கவாசாகி ‘இசட் 650 எஸ்' ட்வின் சிலிண்டர் நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர்
கவாசாகி ‘இசட் 650 எஸ்' ட்வின் சிலிண்டர் நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர்
ADDED : நவ 11, 2026 12:13 AM

‘கவாசாகி’ நிறுவனம், ‘இசட் 650 எஸ்' என்ற புதிய மாடல் சூப்பர் நேக்கட் ட்ரீட் பைட்டர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இயந்திர மாற்றங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும், தோற்றம் மற்றும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அடிப்படை மாடல் இசட் 650 பைக்கை விட, இதன் விலை 33,000 ரூபாய் அதிகம்.
இந்த பைக்கில் ஏற்கனவே உள்ள 649 சிசி, பேரலல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் கிடைக்கிறது. இந்த இன்ஜின் 6 – ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு 201 கி.மீ.,ரும், 100 கி.மீ., வேகத்தை எட்ட 4.8 வினாடியும் எடுப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது.
ஒரே நிறத்தில் வரும் இந்த பைக், காற்றை எளிதாக கிழித்து பயணிக்க, ‘இசட் 900’ பைக்கை அடிப்படையாக கொண்டு விஷேசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஹெட் லைட், டி.ஆர்.எல்., லைட்டுகள், நீண்ட ஹேண்டில் பார், சீட் உயரம் 805 எம்.எம்., 272 மற்றும் 220 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள், 4.3 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் நேவிகேஷன் வசதி ஆகியவை இதில் செய்யப்பட்ட மாற்றங்கள். இதனால், இந்த பைக்கின் எடை ஐந்து கிலோ அதிகரித்து, 193 கிலோவாக உயர்ந்துள்ளது.
