தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/யமஹா 'ஆர் 2' ஸ்போர்ட்ஸ் பைக் கே.டி.எம்.,க்கு நேரடி சவால்!

யமஹா 'ஆர் 2' ஸ்போர்ட்ஸ் பைக் கே.டி.எம்.,க்கு நேரடி சவால்!

யமஹா 'ஆர் 2' ஸ்போர்ட்ஸ் பைக் கே.டி.எம்.,க்கு நேரடி சவால்!


ADDED : செப் 02, 2026 08:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 08:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'யமஹா' நிறுவனம், 'ஆர் 2 ஒய்.இசட்.எப்.,' என்ற புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக், ஐந்து நிறங்கள் மற்றும் மூன்று மாடல்களில் வந்துள்ளது. 10,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வெறும் 149 கிலோ எடை உள்ள இந்த பைக், புதிய 'ஸ்டீல் ப்ரேமில்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில், புதிய 204 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, 'டி.ஒ.ஹெச்.சி.,' இன்ஜின் வந்துள்ளது. இது, போட்டியாளர்களை விட, அதிக பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜினுடன், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

மூன்று ரைட் மோடுகள், 810 எம்.எம்., சீட் உயரம், 37 எம்.எம்., யூ.எஸ்.டி., போர்க், மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., 5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையாக கிடைக்கின்றன. நடு ரக மாடலுக்கு 'பை - டைரக்ஷனல் குயிக் ஷிப்டர்', பைக் நிற 17 அங்குல அலாய் சக்கரங்களும், உயர் ரக மாடலுக்கு, ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் முன்புற, பின்புற சஸ்பென்ஷன்கள், அட்ஜெஸ்டபிள் பிரேக், கிளட்ச் லிவர், சாவிக்கு பதிலாக ரிமோட் வசதியும் கிடைக்கின்றன.

விலை - ரூ. 2.30 - ரூ. 2.53



இன்ஜின் - 204 சி.சி., லிக்விட் கூல்டு பவர் - 25.6 ஹெச்.பி., டார்க் - 19.1 என்.எம்., எடை - 149 கிலோ டேங்க் - 12 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 170 எம்.எம்.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us