அப்ரிலியா டுவானோ 457 டுவின் சிலிண்டர் 'ஸ்ட்ரீட் பைட்டர்'
அப்ரிலியா டுவானோ 457 டுவின் சிலிண்டர் 'ஸ்ட்ரீட் பைட்டர்'
ADDED : பிப் 27, 2025 08:03 AM

'அப்ரிலியா' நிறுவனம், அதன் 'டுவானோ 457' என்ற ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக்கின் முன்பதிவு ஆரம்பமாகி உள்ள நிலையில், வினியோகம் மார்ச் முதல் துவங்க உள்ளது.
'ஆர்.எஸ்., 457' ஸ்போர்ட்ஸ் பைக்கும், இந்த பைக்கும் ஒரே கட்டுமான தளத்தில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, சேசிஸ், இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன், பிரேக் மற்றும் இதர எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவற்றில் எந்த வேறுபாடும் இல்லை.
டிசைன் பொறுத்த வரை, ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கை போன்ற வெளிப்புற தோற்றம், மெல்லிசான எல்.இ.டி., லைட்டுகள், உயரமான ஹேண்டில் பார், 12.7 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவை இதன் புதிய மாற்றங்கள்.
மற்றபடி, டூயல் சேனல் ஏ.பி.எஸ்., வசதி, டிராக் ஷன் கன்ட்ரோல், மூன்று ரைட் மோடுகள், 5 அங்குல டிஸ்ப்ளே, நேவிகேஷன் அமைப்பு, ஸ்மார்ட் போன் இணைப்பு ஆகியவை இதில் உள்ளன.
அடிப்படை அம்சமாக வராமல், கூடுதல் அம்சமாக குயிக் ஷிப்டர் வசதி வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் நல்ல பிக்கப் வழங்க, கியர்பாக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இரு நிறங்களில் வரும் இந்த பைக்கின் எடை, எந்த மாற்றமுமின்றி அதே, 175 கிலோவில் உள்ளது. இந்த பைக்கிற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை, சி.சி., அடிப்படையில் 'யமஹா எம்.டி., - 03', 'கே.டி.எம்., 390 டியூக்' ஆகிய பைக்குகள் போட்டியாக உள்ளன.