ADDED : ஏப் 08, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'டி.வி.எஸ்., அப்பாச்சி' பைக் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், உலக அளவில் 60 லட்சம் வாடிக்கையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.
2005ம் ஆண்டில், அப்பாச்சி 150 பைக் அறிமுகமானது. டி.வி.எஸ்.,ன் 43 ஆண்டு கால ரேஸிங் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், இது உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கில், 'ஆர்.ஆர்.,' மற்றும் 'ஆர்.டி.ஆர்.,' என இரு மாடல் பைக்குகள் உள்ளன. 'ஆர்.ஆர்.,' மாடல், முழுமையான ரேஸ் பைக்காகவும், 'ஆர்.டி.ஆர்.,' மாடல், ஸ்ட்ரீட் ரேஸிங் பைக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, உலகளவில், நேபாளம், வங்கதேசம், கொலம்பியா, மெக்சிகோ, ஹோண்டுராஸ் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் பைக்காக அப்பாச்சி மாறி உள்ளது.

