'எக்ஸ்ட்ரீம் 125 ஆர்' பைக்கில் 'டூயல் சேனல் ஏ.பி.எஸ்.,'
'எக்ஸ்ட்ரீம் 125 ஆர்' பைக்கில் 'டூயல் சேனல் ஏ.பி.எஸ்.,'
ADDED : நவ 12, 2025 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஹீரோ' நிறுவனம், அதன் 'எக்ஸ்ட்ரீம் 125 ஆர்' பைக்கிற்கு 'டூயல் சேனல் ஏ.பி.எஸ்.,' பிரேக் அமைப்பை வழங்கிஉள்ளது. இது, 125 சி.சி., பிரிவில் இந்த வகை பிரேக் அமைப்பு வழங்கப்படும் முதல் பைக் ஆகும்.
'ஹோண்டா ஹார்னெட் 125', 'டி.வி.எஸ்., ரைடர் 125' உள்ளிட்ட பைக்குகளில் 'சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ்.,' உள்ள நிலையில், போட்டித்தன்மையை மேலும் அதிகரிக்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்த பைக்கில், மூன்று புதிய நிறங்கள், மூன்று ரைட் மோடுகள், 'கிளாமர் எக்ஸ்' பைக்கில் வரும் எல்.சி.டி., டிஸ்ப்ளே ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

