பஜாஜ் 'பல்சர் 150' இன்ஜின், பிரேம், ஸ்பென்ஷன் புதியது
பஜாஜ் 'பல்சர் 150' இன்ஜின், பிரேம், ஸ்பென்ஷன் புதியது
ADDED : செப் 08, 2026 10:33 PM

'ப ஜாஜ்' நிறுவனம், அதன் 'பல்சர் 150' பைக்கை புதுப்பித்து, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று மாடல்களில் வரும் இந்த பைக்கின் விலை, கடந்த ஆண்டை விட 6,000 ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்த பைக்கின், இன்ஜின், கியர்பாக்ஸ், பிரேம் ஆகிய இயந்திரங்கள் புதியவை. தற்போது டைமண்ட் டைப் பிரேமில் வரும் இந்த பைக்கில், புதிய 149.5 சி.சி., ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் 50 கி.மீ., என்றும், 5.7 வினாடியில் 60 கி.மீ., வேகத்தை எட்டுவதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
உயர்ரக பைக்கில், 7 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே உடன், கூகுள் மேப் வசதி, யு.எஸ்.பி., சி டைப் சார்ஜிங் போர்ட், டூயல் டிஸ்க் ஆகிய அம்சங்கள் கிடைக்கின்றன. அடிப்படையாக, டெலிஸ் கோப்பிக், மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், 17 அங்குல அலாய் சக்கரங்கள், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ்., 15 லிட்டர் டேங்க், எல்.இ.டி., லைட் உள்ளிட்டவை அடிப்படை அம்சங்கள் ஆகும்.
மொத்தம் நான்கு நிறங்களில் வரும் இந்த பைக்கிற்கு, 5 ஆண்டு அல்லது 75,000 கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
