தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/ஹீரோ ‘எக்ஸ்பல்ஸ் 450’ அட்வெஞ்சர்

ஹீரோ ‘எக்ஸ்பல்ஸ் 450’ அட்வெஞ்சர்

ஹீரோ ‘எக்ஸ்பல்ஸ் 450’ அட்வெஞ்சர்


ADDED : நவ 11, 2026 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 12:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச இருசக்கர வாகன கண்காட்சியில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘எக்ஸ்பல்ஸ் 450’ அட்வெஞ்சர் பைக்கை, ‘ஹீரோ’ நிறுவனம் காட்சிப்படுத்தியது. உலக சந்தையை தொடர்ந்து, இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பைக், அந்நிறுவனத்தின் மோட்டோ ஸ்போர்ட் அணியின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், புதிய 421 சிசி., சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, டி.ஒ.ஹெச்.சி., இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், 6 – ஸ்பீடு கியர் பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவை அடிப்படை அம்சங்கள் ஆகும்.

பயணியர் கார்களில் வரும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன் இணைப்பு வசதி, முதல் முறையாக இந்த பைக்கில் வழங்கப்படுகிறது. மேலும், அட்ஜஸ்ட்டபிள் கே.ஒய்.பி., யூ.எஸ்.டி., போர்க, மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், 7 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, 21 மற்றும் 17 அங்குல ட்யூப்லெஸ் கிராஸ் ஸ்போக் சக்கரங்கள், நான்கு ரைட் மோடுகள், டூயர் சேனல் ஏ.பி.எஸ்., யூ.எஸ்.பி., சி – டைப் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில், கே.டி.எம்., 390 அட்வெஞ்சர், ஹிமாலயன் 450 பைக்குகளுக்கு போட்டியாக இந்த பைக் களமிறக்கப்பட்ட உள்ளது.

எதிர்பார்ப்பு விலை – ரூ. 2.40 லட்சம் முதல் ரூ. 3.10 லட்சம்



இன்ஜின் | 421 சிசி, லிக்விட் கூல்டு


பவர் | 47 ஹெச்.பி.,
டார்க் | 47 என்.எம்.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us