தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/டாடா 'டியாகோ இ.வி.,' வாழ்நாள் உத்தரவாதம், 6 காற்று பைகள், 360 கேமரா

டாடா 'டியாகோ இ.வி.,' வாழ்நாள் உத்தரவாதம், 6 காற்று பைகள், 360 கேமரா

டாடா 'டியாகோ இ.வி.,' வாழ்நாள் உத்தரவாதம், 6 காற்று பைகள், 360 கேமரா


UPDATED : ஜூன் 17, 2026 07:31 AM

ADDED : ஜூன் 17, 2026 07:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 07:31 AM ADDED : ஜூன் 17, 2026 07:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'டியாகோ இ.வி.,'மின்சார ஹேட்ச்பேக் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இதன் அடிப்படை விலை ஒரு லட்சம் ரூபாய் குறைந்து, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வந்துள்ளது. இந்த கார், வாடகை பேட்டரி முறையிலும் கிடைக்கிறது.

இதில், 19.2, 24 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரிகள் தொடர்கின்றன. முழு சார்ஜில், 170 கி.மீ., - 215 கி.மீ., வரை பயணம் செய்யலாம். 24 கி.வாட்.ஹார்., பேட்டரிக்கு வாழ்நாள் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. 30 கி.வாட்., பாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி பேட்டரியை, 80 சதவீதம் சார்ஜ் செய்ய 35 நிமிடம் எடுக்கிறது. 20 நிமிட சார்ஜில், 100 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ள முடியும்.

Image 1588877


காரின் வெளிப்புற பிரேம், பம்பர்கள், கிரில், 14 அங்குல அலாய் சக்கரங்கள், டேஷ் போர்டு உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. 10.25 அங்குல இரு டிஸ்ப்ளே, 40க்கும் அதிகமான கார் இணைப்பு வசதிகள், ஒயல்லெஸ் இணைப்பு வசதிகள், க்ரூஸ் கன்ட்ரோல், பேப்ரிக் சீட்கள், கூல்டு கிளவ் பாக்ஸ், 2 - ஸ்போக் ஸ்டீயரிங், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், அடிப்படை அம்சமாக ஆறு காற்று பைகள், 360 டிகிரி கேமரா, ரெயின் சென்சிங் வைபர் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஆறு நிறங்களில் வரும் இந்த காருக்கு, 8 ஆண்டு அல்லது 1.6 லட்சம் கி.மீ., அடிப்படை உத்தரவாதம் கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us