தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/கடையாணி/இந்தியா மீது பொருளாதார தடை... 'ஜெர்மனி டூ சென்னை' வந்த ஸ்விங் ஸ்டெட்டர்

இந்தியா மீது பொருளாதார தடை... 'ஜெர்மனி டூ சென்னை' வந்த ஸ்விங் ஸ்டெட்டர்

இந்தியா மீது பொருளாதார தடை... 'ஜெர்மனி டூ சென்னை' வந்த ஸ்விங் ஸ்டெட்டர்


ADDED : ஜூன் 17, 2026 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 07:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்விங் ஸ்டெட்டர் நிறுவனத் திற்கு இந்தியா ஏன் முக்கியம்?


1998ல் இங்கு வரும் போது, இந்தியா மீது பொருளாதார தடை இருந்தது. பெரும்பாலான ஜெர்மன் நிறுவனங்கள் இங்கு வர தயக்கின. இருப்பினும் இந்திய சந்தையில் திறன் உள்ளதை அறிந்து, இங்கு வர முடிவு செய்தோம். 1999ல், சென்னை அடையாரில் சிறிய அலுவலகத்தை தொடங்கினோம்.

அதன் பின் இந்தியாவில் கட்டுமான திட்டங்கள், இயந்திரங்கள் தேவை அதிகரித்தன. 1998 முதல் 2007 வரை எங்களின் வளர்ச்சி எதிர்பார்க்காத வகையில் இருந்தது. இதன் காரணமாக, 2001, 2004, 2006, 2011 என தொடர்ந்து உற்பத்தி ஆலைகள் துவங்கப்பட்டன. எங்களை தொடர்ந்து பல ஐரோப்பிய, ஜெர்மன் நிறுவனங்கள் இங்கு வர துவங்கின.

கான்கிரீட் கலவை உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஸ்விங் ஸ்டெட்டர், பொருட்கள் கையாளுதல் பிரிவுக்கு வந்தது எப்படி?


2012ம் ஆண்டில் சீனாவின் எக்ஸ்.சி.எம்.ஜி., நிறுவனம், எங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை கைபற்றியது. 2017ல் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, அதன் பொருட்கள் கையாளும் இயந்திரங்களை இறக்குமதி வாயிலாக இங்கு விற்பனை செய்து தந்தோம்.

2019ல் எக்ஸ்கவேட்டர் உற்பத்திக்காக, இரு நிறுவனங்களும் கூட்டு முயற்சியில் செய்யாறு பகுதியில் உற்பத்தி ஆலையை துவங்கினோம். 2024ல் முடிவில், பொருட்கள் கையாளும் பிரிவின் வருவாய் 5,500 கோடி ரூபாயாகவும், சந் தை பங்கு 10 சதவீதமாகவும் அதிகரித்தது.

கட்டுமான இயந்திரங்களின் விற்பனை குறைந்து வருகிறதே ஏன்?


நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் பெருமளவில், மத்திய அரசின் நிதி பகிர்வை பொறுத்து உள்ளது. தேர்தல் ஆண்டில், கட்டுமான இயந்திரங்கள் தேவை குறைவாக இருக்கும்.

அதற்கு முன் உள்ள இரு ஆண்டுகளில் தேவை அதிகமாக இருக்கும். 2023, 2024ம் ஆண்டுகள் சிறப்பாக இருந்தன. 2025ல், நாடு முழுதும் பருவமழை அதிகமாக இருந்தது. இதனால், விற்பனை குறைந்தது. நடப்பாண்டில், விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இந்திய இயந்திரங்கள் ஏற்றுமதி 30 சதவீதம் உயர்ந்து உள்ளதே, என்ன காரணம்?


இந்திய இயந்திரங்கள் தரத்தில், ஐ ரோப்பாவுக்கு இணையாகவும், விலையில் சீனா, வியட்நாமுக்கு இணையாகவும் உள்ளன. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு, பல நாடுகளுடன் தடையற் ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்தது. இது, ஏற்றுமதி க்கு பெருமளவில் உதவியாக இருந்தது.

சக்திகுமார்,தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஸ்விங் ஸ்டெட்டர் இந்தியா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us