பி.எம்.டபுள்யு., 3 - சீரிஸ் லாங் வீல் பேஸ் அதிவேக 'எம் - ஸ்போர்ட்' செடான் கார்
பி.எம்.டபுள்யு., 3 - சீரிஸ் லாங் வீல் பேஸ் அதிவேக 'எம் - ஸ்போர்ட்' செடான் கார்
ADDED : மார் 05, 2025 01:31 PM

'பி.எம்.டபுள்யு.,' நிறுவனம், அதன் '3 - சீரிஸ் கிரான் லிமோசைன்' செடான் காரின் பெயரை '3 - சீரிஸ் லாங் வீல் பேஸ்' என மாற்றி, காரை மேம்படுத்தி அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரின் விலை, 2 லட்சம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிசைன் பொறுத்த வரை பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், நான்கு புதிய நிறங்களில் இந்த கார் வந்துள்ளது. வெளிப்புற மற்றும் உட்புறத்தில் அலுமினியம் அடையாளங்கள், கருப்பு நிற டிப்யூசர்கள், புதிய டிசைனில் ஏ.சி., ஏர் வெண்ட்டுகள், மேம்படுத்தப்பட்ட உட்புற அலங்கார விளக்குகள் ஆகியவை இதில் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள்.
இந்த கார், அதிவேக எம் - ஸ்போர்ட் பெட்ரோல் இன்ஜின் வகையில் மட்டுமே வருகிறது. அதாவது, இதில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டுவின் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. 100 கி.மீ., வேகத்தை, வெறும் 6.2 வினாடியில் எட்டுகிறது. 8 ஸ்பீடு ஆட்டோ கியர் பாக்ஸில் வரும் இந்த காரில், ரியர் வீல் டிரைவ் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் இதர அம்சங்கள் பொறுத்த அளவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த காருக்கு, 'ஆடி ஏ4' மற்றும் 'மெர்சிடிஸ் பென்ஸ் சி - கிளாஸ்' கார்கள் போட்டியாக உள்ளன.