுக்கு, 1.42 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி இருப்பதா குறிப்பிட்டு உடனே செலுத்தணும்னு நோட்டீஸ் வழங்கியிருக்கார்.

''வாடகை செலுத்தலைன்னா, வீட்டை உடனடியா காலி செய்யணும். இல்லாட்டி, சட்டரீதியா நடவடிக்கை எடுப்போம்னு சொல்லியிருக்காரு.

''அரசியல் தலையீட்டையும் மீறி, இவருதான் இப்படி நோட்டீஸ் கொடுத்துருக்காருன்னு சொல்றாங்க... அரசியல்வாதிங்க அமைதியா இருந் தாங்கன்னா பரவாயில்ல''

சித்ரா ஆமோதித்தாள்.

ஏற்கனவே நியமனம்?


''மித்து... அங்கன்வாடிப் பணியாளர் காலியிடங்களுக்குப் பணி நியமனம் நடக்குறதா அறிவிச்சிருக்காங்க... மொத்தம் 43 பணியிடமாம்.

''ஆனா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் வெளியிட்ட அறிக்கைல, எந்தெந்த ஒன்றியத்துல பணியிடம் காலியா இருக்குதுங்கற விவரத்தை வெளியிடல... 10 அமைப்பாளர்கள், 33 உதவியாளர்கள்ன்னு மொட்டையா சொல்லியிருக்காங்க...

''வட்டார அலுவலகத்துக்கு நேரில் சென்று, காலியிட விவரத்தைத் தெரிஞ்சுக்கலாம்ன்னு அறிவிச்சிருக்காங்க.

''இது விண்ணப்ப தாரர்களை அலைக்கழிக்க வைக்கறதுக்குத்தான்னு வெளிப்படையா தெரியுது.

''ஏற்கனவே நியமனப் பட்டியல் தயாராயிருச்சு போல. சம்பிரதாயத்துக்கு அறிக்கை கொடுத்துருக்காங்கன்னு விண்ணப்பிக்கிறவங்க 'பங்கமா' கலாய்க்கிறாங்க...

''சந்தேகத்தைப் போக் கலைன்னா, இவங்க சொல்றது உண்மைங்கறது போல ஆயிடும்...

''மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்துதான்னு பார்ப்போம்''

மித்ரா தலையசைத்தாள்.

எதனால் மின்வெட்டு?


''சித்ராக்கா... பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குறதுனால, மின் தடையே கூடாதுங்கறதுக்காக, போன மாசம் துணை மின் நிலையங்கள்ல பராமரிப்புப்பணி நடக்கவே இல்ல.

''ஆனா, திருப்பூர், மங்கலம், அவிநாசி பகுதில அடிக்கடி மின்வெட்டு ஏற்படுதாம். குறிப்பா காலை, இரவு, மதிய நேரத்தில அரை மணி நேரம் வரைக்கும் மின்வெட்டு நடக்குது.

''பராமரிப்புப்பணி இல்லாததுனால தான் திடீர்னு பழுது காரணமாக மின்வெட்டு ஏற்படுதுன்னு அதிகாரிங்க சொல்றாங்களாம். உண்மை இதுதானாங்கறதும் தெரியல''

மித்ரா சந்தேகத்துடன் சொன்னாள்.

பூத் கமிட்டி 'பலம்'


''மித்து... சட்டசபை தேர்தலுக்காக திருப்பூர்ல அ.தி.மு.க., பூத் கமிட்டியை ஸ்ட்ராங்கா ஏற்படுத்தியிருக்காங்களாம். பூத் வாரியா புதிய நிர்வாகிகளோட பேசி 'குரூப்' போட்டோ எடுத்து, அதைக் கட்சித் தலைமைக்கு பொறுப்பாளர்கள் அனுப்பீட்டு இருக்காங்க. பன்னீர்செல்வம் - தினகரன் ஆதரவாளருங்க பூத் கமிட்டில நுழைஞ்சிடக்கூடாதுங்கறதுல கட்சிக்காரங்க தெளிவா இருக்காங்களாம்''

''சித்ராக்கா... பல்லடம் பத்திர ஆபீஸ், சண்டே அன்னைக்கு, கேட் உள்பக்கமா பூட்டியிருக்க, ஆபீைஸ மட்டும் அடிக்கடி திறந்தாங்களாம். வேலையென்னவோ படுமந்தமாதான் நடக்குதாம். இதுல சண்டே எதுக்காக ஆபீஸ் திறக்கறாங்களோன்னு பப்ளிக் கேக்குறாங்க''

''மித்து... பப்ளிக் கேக்குறது ஆபீசர்ஸ் காதுல இன்னும் விழல போல''

சிரித்தாள் சித்ரா.

ஓய்வில் எம்.எல்.ஏ.,


''சித்ராக்கா... கறிக்கோழிப் பண்ணை தொகுதி எம்.எல்.ஏ., பெரும்பாலான நேரம் திருப்பூர்ல தான் இருக்காராம். அவரோட வீட்டுக்கு பொதுமக்களும், கட்சிக்காரங்களும் வந்தா, 'அய்யா ரெஸ்ட்ல இருக்காரு'ன்னு உதவியாளர் திருப்பி அனுப்பிச்சுடுறாராம். நொந்து போய் 'ஆனந்தமே' இல்லாம திரும்பறாங்களாம்''

''சரி... மித்து... இதோ, ஆனந்தமா ருசிச்சுக் குடி''

சுடச்சுட டீயை நீட்டினாள் சித்ரா. ஏலக்காய் மணந்தது.






      Dinamalar
      Follow us