தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ 'விஜய் கூட போயிருக்கலாம்' காங். நிர்வாகி பேச்சு: ஆளுங்கட்சி விஐபி கடுப்பு

 'விஜய் கூட போயிருக்கலாம்' காங். நிர்வாகி பேச்சு: ஆளுங்கட்சி விஐபி கடுப்பு

 'விஜய் கூட போயிருக்கலாம்' காங். நிர்வாகி பேச்சு: ஆளுங்கட்சி விஐபி கடுப்பு


ADDED : மார் 10, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

''இ ப்படி 'ஷாப்பிங்' வந்து ரொம்ப நாள் ஆச்சு மித்து... ஒரு காபி குடிக்கலாமா?'' என சித்ரா சொல்ல, 'ஷாப்பிங்' மாலில் இருந்த காபி பாருக்குள் இருவரும்நுழைந்தனர்.

பப்ஸ், காபி 'ஆர்டர்' செய்த படியே, ''அநேகமா அடுத்த வாரம் 'எலக்ஷன்' தேதி சொல்லிடுவாங்க போல சித்ராக்கா,'' பேச்சை துவக்கினாள் மித்ரா.

''ஆமா மித்து. மாவட்ட நிர்வாகமும் எலக்ஷன் வேலையில 'படுபிஸி'யா இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி வாக்காளர் இறுதிப்பட்டியல் 'ரிலீஸ்' பண்ணாங்க. அதுல ஒரு கூத்து என்னன்னா, தோழர்கள் வருவதற்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணிட்டதால, அதிகாரிகிட்ட வாக்குவாதம் பண்ணாங்களாம்,''

''எலக்ஷன் மீட்டிங், அரசின் பார்வையாளர் 'விசிட்'ன்னு, கலெக்டர் ஆபீஸ், 'ஆல்வேஸ் பிஸி,'. எலக்ஷன் செய்திகளை உடனுக்குடன் 'அப்டேட்' செய்யணும்ன்னு, மக்கள் எதிர்பார்க்கிறாங்க. ஆனா, கொஞ்சம் ஸ்லோவாத்தான் இருக்கு...'' என்ற மித்ரா, ''ஒரு வழியா தி.மு.க.வுடன் - காங்கிரஸ் சேர்ந்துட்டாங்க,'' என அரசியல் மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

காலில் விழணுமா? ''அதெல்லாம் சரிதான்க்கா. ரெண்டு நாள் முன்னாடி நடந்த மாவட்ட காங். கூட்டத்தில, 'மாஜி' நிர்வாகி பேசறப்போ, 'அஞ்சு வருஷம் அவங்க கூட இருந்தோம்; என்ன பிரயோஜனம். ஒரு ஆவின் பூத்துக்கு பெர்மிஷன் வாங்கறதுக்கு, எம்.எல்.ஏ.கிட்ட கெஞ்ச வேண்டியிருக்கு. இதுக்கு மேல கால்ல தான் விழணும்னு எதிர்பார்க்கிறாங்க போல. பேசாம, விஜய் பக்கம் போயிருக்கலாம். சீமானை விட அவரு நல்லா ஓட்டு வாங்குவாரு போல,' என ஓபனா பேசியிருக்காரு,'' சிரித்தாள் மித்ரா.

''இத கேள்விப்பட்ட ஆளுங்கட்சி விஐபி டென்ஷனாயிட்டாராம். இப்படி இருந்தா. தி.மு.க.வுக்கு எப்டி வேலை செய்வாங்க,'' கேள்வியெழுப்பிய சித்ரா, ''எலக்ஷன் நெருங்குறதால, மாவட்டம் முழுக்க இருக்கற ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லயும் மூனு வருஷத்துக்கு மேல டியூட்டி பார்த்த ஆபீசர்ஸ், போலீசாரை 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க. ஆனா, ரைட்டர், டிரைவர்கள் பழைய இடத்தை விட்டு நகராம நங்கூரம் போட்டுட்டாங்களாம். அதுக்கு ஸ்டேஷன் ஆபீசர்களும் 'சப்போர்ட்,'' என்றாள் சித்ரா.

''ஒவ்வொரு தடவை 'டிரான்ஸ்பர்' போடறப்போவும் இப்படிதான் நடக்குதுங்கா,'' என்ற மித்ரா, ''அவிநாசி ரோட்ல 'பீக் அவர்ஸ்'ல 'ஓவர் ஸ்பீட்'ல போன ஒரு லாரிக்கு 'கேஸ்' போட்டாங்க. உடனே, 'ரிடையர்டு' ஆபீசர், 'டிராபிக் ஆபீசரோட டிரைவரை போன்ல கூப்பிட்டு, ''என்னப்பா, சம்மந்தம் இல்லாம 'கேஸ்' போடறீங்க; 500 ரூபாய்க்கு பதிலா, 2 ஆயிரம் போட்டிருக்கீங்கன்னு கேட்க, டிரைவரும் காரணங்களை சொல்ல, 'தம்பி, நானும் போலீஸ்காரன்தான். நீங்க பண்றது சரியில்ல. இதுக்காக உங்க மேல 'கேஸ்' போடறேன்னு,' சொல்ல கடுப்பான டிரைவர், ஒருமையில் திட்ட, ரெண்டு பேரும் ரொம்ப மோசமா 'அர்ச்சனை' செஞ்சுட்டாங்களாம்,'' என்றாள்

''டிராபிக் ஆபீசரை விட, டிரைவருக்கு 'பவர்' அதிகம் போல,'' சிரித்த சித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊர்ல புதுசா வந்திருக்கற டிராபிக் ஆபீசர், குறிப்பிட்ட ஒரு போலீஸ்காரரை மட்டும் தான், ரெகுலரா ரவுண்ட்ஸ் கூட்டிட்டு போறாராம். என்ன 'மேட்டர்'னு தெரியல,'' என்றாள்.

கான்ட்ராக்டர் 'அட்ராசிட்டி' பப்ைஸ கடித்தாவறே, ''நேர்மையா இருந்தா. தப்பை கண்டிச்சு போராடக்கூட முடியாது போல'' அங்கலாய்த்தாள் மித்ரா.

''என்ன ஆச்சு மித்து... கொஞ்சம் விளக்கமா சொல்லேன்''

''குண்டடம் யூனியன் ஆபீசுக்கு, யாரோட அனுமதியும் இல்லாம ஆபீஸ்க்குள்ள கட்சிக்காரங்க, பப்ளிக் இப்படி யார் வேணும்னாலும் நுழைஞ்சு, ஆபீஸ்ல வேலை செய்றவங்களோட 'சீட்'டுக்கே போயிடறாங்களாம். அங்கிருக்கிற மேனேஜர், மொதல்ல என்னை பார்த்துட்டு, யாரை, எதுக்கு பார்க்கோணும்னு விவரம் சொல்லிட்டு தான் பார்க்கோணும்னு சொல்லி, அது சம்மந்தமா நோட்டீஸ் போர்டில அறிவிப்பையும் ஒட்டிட்டாராம்,'' அங்க வேலை பார்க்குற மேனேஜரு,'' என்றாள் மித்ரா.

''ஆமா... அது சரிதானே,'' என்ற சித்ராவிடம், ''ஆமாங்க்கா. பா.ஜ.வை சேர்ந்த ஒரு கான்ட்ராக்டர், 'நான் நேரடியா தான் போய் ஆபீசர்களை பார்ப்பேன்னு சொல்லி,' மேனேஜரை அடிக்கவும் பாய்ஞ்சிருக்காரு. இதப்பார்த்த மத்த ஆபீசர்ஸ் 'வீடியோ' எடுத்து, கான்ட்ராக்டர் மேல நடவடிக்கை எடுக்க சொல்லி, கலெக்டர்கிட்ட 'கம்ப்ளைன்ட்' பண்ணிட்டாங்க. ஆனா, நோ ஆக்ஷன். இதுகூட பரவால்ல. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தும் 'நோ யூஸ்'னு, ஆபீசர்கள் புலம்பறாங்க,'' என்றாள் மித்ா.

''நானும் கேள்விப்பட்டேன். எல்லாரையும், கான்ட்ராக்டர் நல்லா 'கவனிக்கிறாரு' என்பதால், எந்த ஆக்ஷனும் எடுக்க மாட்டேங்கறாங்க. அதில்லாம, கான்ட்ராக்டர் ஒரு 'பெட்டிஷன் ஆசாமி'யாம். அடிக்கடி ஆர்.டி.ஐ.யில எதையாச்சும் கேட்கிறது. வேணுமின்னே, ஆபீசர்கள் மேல எக்குத்தப்பா 'பெட்டிஷன்' போடுறதுன்னு இருப்பாராம்,'' தன் பங்குக்கு விளக்கினாள் சித்ரா.

கணக்கில் வராத கடை ''பெருமாள் கோவில் நந்தவனத்தை இடிச்சு அன்னதான கூடம் கட்றாங்களாம். எதுக்கு இந்த வெட்டிச் செலவுன்னு பக்தர்கள் கேக்றாங்களாம்,'' என பேச்சை மாற்றிய மித்ரா, ''அதுமட்டுமில்லாம, கோசாலை இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரலையாம். என்னன்னு கேட்டா, சாணம், கழிவுநீரை சுத்திகரிச்சு தான் பாதாள சாக்கடைக்குள்ள விடணும்ன்னு கார்ப்பரேஷன்ல சொல்லிட்டாங்களாம். ஆனா, அதுக்காக சுத்திகரிப்புக்கான கட்டமைப்பு இன்னும் இல்லை,'' என்றாள்.

''திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில, ரெண்டு கடைங்க கணக்குலயே வரலையாம். இதப்பத்தி, கார்ப்ரேஷன் மீட்டிங்கில கவுன்சிலர்கள் கேள்வி கேட்க, 'இருங்க பேசிக்கலாம்,'னு, சொல்லியே, மீட்டிங் முடிச்சிட்டாங்க. விஷயம் என்னென்னா, அதுல ஒரு கடையை தனக்கு ஒதுக்குமாறு ஆளுங்கட்சி கவுன்சிலர் கேட்டிருக்காரு. ஆனா, இன்னொரு கவுன்சிலர் தன்னோட பினாமி பேர்ல, கடையை நடத்திட்டு இருக்கார். ஒரு வழியா 'பஞ்சாயத்து' பேசி, 'சைலன்ட்' ஆக்கிட்டாங்க,''

''இது ஒரு பக்கம் இருக்க, அவிநாசி ரோட்டில், தாய், சேய் நல விடுதி வளாகத்துல, ரொம்ப வருஷமா கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ரெண்டு கடைகளை வாடகைக்கு விட்டிருக்காங்க. ஆனா, எப்போ விட்டாங்க, தொகை எவ்வளவுன்னு ரகசியமா இருக்காம். இது சம்மந்தமா, யாரும் ஏன் கேட்கலைன்னு மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க,'' என்று மித்ரா சொல்லவும், சித்ராவண்டியை கிளப்பவும் சரியாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us