பி.எம்.டபிள்யூ., 'ஆர் 1300 ஜி.எஸ்.ஏ.,' பைக்கில் 30 லிட்டர் பெட்ரோல் டேங்க்
பி.எம்.டபிள்யூ., 'ஆர் 1300 ஜி.எஸ்.ஏ.,' பைக்கில் 30 லிட்டர் பெட்ரோல் டேங்க்
ADDED : ஜன 29, 2025 09:06 AM

'பி.எம்.டபிள்யூ.,' நிறுவனம், அதன் 'ஆர் 1300 ஜி.எஸ்.ஏ.,' என்ற அட்வெஞ்சர் பைக்கை மேம்படுத்தி, அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் முன்பதிவுகள் துவங்கி உள்ள நிலையில், வினியோகம் ஏப்ரல் முதல் துவங்குகிறது. இந்த பைக், மொத்தம், மூன்று வகையில் வந்துள்ளது.
630 கி.மீ., துாரம் பயணிக்கும் வகையில், 30 லிட்டர் அளவிலான பெரிய பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில், இதுவே அதிக எரிவாயு சேமிப்பு கொண்ட பைக்காகும். இதில், அதே 1,300 சி.சி., இன்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது.
ரேடார் வாயிலாக 'க்ரூஸ் கண்ட்ரோல்' மற்றும் பின்னால் வாகனங்கள் வருவதற்கான எச்சரிக்கை வழங்கும் 'பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங்' என இரு அடாஸ் பாதுகாப்பு அம்சங்கள் உட்பட, ஆட்டோ கிளட்ச் வசதியும் இந்த பைக்கில் உள்ளது. எனவே, இதன் எடை 1 கிலோ உயர்ந்து, 269 கிலோவாக உள்ளது. மற்றபடி இந்த பைக்கில் வேறு எந்த மாற்றமும் இல்லை.