'பி.எம்.டபுள்யூ., 7 சீரிஸ் இ.வி., ' 728 கி.மீ., ரேஞ்ச், 31 அங்குல 8கே டிஸ்ப்ளே
'பி.எம்.டபுள்யூ., 7 சீரிஸ் இ.வி., ' 728 கி.மீ., ரேஞ்ச், 31 அங்குல 8கே டிஸ்ப்ளே
ADDED : செப் 16, 2026 07:44 AM

'பி .எம்.டபுள்யூ.,' நிறுவனம், அதன் '7 சீரிஸ்' சொகுசு செடான் காரை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. 'மைல்டு ஹைபிரிட் பெட்ரோல்' கார் விற்பனையில் தொடரும் நிலையில், 'டீசல்' மாடலுக்கு பதிலாக முதல் முறையாக இரு மின்சார மாடல்கள் வந்துள்ளன. பெட்ரோல் காரின் விலை, பழைய காரை விட 10 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.
7 சீரிஸ் இ.வி., இதில், 112.5 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்படும் அடிப்படை மாடல் இ.வி., காரின் ரேஞ்ச் 728 கி.மீ., தருகிறது. இறக்குமதியாகும் உயர்ரக மாடல் காரின் பவர் 680 ஹெச்.பி., டார்க் 1,100 என்.எம்., வெளிப்படுத்து வதால், இதன் ரேஞ்ச் 686 கி.மீ., வரை கிடைக்கிறது.
முன்புற மற்றும் பின்புற பம்பர்கள், ஒளிரும் கிரில், 20 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் தென்படு கின்றன. உட்புறத்தில் 18 மற்றும் 15 அங்குல நடு மற்றும் பயணியர் டிஸ்ப்ளே, 35 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 31 அங்குல பின்புற 8கே டிஸ்ப்ளே மற்றும் முன்புற ஹேட் அப் டிஸ்ப்ளே, 'என்டு டூ என்டு' பிஸ்னஸ் கிளாஸ் சீட்கள், மசாஜ், வென்ட்டிலேட்டட், பவர்டு சீட்கள், பிரிட்ஜ் வசதி, லெவல் - 2 அடாஸ், 4 - ஜோன் ஏ.சி., பாஸ் மோட் வசதி, அடாப்டிவ் சஸ்பென்ஷன், கார் இணைப்பு வசதிகள், கிளாஸ் ரூப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
ஹைபிரிட் பெட்ரோல் காரில் இயந்திர மாற்றங்கள் எதுவும் இல்லை.
