சென்னையில் 'மேபேக், ஏ.எம்.ஜி.,' கார்கள் டிமாண்ட் அதிகரிப்பு
சென்னையில் 'மேபேக், ஏ.எம்.ஜி.,' கார்கள் டிமாண்ட் அதிகரிப்பு
ADDED : ஜன 21, 2026 07:55 AM

01. பென்ஸ் கார்களின் விற்பனை, 2025ம் ஆண்டில் 2 சதவீதம் குறைந்துள்ளதே?
ஜி.எஸ்.டி., அமலுக்கு முன், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இழப்பு, ஏற்றுமதி, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு ஆகியவை, சொகுசு கார்களின் விலையை அதிகரித்தது. புதிய ஜி.எஸ்.டி.,யை தொடர்ந்து, சொகுசு கார்களின் விலை குறைந்ததால், விற்பனை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.
நவராத்திரி நாட்களில் மட்டும், 2,500 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த செப்டம்பரில் விற்பனை 36 சதவீதம் உயர்ந்தது. கடைசி காலாண்டு விற்பனை, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. எங்கள் வாடி க்கையாளர்கள், ஆடம்பர சொகுசு கார்களை அதிகம் விரும்பு கின்றனர். அதனால், ஆரம்ப விலை கார்களின் விற்பனை, 23 சதவீதம் குறைந்துள்ளது.
எங்கள் மொத்த விற்பனையில், உயர் ரக சொகுசு கார்களின் பங்கு, 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிக கார்களை விற்பனை செய்வதை விட, வாடிக்கையாளர்களுக்கு விலைக்கேற்ற மதிப்பை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கமாகும்.
02. சொகுசு கார் சந்தையில், மின்சார கார்களின் விற்பனை எப்படி உள்ளது?
பென்ஸ் கார்களின் மொத்த விற்பனை யில், மின்சார கார்க ளின் பங்கு, 3ல் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. 'இ.க்யூ.எஸ்.,' எஸ்.யூ.வி., 'இ.க்யூ.எஸ்., மேபேக்', 'ஜி 580' உள்ளிட்ட கார் களின் தேவை உயர்ந்து உள்ளது. உயர் ரக சொகுசு கார்கள் விற்பனையில், மின்சார கார் களின் பங்கு மட்டும் 20 சதவீதமாக உள்ளது.
மின்சார கார் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த, முதல் காலாண்டுக் குள், ஒருங்கிணைந்த கட்டண வசதி, பிரத்யேக சார்ஜிங் சூழலை அமைப்பது உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள உள்ளோம்.
03. பென்ஸ் நிறுவனத்திற்கு தமிழக சந்தை எவ்வளவு முக்கியம்?
தமிழகம், நாட்டின் முக்கிய சொகுசு கார் சந் தையா கும். குறிப்பாக, சென்னை சொகுசு கார்களி ன் மையமாக விளங்குகிறது. இங்கு, 'மெர்சிடிஸ் மேபேக்', 'ஏ.எம்.ஜி., ஜி63' ஆகிய கார்க ளின் தேவை மிக அதிகமாக உள்ளது.
மேலும், கோவை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் பென்ஸ் விற்பனை மையங்கள் உள்ளன. வாடிக்கையாளர் தேவை மற் றும் சந்தை திறனை பொறுத்து, விற்பனை மையங்கள் விரிவாக்கம் செய்யப்படும். கடந்த ஆண்டில், நாடு முழுதும், 20க்கும் அதிகமான புதிய விற்பனை மையங்கள் துவக்கப்பட்டன.
சந்தோஷ் ஐயர்
தலைமை செயல் அதிகாரி
மெர்சிடிஸ் பென்ஸ்

