ADDED : செப் 02, 2026 08:09 AM

'ஆடி' நிறுவனத்தின் 2026 மாடல் 'க்யூ., 3' சொகுசு எஸ்.யூ.வி., கார் அறிமுகமாக உள்ள நிலையில், அதன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி, இந்த காரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காரில், வெளிப்புற, உட்புற மாற்றங்கள், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நீளம் 4.5 மீட்டர் உள்ள இந்த காரில், ஏற்கனவே உள்ள 2 லிட்டர், 4 - சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் வந்துள்ளது. இந்த இன்ஜினுடன், 7 - ஸ்பீடு டி.எஸ்.ஜி., கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 100 கி.மீ., வேகத்தை எட்ட, வெறும் 7.1 வினாடி எடுக்கிறது. டாப் ஸ்பீடு, 229 கி.மீ., ஆகும்.
இந்த காரின் எதிர்பார்ப்பு விலை, 55 முதல் 60 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. 'பி.எம்.டபுள்யூ., எக்ஸ் 1', 'மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ.,' ஆகிய சொகுசு எஸ்.யூ.வி., கார்கள், இதற்கு போட்டியாக உள்ளன.
