தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/ மாருதி சுசூகி 'பலேனோ' 2026 3 - சிலிண்டர் இன்ஜின், அடாஸ் - 2, குளுகுளு சீட்

 மாருதி சுசூகி 'பலேனோ' 2026 3 - சிலிண்டர் இன்ஜின், அடாஸ் - 2, குளுகுளு சீட்

 மாருதி சுசூகி 'பலேனோ' 2026 3 - சிலிண்டர் இன்ஜின், அடாஸ் - 2, குளுகுளு சீட்


ADDED : செப் 08, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மா ருதி சுசூகி' நிறுவனம், அதன் 'பலேனோ' ஹேட்ச்பேக் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, பழைய காரை விட 10,000 ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்த காரில் இருந்த, 1.2 லிட்டர், 4 - சிலிண்டர், 'கே சிரீஸ்' என்.ஏ., பெட்ரோல் இன்ஜினுக்கு பதிலாக, தற்போது 'டிசையர், ஸ்விப்ட்' கார்களில் வரும் 1 லிட்டர், 3 - சிலிண்டர், 'இசட் சிரீஸ்' என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் வந்துள்ளது. இதனால், இன்ஜின் பவர் 8 ஹெச்.பி., குறைந்து, பெட்ரோல் மைலேஜ், 22ல் இருந்து 25 கி.மீ.,ராகவும், சி.என்.ஜி., மைலேஜ், 30ல் இருந்து 33 கி.மீ.,ராகவும் அதிகரித்துள்ளது. 5 - ஸ்பீடு மேனுவல் மற்றும் 'ஏ.எம்.டி.,' ஆட்டோ கியர்பாக்ஸ்கள் தொடர்கின்றன.

பிரண்ட் வீல் டிரைவில் வரும் இந்த காரின் முன்புற கிரில் மற்றும் பம்பர்கள் குரோம் அலங்காரத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு, வென்டிலேட்டட் முன்புற சீட்கள், கூல்டு ஒயர்லெஸ் சார்ஜிங் பேட், புதிய சவுண்ட் சிஸ்டம், டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு, ஷார்க் பின் ஆண்டெனா ஆகிய வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஆறு காற்று பைகள், ஏ.பி.எஸ்., 16 அங்குல அலாய் சக்கரங்கள், எல்.இ.டி., லைட், ஆட்டோ ஏ.சி., ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 9 அங்குல நடு டிஸ்ப்ளே, யூ.எஸ்.பி., 'ஏ மற்றும் சி' டைப் சார்ஜிங் போர்ட், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் நீடிக்கின்றன. மொத்தம் ஏழு நிறங்களில் கிடைக்கும் இந்த காருக்கு, மூன்று ஆண்டு அல்லது ஒரு லட்சம் கி.மீ., வரை அடிப்படை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

இன்ஜின் 1.0 லிட்டர், என்.ஏ., பெட்ரோல் 1.0 லிட்டர், சி.என்.ஜி., பவர் 82 ஹெச்.பி., 69 ஹெச்.பி., டார்க் 112 என்.எம்., 102 என்.எம்., மைலேஜ் 25 கி.மீ., 33 கி.மீ., பூட் ஸ்பேஸ் 318 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 எம்.எம்.,



விலை ரூ.6.10 லட்சம் முதல்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us