நியூமரோஸ் மோட்டார்ஸ் 'என் - பர்ஸ்ட்' இ.வி., பெண்களுக்கு பிரத்யேகமான இருசக்கர வாகனம்
நியூமரோஸ் மோட்டார்ஸ் 'என் - பர்ஸ்ட்' இ.வி., பெண்களுக்கு பிரத்யேகமான இருசக்கர வாகனம்
ADDED : நவ 12, 2025 07:54 AM

'நியூமரோஸ் மோட்டார்ஸ்' நிறுவனம், 'என் - பர்ஸ்ட்' என்ற மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம், 'ஸ்கூட்டர், மொபேட்' ஆகிய இரண்டும் கலந்த கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இது, மொத்தம் ஐந்து மாடல்களில் வந்துள்ளது.
இதில், 2.5 மற்றும் 3 கி.வாட்.ஹார்., என இரு லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. முழு சார்ஜில், பேட்டரி ஆற்றலை பொறுத்து 91 முதல் 109 கி.மீ., வரை ரேஞ்ச தருகிறது. டாப் ஸ்பீடு, 55 முதல் 70 கி.மீ., சார்ஜிங் நேரம் 5 முதல் 8 மணி நேரம், எடை 112 முதல் 117 கிலோ வரை வருகிறது.
பிரத்யேகமாக பெண்களுக்கு உருவாக்கப்பட்ட இந்த வாகனத்தில், நிலையான பயணத்திற்கு 16 அங்குல அலாய் சக்கரங்கள், ட்யூப் லெஸ் டயர்கள், டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்கள், டிரம் பிரேக்குகள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் வசதி, ரிவஸ் மோட், வாகன தரவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள் பிரத்யேக செயலி, எல்.இ.டி., லைட்டுகள், மொபைல் ஹோல்டர் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.
இதற்கு 3 ஆண்டு அல்லது 30,000 கி.மீ., வரை அடிப்படை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இந்த வாகனம், இரு நிறங்களில் கிடைக்கிறது.

