ADDED : செப் 23, 2026 07:38 AM

'கி ளாசிக் லெஜெண்ட்ஸ்' நிறுவனத்தின் 'ஜாவா 42, 42 எப்.ஜே., 42 பாபர்' ஆகிய பைக்குகள், 'ஆல் ஸ்டார்ஸ்' என்ற சிறப்பு எடிஷனில் வந்துள்ளன. இந்த பைக்குகளின் முன்பதிவு மற்றும் வினியோகம் துவங்கியுள்ளன.
ஜாவா 42 பைக்கில், இன்ஜின், கியர்பாக்ஸ், வடிவமைப்பு ஆகிய இயந்திர மாற்றங்கள் பெரிய அளவில் இல்லை. இருப்பினும், சைட் பேனல்கள், ட்வீன் எக்ஸாஸ்ட், அகலமான 150 பிரிவு டயர்கள், 17 அங்குல அலாய் சக்கரங்கள், புதிய நிறம் மற்றும் கிராபிக்ஸ், கூடுதல் குஷன் வசதி உள்ள சீட், பைக்கின் கட்டுப்பாடு மற்றும் கையாளும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதில் வரும் 294.72 சி.சி., லிக்விட் கூல்டு இன்ஜினுடன், 6 - ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 280, 240 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., 175 கிலோ எடை, 173 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்டவை நீடிக்கின்றன. இந்த பைக்கின் விலை, 1.80 லட்சம் ரூபாய் முதல் 1.90 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 42 எப்.ஜே., 42 பாபர் பைக்குகளில், நிறம், கிராபிக்ஸ் தவிர வேறு மாற்றங்கள் எதுவும் இல்லை.
