ஹார்லி டேவிட்சன் 'எக்ஸ் 440 டீ' பைக் ஹீரோ உற்பத்தி செய்யும் உயர்ந்த மாடல்
ஹார்லி டேவிட்சன் 'எக்ஸ் 440 டீ' பைக் ஹீரோ உற்பத்தி செய்யும் உயர்ந்த மாடல்
UPDATED : டிச 17, 2025 11:56 AM
ADDED : டிச 17, 2025 08:38 AM

ஹார்லி டேவிட்சன் நிறுவனம், 'எக்ஸ் 440 டீ' என்ற புதிய உயர்ந்த மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை 10,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில், 'ரைட் பை ஒயர்' தொழில்நுட்பம், இரு ரைட் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ஸ்விட்ச்சபில் ஏ.பி.எஸ்., உடனடி பிரேக் எச்சரிக்கை, 3.5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட நவீன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
![]() |
மேலும், பயணி வசதியாக அமரும் வகையில் சேசிஸ் மேம்பாடு, வசதியாக பயணம் செய்ய அகலமான ஹேண்டில் பார், பைக்கின் வெளிப்புற தோற்றம் மேம்பாடு, ஹேண்டில் பார் கண்ணாடிகள், 18, 17 அங்குல டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் ஆகியவை இந்த மாடலில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்.
இன்ஜின் பொருத்த அளவில், அதே 440 சிசி ஏர் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதர உபகரணங்களில் எந்த மாற்றமும் இல்லை.


