'வீரோ சி.என்.ஜி., ' க்ரூஸ் கன்ட்ரோல், 9 அங்குல டிஸ்ப்ளே, ஏ.சி.,
'வீரோ சி.என்.ஜி., ' க்ரூஸ் கன்ட்ரோல், 9 அங்குல டிஸ்ப்ளே, ஏ.சி.,
ADDED : செப் 16, 2026 07:47 AM

'மஹிந்திரா' நிறுவனம், முதல்முறையாக 'வீரோ சி.என்.ஜி.,' மாடல் பிக்கப் டிரக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இ - வணிகம், சரக்கு போக்குவரத்துக்கு பயன்படும் இந்த வாகனம், மூன்று உடல் அமைப்புகளிலும், இரு மாடல்களிலும் வந்துள்ளது.
அதன் டீசல் இன்ஜின் மாடல் விற்பனையில் உள்ள நிலையில், 1.5 லிட்டர், 3 - சிலிண்டர், என்.ஏ., சி.என்.ஜி., பெட்ரோல் இன்ஜின் மாடல் முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இன்ஜின், 5 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 9.5 அடி நீளம் உள்ள இந்த வாகனத்தின் டெக், 1.1டன் எடையை சுமக்கும் திறன் உடையது. இதில், 150 லிட்டர் சி.என்.ஜி., டேங்க், 4.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருப்பதால், முழு எரிபொருளுடன் 450 கி.மீ.,ருக்கு அதிகமாக பயணம் செய்யலாம் என இந்நிறுவனம் கூறுகிறது. மைலேஜ், 21.4 கி.மீ., தருகிறது.
உயர்ரக மாடலில், ரிவர்ஸ் கேமரா மற்றும் சென்சார்கள், டிரைவர் ஏர் பேக், இரு ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், யூ.எஸ்.பி., சி மற்றும் பி டைப் சார்ஜிங், 9 அங்குல நடு டிஸ்ப்ளே, டிஜிட்டல் கிளஸ்டர், 'ஏசி' சிலிப்பர் கேபின், வாய்ஸ் கமாண்ட், 50க்கும் அதிகமான வாகன இணைப்பு மற்றும் போன் இணைப்பு வசதிகள் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பவர் விண்டோஸ் மற்றும் ஸ்டீயரிங், ரிக்லைன் டிரைவர் சீட் உள்ளிட்டவை அடிப்படையாக கிடைக்கின்றன. இந்த வாகனத்தில், டிரைவர் உட்பட மூன்று பேர் பயணம் மேற்கொள்ளலாம்.
