தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/ஏஸ் 'ஏ.எக்ஸ்., - 124' 'வொர்க் ஹார்ஸ்' பேக்ஹோ லோடர்

ஏஸ் 'ஏ.எக்ஸ்., - 124' 'வொர்க் ஹார்ஸ்' பேக்ஹோ லோடர்

ஏஸ் 'ஏ.எக்ஸ்., - 124' 'வொர்க் ஹார்ஸ்' பேக்ஹோ லோடர்


ADDED : டிச 18, 2024 09:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2024 09:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஏஸ்' கட்டுமான இயந்திர நிறுவனம், அதன் புதிய 'ஏ.எக்ஸ்., - 124' என்ற பேக்ஹோ லோடரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இயந்திரம், டிராக்டர், லோடர் மற்றும் எக்ஸ்கவேட்டர் ஆகிய மூன்றின் வேலைகளை செய்யும் திறன் உடையது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில், இந்த இயந்திரத்தில், பி.எஸ்., - 5 (சி.இ.வி.,), டாடா இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 15 சதவீதம் எரிவாயு செலவு குறைவதாகவும், 15 சதவீதம் கூடுதல் பணி மேற்கொள்ள முடியும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது. இதில், 2 - வீல் டிரைவ் அமைப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

டிசைன் பொறுத்த வரையில், வலுவான தோற்றம் மற்றும் பிரீமியம் கேபின் வழங்கப்பட்டுள்ளது. இதில், 150 லிட்டர் ப்யூயல் டேங்க் உள்ளது. ஒரு மணி நேர பணிக்கு 30 லிட்டர் டீசல் பயன்படும். முன்புற பேக்ஹோ மூலம் 3 டன் எடை வரை தூக்க முடியும்.

பயன்பாடு : மணல், கற்கள் மற்றும் இதர பொருட்களை அள்ளுதல் மற்றும் அகற்றுதல், குழி தோண்டுதல், கட்டட இடர்பாடுகளை அகற்றுதல்

விபரக்குறிப்பு:


இன்ஜின் - பி.எஸ்., 5, டாடா இன்ஜின்
பவர் 75 ஹெச்.பி.,
டார்க் 300 என்.எம்.,
எடை 7.5 டன்



விலை:

ரூ. 23 - 31 லட்சம் (எதிர்பார்ப்பு)



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us