ஜே.சி.பி., இயந்திரங்களின் எரிபொருள் திறன் 10 ஆண்டுகளில் 50% அதிகரிப்பு
ஜே.சி.பி., இயந்திரங்களின் எரிபொருள் திறன் 10 ஆண்டுகளில் 50% அதிகரிப்பு
ADDED : செப் 23, 2026 07:37 AM

ஜே.சி.பி., இயந்திரங்கள் விற்பனை எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது?
ஜே.சி.பி., நிறுவனம், கடந்த ஆண்டில் இதுவரை காணாத அளவில், கட்டுமான இயந்திரங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் 'சி.இ., ஸ்டேஜ் 5' உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இருப்பினும், பேக்ஹோ, வீல் லோடர்கள் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி கண்டன. நடப்பாண்டில், விவசாயத்திற்காக 'அக்ரிமேக்ஸ்' என்ற மின்சார வீல் லோடர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், 1,200 லோடர்கள் கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான இயந்திரங்கள் துறையின் வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. ஆனால், எங்களின் அனைத்து இயந்திரங்கள் விற்பனையும் தொடர் வளர்ச்சியில் உள்ளன. கடந்த ஆண்டு, 14,000 இயந்திரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, அமெரிக்காவுக்கு ஏற்றுமதியானது.
இத்துறையில், கடந்த 10 ஆண்டுகளில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?
கடந்த 10 ஆண்டுகளில், எங்கள் இயந்திரங்களின் எரிபொருள் திறனை ஏறக்குறைய 50 சதவீதம் உயர்த்தி உள்ளோம். கடந்த முறை கோவை மாவட்டத்திற்கு சென்ற போது, இயந்திர ஆய்வில் பொறியாளர்களுக்கு கிடைத்த எரிபொருள் செலவை விட, வாடிக்கையாளர்களுக்கு குறைவாக இருப்பதாக தெரிவித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
ஆபரேட்டர்கள் திறனை வளர்க்க என்ன முயற்சி எடுக்கப்படுகிறது?
ஆபரேட்டர்கள் திறனை வளர்ப்பதை, ஒரு வாய்ப்பாக பார்க்கிறோம். நாடு முழுதும் உள்ள எங்கள் 14 திறன் மேம்பாட்டு மையங்களின் வாயிலாக, 6,000 ஆபரேட்டர்களின் திறனை மேம் படுத்துகிறோம். எரிபொருள் விலை உயர்வதால், அதற்கான செலவுகள் அதிகரிப்பது சவாலாக உள்ளது.
எனவே, செலவுகளை குறைக்க, 'ஜே.சி.பி., தக்ஷ்' என்ற பிரத்யேக சிமுலேட்டரை எங்கள் பொறியாளர்கள் உருவாக்கி உள்ளனர். ஆபரேட்டர்கள் திறனை மேம்படுத்த, இதை வாடிக்கையாளர்கள் பவர் வாங்குகின்றனர். இதன் மூலம், இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான 90 சதவீத பயிற்சியை, ஆபரேட்டர்கள் எளிதாக மேற்கொள்ள முடியும்.
முன்பு காட்சிப்படுத்திய ஹைட்ரஜன் பேக்ஹோ லோடர் உற்பத்தி நிலைக்கு வந்துள்ளதா?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஹைட்ரஜன் எரிவாயுவில் இயங்கும் இன்ஜின் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தினோம். இதற்காக, ஜே.சி.பி., நிறுவனம், 1,300 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இந்த இன்ஜினுக்கு, 11 ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்பாட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.
தீபக் ஷெட்டி
'ஜே.சி.பி., இந்தியா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி
